கழுகு வேட்டை - A Tex Willer Action Comics
வணக்கம் நண்பர்களே,
மீண்டும் ஒரு நீ...........ளமான தனிப்பதிவு.
43 புகைப்படங்கள் கொண்டதொரு பதிவு.
படிக்க ஆரம்பிக்கும் முன் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள்.
நமது ஓட்டெடுப்பில் இரண்டு நண்பர்கள் இக்கதையினை முதலில் கேட்டுருந்தார்கள்.அவர்களுக்காக இந்த பதிவு.
இந்த புத்தகம் லயன் தீபாவளி மலராக 1992 வருடம் வந்தது.
இக்கதையில் பெரும்பாலும் டெக்ஸ் தனித்தே செயல்படுவார்.
இக்கதை ஒரு அருமையான ஆக்சன் அட்டகாசம்.இனி கதைக்கு செல்வோம்.
இந்த புத்தகத்திற்கு மற்றும் ஒரு சிறப்பும் உண்டு.அது என்னவென நண்பர்கள் கண்டுபிடியுங்கள்.பின்னர் விடையை காண இப்பதிவின் இறுதிக்கு செல்லுங்கள்.
Spoiler Alert:இப்பதிவில் புத்தகத்தின் முழு கதையும் உள்ளது.( நாங்களும் அலெர்ட் போடுவோம்ல)
கதை:
டைகர் ஜாக்கும் மற்றும் ஒரு நவஜோ வீரனும் வெளியில் சென்று விட்டு தனது கிராமத்திற்கு திரும்பிகொண்டிருகின்றனர்.வழியில் ஒரு நால்வர் குழு நெருப்பை சுற்றி அமர்ந்திருப்பதை பார்கிறார்கள் அவர்களில் ஒருவன் ஸ்கார்பேஸ் என்ற செவிந்தியன் என அடையாளம் அறிந்துகொள்கிறார் டைகர்.மற்றும் அவன் வெள்ளை இனத்தவரோடு சேர்ந்து கொலைத்தொழில் புரிவதாக டைகர் தன நண்பனிடம் கூறுகிறார்.
அருகில் வரும் அவர்களை ஸ்கார் பேஸ் தவிர மற்ற மூவரும் வரவேற்று காபி அல்லது மது அருந்த கூப்பிடிகிறார்கள்.இறங்கிவரும் டைகரிடம் ஒருவன் உங்களுக்கு தெரிந்த ஒருவரை அறிமுகம் செய்யவே காத்திருக்கிறோம் என கூறுகிறான்.அதே சமயம் அவர் பின்னால் இருந்து ஒருவன் துப்பகியின் பின்புறத்தால் அவரை அடித்து வீழ்த்துகிறான்.அதனை பார்த்த அவரது நண்பன் துப்பாக்கியை எடுக்க குதிரையை நோக்கி ஓடுகிறான்.ஆனால் அதற்கு முன்பே அவனை ஸ்கார்பேஸ் கத்தி வீசி கொன்றுவிடுகிறான்.
பின்பு நால்வரும் சேர்ந்து டைகரை அடித்து துன்புறுத்துகின்றனர்.அப்பொழுது குகைக்குள் இருந்து முகமெல்லாம் தீ புண் தழும்புகளோடு அவர்களது தலைவன் வருகிறான்.அவனும் டைகரை மேலும் அடித்து ஒரு நடைபிணம் போல ஆக்குகின்றான்.பின் டைகரை தூக்கி டெக்ஸ்சிடம் சொல்லசொல்லி ஒரு செய்தி கூறுகிறான்.அது டெக்ஸ் ஒரு வாரத்திற்குள் ப்யூப்லோ பெலிசிலுள்ள பூட்ஹில்ஸுக்கு வந்து தன்னுடன் ஒற்றைக்கு ஒற்றை மோத வேண்டும் என்று எல் மியூர்டோ கூறியதாக கூற சொல்கிறான்.பின்பு அவரை அவரது குதிரையில் ஏற்றி அவரது நண்பனது உடலையும் ஏற்றிவிட்டு குதிரையை துரத்தி விடுகின்றனர்
பல மணி நேரத்திற்கு பிறகு குதிரை நவஜோ கிராமத்தை அடைந்தது.
அங்கு இருந்த டெக்ஸ் யிடம் டைகர் நடந்ததை கூறினார்.அதற்கு டெக்ஸ் எல் மியூர்டோ என்ற பெயர் தனக்கு எதையும் நினைவு படுத்தவில்லை என்று கூறுகிறார்.ஆனாலும் தான் அவன் சவாலை ஏற்று அங்கு செள்ளபோவதாக வாக்களிகிறார் தானும் வருவதாக கூறிய டைகரை சமாதான படுத்திவிட்டு செல்கிறார்.
விடிந்ததும் டெக்ஸ் வின்கேட்டில் இருக்கும் செரிப்பை சந்தித்து விவரம் கேட்கிறார்.டெக்ஸ் கூறிய அடையாளத்தில் நான்கு பேர் அந்த பிராந்தியத்தில் சுற்றியதாகவும் அவர்கள் பிரச்சனை எதுவும் செய்யாததால் தான் விசாரிக்க வில்லை என்றும் கூறுகிறார்.அப்பொழுது கோச்சு வண்டி மிக வேகமாக ஊருக்குள்ளே வருகின்றது.அதில் வரும் தன மகன் கிட்டை வரவேற்க செல்கிறார் டெக்ஸ்.ஆனால் கிட் துப்பாக்கி காயம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.கிட்டை மருத்துவரிடன் சேர்த்து விட்டு வண்டியோட்டியிடம் விசாரிக்கிறார்.வண்டியோட்டியும் எப்படி எல் மியூர்டோவும் அவனது ஆட்களும் வண்டியை மடக்கி கிட்டை காயப்படுத்தி டெக்ஸ் பூட்ஹில்ஸுக்கு வரவேண்டும் என்று கூறியதாக சொல்கிறார்
அதனை கேட்டு மிக கோவம் அடைந்த டெக்ஸ் அவர்களுக்கு பாடம் புகட்டபோவதாக சபதம் செய்கிறார்.தான் கைபிடோ சாலை வழியாக சென்று அவர்களுக்கு முன்பே ப்யூப்லோ பெலிஸ் அடைந்து அவர்களுக்காக காத்திருக்க போவதாக கூறுகிறார்,ஆனால் அந்த பாதை மிகவும் மோசமானது என செரீப் எச்சரிக்கிறார்,ஆனால் டெக்ஸ் தனக்கு அந்த பாதை மிகவும் பரீச்சியம் எனகூறி புறப்படுகிறார்.
ஒரு நாள் கடுமையான பயணத்திற்கு பிறகு அவர் சன்செட் வில்லா வந்தடைத்தார்.அங்கு இருந்த செரிப் லார்கிடம் ஐந்து பேரை பற்றி விசாரித்தார்.செரிப் அப்படி யாரும் அங்கு வரவில்லை என்பதை அறிந்து கொண்டார்.பின் அவர்கள் வரும் வரை எலிபெண்ட் பாலஸ் ஹோட்டல் சென்று தான் காத்திருப்பதாகவும் ஏதாவது தகவல் தெரிந்தால் அங்கு வந்து கூற சொல்லிவிட்டு செல்கிறார்.ஹோட்டலை அடைந்த டெக்ஸ் தனது அலுப்பு தீர வெந்நீரில் குளிக்கிறார்.அப்பொழுது தெருவில் துப்பாக்கி சத்தம் கேட்டு உடனே சென்று பாகிறார்.

