வணக்கம் நண்பர்களே,
சென்ற பதிவில் நான் லண்டனில் இருப்பதை அறிந்து நண்பர் Muthufan அவர்கள் இங்கு நடக்கும் புக் மார்கெட் பற்றிய தகவல்களை மெயில் அனுப்பிருந்தார். அங்கு சென்று வந்த எனது அனுபவமே இந்த பதிவு.
அதன் சுட்டி கீழே.
http://londoncomicmart.co.uk/index.html
மாதம் ஒரு முறை லண்டன் ராயல் நேசனல் ஹோட்டலில் பல பழைய காமிக்ஸ் கடைகள் ஒன்று சேர்ந்து நடத்துகிறார்கள். இம்மாதம் 21 ஆம் தேதி (இன்று) நடப்பதை அறிந்து கண்டிப்பாக செல்ல முடிவு செய்திருந்தேன்.
இங்கு செல்வது முடிவானவுடன் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே லயன் ஆண்டு மலர் மற்று இதர காமிக்ஸ் வாங்கி பெட்டியை நிரப்பியாயிற்று ஏற்கனவே சொன்னது போல இனி புதிதாக வாங்க எடை பற்றாது.
இருந்தும் எனக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அளித்தது நண்பர் டெக்ஸ் சம்பத் கேட்டிருந்த டெக்ஸ் ஆங்கிலத்தில் இங்கிலாந்தில் பப்ளிஸ் செய்திருந்த Western Classics புத்தகங்களே.
மற்றும் நண்பர் Muthufan அவர்களும் Fleetway Comapanion புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி இருந்தார். ஆகவே என்னிடம் இருக்கும் சில புத்தகங்களை கொடுத்து விட்டு வேறு வாங்கிவரலாம் என்று எண்ணி இருந்தேன்.
புத்தகங்கள் வாங்குவதை விட பலரை சந்தித்து பிரிட்டிஷ் காமிக்ஸ் பற்றி அறிய ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நண்பர் கூறினார்.
இன்று காலை சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். மதியம் 1 மணி அளவில் சென்று சேர்ந்தேன். ஒரு பெரிய ஹாலில் பல கடைகள் இருந்தன . நுழைந்த முதல் கடையில் இருந்த மனிதரிடம் நண்பர் கூறிய Fleetway Comapanion புத்தகம் பற்றி கேட்டேன், சிறிது யோசித்து ஆம் அப்படி ஒரு புத்தகம் வந்தாகவும் அவரிடம் இல்லை என்று கூறினார்.
பின்னர் நெட்டில் இருந்து டெக்ஸ் ஆங்கில புத்தக அட்டைப்படங்களை காண்பித்து கேட்டேன். ஆம் ஒரு முறை முயற்சியாக அப்படி வந்தது என்று அது கிடைப்பது மிகவும் அரிது என்றும் கூறினார். அடுத்து ஸ்டீல் க்ளா புத்தகங்கள் இருக்குமா என்று கேட்டேன், இல்லை என்று கூறினார்.
மேலும் அவர் மட்டுமே ஒரு சில பிரிட்டிஷ் காமிக்ஸ் வைத்திருப்பதாகவும் வேறு கடைகளில் அது கூட கிடையாது என்றும் கூறினார். எனது எதிர் பார்ப்பு அனைத்தும் நொறுங்கி போனது. பின்னர் ஹாலை சுற்றிவந்து பார்த்ததில் அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது.
எங்கு நோக்கினாலும் மார்வல் மற்றும் DC காமிக்ஸ் புத்தகங்களே இருந்தன.
சில்வர் மற்றும் பிரான்ஸ் கால காமிக்ஸ்கள் இருந்தன. அனைத்து ஹீரோக்களுடைய அனைத்து வகையான காமிக்ஸ்களும் இருந்தன.
ஒரு சில DVD கடைகள் இருந்தன. நம்ம ஊரை போல அங்கு ஒருவர் திருட்டு DVD ரிப்புகள் விற்றுக்கொண்டு இருந்தார்.
எனக்கு எப்பொழுதுமே மார்வல் மற்றும் DC காமிச்களில் ஆர்வம் இருந்ததில்லை, படங்கள் மட்டும் தான். ஆகையால் வேறு என்ன காமிக்ஸ் தேடுவது என்றும் தெரியவில்லை.
இருந்த கொஞ்ச பிரிட்டிஷ் காமிஸ்களை நோட்டம் விட்டேன். அதிகமாக War காமிக்ஸ்களே இருந்தன. அதில் பார்த்த பொழுது கண்ணில் பட்டது. உங்களுக்கு நினைவுள்ளதா என்று கூறுங்கள். ஆங்கிலத்தில் Matt Maddock மற்றும் அவரது குழுவின் சாகசம்.
வேறு எதுவுமே வாங்குவது போல இல்லை. அப்பொழுது ஒரு மூலையில் இருந்த பெட்டியை பார்த்தேன். அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அட்டை இல்லாத வெறும் தனித்தாள்கள் கூடிய புத்தகங்கள் இருந்தன. அதனை பற்றி கேட்டபொழுது அவை புத்தகங்களின் proof reading பார்பதற்காக தயார் செய்த தாள்கள் என்று கூறினார்.
நல்ல வளவளப்பான தாள்களில் நல்ல தரமான ஆர்ட் ஒர்க்கில் இருந்த வெஸ்டேர்ன் கதைகள். எடுத்து பார்த்த பொழுது பல அறிமுகமான கதைகள் இருந்தன. அதன் புகை படங்கள் கீழே.
இவை அனைத்தும் நமது ராணி காமிக்ஸ் தமிழிற்கு கொண்டு வந்த வெஸ்டேர்ன் கதை புத்தகங்கள்.
இதன் புத்தகங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு இல்லை என்று கூறிவிட்டார். சரி வந்ததற்கு இதாவது இருக்கட்டும் என்று வாங்கிவந்தேன். ஊரில் வந்து பைண்டிங் செய்ய வேண்டும். இக்கதைகளின் பெயர்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.
எனக்கு மிகவும் பிடித்த மூன்று குதிரை வீரர்களின் கதைகள் இருந்தது மிக மகிழ்சி அளித்தது. கிட் கார்சன் என ராணி காமிக்ஸில் வந்த கதைகளின் அனைத்து புத்தகங்களிலும் ஹீரோவின் பெயர் வேறு வேறாக இருந்துள்ளது.
அங்கு நான்பார்த்து வாங்க முடியாத வேறுசில புத்தகங்கள் கீழே. மாடஸ்தியின் Daily Strip ப்புகளின் தொகுப்பு.
War லைப்ரரி புத்தகங்களாக வந்த அட்டை படங்கள் மற்றும் ஆர்ட் வோர்க்குடன் கூடிய புத்தகம்.
இவ்வாறாக ஏமாற்றத்துடன் எனது காமிக்ஸ் மார்கெட் அனுபவம் முடிந்தது.
அவ்வளவுதான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.

நான் பேசிய நல்ல மனிதர் |

கழுகு மலை கோட்டை புத்தகத்தின் ஒரு பக்கம்.