வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் நாம் பல இந்திய மொழிகளில் (ஆங்கிலம் இந்திய மொழி அல்ல) வந்த இந்திய தயாரிப்பான டைமண்ட் காமிக்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.
என்னிடம் இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் தாராபுரத்தில் இருக்கும் ஒரு லென்டிங் லைப்ரரியில் இருந்து வாங்கியவை.
நான் படித்தது முழுவதும் ஆங்கில பள்ளி கூடங்களில் தான்.ஆகையால் கண்டிப்பாக ஆங்கில காமிக்ஸ்கள் வாங்கி படித்து வீட்டில் உள்ளவர்களை சந்தோசபடுத்த வாங்கி பின்பு மிகவும் பிடித்து போன காமிக்ஸ்களில் ஒன்றாகியது.அனைத்தும் மிகவும் எளிய ஆங்கிலத்தில் இருக்கும்.புரிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும்.
பலதரப்பட்ட நாயகர்களை அவர்கள் உருவாகினார்கள்
முதலில் மற்றவர்கள் போல வெளிநாட்டு தயாரிப்புகளான
ஜேம்ஸ் பான்ட்
பேண்டம்
மாண்ட்ரேக்
ஆகியோர்களை முறைப்படி லைசென்ஸ் வாங்கி வெளியிட்டனர்.
பின்பு இங்கேயே பல கதாபத்திரங்களை உருவாகினார்கள்.
அவர்கள்
Faulad Singh - இவர் ஒரு விண்வெளி சாகச வீரர்,இவருடன் ஒரு குள்ளன் வேறு இருப்பான்.இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் சாகசங்களே கதைகள்.எனக்கு இவருடைய கதை அவ்வளவாக பிடிக்காது.
அக்னிபுத்ரா - அபே - இவர்கள் இருவரில் அக்னிபுத்ரர் வெளி கிரகத்தில் இருந்து வந்தவர்.அபே இங்கு இருப்பவர்.இருவரும் சேர்ந்து தீமையை எதிர்த்து போராடுவார்கள்.இவர்களுடைய கதைகளை ராணி காமிக்ஸ் நிறுவத்தினர் கூட கடைசி காலகட்டங்களில் வெளியிட்டனர்.
டைனமைட் - இவர் ஒரு ஆக்சன் ஹீரோ.
மகாபலி சாகா - இவர் டார்சான் மற்றும் நம்ம மன்னர் பீமா போல.காட்டில் வாழ்கிறார்.அங்கு வரும் கொள்ளையர்கள் மற்றும் அங்கு இருக்கும் சில கெட்ட காட்டுவாசிகளை எதிர்த்து போராடுவார்.
Tauji & சாச்சா படீஜா - இவர்கள் இருவருமே தாத்தாக்கள்.இவர்களுடை பெரும்பாலான கதைகள் பில்லி சூனியம் மற்றும் ஆவிகளை எதிர்த்து இருக்கும்
லம்பு - மோட்டு - இந்த சகோதரர்கள் நமது இரட்டை வேட்டையர்கள் போல.எனக்கு இவர்களுடைய கதைகள் மிகவும் பிடிக்கும்.
இவை தவிர பிரபல pran's என அழைக்கப்படும் பிரான் குமார் ஷர்மா அவர்களால் உருவாக்கப்பட்ட காமிக்ஸ் தயாரிப்புகளை வெளியிட்டார்கள்.
அவரை பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.
மற்றும் டைமண்ட் காமிக்ஸ் பற்றிய தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
அவைகள் அனைத்துமே நகைச்சுவை நிறைந்தவைகளாக இருக்கும்.
பில்லூ - இவர் ஒரு வாலிபர்.இவர் மேலை நாடுகளில் பிரபலமான ஆர்ச்சியை போல இருப்பார்.பெண்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.
ராமன் - இவர் ஒரு திருமணமானவர்.ஒரு கணவன் மனைவி இடையில் நடக்கும் நிகழ்சிகளை நகைச்சுவையோடு கூறியிருப்பார்.
சாச்சா சௌதரி - இவர் மிகவும் பிரபலமானவர்.இவரது மூளை கணினியை விட வேகமாக இயங்கக்கூடியது எனபது பழமொழி.இவருடன் வெளிகிரகத்தை சேர்ந்த சாபு என்னும் கடோதகஜன் ஒருவனும் இருப்பான்.இவர்களுடைய முதல் எதிரி ராக்கா எனப்படும் ஒரு கொள்ளைக்காரன் தான்,
.
தாபு - இவரும் ஒரு வாலிபர்தான்.
பிங்கி - இவள் நம்ம சமத்து சாறு போல.குறும்புத்தனம் நிறைந்தவள்
ஸ்ரீமதி - திருமணமான ஒரு மேல் வர்கத்து பெண்மணி.அவர் செய்யும் பகடுகளை நகைசுவையோடு கூறியிருப்பார்.
இக்கதைகளை நீங்களும் படித்திருந்தால் உங்களுக்கு பிடித்த கதாபத்திரம் எது என பினனுட்டம் மூலம் கூறுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .
கிருஷ்ணா வ வெ.