அங்கு செரிப் லார்க் சுடப்பட்டு இருந்தார் அருகில் சென்ற டெக்ஸ் யிடம் அவர் கூறிய ஐவரும் வந்து விட்டதாகவும் அவர்கள் தான் தன்னை சுட்டதாகவும் கூறி இறக்கிறார்.பின் அவர்கள் எங்கே என ஊர்மக்களிடம் கேட்க அவர்கள் மதுபான கடைக்கு சென்றதாக அறிந்து கொள்கிறார் பின் மதுபான கடைக்கு சென்று எல் மியூர்டோ மற்றும் அவனது ஆட்கள் நால்வரையும் துப்பாக்கி முனையில் சந்திக்கிறார்.துப்பாக்கி எடுக்க போன கிறிஸ்டியின் கையை காயப்படுத்துகிறார்.பின்னர் பார்மான் ரெட்க்ளிப்பிடம் அவர்களது துப்பாக்கியை பறிக்க சொல்கிறார்.ஆனால் துப்பாக்கி எடுக்க போன ரெட்க்ளிப் துரதிர்ஷ்டவசமாக எல் மியூர்டோ விற்கும் டெக்ஸ் சிர்க்கும் நடுவில் வர அந்த சமயத்தை தனக்கு தாதகமாக பயன்படுத்திக்கொண்ட எல் மியூர்டோ தனது துப்பாக்கியை உருவி ரெட்க்ளிபின் நெற்றியில் வைத்தான்.



டெக்ஸ் சை அவரது துப்பாக்கியை கீழே போட சொல்லி மிரட்டினான்.வேறு வழி இல்லாமல் டெக்ஸ் தனது துப்பாக்கியை கீழே போட்டார்.அதனை எடுத்து டெக்ஸ் சை கொல்ல கிறிஸ்டி பாய்ந்தான் ஆனால் டெக்ஸ் சை தான்தான் கொள்வேன் என எல் மியூர்டோ அவனை மிரட்டி அடகுகிறான்.பின்னர் ரெட்க்ளிப்பை பணயக்கைதியாக கூட்டிக்கொண்டு ஐவரும் தப்பித்து சென்றனர்.
பின்னர் ஊர்மக்களிடம் யாரவது ப்யூப்லோ பெலிஸ் சந்திப்பு வரை தன்னுடன் வந்து ரெட்க்ளிப்பை அழைத்துக்கொண்டு வர கூறுகிறார்.ஆனால் வருவதற்கு அனைவரும் தயங்கினர்.அப்பொழுது கிர்க்னர் என்பவன் மட்டும் தான் வருவதாக கூறுகிறான்.அவனிடம் நாம் விடியகால கிளம்பலாம் என கூறி செல்கிறார்.
அடுத்தநாள் விடிகாலை டெக்ஸ் மற்றும் கிர்க்னர் இருவரும் குதிரையில் நகரை விட்டு சென்றனர்.கிர்க்னர் தான் ரெட்க்ளிபிர்ற்கு பெரு குதிரையும் ஏதாவது பிரெச்சனை ஏற்பட்டால் சண்டை போடா துப்பாக்கி தோட்டாக்களும் கொண்டு வந்திருப்பதாக கூறுகிறான்.அதற்கு டெக்ஸ் அதற்கு அவசியம் இருக்காது என கூறுகிறார்.கிர்க்னர் எல் மியூர்டோவிற்கு அவர்மேல் அப்படி என்ன கோவம் என கேட்கிறான்.அந்த கேள்விக்கு தனக்கும் பதில் தெரியவில்லை என டெக்ஸ் கூறுகிறார்.பின் இருவரும் சந்திப்பை அடைகின்றனர்.அங்கு மிக மோசமான நிலையில் இருந்த ரெட்க்ளிப்பை கிர்க்னருடன் அனுப்பிவிட்டு தனது பயணத்தை டெக்ஸ் தொடர்ந்தார்.


ப்யூப்லோ பெலிஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது தீடீரென அவர் தாக்கப்பட்டார்.அவரது குதிரை எதிரிகளின் துப்பாக்கி குண்டுக்கு பலியானது.தான் ப்யூப்லோ பெலிஸ் சென்று அடையும் வரை தான் தக்கபட மாட்டோம் என நம்பிய டெக்ஸ் இந்த திடீர் தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின் சுதாரித்துக்கொண்டு ஒரு பாறையின் மறைவுக்கு சென்று பதிலடி கொடுத்தார்.மறைவில் இருந்து எட்டிப்பார்த்த ஒருவனை சுட்டு வீழ்த்தினார்.ஆனால் பின்னல் இருந்து ஒருவன் வந்து அவரை மடக்கினான்.என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருந்த பொழுது மேல் இருந்து டைகர் எதிரியின் மேல் பாய்ந்து அவனை கத்தியால் குத்திக்கொன்றான்.தனது அதிர்ஷ்டத்தை நினைத்து டெக்ஸ் மகிழ்ந்து கொண்டார்.
