லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Monday, May 16, 2016

என்னை கவர்ந்த ஆங்கில நாடகங்கள் - பாகம் 1


வணக்கம் நண்பர்களே,

2013 ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்து டிராப்ட் இல் இருந்த பதிவு, இப்பொழுது தான் வெளிச்சத்தை பார்க்கிறது.

ஆங்கில படங்கள் மட்டும் அல்லாது ஆங்கில நாடகங்கள் பலவும் பிரமாண்டமாகவும், பல வகைகள் சார்ந்ததாகவும் இருக்கும். நமது தமிழ் நாடகங்கள் போல ஒரே அழுகாச்சி காவியமாக இருக்காது.

பொதுவாக எனக்கு பிடித்த வகைகள் ஆக்சன்/த்ரில்லர்/மிஸ்டரி. சூப்பர் ஹீரோ/பாண்டஸி, மற்றும் கார்டூன். இவ்வகைகளில் பல நாடகங்கள் உள்ளன. அவ்வாறாக நான் பார்க்கும் நாடகங்களின் எண்ணிக்கை 35 க்கும் மேலே.

ஆங்கில நாடகங்களின் நல்ல விஷயம் எல்லோருக்கும் பிடித்த வகையில் ஒரு நாடகமாவது இருக்கும். திரைப்படங்களுக்கு நிகரான தரமானதான படைப்புகள் இருக்கும்.

நான் பார்க்கும் நாடகங்கள் வகைகள் வாரியாக

ஆக்சன்/த்ரில்லர்/மிஸ்டரி :

Castle : 2009 - 2016 : 8 Seasons

Hannibal : 2013 - 2015 : 3 Seasons

Homeland : 2011 - Till Date : 5 Seasons

How to get away with Murder : 2014 - Till Date : 2 Seasons

Limitless : 2016 - Till Date : 1 Seasons

Luther : 2010 - Till Date : 4 Seasons

Orphan Black : 2013 - Till Date : 4 Seasons

Perception : 2013 - 2015 : 3 Seasons

Person Of Interest : 2013 - 2016 : 5 Seasons

Scorpion : 2014 - Till Date : 2 Seasons

Scream : 2015 - Till Date : 1 Season

Sherlock : 2010 - Till Date : 3 Seasons + 1 Special Episode

Spartacus : 2010 - 2013 : 3 Seasons + 1 Prequel Season

Suits : 2011 - Till Date : 5 Seasons

The Blacklist : 2013 - Till Date : 3 Seasons

The Mentalist : 2008 - 2015 : 7 Seasons

The Listener : 2009 - 2015 : 5 Seasons

Supernatural : 2005 - Till Date : 11 Seasons


சூப்பர் ஹீரோ/பாண்டஸி:

Arrow : 2012 - Till Date : 4 Seasons

Constantine : 2014 : 1 Season

DC's Legends of Tomorrow : 2016 - Till Date : 1 Season

Daredevil : 2015 - Till Date : 2 Seasons

Gotham : 2015 - Till Date : 2 Seasons

Jessica Jones : 2016 - Till Date : 2 Seasons

Agent Carter : 2015 - 2016 : 2 Seasons

Agent's of Shield : 2013 - Till Date : 3 Seasons

Supergirl : 2016 - Till Date : 1 Season

The Flash : 2015 - Till Date : 2 Seasons

Game of Thrones : 2010 - Till Date : 6 Seasons

The Musketeers : 2014 - 2016 : 3 Seasons
Vikings : 2013 - Till Date : 4 Seasons


கார்டூன்:

Avatar - The Last Airbender : 2005 - 2008 : 3 Seasons

Dragons - Riders of Berk : 2012 - Till Date : 4 Seasons

The Legend of Korra : 2012 - 2014 : 4 Seasons


இவை அல்லாது பல ஒரு சீசன் நாடங்கங்களும் அடங்கும்.

மேலே இருக்கும் அனைத்து நாடகங்களுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இனி இத்தொடர் பதிவுகளில் Best of the Best நாடகங்களை பற்றி சில கருத்துக்களை பதிய முயல இருக்கிறேன்.

