வணக்கம் நண்பர்களே,
எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம்.
என்னுடைய பள்ளிகாலத்தில் எனக்கு இரு நண்பர்கள் இருந்தார்கள். நல்ல தம்பி மற்றும் விவேக். இருவரும் தினமும் தொலைகாட்சியில் வரும் ரகசியம் என்ற தொலைக்காட்சி தொடர் பற்றி அதிகமாக விவாதம் செய்வார்கள். எனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாததால் எனக்கு அதனை பற்றி தெரியாது. ஆனால் அவர்கள் கூறியதில் இருந்தே அத்தொடர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது.
அத்தொடர் முடிந்ததும் அடுத்து மர்ம தேசத்தில் வந்த தொடர் தான் விடாது கருப்பு. கருப்பு வெள்ளை மற்றும் கலரில் என பயணிக்கும் தொடர். பார்க்கும் அனைவரையும் ஈர்த்த தொடர்.அமானுஷ்யம்,சஸ்பென்ஸ் தொடர்களுக்கேலாம் ஒரு டிரெண்ட் செட்டெராக இருந்தது. அதனை நாகா நன்றாக இயக்கி இருப்பார்.
அத்தொடர் மூலம் தான் இந்திரா சௌந்தர்ராஜன் அறிமுகம் ஆனார். எனக்கு பொதுவாகவே சித்தர்கள் மற்றும் மித்தாலஜி பிடிக்கும். ஆகையால் இவரது கதைகள் மிகவும் பிடித்து போனது.
அவரது உச்சகாலத்தில் மாதம் பல நாவல்கள் அவரது கதைகளை தாங்கி வந்தன. க்ரைம் ஸ்டோரி,டுடே க்ரைம்,பாக்கெட் நாவல் என்று பல புத்தகங்கள் வந்தன.
க்ரைம் ஸ்டோரி மற்றும் டுடே க்ரைம் இரண்டிலும் முன்பு தொடராக வந்த கதைகளை பாகங்களாக வெளியிட்டனர்.
பாக்கெட் நாவல் புத்தகத்தில் அவரது பல புதிய கதைகள் வந்தன. அவரது கதையில் வரும் பொதிகை மலைக்கு போக பல நாள் ஆசைபட்டுளேன்.
அது போல அவரது கதையில் வரும் சித்தர்களை காண விரும்பினேன்.
அவரது அஷ்டமா சக்தி பற்றிய கதை தொடர் நன்றாக இருக்கும். ஒவ்வொரு சக்திக்கும் ஒரு கதை என்று கொடுத்திருப்பார்.
அது போல கன்னிகள் ஏழுபேர் என்ற கதை தொடரில் சப்த கன்னிகள் பற்றி கூறி இருப்பார்.
பாக்கெட் நாவலில் வந்த விக்ரமா விக்ரமா என்ற கதை தொடரில் விக்கிரமாதித்தனின் கதையா வித்தியாசமாக கொடுத்திருப்பார். கதையின் முடிவு மட்டும் மொக்கையாக இருக்கும். அனைத்தும் கனவு என்று முடித்திருப்பார்.
தொலைகாட்சியில் வந்து வெற்றி பெற்ற ருத்ரவீணை தொடரை நாவல் வடிவில் கொண்டு வந்தார். நாவலின் முடிவை மட்டும் தொலைகாட்சின் முடிவில் இருந்து வேறு படுத்தி காட்டி இருப்பார்.
அதே போல சிவமயம் தொடரும் நன்றாக இருக்கும்.
அவரது பல கதைகள் தொலைகாட்சியில் வெற்றி பெற்றுள்ளன. ரகசியம், விடாது கருப்பு, சொர்ண ரேகை, எதுவும் நடக்கும், ருத்திர வீணை, சிவமயம், கோட்டையபுறத்து வீடு ஆகியவை சில.
ஒவ்வொரு கதையிலும் அந்த அத்தியாயம் ஆரபிக்கும் முன் ஒரு சிறு குறிப்பு இருக்கும் அது மிக நன்றாக இருக்கும்.
கருப்பை பற்றிய குறிப்பு, ஒரு ராகத்தை பற்றிய குறிப்பு அல்லது அஷ்டமா சக்தியை பற்றியது. இப்படி எதாவது ஒரு குறிப்பு இருக்கும்.
தொடர்ந்து வரும் பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திர குமார் அவர்களின் கதை தொகுப்பை பார்க்கலாம்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.