நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு ஒரு காமிக்ஸ் சார்ந்த பதிவுடன் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர் ஒருவரின் மூலம் லயன் காமிக்ஸின் கோடை மலர்-87 படிக்க கிடைத்தது.அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே அதனை பற்றிய இந்த பதிவு.
லயன் காமிக்ஸின் 36வது வெளியீடாக ஏப்ரல் மாதம் 87ஆம் வருடம் கோடைமலர் புத்தகம் வந்தது.
வழக்கமான பாக்கெட் சைஸில் குட்டி குண்டு புத்தகமாக வந்தது.
இப்புத்தகத்திற்கு வந்த விளம்பரம்.
இப்புத்தகத்தில் மொத்தம் ஆறு கதைகள்.
1. ஸ்பைடரின் சிவப்பு தளபதி
2. மாடஸ்டி கார்வினின் கார்வினின் யாத்திரைகள்
3. லாரன்ஸ் டேவிட்டின் எலிகள் ஜாக்கிரதை
4. டெக்ஸ் வில்லரின் பழிக்குப் பழி
5. இரட்டை வேட்டையரின் திருடனுக்கு திருடன்
6. ஆர்சியின் வெனிஸ் நகரில் ஆர்ச்சி
புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டுள்ளதால் புகைபடங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
1. ஸ்பைடரின் சிவப்பு தளபதி :
கதை கொஞ்சம் மொக்கையாகத்தான் இருக்கிறது. இப்பொழுது படிப்பதனால் அப்படி தெரிகிறதோ என்று தெரியவில்லை.
எனக்கு மிகவும் பிடித்த ஸ்பைடர் கதைகள்
1. சைத்தான் விஞ்ஞானி
2. பாட்டில் பூதம்
3. நீதிக் காவலன் ஸ்பைடர்
மற்ற கதைகள் அனைத்தும் ஓகே ராகம் தான்.
சிவப்பு தளபதி என்ற ஒரு அயோக்கியன் ஒரு பெரிய விமானத்தில் வந்து நியூ யார்க் நகர மக்களிடம் இருந்து மிரட்டி பணம் கேட்கிறான்.
தனக்கு போட்டியாக உருவாகியுள்ள எதிரியை கண்டு கொதித்து எழும் ஸ்பைடர் அவனை தனது ஹெலிகாரில் சென்று முறியடிக்கிறார்.
2. மாடஸ்டி கார்வினின் கார்வினின் யாத்திரைகள்
ஒரு சிறிய சாகசம் இருந்தும் பரவாயில்லை.
தனது தோழி ரீனாவுடன் விடுமுறையை கழிக்க ஒரு தீவிற்கு வருகிறார் கார்வின். அங்கு அவர்கள் இருவரையும் ஒரு விஞ்ஞான தம்பதியினர் பிடித்து சென்று மயக்க ஊசி செலுத்தி பிரமாண்ட பொருட்கள் இருக்கும் ஒரு அறையில் அடைத்து அவர்களுக்கு தங்களது ஒருவம் தான் சிறிதாகிவிட்டது என்ற பிரேமையை உருவாகுகின்றனர்.
டாரண்டின் வேண்டுகோளிற்கு இணங்கி அந்த கூட்டத்தினரை பிடிக்க வரும் மாடஸ்டி எதிர்பாராவிதமாக கார்வினையும் ரீனாவையும் கண்டுபிடித்து காப்பாற்றுகிறார்.
3. லாரன்ஸ் டேவிட்டின் எலிகள் ஜாக்கிரதை
இதுவும் ஒரு மிகச் சிறிய சாகசம்.
ஒரு வித ஒலியை ஒலிக்க செய்து நகரில் இருக்கும் எலிகளை வெறிகொள்ள செய்து மக்களை கடிக்க செய்கிறான் ஒரு ஆகொதீகா வை சேர்ந்த ஒரு தீவிரவாதி.
அவனை முறியடித்து அந்த எலிகள் மூலமே அவனை கொல்கின்றனர் நமது நாயகர்கள்.
4. டெக்ஸ் வில்லரின் பழிக்குப் பழி
வேறு ஒரு எதிரியை விரட்டி வரும் வில்லரும் கார்சனும் சில்வர் பெல் நகரை அடைகின்றனர்.
அங்கு எதார்த்தமாக அந்த நகரின் பெரும் பணக்காரர் பேக்கரின் மகன் ஆல்பர்ட் பணத்திமிரில் தனது பிறந்த நாளை கொண்டாட மதுபான கடையில் கண்டபடி சுட்டுகொண்டிருப்பதை காண்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் ஒரு குண்டு நமது கார்சனின் காதில் உரசி செல்கின்றது .பொங்கி எழும் டெக்ஸ் அவனை நையப்புடைத்து பாடம் புகட்டுகிறார்.
கோவப்பட்டு செல்லும் ஆல்பர்ட் தனது பண்ணையை சேர்ந்த நான்கு பேரை அழைத்து வருகிறான்.அவர்களையும் சுட்டு வீழ்த்துகின்றனர்
பின் அந்த விஷயத்தை தனது தந்தையிடம் கூறுகிறான்.அதற்கு அவன் தந்தை ரூபி ஸ்காட் என்ற கொலைகாரனை அனுப்புகின்றார்.
முதலில் அவனால் நயவஞ்சகமாக குண்டு காயம் அடையும் டெக்ஸ் மீண்டும் வந்து இடது கையை பயன் படுத்தி அவனை சுட்டு வீழ்த்தி விடுகிறார்.
ரூபி இறந்ததற்கு காரணமான ஆல்பர்ட்டை அவனது செவிந்திய மனைவி சுட்டு வீழ்த்திவிடுகிறாள்.
தனது மகன் இறந்ததை கேட்ட பேக்கர் புத்தி பேதலித்து பண்ணைக்கு தீயிட்டு அதில் தானும் வெந்து இறந்துவிடுகிறார்.
5. இரட்டை வேட்டையரின் திருடனுக்கு திருடன்
சிறைசாலையில் இருந்து தப்பிக்க பார்க்கும் ப்ரீவ்ஸ்டர் என்ற திருடனின் சதி வேலையே முறியடிக்கின்றனர் SI 6 உளவுபிரிவை சேர்ந்த ஜார்ஜும் டிரெக்கும்.
6. ஆர்சியின் வெனிஸ் நகரில் ஆர்ச்சி
வெனிஸ் நகருக்கு சுற்றுலா வரும் நமது ஆர்ச்சி குழுவினர் அப்படியே அங்கு இருக்கும் ஒரு பாங்கின் தங்கம் பட்டுவாடா செய்யும் வேலையே செய்கின்றனர்.
அப்பொழுது சீதோசன நிலையை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றும் ஒரு கருவி கொண்டு அந்த நகரின் ஆறு முழுவதையும் ஐஸ் கட்டியாகி ஆர்சியை உறைய செய்து தங்கத்தை கடத்தி சென்று விடுகின்றனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து பல சாகசங்கள் செய்து நமது குழுமினர் தங்கத்தை மீட்கின்றனர்.
ஆர்ச்சி கதைக்கு மேலும் சில புகைப்படங்களை நாளை மாலை இப்பதிவுடன் சேர்கிறேன்.
இப்பதிவு இப்புத்தகத்தை படிக்காத நண்பர்களுக்கு ஒரு சிறு கதை சுருக்கமாகவும் படித்த நண்பர்களுக்கு மீண்டும் நினைவு படுத்தி பார்க்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