வணக்கம் நண்பர்களே,
பதிவுகளுக்கு இடையில் இடைவெளி அதிகமாகி கொண்டேயிருக்கிறது.
ஆனாலும் பதிவுகள் இட்டு தளத்தை ஆக்டிவாக வைக்க முயற்சிக்கிறேன்.
மார்வெல் காமிக்ஸ் படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதே போல டெலிவிஷன் தொடர்களிலும் தனது சாம்ராஜ்யத்தை கோலூன்றி வருகின்றது.
முதலில் 2013 வருடம் தனது டெலிவிஷன் ஆதிக்கத்தை Agents of Shield நாடகம் மூலம் தொடங்கியது. Avengers படத்தில் ஏஜென்ட் கோல்சன் இறப்பது முக்கிய இடம் பிடிக்கும், அவர் இறந்து அவெஞ்சர்கள் ஒன்று சேர பாலமாக இருப்பார் .
அதன் மூலம் அவர் மக்கள் மிக விரும்பிய கதாபாத்திரம் ஆனார். ஆகையால் அவரை மீண்டும் உயிர்ப்பித்து இந்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஆக்கினார்கள்.
ஆனால் அதன் முதல் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இரண்டாம் பாகம் தொடக்கமும் சுமாராக போனது ஆனால் கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர் திரைப்படம் அனைத்தையும் மாற்றியது.
அந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக நாடகத்தின் இரண்டாம் பாகத்தின் இரண்டாம் பாதி அமைந்தது நாடகத்தின் ரேட்டிங்கை உச்சிக்கு கொண்டு சென்றது. அது முதல் நான்கு சீசன்கள் வந்துவிட்டது.
அதன் மூன்றாம் பாகத்தில் Inhumans அறிமுகப்படுத்தினார்கள், இப்பொழுது நான்காம் பாகத்தில் Ghost Rider, LMD (Life Model Decoys) மற்றும் Framework என மூன்று வகையாக பிரித்து அட்டகாசமாக இருக்கிறது.
இந்த நாடகத்தின் வெற்றி மார்வெலிற்கு தைரியம் கொடுக்க 2015 ஆம் வருடம் கேப்டன் அமெரிக்காவின் காதலி கார்ட்டரை வைத்து Agent Carter நாடகம் வந்தது.
அதன் முதல் பாகம் சுமாராக போக அது இரண்டு சீசனோடு முடிந்து போனது.ஆனால் எனக்கு இரண்டு தொடர்களுமே பிடித்திருந்தது.
ஆனால் அதே 2015 இல் Netflix உடன் இனைந்து வெளிவந்த Daredevil அனைத்தையும் மாற்றிவிட்டது. அத்தொடர் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
Daredevil வெற்றிக்கு அதன் Grounded தீம் தான் காரணமாக அமைந்தது.
முதல் முறையாக ஒரு மார்வெல் தொடர் R ரேட்டிங்குடன் வந்தது. அதன் ரத்தம் தெளிக்கும் சண்டை காட்சிகள் மிகவும் வரவேற்கப்பட்டது. மற்றும் அதன் வில்லன் Kingpin கதாபாத்திரம் அனைவராலும் கவரப்பட்டது.
பின்னர் அதே வருடம் இரண்டாம் பாதியில் Jessica Jones வந்தது, அதுவும் வர்த்தக ரீதியாக வெற்றி அடைந்தது. அதில் Luke Cage அவளது காதலனாக அறிமுகமானார்.
முதலில் 2015 இல் Daredevil மற்றும் Jessica Jones , 2016 இல் Luke Cage , 2017 இல் Iron Fist மற்றும் The Defenders என்பதே பிளான், ஆனால் Daredevil இன் வெற்றி பல மாற்றங்களை கொண்டு வந்தது.
2016 இல் Daredevil இரண்டாம் பாகம் இடைச்சொருகலாக சேர்ந்தது, அதில் அறிமுகம் செய்யப்பட்ட Punisher கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது.
அதில் Elektra கதாபாத்திரமும் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் முக்கிய வில்லனாக Hand அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் சண்டைக்காட்சிகள் அருமையாக அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர் 2016 இரண்டாம் பாதியில் Luke Cage முதல் சீசன் வந்தது. அதுவும் ஓரளவு வெற்றியடைந்தது. அதன் முதல் பாதியில் இருந்த ஒரு Grip இரணடாம் பாதியில் இல்லை. ஆனாலும் வர்த்தக ரீதியாக வெற்றி அடைந்தது.
2017 இல் Iron Fist முதல் சீசன் வந்தது, வில்லன் அமைப்பான Hand இன் பல முகங்கள் காட்டப்பட்டன.
இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் அனைவறையும் ஒன்றினைக்கும் Defenders வருகிறது. அது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் வர இருக்கும் தொடர்கள், Punisher முதல் சீசன், Jessica Jones இரண்டாம் சீசன், Luke Cage இரண்டாம் சீசன்.
மார்வெல் Netflix தொடர்களின் வெற்றி மேலும் பல தொடர்கள் வர தையிரியத்தை கொடுத்திருக்கிறது.
அவ்வாறாக இவ்வருடம் Legion முதல் சீசன் வந்துள்ளது. X Men களில் மிகவும் சக்தி வாய்ந்தவன் Legion, அவன் Professor X இன் மகன். இத்தொடர் மிக வித்தியாசமாக இருந்தது. இத்தொடரின் வில்லன் Farouk எனப்படும் Shadow King ஆகும். இத்தொடரின் வெற்றி இதன் இரண்டாம் சீசனிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வர இருக்கும் தொடர்கள்,
Inhumans திரைப்படமாக எடுக்க இருந்து பின்னர் கைவிடப்பட்டது. பின்னர் Agents of Shield தொடரில் அறிமுகமானார்கள். இப்பொழுது அவர்களுக்கென தனி தொடர் வருகிறது.
Cloak & Dagger தொடர் 2018 ஆம் ஆண்டு வரவிருக்கிறது. அதன் ட்ரைலர் சமீபத்தில் வந்துள்ளது. ட்ரைலர் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது
வீட்டில் இருந்து ஓடி வரும் இரண்டு இளம் பெண்ணிற்கும் ஆணிற்கும் சக்தி கிடைக்கிறது. எதிர் எதிரான சக்தி. .
Most Wanted மற்றும் Young X Men தொடர்கள் எடுப்பதாக செய்திகள் உள்ளன.
மற்றும் ஒரு முக்கிய அம்சம் பெரும்பாலான தொடர்களில் திரைப்படங்களின் தொடர்புகள் இருக்கும், நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் படங்களில் நிகழ்வுகளை பற்றி டிஸ்கஸ் செய்வது போல வரும்.
இதே போல DC காமிக்ஸ் கதாபாத்திரங்களை கொண்ட தொடர்களும் மிக பிரபலமே அது முடிந்தால் மற்றொரு பதிவில்.
அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.
எனது பிற பதிவுகள்:
என்னை கவர்ந்த ஆங்கில நாடகங்கள் - பாகம் 1