பொதுவாக அனைத்து நாடங்களிலும் இருக்கும் பொதுவான விஷயம் அதில் வரும் கதாபத்திரங்களின் மீது ஒரு வித பிடிப்பை பார்பவர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. அவர்கள் சந்தோசமாக இருந்தால் நாமும் சந்தோசமாக இருப்போம், அவர்களுக்கு கஷ்டம் என்றால் நாமும் வருத்தப்படுவோம். அவ்வகையில் தமிழ் நாடகங்களும் இவ்வைகளும் ஒன்றே.


Sherlock :





நான் முதல் முதலாக பார்த்த நாடகம் Sherlock - உலக புகழ் வாய்ந்த துப்பறிவாளர் இப்பொழுது வாழ்வதாக கற்பனை செய்திருகிறார்கள்.

அதன் முதல் அத்தியாயத்தை பற்றிய எனது பதிவை படிக்க கிளிக் செய்யவும்.

இது வரை 3 சீசன்கள் வந்துள்ளன. ஒவ்வொரு சீசனுக்கும் 3 அத்தியாயங்கள்.

எனக்கு மிக மிக பிடித்தது Sherlock ஆக நடித்துள்ள Benedict cumberbatch மற்றும் Watson ஆக நடித்துள்ள Martin Freeman ஆகியோரின் நடிப்புதான். அவர்களுக்குள் இருக்கும் chemistry மிக அருமையாக இருக்கும்.

சமீபமாக கிறிஸ்துமஸ் ஸ்பெசலிற்காக 16 ஆம் நூற்றாண்டில் இருவரும் இருபதான கற்பனையில் ஒரு அத்தியாயம் வந்தது.





மூன்றாம் சீசனின் முடிவில், இரண்டாம் சீசன் முடிவில் இறந்த மொரியார்ட்டி மீண்டும் உயிரோடு வருவதாக காண்பித்திருப்பார்கள், அதனால் ஷெர்லாக் தனது மெமரி பேலசிற்கு சென்று அதற்குண்டான சாத்திய கூறுகளை ஆராய்வதாக இருக்கும் இந்த அத்தியாயம்.

கண்டிப்பாக sherlock ரசிகர்கள் அனைவரும் மிஸ் செய்யக்கூடாத ஒரு நாடகம். எனது வரிசையில் முதல் இடம்.


Game of thrones:

அடுத்ததாக நான் பார்க்க ஆரம்பித்த நாடகம் இது.
Sherlock கிற்கு முன்பே நண்பன் ஒருவன் இதன் முதல் சீசன் டவுன்லோட் கொடுத்திருந்தான்.ஆனால் நான் பார்க்காமல் இருந்தேன். Sherlock மூலம் நாடகங்கள் அறிமுகமானவுடன் இதனை பார்கலாம் என்று ஆரம்பித்தேன். 

ஆனால் பார்க்க பார்க்க ஆர்வம் தாங்காமல் அதுவரை வந்திருந்த 3 சீசன்களையும் டவுன்லோட் செய்து ஒரே தம்மில் பார்த்து முடித்தேன். அவ்வளவு நன்றாக இருக்கும்.









7 நாடுகள் அவர்களுக்குள் நடக்கும் யுத்தம்,பழிவாங்குதல்,துரோகம்,காதல் என பல பரிமாணங்கள் நிறைந்தது.

மேலே உள்ள படத்தை பார்த்து பயம் கொள்ளவேண்டாம் ஆரம்பத்தில் தொடருவதற்கு சற்று சிரமாக இருந்தாலும் பின் பழகிவிடும்.

இந்த நாடகம் அதன் பெயரிலேயே வரும் புத்தகங்களை சார்ந்து எடுக்க படுபவை. இத்தொடருக்கென வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் இக்கதையில் வரும் ஒரு கதாபாத்திரமான ஜான் ஸ்னோ 5 ஆம் சீசன் முடிவில் இறப்பதாக காண்பித்து அவன் மீண்டும் உயிர்பெருவான இல்லையா என்பதை உலகம் முழுவதும் பேச வைத்தார்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இதன் வெறித்தனமான ரசிகர், இப்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் 6 ஆம் சீசனின் முதல் 5 அத்தியாயங்களை ஒளிபரப்புவதற்கு முன்பே தனது மாளிகையில் ப்ரெத்தியேகமாக கண்டு இருக்கிரார்.

இந்நாடகத்தின் தனித்துவம் நாடாகத்தில் நாம் யாரை மிக முக்கியமான கதாபாத்திரமாக நினைகிறோமோ அவர்களை நாம் எதிர்பாரா சமயம் கொல்வதே. மற்றும் ஒரு விஷயம் அதில் வரும் அதிகமான நிர்வாண காட்சிகளே. முதல் சீசனிர்க்கு பின்பு சற்று குறைந்துள்ளது.

கண்டிப்பாக வயது வந்தவர்கள் யாரும் தவறவிட கூடாத ஒரு நாடகம்.

எனது வரிசையில் இதற்கும் முதல் இடம்.

The Mentalist:

அடுத்து எனது வரிசையில் இருக்கும் நாடகம் இது.

Patrick Jane ஒரு mentalist, மக்களிடம் ஆவிகளுடன் பேசுவாதாக கூறி ஏமாற்றி, ஆட்களிற்கு தகுந்தால் போல் ஆவர்கள் மனதில் இருப்பதை அறிந்து பேசுவதில் கில்லாடி.

ஒரு முறை தொலைகாட்சி பேட்டி ஒன்றில் சீரியல் கில்லர் ரெட் ஜான் என்பவனை பற்றி தவாறாக கூறி அவனது கோவத்திற்கு ஆளாகிவிடுகிறான்.

ரெட் ஜான் அவனது மனைவி மற்றும் குழந்தையை கொடூரமாக கொன்றுவிடுகிறான்.

மனதுடைந்து போகும் ஜேன் தனது குடும்பத்தை கொன்றவனை கண்டுபிடிப்பதற்காக California Bureau of Investigation போலீசிடம் கன்சல்டண்ட்டாக சேர்கிறான்.

இந்த நாடகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஜேன் ஆக வரும் சைமன் பேக்கரின் நடிப்பு. ஒவ்வொரு அத்தியாத்திலும் குற்றம் செய்தவர்களை பிடிக்கும் முறை. அடுத்து இந்நாடகத்தில் வரும் மற்றைய கதாபாத்திரங்களின்  அமைப்பு. 

சென்ற வருடம் 7 சீசனுடன் இந்த நாடகம் நிறைவுற்றது. பொதுவாக பிரபலமான நாடகங்களில் இருக்கும் குறை அதன் முடிவுதான். ரெட் ஜான் யாராக இருக்கும் என்ற சஸ்பென்ஸ் 5 ஆம் பாகம் நடுவில் கூறி இருப்பார்கள். அதற்கு சரியான ஜஸ்டிபிச்கேசன்  இருக்காது. 

சஸ்பென்ஸ் த்ரில்லர் பிடித்தவர்கள் மிஸ் செய்யகூடாத ஒரு தொடர்.










Person of interest:

அடுத்து Person of Interest நாடகம் நண்பர் லக்கி தமிழ் அவர்களின் பரிந்துரையில் பார்க்க ஆரம்பித்த நாடகம். புகழ் வாய்ந்த சயன்ஸ் பிக்சன் இயக்குனர் க்றிஸ் நோலன் சகோதரர் ஜானதன் நோலன் அவர்களின் உருவாக்கம்.

உலகம் முழுவதும் உள்ள அனைவரும் கண்காணிக்க படுகிறோம். தெருக்களில் இருக்கும் கேமரா, வீட்டு கணினியில் இருக்கும் கேமரா மற்றும் அலைபேசி உரையாடல் என பல வாரக நம்மை கண்காணிக்க கூடிய Artificial Intelligence ஒன்றை அரசாங்கத்திற்காக உருவாக்குகிறார் ஒருவர்.

 பயங்கரவாதத்தை கண்டுபிடிக்க உருவாக்கப்பட்ட மெசின் உள்ளூர் குற்றங்களையும் கண்டுபிடிக்கிறது. ஆனால் அதனை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை, அதனால்  அதனை உருவாகிய பணக்காரர் சொந்த செலவில் மற்றும் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை வேலைக்கு அமர்த்தி மக்களை குற்றங்களில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்.










இந்த நாடகம் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் 5 ஆம் சீசனுடன் நிறைவுறுகிறது. தற்பொழுது The Machine (நல்ல AI) மற்றும் Samaritan (கெட்ட AI) இரண்டுக்கும் நடுக்கும் யுத்தம் பற்றி பொய் கொண்டு இருக்கிறது.

சயன்ஸ் பிக்சன் ரசிகர்கள் மிஸ் செய்யகூடாத தொடர்.

-தொடரும்.

Wednesday, January 1, 2014

Memories (2013) - Malayalam Movie Review




 வணக்கம் நண்பர்களே,

பொதுவாக நான் தமிழ் அல்லாது ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி மற்றும் நம்ம கருந்தேள் பரிந்துரைக்கும் கொரிய படங்கள் பார்ப்பேன். (கண்டிப்பாக சப் டைட்டில் கொண்டு தான்).

எனக்கு மலையாளத்தில் பிடித்த ஹீரோ ப்ருத்விராஜ். அவர் கனா கண்டேன் திரைபடத்தில் நடித்த வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தை பார்த்தத்தில் இருந்து பிடிக்கும். உண்மையில் அக்கதையின் ஆண்ட்டி ஹீரோ அவர்  தான் நம்ம ஸ்ரீகாந்த் கெஸ்ட் ரோல் பண்ணிருப்பார் :D.

மலையாளத்தில் வரும் த்ரில்லர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அந்த காலத்தில் வந்த சிபிஐ டைரிக்குறிப்பு, உண்மை முதல் போன வருடம் வந்த மசாலா 20 20 வரை நன்றாக இருக்கும்.

அதிலும் இவ்வருடம் வந்த மும்பை போலீஸ் மற்றும் மெமரீஸ் திரைப்படங்கள் மலையாள படங்களின் அடுத்த பரிமாணம் என்று கூறலாம்.

அதிலும் மும்பை போலீஸ் படத்தில் இமேஜ் பார்க்காமல் நடித்த ப்ரித்விராஜை கண்டிப்பாக பாராட்டவேண்டும். நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்பதை படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

இப்பதிவில் சமீபத்தில் நான் பார்த்த மெமரீஸ் திரைபடத்தை பற்றிய எனது கருத்தே.

படம் ஆரம்பிக்கும் பொழுது பாண்ட் படங்களில் வருவது போல ஆங்கில பாடல் ஒன்று பாட அதிரடி படை ஒன்று தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் நபரை சண்டையிட்டு காப்பாற்றுகிறது. அதில் ஒரு அதிகாரி சாம் அலெக்ஸ் நம்ம ப்ரித்விராஜ். பிடித்து வைத்திருந்த நபரை காப்பாற்றி அழைத்து போகும்பொழுது ஒரு தீவிரவாதி மட்டும் இறக்காமல் அவரை அடையாளம் பார்த்துவிடுகிறான்.

இது நடந்து சில மாதங்களுக்கு பிறகு, கொச்சியில் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி தனது மனைவியுடன் அங்காடியில் பொருட்கள் வாங்கிகொண்டு வரும் பொழுது கார் பார்கிங்கில் வைத்து கடத்தபடுகிறார்.பின் 3 நாட்கள் கழித்து ஒரு சாலையோரத்தில் உயரமான மரத்தில் தொங்கவிட்டு கிடைக்கபடுகிறார். அவரது மார்பில்  வேற்றைய மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.

அக்கொலையை விசாரிக்கும் S P வினோத் கிருஷ்ணா அக்கொலைக்கு காரணம் கொலையானவரின் மனைவியின் இளவயது காதலன் தான் என்று அவனை கைது செய்து முடித்துவிடுகிறார்.

இது நடந்து 5 மாதங்கள் கழித்து மற்றொரு அதிகாரி தனது மனைவி குடும்பத்துடன் காரில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வருகிறார். மனைவி உள்ளே செல்ல மகனை சிறுநீர் கழிக்க அழைத்து செல்கிறார். சிறிது நேரம் கழித்து வெளியே வரும் மனைவி தனது கணவன் கடத்தப்பட்டு இருப்பதை அறிகிறார்.

மேலும் 3 நாட்கள் கழித்து ஒரு ஓடையின் பாலத்தில் கைகள் பாலத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கபடுகிறார். இப்பொழுது போலீஸ் மீது பத்திரிகைகளால் குற்றம் கூறப்படுகிறது. மேலிடத்தில் இருந்து யாராவது திறமையான அதிகாரியிடம் கேஸை ஒப்படைக்க கூறப்படுகிறது.

