லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Showing posts with label Movie Review. Show all posts
Showing posts with label Movie Review. Show all posts

Wednesday, January 1, 2014

Memories (2013) - Malayalam Movie Review




 வணக்கம் நண்பர்களே,

பொதுவாக நான் தமிழ் அல்லாது ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி மற்றும் நம்ம கருந்தேள் பரிந்துரைக்கும் கொரிய படங்கள் பார்ப்பேன். (கண்டிப்பாக சப் டைட்டில் கொண்டு தான்).

எனக்கு மலையாளத்தில் பிடித்த ஹீரோ ப்ருத்விராஜ். அவர் கனா கண்டேன் திரைபடத்தில் நடித்த வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தை பார்த்தத்தில் இருந்து பிடிக்கும். உண்மையில் அக்கதையின் ஆண்ட்டி ஹீரோ அவர்  தான் நம்ம ஸ்ரீகாந்த் கெஸ்ட் ரோல் பண்ணிருப்பார் :D.

மலையாளத்தில் வரும் த்ரில்லர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அந்த காலத்தில் வந்த சிபிஐ டைரிக்குறிப்பு, உண்மை முதல் போன வருடம் வந்த மசாலா 20 20 வரை நன்றாக இருக்கும்.

அதிலும் இவ்வருடம் வந்த மும்பை போலீஸ் மற்றும் மெமரீஸ் திரைப்படங்கள் மலையாள படங்களின் அடுத்த பரிமாணம் என்று கூறலாம்.

அதிலும் மும்பை போலீஸ் படத்தில் இமேஜ் பார்க்காமல் நடித்த ப்ரித்விராஜை கண்டிப்பாக பாராட்டவேண்டும். நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்பதை படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

இப்பதிவில் சமீபத்தில் நான் பார்த்த மெமரீஸ் திரைபடத்தை பற்றிய எனது கருத்தே.

படம் ஆரம்பிக்கும் பொழுது பாண்ட் படங்களில் வருவது போல ஆங்கில பாடல் ஒன்று பாட அதிரடி படை ஒன்று தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் நபரை சண்டையிட்டு காப்பாற்றுகிறது. அதில் ஒரு அதிகாரி சாம் அலெக்ஸ் நம்ம ப்ரித்விராஜ். பிடித்து வைத்திருந்த நபரை காப்பாற்றி அழைத்து போகும்பொழுது ஒரு தீவிரவாதி மட்டும் இறக்காமல் அவரை அடையாளம் பார்த்துவிடுகிறான்.

இது நடந்து சில மாதங்களுக்கு பிறகு, கொச்சியில் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி தனது மனைவியுடன் அங்காடியில் பொருட்கள் வாங்கிகொண்டு வரும் பொழுது கார் பார்கிங்கில் வைத்து கடத்தபடுகிறார்.பின் 3 நாட்கள் கழித்து ஒரு சாலையோரத்தில் உயரமான மரத்தில் தொங்கவிட்டு கிடைக்கபடுகிறார். அவரது மார்பில்  வேற்றைய மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.

அக்கொலையை விசாரிக்கும் S P வினோத் கிருஷ்ணா அக்கொலைக்கு காரணம் கொலையானவரின் மனைவியின் இளவயது காதலன் தான் என்று அவனை கைது செய்து முடித்துவிடுகிறார்.

இது நடந்து 5 மாதங்கள் கழித்து மற்றொரு அதிகாரி தனது மனைவி குடும்பத்துடன் காரில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வருகிறார். மனைவி உள்ளே செல்ல மகனை சிறுநீர் கழிக்க அழைத்து செல்கிறார். சிறிது நேரம் கழித்து வெளியே வரும் மனைவி தனது கணவன் கடத்தப்பட்டு இருப்பதை அறிகிறார்.

மேலும் 3 நாட்கள் கழித்து ஒரு ஓடையின் பாலத்தில் கைகள் பாலத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கபடுகிறார். இப்பொழுது போலீஸ் மீது பத்திரிகைகளால் குற்றம் கூறப்படுகிறது. மேலிடத்தில் இருந்து யாராவது திறமையான அதிகாரியிடம் கேஸை ஒப்படைக்க கூறப்படுகிறது.

இப்பொழுது நாம் மீண்டும் சாம் அலெக்சை பார்க்கிறோம்.முகமெல்லாம் தாடியுடன் மிகுந்த குடிபோதையுடன் இருக்கிறார். பிளாஷ்பாக்கில் நாம் முதல் காட்சில் பார்த்த தப்பித்த தீவிரவாதியினால் அவருடைய மனைவியும் மகளும் அவரது கண்முன்னால் கொலைசெய்யபட்டதை அறிகிறோம்.

அந்த நிகழ்ச்சியின் சோகத்தில் இருந்து வெளிவரமுடியாமல் முழு நேர குடிகாரராக இருக்கிறார். அவரை காணும் அவரது உயர் அதிகாரி இந்த சீரியல் கொலைகள் கேஸை பார்க்க சொல்கிறார். முதலில் மறுக்கும் சாம் பின் தனது தாயின் வற்புறுத்தலினால் சம்மதிக்கிறார்.

இடையில் அவரது குடிப்பழக்கத்தால் தனது தம்பி மற்றும் சமூகத்தில் அவலநிலைக்கு ஆளாகிறார். அவரது தம்பி தனது கல்யாணத்திற்கு கூட வரவேண்டாம் என்று அவரை கூறிவிடுகிறான்.

புலனாய்வு செய்யும் சாம் கொலையானவர்களின் மார்பில் எழுதி உள்ளது அரபு என்றும் அது பைபிளின் வாசகத்தை குறிகின்றது என்றும் கண்டுபிடிக்கிறார்.

கொலையாளி பைபிள் மீது ஈடுபாடு கொண்டவன் என்றும் ஆகையால் தான் கடத்தி 3 நாட்கள் கழித்து ஜீசஸ் போலவே கைகள் கட்டப்பட்டு தொங்கவிடுகிறான் என்றும் கண்டுபிடிக்கிறார். மற்றும் ஜீசஸ் மற்றவர்கள் பாவங்களுக்கு தான் தண்டனை அனுபவித்து போல இறந்தவர்களும் அவர்களது மனைவிகள் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கிறார்.

கொலையானவர்களின் மனைவிகளை விசாரிக்கும் பொழுது பல தகவல்கள் வெளிவருகின்றன. அதனை வைத்து எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் மற்றும் தனது குடிப்பழக்கத்தில் இருந்து மீள்கிறார் என்பதே மீதிக்கதை.

படம் நன்றாக இருக்கிறது என்ன சப் டைட்டில் தான் கிடைக்கவில்லை, இருந்தும் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் இருக்க வில்லை.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.





Wednesday, December 25, 2013

Briyani vs Endrendrum Punnagai - திரைவிமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

சமீபமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கவே முடிவதில்லை. சென்ற மாதம் முழுவதும் அனைத்து வாரங்களும் பிரயாணம் செல்ல வேண்டி இருந்தது.

பின் அப்பாடா என்று Gravity படம் புக் செய்தால் ஆபிசில் ஒரு பிரச்சனை வந்து வார இறுதியை அங்கேயே கழிக்க வேண்டி ஆகிவிட்டது.

இப்படி நான் தவற விட்ட படங்கள் பல. இறுதியில் ஒரு வழியாக தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டேன்.அதுவும் ஒன்றல்ல இரண்டு படங்கள்.நேற்று இரவு என்றென்றும் புன்னகை இன்று மதியம் பிரியாணி.அதிஷ்டவசமாக இரண்டு படங்களுமே ஏமாற்றவில்லை.

நான் பொதுவாக படங்களின் விமர்சனங்களை Sify வலைப்பூவில் பார்ப்பது வழக்கம்.படம் வெளியான அன்றே பிரியாணி படம் படு மொக்கை என்ற அளவு விமர்சித்திருந்தனர்.அதுவும் இல்லாமல் நான் கேள்விபட்ட  செய்தி வேறு நினைவுக்கு வந்தது.

தீபாவளி சமயத்தில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கடந்த வாரம் வெளிவந்த பிரியாணி இரண்டுமே ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் திரைப்படங்கள். தீபாவளிக்கு முன்பே இரண்டு படங்களுமே தயாறகிவிட்டன என்றும் திரைப்படங்களை போட்டு பார்த்துவிட்டு இரண்டில் அழகுராஜா நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்து தீபாவளிக்கு தலையின் ஆரம்பம் படத்தின் போட்டியாக வெளியிட்டனர் என்றும் கேள்விப்பட்டேன்.

அழகுராஜாவின் முடிவு அனைவரும் அறிந்ததே, இரண்டில் நன்றாக உள்ளது என்று தேர்வு செய்த படத்தின் நிலையே அப்படி என்றால் நிராகரிக்கப்பட்ட படம் எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது.அதற்கு தகுந்தது போலவே Sify வலைப்பூவின் விமர்சனமும் இருந்தது.

இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக வந்தது நண்பர் ராஜின் இந்த பதிவு. அது தான் பிரியாணி நன்றாக இருக்கிறது என்று முதலில் எனக்கு கூறியது.

இனி இரண்டு படங்களை பற்றிய எனது கருத்து.

என்றென்றும் புன்னகை :




கதை :


தனது தாய் சிறுவயதில் வேறு ஒருவருடன் சென்றதை அடுத்து பெண்கள் என்றாலே ஒரு வெறுப்புடன் வளரும் ஜீவா.அதனை மறக்க தந்தை நாசருடன் சென்னை வரும் ஜீவாவிற்கு பள்ளியில் வினய் மற்றும் சந்தானம் அறிமுகமாகிறார்கள்.

அதில் இருந்து மூவரும் ஒன்றாகவே வளருகிறார்கள்.தூங்குவது தண்ணி அடிப்பது சண்டை போடுவது எல்லாமே ஜீவாவின் வீட்டில் தான்.



இதற்கிடையில் ஒரு காரணத்திற்காக ஜீவா தனது தந்தையுடன் 15 வருடங்களாக பேசாமல் இருக்கிறார்.

மூவரின் ஒரே கொள்கை வாழ்வில் மூவருமே கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பது எனபது தான், சந்தானத்தின் வார்த்தையில் மூவரும் மொட்டை பசங்களாக இருக்க முடிவு செய்கிறார்கள்.

மூவரும் சேர்ந்து ஒரு விளமபர நிறுவனம் நடத்துகிறார்கள்.அப்பொழுது மற்றொரு நிறவனத்தின் மூலம் இவர்களுக்கு அறிமுகமாகிறார் திரிஷா.சும்மா சொல்ல கூடாது இப்படத்தில் அழகாகவே இருக்கிறார்.

அவர்களது விளம்பரத்தில் நடிக்க வரும் மாடல் ஆண்ட்ரியா ஜீவா மேல் மோகம் கொள்கிறார்.அவரை அடித்து அவமானப் படுத்துகிறார் ஜீவா.

இந்த இடத்தில் ஆன்டிரியா வினயை மயக்கி கல்யாணம் செய்து நண்பர்களை பிரிப்பார் என்று நினைத்த எனது நினைப்பில் டைரெக்டர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.

அடுத்து திடீரென நண்பர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டு ஜீவாவை தனிமை படுத்திவிடுகின்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் திரிசாவுடனான நட்பு வளருகிறது.அது காதலாக மலரும் நேரத்தில் தனது ஈகோ வினால் காதலை இழந்துவிடுகிறார்.



இறுதியில் தனது ஈகோ வை விட்டு தனது தந்தை நண்பர்கள் மற்றும் காதலியுடன் சேர்ந்தாரா எனபது இறுதிக்கதை.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது :


தேவையில்லாத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நீரோடை போல செல்கின்றது.

தேவையில்லாத சண்டைகள் இல்லாதது.

பாடல்கள் ஓகே ரகம் இடைவெளிக்கு பின்பு வந்த இரண்டு பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது.

கேமரா மிகவும் அருமை, எடுக்கப்பட்ட லொகேசன்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நன்றாக இருக்க படத்திற்கே ஒரு ரிச் பீலிங் வந்துவிடுகிறது.

படத்தில் நடித்தவர்கள் அனைவரின் நடிப்பு. முக்கிய மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.ஜீவா,வினய் மற்றும் சந்தானம் ஆகிய மூவரின் நட்புமே ரியலாக தெரிந்தது படத்தின் பெரிய பிளஸ்.

காமெடி நன்றாகவே இருந்தது.முதல் பாதி முழுவதுமே படத்தை தூக்கி நிறுத்துவது சந்தானத்தின் கவுன்டர்கள் தான்.

இனி பிடிக்காதது :


அதிகம் இல்லை இருந்தாலும் ஒரு சில மட்டும்.

ஒரு பீல் குட் பிலிம் ஆக  இருந்தாலும் சந்தானத்தின் காமெடியில் அதிக இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததை தவிர்த்து இருக்கலாம்.

படத்தின் இறுதிக்காட்சிகள் அழத்தம் இல்லாதது போல தோன்றியது.
அதுவும் ஜீவா நண்பரின் முன்னால் திரிஷாவை தெரியாது என்பதற்கு போதிய காரணம் இல்லை தாராளமாக எனது நிறுவனத்தில் வேலை பார்கிறார்கள் என்று கூறி இருக்கலாம்.அதுவும் முத்தம் கொடுக்கும் அளவிற்கு போன பின்பு.





அடுத்து தனது அப்பா புற்றுநோயால் இறக்க போகிறார் என்று தெரிந்து வெளியே வந்து நின்றுகொண்டு வினயிடம் பேசும் இடத்தில நடிப்பே வரவில்லை.

மற்றும் இறுதிக்காட்சியில் இப்படி ஒரு மொக்கையாக I Love You சொல்லி  நான் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை ,அதிலும் கொடுமை அந்த மொக்கை லவ் யூ வை கேட்டு திரிஷா மயங்குவது.

இறுதியாக நம்ம அபினவ் வை வழக்கம் போல தியாக செம்மலாக பயன்படுத்தியது.அதுதான்பா ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது தெரிந்தும் அவரை காதலிப்பது ஹீரோ ஹீரோயினிர்க்கு இடையில் சண்டை வரும்பொழுது வந்து அவளை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்வது இறுதியில் மீண்டும் அவர்கள் சேரும் பொழுது விட்டுக்கொடுத்துவிடுவது.

இதனை தவிர்த்திருக்கலாம்.மொத்தத்தில் படம் கண்டிப்பாக பார்க்கலாம் நன்றாக இருக்கிறது.

பிரியாணி :




கதை :


நாம் பல திரைப்படங்களில் பார்த்த கரு தான்.இரவில் மப்பாகி காலையில் எழும் பொழுது இரவில் நடந்தது எதுவும் தெரியாமல் ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்வது.பின் அதில் இருந்து தப்பிப்பது. படத்தில் ஒரு காட்சியில் பிரேம்ஜி ஹாங்கோவர் படத்தை கிண்டல் செய்வார். இப்படத்தின் கருவும் அத்திரைப்படங்களில் இருந்து எடுத்ததே.

கார்த்திக்கும் பிரேம்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பிரேம்ஜி ஆசைபடும் பெண்கள் அனைவரையும் தனக்கு கணக்கு செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் மிக நண்பர்கள்.

கார்த்தியின் காதலி ஹன்ஷிகா திரைப்படங்களின் வழக்கமான காதலி, ஹீரோ செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்து அவரையே காதல் செய்யும் காதலி.

இனி வரும் காலங்களிலாவது ஹீரோயின் ப்ளே கேர்ள் ஆகவும் அவளை மட்டுமே காதலிக்கும் ஹீரோவும் இருக்குமாறு ஒரு படம் வேண்டும்.அப்பொழுதுதான் நம்ம நாடு வல்லரசு ஆகும்.



நண்பர்கள் இருவரும் மகிந்திரா ட்ராக்டர்கள் ஷோரூமில் வேலை செய்கிறார்கள்.அதன் மேனேஜர் சுப்புவிற்கு தனது அக்காவை கல்யாணம் செய்து கொடுக்க கார்த்தி முடிவு செய்கிறார்.அக்கா கதாபாத்திரத்தில் நம்ம மதுமிதா (அதற்குள்ளாகவே அக்கா கதாபத்திரத்தில் நடிக்க வந்துவிட்டார் பாவம்).

அவர்களின் புது ஷோரூம் ஆம்பூரில் திறக்க முடிவுசெய்கிறார்கள். அதனை திறந்து வைக்க பிரபல தொழிலதிபர் நாசரை கூப்பிடுகிறார்கள். அவரது மருமகன் நம்ம ராம்கி. அவர்களது குடும்ப நண்பர் ஜெயப்ரகாஷ் Asst கமிஷ்னர்.

ராம்கிக்கு தனது மாமா நாசரின் இடத்திற்கு வர ஆசை. நமக்கும் பார்த்தவுடன் இவர் தான் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இதன் திறப்புவிழாவிற்கு வரும்பொழுது நண்பர்கள் இருவரும் தப்பி செல்லும் காதல் ஜோடியை தடுத்து பெண்ணை காப்பாற்றுகிறார்கள்.

திறப்புவிழாவில் கார்த்தியின் பேச்சு நாசருக்கு பிடித்துவிடுகிறது. அவருக்கு தனது இரண்டாவது பெண்ணை கொடுக்கும் அளவிற்கு நாசர் முடிவுசெய்கிறார். இது ராம்கிக்கு பிடிக்கவில்லை.

திறப்புவிழா முடிந்து நண்பர்கள் இருவரும் சென்னை திரும்பும்வழியில் பிரியாணி சாப்பிட ஒருகடையில் நிறுத்துகிறார்கள்.அங்கு வரும் Mandy Takharஐ பார்கிறார்கள்.




அவள் இவர்களை தனது ஹோட்டலிற்கு கூப்பிட்டு வந்து தண்ணி கொடுத்து ஒரு ஆட்டம் போட்டு காண்பிக்கிறார். அப்பொழுது அங்கு நாசர் வருகிறார். அத்துடன் நண்பர்கள் மப்பில் மயக்கம் அடைகிறார்கள்.



காலையில் எழுந்ததும் தான் நாசர் காணாமல் போக இவர்களை போலீஸ் தேடுவது தெரிகிறது. இதற்கிடையில் நாசரை ஒரு குற்றவிசாரணைக்கு கைது செய்ய வரும் சிபிஐ அதிகாரியாக சம்பத்.

இப்படியாக ஜெயப்ரகாஷ் போலீஸ் கூட்டம் ஒருப்பக்கமும் சம்பத் மூலம் அவரது நண்பர் பிரேம் போலீஸ் கூட்டம் ஒரு பக்கமும் அவர்களை துரத்துகிறது.

கடைசியில் எப்படி தப்பித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் எனபது மீதிக்கதை.

எனக்கு பிடித்தது :


ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தின் வெற்றி அதன் இறுதிக்காட்சி திருப்புமுனையில் தான் இருக்கிறது, அந்த வகையில் இப்படம் வெகுவாக ஸ்கோர் செய்கிறது. அவ்வகையான காட்சி வைப்பதில் வெங்கட் திறமைசாலிதான்.

ஒரு ப்ளே பாய் கதையாக இருந்தாலும்  Mandy Takhar வரும் காட்சி தவிர வேறு காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.

கண்டிப்பாக வெங்கட்டின் திரைக்கதை. எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் கொண்டு செல்கிறார்.

நகைச்சுவை காட்சிகள் பரவாயில்லை, ஓரளவு சிரிப்பை வரவழைக்கின்றன.

உமா ரியாஸின் சிறு கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறது. அவருக்கு பல சண்டை காட்சிகள், பாவம் நம்ம சாம் ஆண்டெர்சனுக்கு தான் சண்டை காட்சி இல்லை.

வெங்கட்டின் மற்றொரு பிளஸ் அவரது சென்னை 28 டீமை நன்றாக பயன்படுத்துவது. இதிலும் தலை பெயரை சரியான இடத்தில் அவர்களை வைத்து பயன்படுத்தி இருப்பார்.

இறுதியில் பெயர்போடும் சமயத்திலும் நம்மை உட்கார வைக்கும் வெங்கட்டின் கட் சாட்டுகள் அருமை.

பிடிக்காதது :


யுவனின் இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.அதுவும் 100வது படம்.Better Luck Next  Time யுவன்.

இறுதிக்காட்சியில் வரும் நீண்ட சண்டை காட்சிகள், கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

அதிகமான லாஜிக் மீறல்கள்,24 மணிநேரமும் ரெகார்ட் செய்யும் CCTV யில் பிரேம் delete செய்த பதிவுகளை தேடாதது.பல நாள் பிரேதமாக இருந்த நாசரை இறுதியில் தான் இறந்ததாக போலீஸ் நம்புவது.

கார்த்தி கொஞ்சம் டான்ஸ் ஆட கற்றுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த கார்த்திக்கு கிடைத்த சிறு வெற்றி.

கார்த்தி எல்லா படங்களிலும் ஒரே மாதிரி வருவது சற்றே போர் அடிக்கிறது.கொஞ்சம் எதாவது வித்தியாசமாக முயர்சி செய்யலாம்.

இரண்டு படங்களுமே வெவ்வேறு வகையை சேர்ந்தது, இரண்டுமே நன்றாக இருக்கிறது. நண்பர்கள் தையிரியமாக சென்று பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Monday, March 11, 2013

JACK THE GIANT SLAYER - Movie Review




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பலகாலங்களாக பழைய தேவதைகதைகளை திரைப்படம் ஆக்குவதில் முனைப்பாக இருக்கிறது ஹாலிவுட். அதில் பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன.

சமீபகாலமாக மீண்டும் பழைய தேவதைகதைகளை தொழில் நுட்ப உதவியுடன் சிறிது கதையிலும் கவனம் செலுத்தி எடுத்து வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டுதான் சமீபத்தில் வந்த Hansel & Grantel மற்றும் கடந்த வாரம் வெளியாகி உள்ள Jack The Giant Slayer திரைப்படங்கள்.

இரண்டு படங்களுமே தொழில் நுட்பத்தின் அபரீத வளர்ச்சியால் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கதையிலும் சற்று கவனம் செலுத்தி உள்ளார்கள்.

 நான் பார்த்த Jack The Giant Slayer படத்தை பற்றிய எனது கருத்து மற்றும் கதையே இந்த பதிவு.

கதை :



நமக்கு (எனக்கு) ஓரளவே தெரிந்த கதை.

ஜாக் என்ற விவசாய சிறுவனுக்கு அவன் தந்தையும் மற்றும் இசபெல் என்ற இளவரசிக்கு அவள் தாயும் அக்கதையை கூறுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் அந்த நாட்டை எரிக் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது சில சாமியார்கள் ஒரு சில பீன் விதைகளை கண்டுபிடித்தார்கள். அது ஒரு விஷேசமானது. அதனை விதைத்தால் பெரிய கொடி வளரும்.

அதன் மூலம் சாமியார்கள் உயிருடன் சொர்கத்தை அடைய நினைத்தார்கள். ஆகையால் அந்த விதைகளில் ஒன்றை பூமியில் விதைத்து அதன் மூலம் வளர்ந்த கொடியில் ஏறி சுவர்க்கம் நோக்கி சென்றார்கள்.

வழியில் ஒரு இடத்தில் ஒரு நிலப்பரப்பை காண்கிறார்கள். அதுதான் சுவர்க்கம் என தப்பாக நினைக்கும் அவர்கள் அங்கு இறங்குகிறார்கள்.
ஆனால் அங்கு வாழும் ராட்சதர்களிடம் மாட்டி உயிர் விடுகிறார்கள். அவர்கள் வந்த கொடியை கண்டுபிடிக்கும் ராட்சதர்கள் அதன் மூலம் பூமிக்கு வந்து அட்டூழியம் புரிகிறார்கள்.

அவர்களை மன்னர் எரிக் ஒரு கிரீடம் செய்து கட்டுப்படுத்துகிறார்.
அதன் மூலம் அவர்களை அவர்களது இடத்திற்கு அனுப்பிவிட்டு அந்த கொடியை வெட்டி விடுகிறார். அதன் மூலம் நாட்டில் அமைதி திரும்புகிறது.

மேலே போன ராட்சதர்கள் தகுந்த நேரத்திற்காக காத்திருகின்றனர். மன்னர் எரிக் இறந்த பின் அந்த பீன்களும் கிரீடமும் அவருடன் சேர்த்து புதைக்க படுகிறது. இப்படியாக கதை முடிகிறது. இதனை பலர் கற்பனை என்றும் சிலர் உண்மை என்றும் நினைக்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு பிறகு இருவரும் வளர்ந்துவிடுகிறார்கள்.



ஜாக்



இசபெல்

வழக்கம் போல அந்த நாட்டு மன்னர் தனது மகளை வில்லனுக்கு கட்டி கொடுத்து அந்த நாட்டு மன்னர் ஆக்க நினைக்கிறார்.



வில்லன் மற்றும் அவன் கூட்டாளி

ஆனால் வில்லனோ இறந்த மன்னர் எரிக்கின் சமாதியில் இருந்து அந்த பீன்களையும் கிரீடத்தையும் ஒரு திட்டத்தோடு திருடி வைத்திருகிறான்.

இதனை அறிந்த சாமியார்கள் ஒரு சாமியார் மூலம் அதனை திருடி வர அனுப்புகின்றனர். அவர் அந்த பீன்களை மட்டும் திருடுகிறார். அனால் தப்பி செல்வதற்கு முன் மாட்டிக்கொண்டு விடுகிறார்.

எதிர்பாரதவிதமாக அந்த பீன்கள் நம்ம ஹீரோவிடம் வந்து சேர. அதனை கொண்டு வீட்டிற்கு வருகிறான். அங்கு அவன் வைத்திருக்கும் பீன்களில் ஒன்று தவறி கீழே விழுகிறது. கல்யாணம் பிடிக்காமல் தப்பி செல்லும் இளவரசி நேரே நம்ம ஹீரோ வீட்டிற்கு வருகிறாள்

மழை பெய்கிறது. அதன் மூலம் கீழே விழுந்த பீனில் இருந்து பெரிய கொடி வளர்கிறது. அது அந்த வீட்டை அப்படியே தூக்கிக்கொண்டு வானை நோக்கி வளர்கிறது.



வீட்டை அப்படியே தூக்கி செல்லும் காட்சி.
மேலே செல்லும் இளவரசி அங்கு வாழும் ராட்சர்களிடம் மாட்டிக்கொள்கிறாள்.  அவளை காப்பாற்ற நமது ஹீரோவும் சில வீரர்கள் குழுவும் செல்கிறது. கூடவே வில்லனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து கொள்கிறார்கள்.

தளபதி மற்றும் அவர் உதவியாளர்.

வழியிலேயே வில்லன் வீரர்களில் பெரும்பாலோனோரை கொன்று விடுகிறான். மேலே செல்லும் மீதம்  இருந்த ஜாக், தளபதி மற்றும் அவர் உதவியாளர் மற்றும் வில்லன் அவனது கூட்டாளி
பிரிந்து சென்று தேடுகிறார்கள்.

அதில் தளபதி ராட்சர்களிடம் சிக்கி கொள்கிறார்.


தளபதியின் உதவியாளர் ஒரு ராட்சதனிடம் மாட்டி உயிர்விடுகிறார்.




தளபதி மாட்டிகொள்கிறார்.



சமைப்பதர்க்கு தயாராக..


சமையல்காரன்.

வில்லன் தனது கிரீடத்தின் உதவியுடன் அந்த கூட்டத்தின் தலைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் மூலம் பூமி நோக்கி படையெடுக்க முயற்சி செய்கிறான். அவனை எப்படி ஹீரோவும் தளபதியும் சேர்ந்து அந்த கிரீடத்தின் துணை கொண்டு அவர்களை மீண்டும் அடக்குகிறார் என்பதே கதை.


ராட்சதர்களின் இரட்டை தலை தலைவன்



கிரீடத்தின் துணை கொண்டு மன்னனான வில்லன்

பூமியை நோக்கி படை எடுக்க தயாராக இருக்கும் கூட்டம்.




இறுதி சண்ண்டைக்கு தயாராக.



ராட்சதர்களின் தலைவன் வீழ்த்தப்படுகிறான்.

மிகவும் சாதாரணமான கதை தான் ஆனால் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு ஈர்க்கும் விதத்தில் எடுத்துள்ளனர்.

படத்தின் பெரும் பலமே இறுதிக்காட்சி சண்டை தான். இளவரசியை காப்பாற்றி கீழே கொண்டு வந்ததும் அடடே இப்படி கதை சப்பென்று முடிந்து விட்டதே என நினைத்தேன் ஆனால்  ராட்சர்கள் மீண்டும் கீழே வந்து ஒரு பெரும் யுத்தம் நடக்கும் அது நன்றாக இருக்கும்.

படத்தில் எனக்கு சற்று பிடிக்காதது படத்தின் ஹீரோதான் முன்வழுக்கை தலையுடன் சற்று வயதானவராக தெரிகிறார் மற்றும் ஒரு ஹீரோவிறகான தேஜஸ் அவரிடம் இல்லை. அதற்கு படை தளபதியாக வருவபர் நன்றாக உள்ளார்.

மொத்தத்தில் படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Friday, February 8, 2013

விஸ்வரூபம் - கமல் என்னும் புத்திசாலியின் திரைப்படம்.



வணக்கம் நண்பர்களே,

நேற்றய தினம் பல இடையூறுகளை கடந்து வந்துள்ள கமலின் விஸ்வரூபத்தை கண்டேன். அதனை பற்றியே எனது கருத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் விஸ்வரூபம் கமல் என்னும் புத்திசாலி தமிழனின் திரைப்படம்.

தமிழ் திரைப்படங்களுக்கு புதுமைகளை முதன் முதலில் கொண்டுவருவதில்  கமல் தான் முதன்மையானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த விதத்தில் இந்த திரைப்படத்திலும் பல புதுமைகளை கொண்டு வந்துள்ளார். அதற்காக நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.

ஏற்கனவே கமலின் திரைகதை திறமைகளை நாம் விருமாண்டி போன்ற படங்களில் பார்த்துள்ளோம். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு முழு திரைப்படம் எடுத்து அதனை எடிட்டிங் மூலம் இரண்டு பாகங்களாக ஆக்கி இருக்கும் அவரது புத்திசாலித்தனம் மெச்சத்தகுந்ததே.

ஆனாலும் பல விசயங்களை இன்னும் முழுமையாக விளக்க வில்லை எனபது
சற்றே ஏமாற்றம் தான். இரண்டு பாகங்களையும் சேர்த்து பார்க்கும் பொழுது இன்னும் முழுமையாக இருக்கும் எனபது எனது கருத்து.மேலும் அந்த இரண்டாம் பாகத்தை வெகு சீக்கிரமே கொண்டு வருவது அவருக்கும்  நமக்கும்  நல்லது.

கதை நாம் பல ஆங்கில மற்றும் தமிழ் திரைப்படங்களில் பார்த்ததே. ஒரு ராணுவ வீரர் எதிரிகளின் இருப்பிடத்தில் மாறுவேடத்தில் சென்று அவர்களை முறியடிப்பதே. அதனை எடுத்த விதத்தில் தான் வித்தியாசம் காட்டிஉள்ளார் கமல்.

விஸ்வநாதன் ஒரு நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர். அவரது மனைவி நிரூபமா ஒரு விஞ்ஞானி. அவரை விட வயதில் மூத்த கமலை ஒரு சுயநலத்திற்காக கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.



இப்பொழுது அவரது நிறுவனத்தின் தலைவரை கல்யாணம் செய்துகொள்வதற்காக கமலை விவாகரத்து செய்ய முயற்சிக்கிறார். அதற்காக  ஒரு தனியார் துப்பறிவாளர் மூலம் அவரிடம் ஏதாவது தப்பிருக்கிறதா என கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்

நிரூபமாவும் அவளது காதலனும்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன.அதில் முக்கியமான ஒன்று அவர் ஒரு முஸ்லிம் எனபது.

அதன் பின் கதை ஆப்கானிஸ்தான் மற்றும் நியூ யார்க் என மாறி மாறி செல்கிறது

எப்படி கமல் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக பயிற்சி எடுக்கிறார். அவருக்கும் தீவிரவாதிகளின் தலைவர் ஓமருக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது. கமல் எப்படி ஒசாமா பின் லேடனை பிடிக்க உதவுகிறார்.

ஒமர்.


மற்றும் நிகழ காலத்தில் நியூ யார்க்கில் ஒமரின் நியுக்ளியர் குண்டு வைக்கும் முயற்சியை எப்படி முறியடிக்கிறார் என்றும் நாம் பார்க்கிறோம்

படத்தின் முதல் firstlook இல் நாம் பார்க்கும் புறாவை கூட ஒரு காரணமாக த்தான் காட்டி உள்ளார். அந்த அளவிற்கு சின்ன சின்ன விசயங்களில் கூட கவனம் செலுத்தி உள்ளார்.

படத்தின் தரத்தில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருபதற்கு நான் முக்கிய காரணமாக நினைப்பது படத்தின் லொகேசன்கள் தான். படத்தில் ஆப்கானிஸ்தானை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

படத்தின் சண்டைகாட்சிகளையும் நன்றாக அமைத்துள்ளார்கள். காமரா வொர்க்கும் மிகவும் நன்றாக இருக்கிறது. இசை சற்றே ஏமாற்றம் அளிக்கிறது. அதுவும் முக்கியமாக பின்னணி இசை. ஒரே tune பலமுறை பின்னில் வருகிறது.

அடுத்து முக்கியமாக கூறவேண்டியது படத்தின் வில்லன் ராகுல் போஸ்.
இதுவரை நாம் தமிழ் திரைப்படங்களில் பார்க்காத ஒரு வில்லன். ப்ளாஷ் பேக் காட்சிகளில் இவர் தான் முன்னிலை படுதிக்காட்டப்பட்டுள்ளார்.

அவருடைய நடிப்பு மிகவும் நன்றாக உள்ளது. மிகவும் சத்தமாக கூட பேசமுடியாது. இருந்தாலும் அவரது முக பாவங்கள் மற்றும் கண்களிலேயே ஒரு பயத்தை தோற்றுவிக்கிறார்.

க்ளைமாக்ஸ்.


கமலை பற்றி சொல்லவே தேவை இல்லை. பல வசனங்கள் அவருக்கே உரிய நடையில் இருக்கிறது. மற்றும் முதலில் அரைமணி நேரத்தில் மனிதர் பின்னி எடுத்துருக்கிறார். அதுவும் அவர் யார் எனத்தெரியும் இடத்தில் ஹீரோயிசம் மிக அருமை.

விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்.


பூஜாகுமார் மற்றும் ஆன்ட்ரியா தனது வேலையை திறம் பட செய்துள்ளார்கள்.

கமலும் நாசரும் பிரிக்க முடியாதவர்கள்.இப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

படத்தின் மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்.

மொத்தத்தில் படத்தின் முழுமையான வெற்றி இரண்டாம் பாகம் வந்த பின்பே.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ .


Saturday, December 15, 2012

கும்கி - ஒரு பச்சை பசேல் யானை.




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரைப்பட விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்.

இன்று மதியம் கும்கி திரைப்படம் பார்த்தேன்.பில்லா 2 அப்புறம் ஒரு திரைப்படம் முதல் நாள் பார்ப்பது இதுதான்.

படம் நன்றாகவே இருந்தது கடைசி 5 நிமிடம் தவிர.

ஒரு பிரபு சாலமன் கதை (கும்கி கதை அல்ல):

3 நிமிட குறும்படம்:

ஒரு விடலை பையன் காலையில் விழித்தெழுந்து தினசரியை பார்கிறான்.அன்று Feb 14 சந்தோசத்துடன் எழுந்து குளித்து ஒரு மோதிர பரிசுடன் கிளம்புகிறான்.

கட்:

அதே நேரம் அதே போல ஒரு விடலை பெண் எழுந்து அதே சந்தோசத்துடன் ஒரு பூ பரிசுடன் கிளம்புகிறாள்.

இருவரும் குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்து கொண்டு கிளம்புகிறார்கள்.

ஒரு காபி விடுதியில் சந்தோசத்துடன் கையில் பூவுடன் உள்ளே நுழைகிறாள் அந்த பெண் உள்ளே எதையோ பார்த்து அதிர்ச்சி அடைந்து பூவை கீழே தவறவிடுகிறாள்.

அவள் பார்த்த இடத்தில் அந்த பையன் வேறு ஒரு பையனின் கையில் மோதிரம் மாட்டிகொண்டு இருக்கிறான்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கீழே விழுந்த பூவை எடுக்க குனியும் பொழுது வேறு ஒரு ஆண் உதவ குனிய இருவர் தலையும் முட்டிக்கொள்ள காதல் வருகிறது.அத்துடன் அந்த திரைப்படம் முடிகிறது.

இது நாளைய இயக்குநருக்காக எடுத்த ஒரு படம் இதற்கு நடுவர்கள் பிரபு சாலமன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா.இந்த படத்திற்கு பிரபு சாலமன் கொடுத்த கமெண்ட்.

"என்ன சொல்லவரீங்க எனக்கு ஒன்னும் புரியல.ரெண்டு பேர் sms அனுப்பிவிட்டு வராங்க இங்க அந்த பையன பார்கிறார்கள் அப்புறம் இன்னொருத்தன பார்த்ததும் காதல்.இப்படி பார்த்ததும் காதல் வருமா/இன்னும் கொஞ்சம் எலபோரடே பண்ணனும்."

இந்த கமெண்ட் நோட் பண்ணிக்குங்க நண்பர்களே.

இனி கும்கி கதை.

ஆதிகாடு 200 வருட பாரம்பரியம் மிக்கது.விவசாயம் பார்கிறார்கள்.
அவர்களுக்கு கொம்பன் எனப்படும் ஒரு ஒத்தை யானையால் தொல்லை.சாதாரண தொல்லை இல்லை அதனால் 3 பெண்கள் இறந்துள்ளனர்.
மேலும் அதன் பிடியில் இருந்து அந்த கிராமத்தின் தலைவர் மாத்தையன்  பெண் அல்லி மயிரிழையில் உயிர் தப்பி உள்ளால்.

இதற்கு அரசாங்க அதிகாரிகள் அவர்களை அந்த காட்டை காலிசெய்து வேறு இடம் செல்ல சொல்கிறார்கள்.இதற்கு மறுக்கும் அவர்கள் உங்கள் உதவி தேவை இல்லை எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்கிறோம்  என சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

இந்த நிலையில் அவர்கள் ஒரு கும்கி யானையை துணைக்கு வைத்துகொண்டு இந்த வருடம் அறுவடை செய்ய முடிவு செய்கிறார்கள்.அதற்காக ஊர்மக்கள் அனைவரும் தங்களது நகைகள் மற்றும் சேகரிப்பை கொடுத்து ஒரு யானை தரகர் மூலம் கும்கி யானை கேட்கிறார்கள்.

இப்படி இருக்க நம்ம ஹீரோ பொம்மன்,அவனது தாய்மாமன் கொத்தள்ளி,அவனது கைத்தடி உண்டியல் மூவரும் அவனது யானை மாணிக்கத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.அந்த யானையை தனது உடன் பிறவா சகோதரனாக நினைக்கிறான் ஹீரோ.சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.flashback ல வருங்கின்ற குட்டியானை செம அழகாக இருக்கிறது.அந்த யானை ஒரு தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டாலே நடுங்குகிறது.பொம்மனின் நண்பர் அந்த யானை தரகர்.
அவர் மூலம் யானையை கோவில் திருவிழாக்கள்,திரைப்படங்கள் இப்படி விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

உண்மையான கும்கியானையின் பாகனின் பெண் விஷம் குடித்துவிட அவர்க்கு பதில் தனது நண்பருக்காக பொம்மன் மாணிக்கத்துடன் கும்கி யானை என பொய் சொல்லி ஆதிக்காட்டிர்க்கு போகிறான்.அங்கு அல்லியை கண்ட உடன் காதல் வயப்படுகிறான்.(நோட் பண்ணுங்க).முதலில் யானையை கண்டு பயப்படும் அல்லி பின் மாணிக்கத்தின் மேல் பாசம் கொள்கிறாள்(ஏன்? காரணம் பின்னர் கூறப்படும்) .இப்படியே முதல் பாதி சென்று விடுகிறது.




அடுத்து தனது காதலை அவளிடம் சொல்கிறான்.ஒரு கட்டத்தில் அவளும் சம்மதிக்க காதல் நன்றாக ஒரு பாடல் முடியும் வரை செல்கிறது.பின்னர் அந்த கிராமத்தின் தலைவரும் அந்த ஊர் மக்களும் தன மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு தனது காதலை விட்டுகொடுக்க முடிவு செய்கிறான்.அவளும் தனது தந்தை தன மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளித்து தனது காதலை தியாகம் செய்கிறாள்.

அப்புறம் ஒரு வழியா படத்தின் ஆரம்ப காட்சியில் வந்த கொம்பன் இறுதிக்காட்சியில் வர பரப்பான யானை சண்டை காட்சியுடன் படம் முடிகிறது.


இனி எனது கருத்து.



படத்தின் உண்மையான ஹீரோ கேமரா மேன் சுகுமார் தான்.அப்பா மனுஷன் புகுந்து விளையாடிருக்கார்.படத்தின் ஒவ்வொரு பிரேமும் நமது கணினி திரையில் வைக்கும் வால்பேப்பர் போல ஒரே பச்சை பசேல் அல்லது மஞ்சள் பூ காடு.இடங்கள் இப்படி அத்தனையும் அருமை.அதற்காகவே நண்பர்களை திரைஅரங்கு சென்று காணுமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்பொழுதான் அந்த அனுபவத்தை முழுமையாக அடையமுடியும்.படத்தின் இடங்களை தேர்ந்தேடுதர்க்கு கண்டிப்பாக டைரக்டருக்கு பாராட்டுக்கள்.நம்ம நாட்லயும் இப்படி அழகான இடங்கள் உள்ளன என்பதை நிருபித்துள்ளார்.



அடுத்து அந்த யானை மாணிக்கம் பார்க்க கம்பிரமாக உள்ளது.அது காலை தூக்கி காண்பிக்கும் அழகே தனி.அதனால் தான் என்னவோ ஹீரோவிற்கு வைக்கும் காட்சியை யானைக்கு வைத்துவிட்டார் டைரெக்டர்.தண்ணிர் எடுக்க செல்லும் அல்லி நீர் குடிக்கவரும் மாணிக்கத்தை கண்டு தடுமாறி ஒரு பாறை மேல் விழப்போக நம்ம யானை அவளை அழகாக காப்பாற்றுகிறது.இந்த ஒரு காட்சி போதாதாங்க.(இப்போ காரணம் புரிஞ்சுதா)



அடுத்து நம்ம தம்பி ராமையா செமைய கலக்கிருக்காருங்க அவர் வரும் காட்சிஎல்லாமே திரைஅரங்கில் அப்படி ஒரு சிரிப்பு அதுவும் அவர் mind voice ல பேசறது எல்லாமே அருமை.கடைசி வரைக்கும் போர் அடிக்காம கொண்டு சென்றதற்கு இவர் ஒரு பெரும் காரணம்.

அடுத்து நம்ம ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே நல்ல நடிச்சுருக்காங்க.கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்
ஆனா ரெண்டு பேரோட காதல் காட்சில ஒரு அழுத்தமே இல்லை.அவளுக்கு அவன் மேல் காதல் வர ஒரு நல்ல காரணமே கூறவில்லை.பெரும்பாலும் அவன் அவளை நினைத்து மருகிகொண்டிருக்க அவள் எப்பொழுது யானையுடனேயே இருப்பாள்.அப்புறம் அவன் சொன்னதும் எப்படி சம்மதித்தாள் எனபது தெரியவில்லை.

இந்த லட்சணத்துல இந்த டைரெக்டர் மேலே எப்படி கருத்து சொல்லிருக்கார் பாருங்க.



படத்தின் பாடல்கள் நன்றாக உள்ளன.சற்றே மைனாவை நினைவு படுத்தினாலும் நன்றாகவே உள்ளன.முக்கியமாக பாடல்கள் எடுக்கப்பட்ட இடங்களும் விதமும் நன்றாக இருக்கும்.ஒரு அருவி ஆரம்பிக்கிற இடத்த காமிசிருப்பாரு பாருங்க சூப்பர்.பாடல்கள் பற்றி நமது ராஜ்குமார் நல்ல பதிவு ஒன்று இட்டுள்ளார் அதனை படிக்க.



நடித்துள்ள அனைத்து துணை நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நம்ம ஜூனியர் பாலையா அவர்களுக்கு சாட்டை படத்திற்கு பின் மீண்டும் ஒரு வாய்ப்பு.படத்துல காட்டிலாகா அதிகாரியாக வருபவரை தேவை இல்லாமல் ஒரு வில்லன் பில்டப் வேற.

யானைகள் பற்றி பல துணுக்கள் அளித்துள்ளனர்.யானை வைத்திருக்க தனி லைசென்ஸ் தேவை,நமக்கு ஜலோதொசம் போல அதற்கு குடலோசம்,கும்கி யானைக்கு தைரியம் தர பார்கே பார்கே என கத்த வேண்டும்,யானைக்கு மதம் பிடிக்க ஆரம்பிக்கும் பொது இருக்கும் அறிகுறிகள் இப்படி பல.

படத்தின் இறுதிக்காட்சி மட்டும் எனக்கு பிடிக்கவில்லை.

இதனை பற்றிய நமது நண்பர் கார்த்திக் அவர்களின் கருத்தை நான் இங்கு மீள் பதிவு செய்கிறேன்.

//இந்தப் படத்தின் க்ளைமேக்ஸை பலவிதமாக எடுத்திருக்க முடியும். ஆனால் எளிதில் யூகிக்க முடியாத ஒரு க்ளைமேக்ஸை தேர்ந்தெடுத்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.//

ஆனால் இந்த ஒரு இடத்தில் அவருடன் நான் வேறு படுகிறேன்.

அவ்வளவு தான் நண்பர்களே.எனது குரும்பதிவுகளையே படித்து வந்த நண்பர்களுக்கு இது சற்றே திருப்தி அளித்திருக்கும் என நினைக்கிறேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Tuesday, September 11, 2012

Mugamoodi - A Super Hero??????



வணக்கம் நண்பர்களே,

வேறு வழியே இல்லாமல் முகமூடி திரைப்படம் நானும் பார்த்துவிட்டேன்.
இருந்தாலும் மிகவும் நான் எதிர்பார்த்த படம் அதுவும் ஒரு காமிக்ஸ் ரசிகர் எடுத்த படம் இவ்வளவு மொக்கையாக ஆனது வருத்தமே.

கதை.

ஆரம்பம் ஒரு படு மொக்கை.
ஒரு வீட்டில் கொள்ளை நடக்கிறது.வில்லன் எலும்புக்கூடு முகமூடி அணிந்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டியை ஓடி வந்து சுத்தியில் அடித்து கொள்கிறார்.
ஒரு பாட்டியை எதுக்குப இப்படி கொல்லனும் விட்டுருந்தா அடுத்தநாள் அதுவே செத்து போயிருக்கும்.
அப்படி ஒரு பயங்கர வில்லனாம்.

இவரை பிடிக்க சிறப்பு அதிகாரி நாசர் வருகிறார்.(பாவம்)

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஹீரோ ஜீவா.அன்பான அம்மா,எப்பொழுதும் திட்டும் அப்பா,
வீட்டின் மாடியில் அவரது தாத்தா வழக்கம் போல அவருக்கு வழிகாட்டி.
மற்றும் ஒரு தாத்தா மாடியில் இருக்கிறார் அவர் துணிகள் மூலம் பொம்மைகள் செய்பவர்.
இப்பொழுதே தெரிந்து கொள்ளலாம் இவர் தான் நம்ம முகமூடிக்கு உடை தெய்த்து தரபோகிறார்.

நமது ஹீரோ ஒரு குங்க்பூ பிரியராம்.
அவரது ஆசிரியர் செல்வா.அவர் எல்லாரிடமும் காசு வாங்காமல் குங்க்பூ சொல்லி தருவாராம்.
அதுனால அவர் பரம ஏழையாம்.ஒரு பாடாவதி வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியலேன்னு வீடு ஓனர் வேற மிரடுராரம்.

அப்பா இப்பவே முடியல பேசாம அப்பொழுதே எழுந்து வந்திருக்க வேண்டும் விதி என்ன செய்வது 500 செலவு செய்தாகிவிட்டது முழுவதும் பார்த்துவிட்டு தான் வந்தேன்.
  
நம்ம ஏழை ஆசிரியருக்கு ஆள்  தெரடுகிறாராம்  எப்படி ஒரு மீன் மார்கெட் பொய் அங்க மீன் விகிரவங்க கூட சண்ட போட்டு அவங்கள 1000 கொடுத்து கத்துக்க சொல்கிறார்.
அப்ப நம்ம ஹீரோயின் intro வேற.

வழக்கம் போல நம்ம ஹீரோ விற்கு  ஹீரோயின்  மேல காதல் வர.
அவரை கவுக்க முகமூடி அணிந்து சென்று இதய பலூன் விடுகிறாராம்.
இதனை பார்த்த உடனே நம்ம ஹீரோயின் காதல் வய படுகிறார்.

இடை பட்ட சமயத்தில் நம்ம ஹீரோ வில்லன் களின் மற்றொரு கொள்ளையின் நடுவில் மாட்டிக்கொண்டு வில்லன்களில்  ஒருவரை போலீசிடம் மாட்டிவிடுகிறார்.

ஆகையால் நம்ம வில்லன் நம்ம ஹீரோவை ஒரு கொலை கேசில் மாட்டிவிட்டு ஒரு குற்றவாளி ஆக்குகிறான்.
இதில் இருந்து நம்ம ஹீரோ தப்பித்து வில்லனை கொன்று நம்ம ஹீரோயின் காதலை எப்படி அடைகிறார் என்பதே மீதிகதை.

இடையில் ஒரு பிளாஷ் பாக் வேற நம்ம செல்வாவும் வில்லன் நரேனும் ஒரே ஆசிரியரிடம் குங்க்பூ கற்றுக்கொண்டார்கலாம்.

இறுதிகாட்சியில் நம்ம ஹீரோ சாய்க்கும் வில்லன்கள் எண்ணிகையை விட அவரது ஷெர்லோக் தாத்தா அடித்துபோடும் ஆட்கள் அதிகம்.(என்ன கொடுமை சார் இது)   

பாடல்கள் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை.
நம்ம மிஸ்கினிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் எதிர்பார்கவில்லை.

எனது எண்ணங்கள்:
ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு அழுத்தமான வில்லன் வேண்டும்.
ஆனால் இங்கு சாதாரண நகை கொள்ளையடிக்கும் வில்லன்.
அதுவும் அவரால் வயதானவர்கள் மட்டுமே கொல்லபடுகிறார்கள்.
இது ஒரு மிக பெரிய மைனஸ்.

காதல் காட்சிகள் எதுவுமே அழுத்தமாக இல்லை.
அவருக்கு ஏன் முகமூடி மேல் காதல் வருகிறது என்பதற்கு ஒரு அழுத்தமான காரணம் இல்லை.

இறுதியில் நம்ம ஹீரோ முகமூடி அணிவதற்கு நல்ல காரணம் இல்லை.
சும்மா ஹீரோயினிடம் முகம் காட்டக்கூடாது என்றால் அவரை வெளிபடுதிக்கொள்ளாமலே வேறு ஏதாவது செய்திருக்கலாம்.

சண்டை காட்சிகள் சில நன்றாக இருந்தாலும் அவை வீணாக்க பட்டிருகின்றன.

நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

ஹீரோ தனது குங்க்பூ திறமையை வெளிபடுத்த ஒரு நல்ல அறிமுக காட்சி வைத்திருக்கலாம்.
ஒரு மொக்கையான மீன் மார்கெட் சண்டைக்கு பதில்,அவரது நல்ல மனதை காண்பிக்க எதாவது ஒரு கடத்தல் அல்லது ஒரு விபத்து அதில் இருந்து அவர் காப்பாற்றுகிறார்.
(க்ரிஷ் படத்தில் வரும் சர்கஸ் தீ விபத்து போல)

அடுத்து நம்ம வில்லன் சாதாரண நகை கொள்ளையனாக இல்லாமல் வேறு பெரிதாக ஏதாவது வைத்திருக்கலாம்.
பல தொடர்பே இல்லாத பல குற்றங்களை இறுதில் ஒன்றாக்கி ஒரு suspense வைத்து வேறு ஏதாவது பெரிய காரணம் சொல்லி இருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் காதலை இன்னும் சற்று நல்ல காட்சி அமைப்புடன் கூறி இருக்கலாம்.

பார்க்கலாம் இந்த மாற்றங்களை தனது இரண்டாம் பாகத்தில் கொண்டு வருவாரா என்று.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Friday, July 20, 2012

The DARK KNIGHT RISES - An Epic END




வணக்கம் நண்பர்களே,

இதோ காலை 11.20 மணிக்காட்சி படம் பார்த்து விட்டு வந்து விட்டேன்..

உண்மையிலேயே இது ஒரு epic end  தான்.The Film is spectacular in its own way.

பொதுவாகவே தொடர் பாகங்களாக வரும் திரைப்படங்கள் முந்தைய பாகங்கள் அளவுக்கு இருபதில்லை.ஆனால் இப்படம் இதன் முந்தய பாகமான தி டார்க் knight இற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.

நாம் avengers படம் பார்த்து ரசித்தோம் ,அது ஒரு வகையான entertainment .
ஆனால் இந்த திரைப்படம் நோலனுக்கே உரித்தான வகையில் நம்மை entertain செய்கிறது.

படம் ஆரம்பிக்கும் முன்பே மற்றும் ஒரு விருந்து Man  of  Steel திரைபடத்தின் trailer.Superheroes  படங்களை ஒரு fantasy movie களாகவே பார்த்த நமக்கு இது ஒரு வரவேற்க தக்க மாற்றம் என்பேன்.இதுவரை நாம் பார்க்காத சூப்பர் man நாம் பார்கபோகிரோம் எனபதற்கான ஒரு அருமையான முன்னோட்டமாக உள்ளது.

இனி Batman இற்கு வருவோம்.படத்தின் ஆரம்பமே அதிரடியாக உள்ளது.
கண்டிப்பாக பலரும் youtube இல் உள்ள முதல் preview இல்  பார்த்த விமானக்கடத்தல் தான் ஆரம்பம்.

 அட்டகாசமாக உள்ளது.சிறிய விமானத்தை ஒரு பெரிய விமானம் கொண்டு நிர்மூலமாக்கி sceintist கடத்துகிறார்கள்.

படத்தில் வரும் அனைத்து வசனங்களும் அருமையாக உள்ளன.

கதை அனைவரும் தெரிந்ததே கோதம் இப்பொழுது அமைதிப்பூங்காவாக உள்ளது.ஹார்வே டென்ட் இறந்து 8 வருடங்கள் ஆகின்றன.batman பழி ஏற்துக்கொண்டு மறைந்து போகிறார்.கமிசனர் gordan நகரில் உள்ள அனைத்து தீயவர்களையும் சிறையில் அடைத்து விட்டார்.

அப்பொழுது ஒரு புது எதிராளி முளைகிறான் அவன் தான் Bane.

அவனிடம் ஒரு nuclear bomb.நகரையே நிர்மூலமாகுகிறான்.அவனிடம் இருந்து எப்படி தனது உயிரையும் துச்சமாக மதித்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.

படத்தில் ஆக்சன்,ஹுமர்,சென்டிமென்ட் அனைத்துமே உள்ளது.

நான் அமைதியாக பார்க்க வேண்டும்  என்று தான் போனேன் ஆனால் batman introduction scenirkku வந்த விசில்களில் நானும் மூழ்கி பின் வந்த பல காட்சிகளுக்கு நானும் கூவு கூவென்று  கூவினேன்.தவிக்க முடியவில்லை.

Batman இன் அறிமுக காட்சி.


படத்தின் வில்லன் bane என தெரிந்த உடனே மிகவும் எதிர்பார்கபட்ட bane batman இன் முதுகை உடைக்கும் காட்சி படத்தில் உள்ளது.

Bane batman இன் இடுப்பை உடைக்கும் காட்சி.








ஆனால் படத்தில் வரும் bane பற்றிய கதை காமிக்ஸில் வருவது போலதான் இருக்கிறதா என தெரியவில்லை.நண்பர்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் படம் பார்த்துவிட்டு.

படத்தின் இறுதியில் வரும் திருப்பம் நாம் எதிர்பார்காததாக உள்ளது.
படத்தில் ராபின் பற்றிய துணுக்குகளும் உண்டு.நோலன் இதனை இறுதிப்படம் என்று கூறினாலும் கிளைமாக்ஸ் அவருக்கு வேண்டும் என்றால் தொடர்வது போலவே அமைந்தஊள்ளது.

நாமும் அவர் தொடர வேண்டும் என்றே ஆசைபடுவோம்.

இறுதி சண்டை காட்சி.


படத்தில் அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர்.
படத்தின் சண்டை காட்சிகளும் அருமையாக உள்ளன.
இறுதில் catwon மற்றும் batman சேர்ந்து செய்யும் chasing காட்சி நன்றாக உள்ளது.

மொத்தத்தில் அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
படத்தின் சுவாரஸ்யம் பார்க்கும் உங்களுக்கு குறையக்கூடாது என்பதற்காக நான் பல காட்சிகளை விவரிக்க வில்லை.நீங்களாகவே பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் கார்த்திக்கின் பதிவை பார்த்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது.

அடுத்த பதிவாக என்னிடம் உள்ள மாடஸ்டி காமிக்ஸ் தொகுப்பை வெளியிட உள்ளேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.
மீண்டும் சந்திப்போம்,

கிருஷ்ணா வே வெ .

Tuesday, July 17, 2012

நான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.





வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் நான் பார்த்த நான் ஈ திரைப்படம் பற்றிய எனது கருத்தை கூற உள்ளேன்.
படம் வந்து ஹிட்டும் ஆயிருச்சு நிறைய விமர்சனங்களும் வந்தாச்சு.
இருந்தாலும் நல்ல விசயத்தை யார் வேண்டும என்றாலும் எத்தனை  முறை வேண்டும என்றாலும் கூறலாம் என்பதன் அடிபடையில் இந்த பதிவு.

நண்பர் யுவகிருஷ்ணா இப்படத்தின் டைரக்டர் ராஜமௌலி பற்றி விரிவாக கூறியுள்ளார்.
படிக்காத நண்பர்கள் கீழே உள்ள சுட்டியில் படித்துக்கொள்ளவும்.


மற்றும் நண்பர் கார்த்திக் வேறு படம் மிகவும் நன்றாக உள்ளது என்று எனது ஆர்வத்தை கூட்டினார்.
ஒரு வழியாக கடந்த வெள்ளி அன்று இரவு இந்த திரைப்படத்தை பார்த்தேன்.

படம் அருமையாக இருந்தது.ஏன் இதனை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று கூறுகிறேன் என்றால் நான் படம் பார்த்த போது என்னுடன் அனைத்து வயதை சார்ந்தவர்களும் பார்த்தார்கள் அனைவரும் ரசித்து சிரித்தார்கள்.
எத்தனை படங்கள் இன்றைய கால கட்டத்தில் இப்படி வருகின்றது?
அந்த முறையில் ராஜமௌலிக்கு ஒரு salute.

ஒரு படத்தின் trailer மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் படம் அந்த அளவிற்கு இருக்காது.
ஆனால் இப்படத்தின் trailer எந்த அளவிர்க்கு மக்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு படமும் இருந்தது.

கதை நாம் அனைவரும் trailer இல் இருந்து அறிந்ததே.

இரு காதலர்கள்.
காதலியை அடையநினைக்கும் வில்லன் 
அதற்காக இறக்கும் ஹீரோ,
மீண்டும் ஒரு ஈ ஆக வந்து பழி வாங்குவதே கதை.

அனால் படத்தின் screenplay  இல் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார்,
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக உள்ளன.

படத்தின் ஹீரோ நானி எனக்கு பிடித்தமான ஒருவர்.அவரது அனைத்து படங்களையும் நான் பார்த்துள்ளேன்.
இப்படத்தில் சிறுது நேரமே வந்தாலும் நன்றாக உள்ளார்.
காதல் காட்சிகள் நன்றாக இருந்தது.

படத்தின் ஹீரோயின் சமந்தா சற்றே மெலிந்து காணபடுகிறார்.ஆனாலும் சற்றே பூசினாற்போல விண்ணை தாண்டி வருவாயா வில் வந்தவரையே எனக்கு பிடித்திருகிறது.அவரும் நன்றாகவே நடித்துள்ளார்.

Screenirkku பின்னால் score செய்தவர் ராஜமௌலி என்றல் screenil score செய்தவர் நிச்சயம் வில்லனாக வரும் சுதீப்.அருமையான தேர்ந்த நடிப்பு.அவர் இல்லாத ஒரு ஈயிடம் மாட்டிக்கொண்டது போல அவர் நடிக்கும் காட்சிகள் நன்றாக ரசிக்கும் படி உள்ளன,
அந்த காட்சிகளை என்னுடன் பார்த்துக்கொண்டு இருந்த குழந்தைகள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் என நான் நினைப்பது கூடிய மட்டும் லாஜிக் இருபதாக காட்டியது தான்.
ஒரு ஈயினால் என்ன செய்யமுடியுமோ அந்த அளவே செய்து இருபது.
காதிற்கு அருகில் வந்து சத்தம செய்வது.ஒரு ஈயின் பார்வையில் நாம் பார்க்கும் பொது எப்படி தெரியும் என காட்டியது.
நாம் சாதாரணமாக ஒரு ஈயை பார்க்கும் போது அது எப்படி அடிகடி தன முன்னங்கால்களை தூக்கி உரசிக்கொண்டே இருக்குமோ அது போலவே காட்டியது என பல கூறலாம்.
கதாபத்திரங்களின் அமைப்பும் கதைக்கு தேவையானபடி புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் டைரக்டர்.

படத்தின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை நன்றாக  உள்ளது.

படத்தின் இறுதில் வந்தாலும் சந்தானம் தான் தற்போதைய வின்னிங் காமடியன் என நிரூபிக்கிறார்.
மொத்தத்தில் அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இது வரை பார்க்காத நண்பர்கள் தயவுதெய்து குடும்பம் குட்டியுடன்(குழந்தைகளுடன்) சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Friday, July 13, 2012

Billa II பற்றிய எனது கருத்து.



முன்கதை.(எனது கதை):

நான் ஒரு தீவிர அஜித் ரசிகன்.
சூப்பர் ஸ்டார் படமும் தல படமும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும்.


இம்முறை பில்லா ரிலீஸ்.
சரி எப்படியும் செவ்வாய் இரவுதான் புக்கிங் ஓபன் ஆகும் பார்த்து விடலாம் என்று இருந்த எனக்கு ஒரு பெரிய இடி.
ஞாயிறு இரவே அனைத்து தியேட்டர் டிக்கெட்டும் ஓபன் ஆகி விற்று தீர்ந்து விட்டது.

இருக்கும் ஒரே சாய்ஸ் சத்யம் சினிமாஸ்.
சரி புக் பண்ணிவிடலாம் என்று 12 மணிக்கு அலாரம் வைத்து விட்டு செவ்வாய் இரவு தூங்கினேன்.

அலாரம் அடித்து 12 மணிக்கு எழுந்தரித்து லேப்டாப் on செய்து விட்டு சத்யம் வெப்சைட் ஓபன் செய்து உட்காரர்ந்து இருந்தேன்.
1 மணி நேரம் பேஜ் ரெப்ரெஷ் செய்து செய்து காத்திருந்தேன்.
செரியாக ஒரு மணிக்கு பில்லா 2 புக்கிங் ஓபன் ஆனது.
பார்த்ததும் பெரிய இடியே விழுந்தது போல இருந்தது. .ஓபன் செய்யும் போதே அனைத்து டிக்கெட்ஸ் விற்று தீர்ந்து விட்டதாக வே லோட் செய்தனர்.
பக்கம் முழுக்க ஒரே சிவப்பாக இருந்தது.எனக்கு நம்ம கவுண்டர் டயலாக் தான் ஞாபகம் வந்தது.
" இந்த பொலபுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா திரியறீங்க".

வேறு வழியே இல்லாமல் கடைசி சாய்ஸ் ஆக வைத்து இருந்த மாயாஜால் தியேட்டரில் வெள்ளி காலை 8.20 மணி ஷோவிற்கு முதல் ரோவில் 10 டிக்கெட் புக் செய்தேன் ஒரு நண்பர் மூலமாக.நான் எதற்காக இவ்வளவு விவரமாக எழுதுகிறேன் என்றால்.டிக்கெட் கிடைக்க நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று தெரிந்து கொள்ள தான்.

இன்று காலை திரைப்படம் ரிலீஸ் ஆனது காலை ஆறுமணிக்கே எளுந்துரிச்சு 7.45 மணிக்கு எல்லாம் நண்பர்கள்  படை சூழ போயாச்சு.


இனி விமர்சனம்.


கண்டிப்பாக ஒரு ரசிகனை முழுமையாய் திருப்தி படுத்தவில்லை என்பதே எனது கருத்து.
ஒரு action படம் எடுக்க நினைத்து அதனை முழுமை படுத்தவில்லை.


கதை நாம் அனைவரும் அறிந்த்தது தான்.
இலங்கையில் இருந்து வரும் அகதி டேவிட் எப்படி உலகம்  முழுவதும்  தேடப்படும் ஒரு கொடூர don Gangster டேவிட் பில்லா ஆகிறான் எனபது தான்.


படத்தின் ஆரம்ப காட்சி அருமையாக உள்ளது.
அஜித்தின்  வயிற்றில்  சிறு கத்தி.அவரை இருவர் முட்டி போட வைத்து பிடித்துள்ளார்கள்.சுற்றிலும் மேலும் பலர்.
ஒரு பஞ்ச் வசனத்தோடு ஆரம்பிகிறது.

"டேய் ஏன் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுனதுடா"
அஜித் சிறு கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் சண்டை ஒரு Action அட்டகாசம்.


அதனை தொடர்ந்து டைட்டில் கார்டு அவரது இலங்கை சிறு வயது வாழ்கையை புகைப்படங்களாக காட்டுகிறது.
அதுவும் நன்றாகவே உள்ளது.
ராமேஸ்வரம் வரும் அவர் அப்படியே சென்னை கோவா பரோயா என அவரது வளர்ச்சி தொடர்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு வில்லனை போட்டு தள்ளி விட்டு முன்னேறுகிறார்.
இது பில்லா 1 படத்தில் வரும் வசனத்தை நமக்கு நினைவு படுத்தும்.
" நாம வாழனும்னா யார வேணாலும் எப்ப வேணாலும் எப்புடி வேணாலும் கொல்லலாம்" எனபது தான் அது.


இரண்டு  ஹீரோயின்கள்  வந்து போகிறார்கள் பேருக்கு.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் பார்வதிக்கு பாடலே கிடையாது.


3 பாடல்கல் நன்றாக உள்ளன.
மதுரை பொண்ணு - வாலிபர்கள் கண்களுக்கு விருந்து ஹி ஹி ஹி
உனக்குள்ளே மிருகம் - ஒரு பாட்டிலேயே தல எப்படி don ஆகிறார் என்பத்தை நன்றாக காட்டியுள்ளனர். VFX Effect நன்றாக உள்ளது.
Gangster சாங் - நான் பயந்தது போலவே end creditil போட்டு வேஸ்ட் செய்து விட்டனர்.


Action காட்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளன.ஆனால் ஒரு சில காட்சிகள் இன்னும் சிறப்பாக கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.
ஆயுத கடத்தலின் போது முதலில் shot gunnodu ஸ்டைலாக ஆரம்பிக்கும் ஆனால் மொக்கையாக முடிந்துவிடும்
கிளைமாக்ஸ் காட்சியில் கூட இன்னும் கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.Helicopter fightum திருப்தியாக இல்லை.


வில்லன்கள் இருவருமே POWERFULAAKA உள்ளனர்.
இந்த வில்லன்தான் விஜயின் துப்பாகியிலும் வில்லன் எனபது கொசுறு செய்தி.
ஆரம்ப காட்சியில் வரும் இளவரசு சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.


கேமரா அருமையாக உள்ளது.
காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் அருமையாக உள்ளது.
வசனங்கள் அனைத்தும் அருமை.சிலசமயம் சற்று போதனைள் போல் இருக்கு feelingayum தவிர்க்க முடியவில்லை.

இறுதில் மீதி உள்ள அனைவரையும் கொல்வது நம்ம ராம் கோபால் வர்மா திரைபடம் போல இருந்தது. 

மொத்ததில் எடுக்க நினைத்ததை முழுமையாக எடுக்காத ஒரு feeling வருகிறது.
கொசுறு செய்தி : என்ன தான் இருந்தாலும் தலக்காக வரும் ஞாயிறு காலை சத்யம் சென்று இரண்டாம் முறையும் பார்க்க போகிறேன்.


அவ்வளவுதான் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.