பின்னர் இருவரும் சேர்ந்து மீதி அனைவரையும் வீழ்த்தினர்.அதற்கு பின் அங்கு எல் மியூர்டோ இல்லாததை கண்டு டெக்ஸ் ஒரு உண்மையை அறிந்துகொண்டார்.அது தான் முன்னர் மதுபான கடையில் சுட்டு வீழ்த்திய கயவன் மீதி மூவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு தன்னை தாக்கி உள்ளான்.
பின்னர் டைகரும் டெக்ஸும் ப்யூப்லோ பெலிஸ் வந்தடைந்தனர் டெக்ஸ் டைகரிடம் ஒரு காலத்தில் ப்யூப்லோ பெலிஸ் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்றும் பின்னர் வெள்ளி சுரங்கம் கைவிரித்ததில் இருந்தது எப்படி அழிந்து விட்டதையும் கூறுகிறார்.பின்னர் அங்கு இருக்கும் ஷாண்டி என்ற பையித்தியத்திடம் இருந்து எல் மியூர்டோ காத்துக்கொண்டிருப்பதை அறிந்து கொள்கின்றனர்.
டைகரை அங்கு காத்திருக்க சொல்லிவிட்டு எல் மியூர்டோவை தனியே சந்திக்க பூட் ஹில்ஸ் எனப்படும் மயானத்தை நோக்கி செல்கிறார் மயானத்தை அடையும் டெக்ஸ் எல் மியூர்டோவை சந்திக்கிறார்.அவன் யார் என தனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார்.அப்பொழுது அவன் அங்கு இருக்கும் இரண்டு சமாதிகளின் மேல் இருக்கும் பெயரை வாசிக்க சொல்கிறான்.பெர்னாண்டோ மற்றும் டியெகோ ordonez சகோதரர்கள்.அதனை பார்த்ததும் டெக்ஸ்சிற்கு பழைய சம்பவங்கள் நினைவிர்க்கு வருகிறது அவர்களது மூன்றாவது சகோதரன் பகோ ordonez தான் எல் மியூர்டோ என அறிந்து கொள்கிறார்.
பகோ ordonez இன் கதை ஆரம்பம்:
பல வருடங்களுக்கு முன்பு ordonez சகோதரர்கள் மூவரும் ப்யூப்லோ பெலிசிற்கு வரும் கோச்சு வண்டியை மடக்கி கொள்ளை அடிகின்றனர்.அப்பொழுது பகோ அங்கிருக்கும் அம்மையாரின் கழுத்தில் இருக்கும் ஒரு பதக்கத்தை பறிக்க முயல்கிறான்.அப்பொழுது அந்த அம்மையார் அவன் முகத்தில் இருக்கும் முக மூடியை இழுத்து விடுகிறார்.உடனே அந்த வண்டி ஓட்டி அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்.உடனே மூவரும் சேர்ந்து அங்கிருக்கும் அனைவரையும் கொன்று விடுகின்றனர்.ஆனால் அங்கிருந்த அம்மையாரின் கணவனின் கைத்துப்பாக்கி பகோவை காயப்படுத்திவிடுகிறது.மருத்துவரிடம் அழைத்துச்செல்ல பயந்து அவனை தனது வீட்டின் மேல் முற்றத்தில் வைத்து அவர்களே வைத்தியம் செய்தனர்




கோச்சு வண்டி தாக்குதலை பற்றி கண்டுபிடிக்க ரேஞ்சர் டெக்ஸ் அந்த ஊருக்கு வருகிறார்.அங்கு விசாரித்தவரை அனைவரும் பகோ சகோதரர்கள் மேல் சந்தேகபடுவதை அறிந்து அவர்களை சந்தித்து பேச ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் அவர்களது வீட்டிற்கு வருகிறார்.அங்கு இருந்த பெர்னாண்டோ மற்றும் டியெகோ இருவரிடமும் விசாரிக்கிறார்.ஆனால் இருவரும் சேர்ந்து அவரை எதிர்க்கின்றனர் அங்கு நடக்கும் பயங்கரமான சண்டையில் டெக்ஸ் அவ்விருவரையும் சுட்டு வீழ்த்திவிடுகிறார்.ஆனால் அந்த வீடு தீப்பற்றி கொள்கிறது.வீட்டின் முற்றம் அவர் மேல் விழுந்து விடுகிறது.அப்பொழுது ஊர் மக்கள் தகுந்த சமயத்தில் வந்து அவரை காப்பாற்றுகின்றனர்




