வணக்கம் நண்பர்களே,
அனைவரும் ஜெரோமிர்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.
நாளை எனது பிறந்தநாள் பரிசாக கிடக்கும் என எதிர்பார்கிறேன்.
இந்த இடைப்பட்ட வேளையில் யாரை பற்றி பதிவிடலாம் என்று யோசித்தபோது எனகிருந்த options ஜான் ஹவோக்,காரிகன்,மாண்ட்ரேக், ஷெர்லோக் ஹோல்மேஸ் மற்றும் இதர காமிக்ஸ்கள்.
அவற்றில் நான் தேர்ந்து எடுத்தது ஜான் ஹவோக்.
மிகவும் பாவமான,எதார்த்தமான ஒரு ஹீரோ.
ஒவ்வொரு முறையும் Q நிறுவம் ஏமாற்றுவது தெரியாமல் அவர்கள் கூறும் வேலையே செய்வது.
பின் அவர்கள் கூறும் காரணத்தை இறுதியில் கேட்டு கொண்டு ஒன்றும் கூறாமல் தெருவில் நடப்பது.
இது அவரது எல்ல புத்தகத்திலும் பொதுவான ஒன்று.
அவரை பற்றி மற்றும் இதுவரை வந்த காமிக்ஸ் பற்றி முதலை பட்டாளத்தார் அழகாக கூறியுள்ளார்.
நாங்கள் அதனை படித்திருப்பீர்கள்.இல்லையேல் கீழ் கண்ட லிங்க் கிளிக் செய்யவும்.
என்னிடம் இருக்கும் மேத்தா மற்றும் அசோக் காமிக்ஸ் அட்டை படங்கள்.
மற்றும் முத்து காமிக்ஸில் வந்த ரவுடிக் கும்பல் புத்தகத்தின் முதல் பக்கம்.
எனக்கு சில சந்தேகங்கள்.கீழே உள்ள புத்தகங்கள் வந்ததா என்று நண்பர்கள் தெரிவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.