இப்பொழுது நாம் மீண்டும் சாம் அலெக்சை பார்க்கிறோம்.முகமெல்லாம் தாடியுடன் மிகுந்த குடிபோதையுடன் இருக்கிறார். பிளாஷ்பாக்கில் நாம் முதல் காட்சில் பார்த்த தப்பித்த தீவிரவாதியினால் அவருடைய மனைவியும் மகளும் அவரது கண்முன்னால் கொலைசெய்யபட்டதை அறிகிறோம்.

அந்த நிகழ்ச்சியின் சோகத்தில் இருந்து வெளிவரமுடியாமல் முழு நேர குடிகாரராக இருக்கிறார். அவரை காணும் அவரது உயர் அதிகாரி இந்த சீரியல் கொலைகள் கேஸை பார்க்க சொல்கிறார். முதலில் மறுக்கும் சாம் பின் தனது தாயின் வற்புறுத்தலினால் சம்மதிக்கிறார்.

இடையில் அவரது குடிப்பழக்கத்தால் தனது தம்பி மற்றும் சமூகத்தில் அவலநிலைக்கு ஆளாகிறார். அவரது தம்பி தனது கல்யாணத்திற்கு கூட வரவேண்டாம் என்று அவரை கூறிவிடுகிறான்.

புலனாய்வு செய்யும் சாம் கொலையானவர்களின் மார்பில் எழுதி உள்ளது அரபு என்றும் அது பைபிளின் வாசகத்தை குறிகின்றது என்றும் கண்டுபிடிக்கிறார்.

கொலையாளி பைபிள் மீது ஈடுபாடு கொண்டவன் என்றும் ஆகையால் தான் கடத்தி 3 நாட்கள் கழித்து ஜீசஸ் போலவே கைகள் கட்டப்பட்டு தொங்கவிடுகிறான் என்றும் கண்டுபிடிக்கிறார். மற்றும் ஜீசஸ் மற்றவர்கள் பாவங்களுக்கு தான் தண்டனை அனுபவித்து போல இறந்தவர்களும் அவர்களது மனைவிகள் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கிறார்.

கொலையானவர்களின் மனைவிகளை விசாரிக்கும் பொழுது பல தகவல்கள் வெளிவருகின்றன. அதனை வைத்து எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் மற்றும் தனது குடிப்பழக்கத்தில் இருந்து மீள்கிறார் என்பதே மீதிக்கதை.

படம் நன்றாக இருக்கிறது என்ன சப் டைட்டில் தான் கிடைக்கவில்லை, இருந்தும் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் இருக்க வில்லை.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.





Wednesday, December 25, 2013

Briyani vs Endrendrum Punnagai - திரைவிமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

சமீபமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கவே முடிவதில்லை. சென்ற மாதம் முழுவதும் அனைத்து வாரங்களும் பிரயாணம் செல்ல வேண்டி இருந்தது.

பின் அப்பாடா என்று Gravity படம் புக் செய்தால் ஆபிசில் ஒரு பிரச்சனை வந்து வார இறுதியை அங்கேயே கழிக்க வேண்டி ஆகிவிட்டது.

இப்படி நான் தவற விட்ட படங்கள் பல. இறுதியில் ஒரு வழியாக தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டேன்.அதுவும் ஒன்றல்ல இரண்டு படங்கள்.நேற்று இரவு என்றென்றும் புன்னகை இன்று மதியம் பிரியாணி.அதிஷ்டவசமாக இரண்டு படங்களுமே ஏமாற்றவில்லை.

நான் பொதுவாக படங்களின் விமர்சனங்களை Sify வலைப்பூவில் பார்ப்பது வழக்கம்.படம் வெளியான அன்றே பிரியாணி படம் படு மொக்கை என்ற அளவு விமர்சித்திருந்தனர்.அதுவும் இல்லாமல் நான் கேள்விபட்ட  செய்தி வேறு நினைவுக்கு வந்தது.

தீபாவளி சமயத்தில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கடந்த வாரம் வெளிவந்த பிரியாணி இரண்டுமே ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் திரைப்படங்கள். தீபாவளிக்கு முன்பே இரண்டு படங்களுமே தயாறகிவிட்டன என்றும் திரைப்படங்களை போட்டு பார்த்துவிட்டு இரண்டில் அழகுராஜா நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்து தீபாவளிக்கு தலையின் ஆரம்பம் படத்தின் போட்டியாக வெளியிட்டனர் என்றும் கேள்விப்பட்டேன்.

அழகுராஜாவின் முடிவு அனைவரும் அறிந்ததே, இரண்டில் நன்றாக உள்ளது என்று தேர்வு செய்த படத்தின் நிலையே அப்படி என்றால் நிராகரிக்கப்பட்ட படம் எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது.அதற்கு தகுந்தது போலவே Sify வலைப்பூவின் விமர்சனமும் இருந்தது.

இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக வந்தது நண்பர் ராஜின் இந்த பதிவு. அது தான் பிரியாணி நன்றாக இருக்கிறது என்று முதலில் எனக்கு கூறியது.

இனி இரண்டு படங்களை பற்றிய எனது கருத்து.

என்றென்றும் புன்னகை :




கதை :


தனது தாய் சிறுவயதில் வேறு ஒருவருடன் சென்றதை அடுத்து பெண்கள் என்றாலே ஒரு வெறுப்புடன் வளரும் ஜீவா.அதனை மறக்க தந்தை நாசருடன் சென்னை வரும் ஜீவாவிற்கு பள்ளியில் வினய் மற்றும் சந்தானம் அறிமுகமாகிறார்கள்.

அதில் இருந்து மூவரும் ஒன்றாகவே வளருகிறார்கள்.தூங்குவது தண்ணி அடிப்பது சண்டை போடுவது எல்லாமே ஜீவாவின் வீட்டில் தான்.



இதற்கிடையில் ஒரு காரணத்திற்காக ஜீவா தனது தந்தையுடன் 15 வருடங்களாக பேசாமல் இருக்கிறார்.

மூவரின் ஒரே கொள்கை வாழ்வில் மூவருமே கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பது எனபது தான், சந்தானத்தின் வார்த்தையில் மூவரும் மொட்டை பசங்களாக இருக்க முடிவு செய்கிறார்கள்.

மூவரும் சேர்ந்து ஒரு விளமபர நிறுவனம் நடத்துகிறார்கள்.அப்பொழுது மற்றொரு நிறவனத்தின் மூலம் இவர்களுக்கு அறிமுகமாகிறார் திரிஷா.சும்மா சொல்ல கூடாது இப்படத்தில் அழகாகவே இருக்கிறார்.

அவர்களது விளம்பரத்தில் நடிக்க வரும் மாடல் ஆண்ட்ரியா ஜீவா மேல் மோகம் கொள்கிறார்.அவரை அடித்து அவமானப் படுத்துகிறார் ஜீவா.

இந்த இடத்தில் ஆன்டிரியா வினயை மயக்கி கல்யாணம் செய்து நண்பர்களை பிரிப்பார் என்று நினைத்த எனது நினைப்பில் டைரெக்டர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.

அடுத்து திடீரென நண்பர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டு ஜீவாவை தனிமை படுத்திவிடுகின்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் திரிசாவுடனான நட்பு வளருகிறது.அது காதலாக மலரும் நேரத்தில் தனது ஈகோ வினால் காதலை இழந்துவிடுகிறார்.



இறுதியில் தனது ஈகோ வை விட்டு தனது தந்தை நண்பர்கள் மற்றும் காதலியுடன் சேர்ந்தாரா எனபது இறுதிக்கதை.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது :


தேவையில்லாத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நீரோடை போல செல்கின்றது.

தேவையில்லாத சண்டைகள் இல்லாதது.

பாடல்கள் ஓகே ரகம் இடைவெளிக்கு பின்பு வந்த இரண்டு பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது.

கேமரா மிகவும் அருமை, எடுக்கப்பட்ட லொகேசன்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நன்றாக இருக்க படத்திற்கே ஒரு ரிச் பீலிங் வந்துவிடுகிறது.

படத்தில் நடித்தவர்கள் அனைவரின் நடிப்பு. முக்கிய மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.ஜீவா,வினய் மற்றும் சந்தானம் ஆகிய மூவரின் நட்புமே ரியலாக தெரிந்தது படத்தின் பெரிய பிளஸ்.

