வணக்கம் நண்பர்களே,
பூந்தளிர் கதைகளின் தொகுப்பில் எனது இரண்டாவது பதிவு.
முதல் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்.
இன்றைய தினம் புத்தக தினம். நாம் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தவேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக பூந்தளிர் இருக்கும்.
பூந்தளிர் பெரும்பாலும் ஆனந்த் பை அவர்களின் கதைகளையே கொண்டிருக்கும். மேலும் சில வாண்டுமாமா அவர்களின் தொடர்கதைகளும் இருக்கும்.
தேவியின் அருள் :
முதல் கதை தேவியின் அருள். சந்திராபூர் என்ற நாட்டில் சயான்பூர் என்ற சோம்பேறிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. மன்னர் அந்த சோம்பேறிகளை சுறுசுறுப்பு ஆக்குவபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்.
உடனே லக்ஷ்மன் என்ற நிதி அதிகாரி அந்த சவாலை ஏற்று எவ்வாறு அவர்களை சுறுசுறுப்பு ஆக்குகிறார் என்பதே கதை.
கபீஷ் :
இரண்டாவது கதை கபீஷினுடயது. தோப்பையா ஒரு தம்பதியினருடன் மான் பிந்துவை பிடிக்க வருகிறான். ஆனால் கபீஷ் அதனை எச்சரிக்க, அது தப்பி விடுகிறது.
அதே போல அங்கு வரும் யானை கூட்டத்தையும் கபீஷ் தனது தந்திரத்தால் காப்பாற்றுகிறது.
வேட்டை கார வேம்பு :
வழக்கம் போல தனது அதிர்ஷ்டத்தால் ஒரு மிருக காட்சி சாலைக்கு மலை பாம்பு ஒன்றை பிடித்து தருகிறார்.
மந்திரியின் தந்திரம் :
மந்திரி ஒரு கொசு அடிக்கும் குரங்கு மூலம் ராஜாவை மயக்க வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வழக்கம் போல அது அவர் தலையிலேயே வந்து விடிகிறது.
இப்பதிவின் புகைப்படங்களை நமக்காக மேம்படுத்திக் கொடுத்ததற்கு நண்பர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.
இந்த பதிவு உங்களையும் உங்கள் வீட்டு சுட்டிகளையும் சந்தோஷப் படித்தினால் மகிழ்வேன்.
அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.