வணக்கம் நண்பர்களே,
இப்பதிவில் நமது ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுக்களை பெற்று முதல் இடம் வந்த பவளச்சிலை மர்மம் கதையினை பார்க்கப்போகிறோம்.
இக்கதை லயனின் மூன்றாவது ஆண்டு மலராக வந்தது.
ஒரு சிறு எச்சரிக்கை இது மிகவும் ஒரு நீ ......... ளமான பதிவாக அமைந்துவிட்டது.ஆகையால் பொறுமை மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் மேலே செல்லவும்.மற்றவர்கள் எனது அடுத்தபதிவிர்க்கு மீண்டும் வாருங்கள்.
இக்கதை ஒரு Expendables திரைப்படம் போல.ஒரே சண்டை தான்.அதுவும் கதையின் பாதிபக்கதிலேயே கிளைமாக்ஸ் ஆரம்பித்துவிடுகிறது.அதற்கு பின் ஒரு ஐம்பது பக்கங்களுக்கு ஒரே ஆக்சன் தான்.மிகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது.கண்டிப்பாக நிறைய நண்பர்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
|
Hotline |
கதை:
எலும்புக்கூடு பள்ளத்தாக்கு.ஒரு மாலை பொழுது.மந்திரவாதி ஹடானின் இருப்பிடம் இருக்கும் மலைக்குன்று.
திடீரென அவனது பாதுகாவலர்கள் (புலிகள்) மிரளுகின்றன.உடனே அவனது மற்றொரு வளர்ப்பு பறவையான காகத்தை சென்று பார்க்க சொல்கிறான்.
ஹுவால்பை இனத்தினர் கையில் ஆயுதங்களோடு தாக்க வருகின்றனர்.
எதிர்த்த புலிகளை கொன்றுவிடுகின்றனர்.காகத்தின் மீதும் அம்பு எய்துவிடுகின்றனர்.
ஹடானையும் அடித்து வீழ்த்திவிட்டு அவனது இருப்பிடம் முழுவதையும் எதையோ தேடுகின்றனர்.திடீரென்று ஒருவன் தரையின் கீழே இருக்கும் நிலவறையை கண்டுபிடிகின்றான்.உடனே அனைவரும் கீழே சென்று காசினா எனப்படும் ஒரு பெரிய சிலையின் உள்ளே இருக்கும் சக்தி நிறைந்த சிறிய "பவளச் சிலையை" கண்டுபிடிகின்றனர்.அந்த காசினாவை அப்படியே எடுத்துக்கொண்டு, அந்த இருப்பிடத்தையும் தீயிலிட்டு விட்டு விரைந்து தப்பி செல்கின்றனர்.
அம்புக்காயம் பட்ட காகம் பறந்து சென்று நவோஜோக்களின் இருப்பிடத்தில சென்று விழுகிறது.அப்பொழுது ஒரு ஆலோசனையில் இருக்கும் நமது ஹீரோ டெக்ஸ் வில்லர் அக்காகத்தை கண்டு பக்கத்தில் சென்று ஆராய்கிறார்.அதன் மூக்கில் இருக்கும் உதய சூரியன் சின்னத்தை வைத்து அது ஹடானிர்க்கு சொந்தமானது என்றும் அதன் மேல் இருந்த அம்பை வைத்து அது ஹுவால்பை இனத்தினர் செய்த காரியம் என்றும் கண்டுபிடிக்கிறார்.
உடனே நமது நால்வர் கூட்டணி தேவையான ஆயுதங்களோடு ஹடானின் குன்றிற்கு செல்கின்றனர்.அங்கு மிகவும் மோசமான நிலைமையில் இருந்த ஹடானை காப்பாற்றி மது அளித்து சிலை திருட்டுப்போன விவரங்கள் அறிந்து கொள்கிறார்.புகை மூலம் நவோஜோக்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு நால்வரும் தப்பிசென்றவர்களை துரத்தி செல்கின்றனர்.
இதற்கிடையில் முன்னால் தப்பி செல்லும் ஷா யான் மற்றும் அவனது கூட்டத்தினர் ஒரு மலை கனவாயை கடக்கின்றனர்.இரவு நேரம் வந்துவிட்டதால் ஒரு இடத்தில பொழுதை கழித்து விட்டு காலையில் செல்லலாம் என கூறுகிறான்.
நள்ளிரவு ஆனது.ஒருவர் மாறி ஒருவர் காவல் புரிந்து வந்தனர்.அப்பொழுது மா கெளர் என்பவனின் முறை வந்தது.அவன் அவர்கள் கிராமத்து மந்திரவாதியான தல்சாரின் மருமகன் ஆவான்.காவல் புரிந்து கொண்டிருந்த மா கெளர் இன் மனது அவனை அந்த சிலையை எடுத்து பார்க்க சொல்லியது.
அவன் காசினா எனப்படும் பெரிய சிலையில் இருந்தது அந்த பளிங்கு சிலையை வெளியில் எடுத்தான் அது நிலா வெளிச்சத்தில் பளீர் என்று அதில் இருந்து ஒரு ஒளிப்பிழம்பு கிளம்பியது.
அதனை கையில் எடுத்த மா கௌர் ஷா யானின் மரணத்திற்கு பிறகு தான் ஹுவால்பைகளின் தலைவன் ஆக வேண்டும் என்று வரம் கேட்டான்.பின் அச்சிலையை மீண்டும் காசினாவில் வைத்து பாறையின் மேல் அதனை வைத்தான்.உடனே அவனது உடல் நடுங்க தொடங்கியது.அப்படியே வெட்டுண்ட மரம் போல வீழ்ந்தான்.
விழும் சத்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்து பார்த்தனர்.அதற்குள் அவன் இறந்து இருந்தான்.காசினா பாதி திறந்த நிலையில் இருந்ததை வைத்து நடந்ததை அறிந்து கொண்டனர்.இறந்த மா கௌர் உடலை பாறைகள் கொண்டு மூடி சமாதி செய்து விட்டு அங்கிருந்து விரைந்து கிளம்பினர்
கிளம்பிய அவர்கள் சற்று தூரத்தில் இருந்த வானவில் பாலத்தை அடைந்தனர்.
அது மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அந்த கயிறு பாலத்தை ஒவ்வொருவராக கடந்து சென்றனர்.
இதற்கிடையில் பொழுது விடிந்தது நமது நான்கு நண்பர்களும் அந்த மலை குன்றை அடைந்தனர்.அங்கிருந்த சாம்பலில் இருந்து தப்பியவர்கள் அங்குதான் இரவில் தங்கி உள்ளனர்.என்பதை கண்டு கொண்டனர்.விரைந்து சென்றால் அவர்களை மாலைக்குள் பிடித்துவிடலாம் என முடிவு செய்து கிளம்பினர்.தாங்கள் பின்தொடர்வது அவர்களுக்கு தெரியாததால் அவர்கள் தடங்களை அழிக்காமல் சென்றிருந்தனர்.ஆகையால் அதனை பின்தொடர்வது சுலபமாக இருந்தது.
மறுநாள் விடியகாலை நண்பர்கள் வானவில் பாலத்தை அடைந்தனர்.பாலத்தின் நிலையை கண்டு கால்நடையாக செல்வது தான் நல்லது என முடிவு செய்கின்றனர்.அதன்படி குதிரைகளை பாலத்தின் இந்த பக்கம் விட்டுவிட்டு ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கால்நடையாக பாலத்தை கடந்தனர்.
அதே நேரத்தில் ஷா யானும் அவனது கூட்டத்தினரும் தங்களது கிராமத்தை அடைந்தனர்.அங்கிருந்த தல்சாரிடம் காசினாவை ஒப்படைத்து விட்டு மா கௌர் ரிர்க்கு ஏற்பட்ட முடிவை எடுத்துக்கூறுகிறான்.அதனை கேட்ட தல்சார் ஒரிகட்டிர்க்கு பலி கொடுத்து அதன் பாதுகாப்பை பெறவேண்டும் என கூறுகிறான்.அதன் படிஇளம்பெண்கள் அனைவரையும் வரிசைபடுத்தி நிற்க வைக்க சொல்கிறான்.மற்றும் பக்கத்தில் இருக்கும் மற்ற இனத்தவருக்கும் மாலையில் பலி கொடுக்க இருக்கு செய்தியை முரசறைந்து கூற சொல்கிறான்.உடனே ஷா யானும் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி செல்கிறான்.
பாலத்தின் மறுபக்கத்தை அடைந்த நண்பர்கள் கால்தடங்கள் வைத்து திருடர்கள் ஆப்ரே சமவெளியில் வாழும் ஹுவால்பை இனத்தவர்தான் என அறிந்து கொள்கின்றனர்.அதனை உறுதிபடுத்தும் வகையில் அருகில் பலமாக முரசு சத்தம் கேட்டது.அதில் இருந்து பலி கொடுக்க போவதை அறிந்து கொண்டு காப்பாற்றுவதற்காக விரைந்தனர்.
