வணக்கம் நண்பர்களே,
மீண்டும் டைகரின் இரண்டு கதைகளோடு இந்த பதிவு.
இத்துடன் டைகர் கதைகள் நிறைவு பெருகின்றன.
டிராகன் நகரம் தயாராக சற்று நேரம் எடுக்கின்றது ஆகையால் இந்த குறும் பதிவு நண்பர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
முதல் கதை சுரங்க வெடி. ஒரு அணையின் அருகே உள்ள கைவிடப்பட்ட சுரங்கத்தில் பயங்கரவாதிகள், பாக்ஸ் என்பவனின் தலைமையில் வெடிகுண்டு வைத்து சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை அழித்துவிடுவோம் என பயமுறுத்துகின்றனர்
இதனை முறியடிக்க டைகர் மற்றும் ஹென்றி அனுப்பப்படுகின்றனர்.அவர்கள் அணைக்கு வெடி வைத்து அந்த சுரங்கத்தை தண்ணீரில் மூழ்கடித்து கிராமங்களை காப்பாற்றுகின்றனர்.
இரண்டாவது கதை வைரக் கொள்ளை. ஹிட்லர் என்ற பயங்கரவாதி மிக பெரிய காந்தம் பொருத்தப்பட்ட இயந்திரம் மூலம் வைரங்கள் வைத்திருக்கும் இரும்பு பெட்டியை கொள்ளையடிகிறான். பின் ஒரு அருவியின் பின்னால் இருக்கும் மறைவிடத்தில் சென்று ஒளிந்து கொள்கிறான்
அவனது இருப்பிடத்தை கண்டு பிடித்து அவனை சட்டத்தின் பிடியில் கொண்டு வருகிறார் டைகர்.
அடுத்து பூந்தளிரில் வந்த சிறு கதைகளின் புகைப்படங்கள் வெளியிடலாம் என்று இருக்கிறேன்.அதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
சாப்ளின் மாமா,கபீஷ்,காளி,அணு கழகம் போன்ற பல கதைகள் அத்தொடர் பதிவுகளில் இடம் பெரும்.இது குழந்தைகளுக்காகவும் உதவும் என நினைக்கிறன்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.