வணக்கம் நண்பர்களே,
எனது நாவல்கள் தொகுப்பின் வரிசையில் இந்த பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்களின் ஒரு சில அட்டை படங்கள் உங்கள் பார்வைக்கு.
புஷ்பா தங்கதுரை யின் கதைகள் பெரும்பாலும் ஊதாப்பு என்ற புத்தகத்திலேயே வந்துள்ளன. அவரது கதைகளில் பெரும்பாலும் சிங் என்ற இன்ஸ்பெக்டர் வருவார், மற்றும் கட்டாயம் ஒரு கிளுகிளுப்பு காட்சி இருக்கும்.
கதைகளில் வரும் பெயர்களும் பழங்கால பெயர்களாக இருக்கும்.
அவர் க்ரைம் தவிர பிற வகைகளிலும் கதைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக சிறுவர்கள் துப்பறியும் கதைகள் லிட்டில் புஷ்பா என்ற புத்தகத்தில் வந்துள்ளன. மொத்தமாக எவ்வளவு வந்துள்ளன என்று தெரியவில்லை ஆனால் வந்த முதல் புத்தகத்தின் அட்டைபடம் கீழே.
அது தவிர ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் இறை சார்ந்த கதைகளும் எழுதிஉள்ளார். அதில் மிகவும் புகழ் வாய்ந்த கதை திருவரங்கன் உலா. நான் படித்ததில்லை ஆனால் கதையில் ஒரு திருமால் சிலை பல ஊர்கள் பயணம் செய்யும்.
சிறுவர்களுக்கான கதை |
ராணி முத்துவில் வந்த கதைகள் |
அவரது புகைப்படம் |
ஊதாப்பூ |
ஊதாப்பூ |
மொத்த புத்தகங்கள் |
பிற புத்தகங்களில் வந்த கதைகள் |
ராணி முத்துவில் வந்த சில அறிய கதைகள் |
அதே போல ஆவி அமானுஷ்யம் சார்ந்த கதைகள் எழுதுவதில் வல்லவர் ராஜேந்திரகுமார். அவரது துப்பறியும் கதைகளில் பெரும்பாலும் ராஜா ஜென்னி என்ற ஜோடி இருக்கும். அவர்களே துப்பு துலக்குவார்கள்.
எனது முன்னைய பதிவில் கூறி இருந்தது போல அவரது கதைகள் கோஸ்ட் என்ற புத்தகத்தில் தொடர்ந்து வந்தன.
ராணி முத்துவில் வந்த கதைகள் |
பாக்கெட் நாவலில் வந்த சில அறிய கதைகள்.
அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ .