வணக்கம் நண்பர்களே,
ஒரு வழியாக ஊருக்கு சென்று வந்து விட்டேன்.
எனது தங்கையின் கல்யாணம் இருந்ததால் நேர குறைவு காரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே கொண்டு வந்துள்ளேன்.
எனது முதல் come back பதிவு இந்த்ரஜால் காமிக்ஸ் தொகுப்பு.
என்னிடம் மொத்தம் 11 புத்தகங்களே உள்ளன.
கதைகள் எனக்கு நினைவு இல்லை.
வேதளரின் பேய் குலம் மட்டும் நினைவு இருக்கிறது.
ஒரு போலி வேதளரின் பிடியில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.
இதில் அவரது குதிரையின் பெயர் கேசரி.
ஆனால் படங்கள் கலரில் அருமையாக இருக்கும்.
அடக்குவாரற மந்தையும் நன்றாக இருக்கும்.
இந்த புத்தகங்களை பற்றி என்னுடைய பொதுவான கருத்து இதன் மொழிபெயர்ப்பின் தரம் மிக குறைவே.
இக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே.
அவ்வளவு தான் நண்பர்களே.
மீண்டும் விரைவில் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.