இதற்கிடையே கிராமத்தில் இளம்பெண்கள் வரிசையாக நிற்க வைக்கபட்டனர்.தல்சார் ஒன்பது வெள்ளை கற்களையும் ஒரு கருப்பு கல்லையும் ஒரு குடத்தில் போட்டான்.அதனை எடுத்து வந்து நின்று கொண்டிருந்த பெண்கள் ஒவ்வொருவரையும் குடத்தில் இருந்து ஒரு கல்லை எடுக்க சொன்னான்.அனைவரும் எடுத்த பின் எல்லோர் கைகளையும் விரித்து காட்டசொன்னான்.ஒரு பெண்ணின் கைகளில் கருப்பு கல் இருந்தது.அவளை பிடித்து பலிக் கம்பத்தில் கட்டசொன்னான்.
மாலை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த பெண் பலிக்கம்பத்தில் கட்டப்பட்டாள்.வில் வித்தையில் சிறந்த ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முரசுகள் ஒலிக்க ஆரம்பித்தன தல்சார் காசினாவை கொண்டு வந்து ஒரு பாறையின் மேல்வைத்தான்.ஆகட்டும் என குரல் கொடுத்தான்.வில் வீரர்கள் அம்பு தொடுக்க தயாரானார்கள். திக் திக் திக்.
சரியான சமயத்தில் முன்னால் வந்த டைகரும் கிட் வில்லரும் ஒரு குன்றின் மேல் இருந்து நடக்கும் அக்கிரமத்தை பார்கின்றனர்.உடனே மேலே வந்துகொண்டிருந்த வில்லரையும் கார்சனையும் சீக்கிரம் வர சைகை செய்தனர்
வேளை நெருங்கியது வீரர்கள் வில்லில் அம்பை பூட்டினர்.நமது நண்பர்கள் செயலில் இறங்கினர்.கீழே உள்ளவர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.மேலே இருந்து கிட் பாதுகாப்பு கொடுக்க மற்ற மூவரும் கீழே வந்து எதிர்தவரை எல்லாம் சுட்டு வீழ்த்தினர்.டைகர் தல்சாரை சுட்டு கொன்று அந்த சிலை இருக்கும் காசினாவை எடுத்துக்கொள்கிறார்.வில்லர் அந்த பெண்ணை காப்பாற்றினார் கட்டை அவிழ்த்த உடன் அந்த பெண் மயங்கி வில்லர் மேல் விழுந்தாள்.
ஹுவால்பைகள் சுற்றி வளைத்து வீழ்த்த நினைத்தனர்.அவர்களது துரதிர்ஷ்டம் அவர்களிடம் வில்லும் அம்பும் மட்டுமே இருந்தது.ஆகையால் சுற்றி வளைத்து அம்புகளை எய்தனர்.அந்த பெண்ணை தோளில் போட்டுகொண்டு சென்ற டெக்ஸ் தோள் மீது ஒரு அம்பு பாய்ந்துவிடுகிறது.
உடனே மற்ற இருவரும் தோட்டா மழை பொழிய செய்தனர்.அப்படியே மூவரும் அந்த பெண்ணுடன் கிட் இருந்த குன்றிற்கு வருகின்றனர்
பின் அங்கிருந்து விரைந்து பாலத்தை நோக்கி செல்கின்றனர்.ஆனால் எதிரிகள் மற்றொரு குறுக்கு வழியில் இவர்களுக்கு முன் பாலத்தை அடைந்து காத்திருகின்றனர்.இதற்கிடையில் மற்றொரு இனத்தவர் அந்த சிலையை பறிக்கும் பொருட்டு பாலத்திற்கு வருகின்றனர்.
இவ்வாறாக பாலத்தின் ஒரு பக்கம் ஒரு பெரிய யுத்தமே நடக்கிறது.இறுதியில் அவர்களை காப்பாற்ற வரும் நவோஜோக்களின் உதவியுடன் இரு கூட்டதினரையும் முறியடித்து விட்டு பாலத்தையும் வெட்டிவிட்டு தப்பி செல்கின்றனர்.
நண்பர்களே நமது நண்பர் சிபி அவர்கள் நமக்காக இதன் ஒரிஜினல் காமிக்ஸின் கலர் ஸ்கேன்கள் அனுபியுள்ளார்.அதனை மேலே சேர்த்துள்ளேன் கண்டு களியுங்கள்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ .