லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Showing posts with label Comics. Show all posts
Showing posts with label Comics. Show all posts

Monday, February 22, 2016

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

 வணக்கம் நண்பர்களே,

சென்ற பதிவில் நான் லண்டனில் இருப்பதை அறிந்து நண்பர் Muthufan  அவர்கள் இங்கு நடக்கும் புக் மார்கெட் பற்றிய தகவல்களை மெயில் அனுப்பிருந்தார். அங்கு சென்று வந்த எனது அனுபவமே இந்த பதிவு.

அதன் சுட்டி கீழே.

http://londoncomicmart.co.uk/index.html



மாதம் ஒரு முறை லண்டன் ராயல் நேசனல் ஹோட்டலில் பல பழைய காமிக்ஸ் கடைகள் ஒன்று சேர்ந்து நடத்துகிறார்கள். இம்மாதம் 21 ஆம் தேதி (இன்று) நடப்பதை அறிந்து கண்டிப்பாக செல்ல முடிவு செய்திருந்தேன்.

இங்கு செல்வது முடிவானவுடன் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே லயன் ஆண்டு மலர் மற்று இதர காமிக்ஸ் வாங்கி பெட்டியை நிரப்பியாயிற்று ஏற்கனவே சொன்னது போல இனி புதிதாக வாங்க எடை பற்றாது.

இருந்தும் எனக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அளித்தது நண்பர் டெக்ஸ் சம்பத் கேட்டிருந்த டெக்ஸ் ஆங்கிலத்தில் இங்கிலாந்தில் பப்ளிஸ் செய்திருந்த Western Classics புத்தகங்களே.

மற்றும் நண்பர் Muthufan அவர்களும் Fleetway Comapanion புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி இருந்தார். ஆகவே என்னிடம் இருக்கும் சில புத்தகங்களை கொடுத்து விட்டு வேறு வாங்கிவரலாம் என்று எண்ணி இருந்தேன்.

புத்தகங்கள் வாங்குவதை விட பலரை சந்தித்து பிரிட்டிஷ் காமிக்ஸ் பற்றி அறிய ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நண்பர் கூறினார்.

இன்று காலை சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். மதியம் 1 மணி அளவில் சென்று சேர்ந்தேன். ஒரு பெரிய ஹாலில் பல கடைகள் இருந்தன . நுழைந்த முதல் கடையில் இருந்த மனிதரிடம் நண்பர் கூறிய Fleetway Comapanion புத்தகம் பற்றி கேட்டேன், சிறிது யோசித்து ஆம் அப்படி ஒரு புத்தகம் வந்தாகவும் அவரிடம் இல்லை என்று கூறினார்.

பின்னர் நெட்டில் இருந்து டெக்ஸ் ஆங்கில புத்தக அட்டைப்படங்களை காண்பித்து கேட்டேன். ஆம் ஒரு முறை முயற்சியாக அப்படி வந்தது என்று அது கிடைப்பது மிகவும் அரிது என்றும் கூறினார். அடுத்து ஸ்டீல் க்ளா புத்தகங்கள் இருக்குமா என்று கேட்டேன், இல்லை என்று கூறினார்.

மேலும் அவர் மட்டுமே ஒரு சில பிரிட்டிஷ் காமிக்ஸ் வைத்திருப்பதாகவும் வேறு கடைகளில் அது கூட கிடையாது என்றும் கூறினார். எனது எதிர் பார்ப்பு அனைத்தும் நொறுங்கி போனது.  பின்னர் ஹாலை சுற்றிவந்து பார்த்ததில் அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது.

எங்கு நோக்கினாலும் மார்வல் மற்றும் DC காமிக்ஸ் புத்தகங்களே இருந்தன.
சில்வர் மற்றும் பிரான்ஸ் கால காமிக்ஸ்கள் இருந்தன. அனைத்து ஹீரோக்களுடைய அனைத்து வகையான காமிக்ஸ்களும் இருந்தன.

ஒரு சில DVD கடைகள் இருந்தன. நம்ம ஊரை போல அங்கு ஒருவர் திருட்டு DVD ரிப்புகள் விற்றுக்கொண்டு இருந்தார்.

நான் பேசிய நல்ல மனிதர் 







எனக்கு எப்பொழுதுமே மார்வல் மற்றும் DC காமிச்களில் ஆர்வம் இருந்ததில்லை, படங்கள் மட்டும் தான். ஆகையால் வேறு என்ன காமிக்ஸ் தேடுவது என்றும் தெரியவில்லை.

இருந்த கொஞ்ச பிரிட்டிஷ் காமிஸ்களை நோட்டம் விட்டேன். அதிகமாக War காமிக்ஸ்களே இருந்தன. அதில் பார்த்த பொழுது கண்ணில் பட்டது. உங்களுக்கு நினைவுள்ளதா என்று கூறுங்கள். ஆங்கிலத்தில் Matt Maddock  மற்றும் அவரது குழுவின் சாகசம்.




வேறு எதுவுமே வாங்குவது போல இல்லை. அப்பொழுது ஒரு மூலையில் இருந்த பெட்டியை பார்த்தேன். அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அட்டை இல்லாத வெறும் தனித்தாள்கள் கூடிய புத்தகங்கள் இருந்தன. அதனை பற்றி கேட்டபொழுது அவை புத்தகங்களின் proof reading பார்பதற்காக தயார் செய்த தாள்கள் என்று கூறினார்.

நல்ல வளவளப்பான தாள்களில் நல்ல தரமான ஆர்ட் ஒர்க்கில் இருந்த வெஸ்டேர்ன் கதைகள். எடுத்து பார்த்த பொழுது பல அறிமுகமான கதைகள் இருந்தன. அதன் புகை படங்கள் கீழே.









இவை அனைத்தும் நமது ராணி காமிக்ஸ் தமிழிற்கு கொண்டு வந்த வெஸ்டேர்ன் கதை புத்தகங்கள்.

இதன் புத்தகங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு இல்லை என்று கூறிவிட்டார். சரி வந்ததற்கு இதாவது இருக்கட்டும் என்று வாங்கிவந்தேன். ஊரில் வந்து பைண்டிங் செய்ய வேண்டும். இக்கதைகளின் பெயர்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

எனக்கு மிகவும் பிடித்த மூன்று குதிரை வீரர்களின் கதைகள் இருந்தது மிக மகிழ்சி அளித்தது. கிட் கார்சன் என ராணி காமிக்ஸில் வந்த கதைகளின்  அனைத்து புத்தகங்களிலும் ஹீரோவின் பெயர் வேறு வேறாக இருந்துள்ளது.

அங்கு நான்பார்த்து வாங்க முடியாத வேறுசில புத்தகங்கள் கீழே. மாடஸ்தியின் Daily Strip ப்புகளின் தொகுப்பு.



கழுகு மலை கோட்டை புத்தகத்தின் ஒரு பக்கம்.



War லைப்ரரி புத்தகங்களாக வந்த அட்டை படங்கள் மற்றும் ஆர்ட் வோர்க்குடன் கூடிய புத்தகம்.






இவ்வாறாக ஏமாற்றத்துடன் எனது காமிக்ஸ் மார்கெட் அனுபவம் முடிந்தது.

அவ்வளவுதான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.

Tuesday, January 26, 2016

லண்டனும் லயன் காமிக்ஸும்...

வணக்கம் நண்பர்களே,

எனது ப்ளாக்கின் மீள்வரவின் முதல் காமிக்ஸ் சார்ந்த பதிவு.

போனவருடம் ஆகஸ்ட் மாதம் பணி நிமித்தமாக இங்கிலாந்து செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது, மனதில் எழுந்த முதல் எண்ணம் அங்கு சென்று பழைய புத்தக கடைகளை கண்டு பிடித்து மாயாவி மற்றும் ப்ளீட்வே புத்தகங்கள் சில வாங்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே.

பின் இங்கிலாந்து லண்டன் மாநகரம் வந்திறங்கிய பொழுது நாம் படித்த காமிக்ஸ் ஹீரோக்கள் வாழ்ந்த ஊர் தெரிந்தது. முக்கியமாக கதைகளில் வரும் இரண்டடுக்கு பேருந்துகள் லண்டனிற்கே உரிய ஒன்று. சிவப்பு கலரில் ப்ரமிப்பாக இருந்தது.

இங்கு வந்து செட்டில் ஆகி பணி பளு சற்று குறைந்தபொழுது, கூகிளில் பழைய புத்தக கடைகள் என்று தேடிய பொழுது ஒன்றும் கிடைக்கவில்லை. பின் ப்ளீட்வே புத்தகங்கள் என்று தேடிய பொழுது ஈபே லிங்குகள் கிடைத்தன. ஒரு சில பாரகுடா (லாரன்ஸ்) கதைகள் 10 பவுன்டுகளுக்கு இருந்தது.

சற்றே விலை அதிகம் என்று தோன்றியது. அப்பொழுதுதான் லயன் வருடாந்திர புத்தகங்கள் கண்ணில் பட்டன. விலையும் பாதியாக இருந்தது.
மேலும் பலகதைகள் நிறைந்துள்ளது தெரிந்தது. சரி என ஆர்டர் செய்தேன்.

இரண்டு மூன்று நாட்களில் வந்து சேர்ந்தது. அதனை பார்த்த பொழுது தான் நமது லயன் குண்டு புத்தகங்களுக்கு அது ஒரு ஆரம்பமாக இருந்திருக்கும் என்று. புத்தகத்தை கையில் ஏந்தும் பொழுதே மனதில் ஒருவித சந்தோசமாக இருந்தது.

ஹார்ட் பவுண்ட் அட்டை, பழுப்பு நிற தரமான தாள் என அட்டகாசமாக இருந்தது. அந்த தாளில் கருப்பு வெள்ளை சித்திரங்கள் அருமையாக இருந்தது. பெரும்பாலும் சிறு சித்திரக்கதைகள், மற்றும் ஒரு சில சிறு கதைகள் என கதை கதம்பமாக இருந்தது.

ஆனால் நமது லயன் குண்டு புத்தகங்களின் சிறப்பு, அது பல முழு நீள கதைகள் நிறைந்தாக இருப்பதே. பின் நமது லயனிற்கே உரிய பாக்கெட் சைஸ். ஆனால் லயன் ஆனுவலின் A4 சைஸில் படிக்க அதுவும் ஒரு தனி அனுபவமாக இருந்தது.

ஆர்வத்தில் பார்த்த புத்தகங்கள் எல்லாம் ஆர்டர் செய்தேன். ஆறு புத்தகங்கள் வாங்கியபின் பார்த்தால் ஒரு பெட்டி நிரம்பிவிட்டது. விமானத்தில் 4 பெட்டிகள் தான் கொண்டுவர முடியும், அனுமதிக்கப்பட்ட எடை 80கிலோ தான். வரும்பொழுதே கிட்சென் சாமான்கள் சேர்த்து கஷ்டப்பட்டு தான் கொண்டு வந்தோம்

இதில் போகும்பொழுது உறவினர்களுக்கு வேறு எதாவது வாங்கி செல்லவேண்டும். எப்படி அதை செய்ய போகிறோம் எனபது தான் எனது மனைவியின் இப்பொழுதைய கேள்வி :). அதனால் இனி வேறு புத்தகங்கள் எதுவும் வாங்க முடியாது என்பதே எனது கவலை :(.

நான் வாங்கிய புத்தகங்கள் லயன் Annual  1961(அட்டை கிழிந்த நிலையில்), 1968, 1970, 1972, 1973 மற்றும் 1975. அனைத்து புத்தகங்களிலும் இருந்தது நமது இரும்பு மனிதன் ஆர்ச்சியின் கதை தான். அடுத்து துப்பறியும் ஜிப் நோலனின் இரண்டு பக்க கதைகள். பின் ஒருசில புத்தகங்களில் சிலந்தி மனிதன் ஸ்பைடர் கதைகள் இருந்தது.

ஒரு சில கதைகள் கலரில் ஆர்ட் பேப்பரில் இருந்தது.

புத்தகங்களின் அட்டை மற்றும் ஒருசில உள்ளபக்கங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக கீழே.








 





மேலும் சில உட்பக்கங்கள் நாளை பகல் வேலையில் அப்லோட் செய்கிறேன்.

சரி இனி குண்டு புத்தகங்கள் வேண்டாம் எதாவது சிறிய புத்தகங்கள் வாங்கலாம் என்று யோசித்தபொழுது நண்பர் மகேஷ் John Havoc புத்தகங்கள் வாங்கி வர முடியுமா என்று கேட்டார். ஆனால் நான் மேலே கூறிய எடை விஷயம் பற்றி நண்பரிடம் கூறி முயற்சி செய்கிறேன் என்று கூறினேன்.

பின்னர் சரி வாங்கி பார்க்கலாம் என்று நண்பர்குக்கு ஒரு புத்தகம் ஆர்டர் செய்தேன், புத்தகத்தை நேரில் பார்த்த பெழுது சிறிய அளவில் எடை குறைவாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

உடனே நண்பருக்காக மீண்டும் ஒரு புத்தகமும் எனக்கு இரண்டு புத்தங்களும் வாங்கிக்கொண்டேன். அதன் அட்டை படங்கள் உங்களுக்காக.







புத்தகங்களை படித்துவிட்டு ஒரு சில கதைகளின் பதிவுகள் இட முயற்சி செய்கிறேன்.

அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே










Tuesday, June 18, 2013

கோடை மலர்-87 - ஸ்பெஷல் ஒரு சிறு பார்வை




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு ஒரு காமிக்ஸ் சார்ந்த பதிவுடன் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர் ஒருவரின் மூலம் லயன் காமிக்ஸின் கோடை மலர்-87 படிக்க கிடைத்தது.அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே அதனை பற்றிய இந்த பதிவு.

லயன் காமிக்ஸின் 36வது வெளியீடாக ஏப்ரல் மாதம் 87ஆம் வருடம் கோடைமலர் புத்தகம் வந்தது.

வழக்கமான பாக்கெட் சைஸில் குட்டி குண்டு புத்தகமாக வந்தது.

இப்புத்தகத்திற்கு வந்த விளம்பரம்.



இப்புத்தகத்தில் மொத்தம் ஆறு கதைகள்.

1. ஸ்பைடரின் சிவப்பு தளபதி 
2. மாடஸ்டி கார்வினின் கார்வினின் யாத்திரைகள் 
3. லாரன்ஸ் டேவிட்டின் எலிகள் ஜாக்கிரதை 
4. டெக்ஸ் வில்லரின் பழிக்குப் பழி 
5. இரட்டை வேட்டையரின் திருடனுக்கு திருடன் 
6. ஆர்சியின் வெனிஸ் நகரில் ஆர்ச்சி 

புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டுள்ளதால் புகைபடங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

1. ஸ்பைடரின் சிவப்பு தளபதி :


கதை கொஞ்சம் மொக்கையாகத்தான் இருக்கிறது. இப்பொழுது படிப்பதனால் அப்படி தெரிகிறதோ என்று தெரியவில்லை.

எனக்கு மிகவும் பிடித்த ஸ்பைடர் கதைகள் 
1. சைத்தான் விஞ்ஞானி
2. பாட்டில் பூதம் 
3. நீதிக் காவலன் ஸ்பைடர் 

மற்ற கதைகள் அனைத்தும் ஓகே ராகம் தான்.

சிவப்பு தளபதி என்ற ஒரு அயோக்கியன் ஒரு பெரிய விமானத்தில் வந்து நியூ யார்க் நகர மக்களிடம் இருந்து மிரட்டி பணம் கேட்கிறான்.

தனக்கு போட்டியாக உருவாகியுள்ள எதிரியை கண்டு கொதித்து எழும் ஸ்பைடர் அவனை தனது ஹெலிகாரில் சென்று முறியடிக்கிறார்.




2. மாடஸ்டி கார்வினின் கார்வினின் யாத்திரைகள் 

ஒரு சிறிய சாகசம் இருந்தும் பரவாயில்லை.



தனது தோழி ரீனாவுடன் விடுமுறையை கழிக்க ஒரு தீவிற்கு வருகிறார் கார்வின். அங்கு அவர்கள் இருவரையும் ஒரு விஞ்ஞான தம்பதியினர் பிடித்து சென்று மயக்க ஊசி செலுத்தி பிரமாண்ட பொருட்கள் இருக்கும் ஒரு அறையில் அடைத்து அவர்களுக்கு தங்களது ஒருவம் தான் சிறிதாகிவிட்டது என்ற பிரேமையை உருவாகுகின்றனர்.

டாரண்டின் வேண்டுகோளிற்கு இணங்கி அந்த கூட்டத்தினரை பிடிக்க வரும் மாடஸ்டி எதிர்பாராவிதமாக கார்வினையும் ரீனாவையும் கண்டுபிடித்து காப்பாற்றுகிறார்.








3.  லாரன்ஸ் டேவிட்டின் எலிகள் ஜாக்கிரதை 

இதுவும் ஒரு மிகச் சிறிய சாகசம்.



ஒரு வித ஒலியை ஒலிக்க செய்து நகரில் இருக்கும் எலிகளை வெறிகொள்ள செய்து மக்களை கடிக்க செய்கிறான் ஒரு ஆகொதீகா வை சேர்ந்த ஒரு தீவிரவாதி.

அவனை முறியடித்து அந்த எலிகள் மூலமே அவனை கொல்கின்றனர் நமது நாயகர்கள்.


4. டெக்ஸ் வில்லரின் பழிக்குப் பழி


வேறு ஒரு எதிரியை விரட்டி வரும் வில்லரும் கார்சனும் சில்வர் பெல் நகரை அடைகின்றனர்.

அங்கு எதார்த்தமாக அந்த நகரின் பெரும் பணக்காரர் பேக்கரின் மகன் ஆல்பர்ட் பணத்திமிரில் தனது பிறந்த நாளை கொண்டாட  மதுபான கடையில் கண்டபடி சுட்டுகொண்டிருப்பதை காண்கின்றனர்.

அது மட்டும் இல்லாமல் ஒரு குண்டு நமது கார்சனின் காதில்  உரசி செல்கின்றது .பொங்கி எழும் டெக்ஸ் அவனை நையப்புடைத்து பாடம் புகட்டுகிறார்.





கோவப்பட்டு செல்லும் ஆல்பர்ட் தனது பண்ணையை  சேர்ந்த நான்கு பேரை அழைத்து வருகிறான்.அவர்களையும் சுட்டு வீழ்த்துகின்றனர்




பின் அந்த விஷயத்தை தனது தந்தையிடம் கூறுகிறான்.அதற்கு அவன் தந்தை ரூபி ஸ்காட் என்ற கொலைகாரனை அனுப்புகின்றார்.


முதலில் அவனால் நயவஞ்சகமாக குண்டு காயம் அடையும் டெக்ஸ் மீண்டும் வந்து இடது கையை பயன் படுத்தி அவனை சுட்டு வீழ்த்தி விடுகிறார்.




ரூபி இறந்ததற்கு காரணமான ஆல்பர்ட்டை அவனது செவிந்திய மனைவி சுட்டு வீழ்த்திவிடுகிறாள். 



தனது மகன் இறந்ததை கேட்ட பேக்கர் புத்தி பேதலித்து பண்ணைக்கு தீயிட்டு அதில் தானும் வெந்து இறந்துவிடுகிறார்.


5. இரட்டை வேட்டையரின் திருடனுக்கு திருடன் 

சிறைசாலையில் இருந்து தப்பிக்க பார்க்கும் ப்ரீவ்ஸ்டர் என்ற திருடனின் சதி வேலையே முறியடிக்கின்றனர் SI 6 உளவுபிரிவை சேர்ந்த ஜார்ஜும் டிரெக்கும்.


6. ஆர்சியின் வெனிஸ் நகரில் ஆர்ச்சி

வெனிஸ் நகருக்கு சுற்றுலா வரும் நமது ஆர்ச்சி குழுவினர் அப்படியே அங்கு இருக்கும் ஒரு பாங்கின் தங்கம் பட்டுவாடா செய்யும் வேலையே செய்கின்றனர்.

அப்பொழுது சீதோசன நிலையை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றும் ஒரு கருவி கொண்டு அந்த நகரின் ஆறு முழுவதையும் ஐஸ் கட்டியாகி ஆர்சியை உறைய செய்து தங்கத்தை கடத்தி சென்று விடுகின்றனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து பல சாகசங்கள் செய்து நமது குழுமினர் தங்கத்தை மீட்கின்றனர்.



ஆர்ச்சி கதைக்கு மேலும் சில புகைப்படங்களை நாளை மாலை இப்பதிவுடன் சேர்கிறேன்.

இப்பதிவு இப்புத்தகத்தை படிக்காத நண்பர்களுக்கு ஒரு சிறு கதை சுருக்கமாகவும் படித்த நண்பர்களுக்கு மீண்டும் நினைவு படுத்தி பார்க்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம். 

கிருஷ்ணா வ வெ