வணக்கம் நண்பர்களே,
மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.
என்னிடம் இருக்கும் மீதமுள்ள லயன் மற்றும் முத்து காமிக்ஸ்களின் அட்டை படங்கள்.
இதில் இரத்தப்படலம் பெரிய புத்தகங்கள்,ஜேம்ஸ் பான்ட் 007 காமிக்ஸ்கள் மற்றும் பல புத்தகங்கள் உள்ளன.
இதில் ஹாலிவூடில் ஜாலி அருமையான நகைச்சுவை கதை.
ஒரு வீரனின் கதை சிறப்பான ராணுவ கதை.
புயல் படலம் மற்றும் ரவுடி ராஜ்ஜியம் இரண்டும் ரெக்ஸ் கதை.
ரோஜரின் நடக்கும் சிலை மர்மம்.
Wild West மின்னல் ஜெர்ரி.
CID சார்லசின் ஒரு விபரீத விதவை.
அனைத்துமே நல்ல கதைகள்.
முதல் மோதலாக பெரிய சைசில்(நாடோடி ரெமி தவிர்த்து) இரத்தப்படலம் வந்த பொது மிகவும் சந்தோசமாக இருந்தது.
ஹாலிவூடில் ஜாலி அந்த செவிந்திய தலைவர் படம் எடுக்கும் விதம் படிக்கும் போது சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.இறுதில் அவர் எடுத்த சோகபடம் பெரிய சிரிப்பு படமாக ஹிட் அடித்துவிடும்.
ஜேம்ஸ் பான்ட் பறக்கும் பாவை படலம் தவிர மற்றகதைகள் அனைத்தும் ஏற்கனவே ராணி காமிக்ஸில் வந்ததாக நினைவு.(நன்றி-விஸ்வா.)
காசினோ ராயல் திரைப்படத்தின் காமிக்ஸ் வடிவம் சூதாடும் சுறாவளி.
அவ்வளவுதான் நண்பர்களே.
மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.