அப்பொழுது அவர் மேலே இருந்து யாரோ உதவி என கேட்கிறார்.ஆனால் மேலே யாரும் இல்லை என கூறி அந்த ஊர் செரீப் அது வெறும் மனப்பிராந்தி எனகூறி அழைத்து சென்று விடுகிறார்.மேல் முற்றத்தில் இருந்த பகோவின் முகத்தில் தீ பற்றிக்கொள்கிறது.அங்கிருந்து தப்பிக்க அவன் ஆற்றில் குதித்து விடுகிரான்.தனது சகோதரர்களின் சாவிற்கு காரணமான டெக்ஸ் சை பழிவாங்க தான் கடுமையான துப்பாக்கி பயிற்சி எடுத்துக்கொண்டான்.அவனது தீ வடு நிறைந்த முகத்தினால் அவனை அனைவரும் எல் மியூர்டோ (நடமாடும் பிணம்) என்று அழைத்தனர்.
பகோ ordonez இன் கதை முடிவு.
இப்படியாக தனது கதையை பகோ கூறினான்.பின் இருவரும் ஒற்றைக்கு ஒற்றை தயாராயினர்.தான் முன்பு அந்த அம்மையாரிடம் இருந்து பறித்த பதக்கம் தண்ணீர் புகந்ததால் திறந்த உடன் இசை வராமல் சிறிது நேரம் கழித்து வருகிறது.அப்படி அந்த இசை வந்த உடன் தங்களது தாக்குதலை தொடங்கலாம் என பாகோ கூறிவிட்டு அந்த பதக்கத்தை திறந்து வைத்தான்,பின் இருவரும் துப்பாக்கியை உருவ தயாராக இருந்தனர்.நிமிடங்கள் ஒவ்வொன்றாக கழிந்தது.10 நிமிடம் ஆனது பகோவின் முகமெல்லாம் வியர்வை டெக்ஸ்சின் முகம் கல் போல இருந்தது.திக் திக் திக் ...
திடீரென அந்த பதக்கம் இசை முழங்கியது.இருவரும் துப்பாக்கிய ஒருவி சுட்டனர்.பகோவின் குண்டு டெக்ஸ்சின் தொலை காயப்டுதியது.டேச்சின் குண்டு பகோவை வீழ்த்தியது.தான் தோண்டிய குழியில் தாமே விழுந்து இறந்தான்,பின்னர் காயத்துடன் டெக்ஸ் டைகரிடம் வந்தார்.பின்னர் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.டைகரிடம் டெக்ஸ் நடந்த கதை அனைத்தையும் கூறினார்.
நான் பதிவின் ஆரம்பத்திலேயே கூறியிருந்த அந்த சிறப்பு இந்த புத்தகம் விஜயன் அவர்களின் திருமண அழைப்பிதழ் தாங்கி வந்திருந்தது.அதன் புகைப்படம் கீழே.
என்னிடம் சிறிது கிழிந்துள்ளது.நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் எனக்கு அதன் புகைப்படம் அனுப்பினால் அதனை இங்கு இணைத்துவிடுவேன்.
அப்பா இந்த பதிவை முடிபதர்க்குள் தாவு தீர்ந்துவிட்டது.பெரிய கதை அதனை எப்படி சுருக்கமாக சொல்வது என.ஒரு அளவிற்கு கூறியிருக்கிறேன் என நினைக்கிறன்.படித்துவிட்டு கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.