காமெடி நன்றாகவே இருந்தது.முதல் பாதி முழுவதுமே படத்தை தூக்கி நிறுத்துவது சந்தானத்தின் கவுன்டர்கள் தான்.

இனி பிடிக்காதது :


அதிகம் இல்லை இருந்தாலும் ஒரு சில மட்டும்.

ஒரு பீல் குட் பிலிம் ஆக  இருந்தாலும் சந்தானத்தின் காமெடியில் அதிக இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததை தவிர்த்து இருக்கலாம்.

படத்தின் இறுதிக்காட்சிகள் அழத்தம் இல்லாதது போல தோன்றியது.
அதுவும் ஜீவா நண்பரின் முன்னால் திரிஷாவை தெரியாது என்பதற்கு போதிய காரணம் இல்லை தாராளமாக எனது நிறுவனத்தில் வேலை பார்கிறார்கள் என்று கூறி இருக்கலாம்.அதுவும் முத்தம் கொடுக்கும் அளவிற்கு போன பின்பு.





அடுத்து தனது அப்பா புற்றுநோயால் இறக்க போகிறார் என்று தெரிந்து வெளியே வந்து நின்றுகொண்டு வினயிடம் பேசும் இடத்தில நடிப்பே வரவில்லை.

மற்றும் இறுதிக்காட்சியில் இப்படி ஒரு மொக்கையாக I Love You சொல்லி  நான் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை ,அதிலும் கொடுமை அந்த மொக்கை லவ் யூ வை கேட்டு திரிஷா மயங்குவது.

இறுதியாக நம்ம அபினவ் வை வழக்கம் போல தியாக செம்மலாக பயன்படுத்தியது.அதுதான்பா ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது தெரிந்தும் அவரை காதலிப்பது ஹீரோ ஹீரோயினிர்க்கு இடையில் சண்டை வரும்பொழுது வந்து அவளை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்வது இறுதியில் மீண்டும் அவர்கள் சேரும் பொழுது விட்டுக்கொடுத்துவிடுவது.

இதனை தவிர்த்திருக்கலாம்.மொத்தத்தில் படம் கண்டிப்பாக பார்க்கலாம் நன்றாக இருக்கிறது.

பிரியாணி :




கதை :


நாம் பல திரைப்படங்களில் பார்த்த கரு தான்.இரவில் மப்பாகி காலையில் எழும் பொழுது இரவில் நடந்தது எதுவும் தெரியாமல் ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்வது.பின் அதில் இருந்து தப்பிப்பது. படத்தில் ஒரு காட்சியில் பிரேம்ஜி ஹாங்கோவர் படத்தை கிண்டல் செய்வார். இப்படத்தின் கருவும் அத்திரைப்படங்களில் இருந்து எடுத்ததே.

கார்த்திக்கும் பிரேம்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பிரேம்ஜி ஆசைபடும் பெண்கள் அனைவரையும் தனக்கு கணக்கு செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் மிக நண்பர்கள்.

கார்த்தியின் காதலி ஹன்ஷிகா திரைப்படங்களின் வழக்கமான காதலி, ஹீரோ செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்து அவரையே காதல் செய்யும் காதலி.

இனி வரும் காலங்களிலாவது ஹீரோயின் ப்ளே கேர்ள் ஆகவும் அவளை மட்டுமே காதலிக்கும் ஹீரோவும் இருக்குமாறு ஒரு படம் வேண்டும்.அப்பொழுதுதான் நம்ம நாடு வல்லரசு ஆகும்.



நண்பர்கள் இருவரும் மகிந்திரா ட்ராக்டர்கள் ஷோரூமில் வேலை செய்கிறார்கள்.அதன் மேனேஜர் சுப்புவிற்கு தனது அக்காவை கல்யாணம் செய்து கொடுக்க கார்த்தி முடிவு செய்கிறார்.அக்கா கதாபாத்திரத்தில் நம்ம மதுமிதா (அதற்குள்ளாகவே அக்கா கதாபத்திரத்தில் நடிக்க வந்துவிட்டார் பாவம்).

அவர்களின் புது ஷோரூம் ஆம்பூரில் திறக்க முடிவுசெய்கிறார்கள். அதனை திறந்து வைக்க பிரபல தொழிலதிபர் நாசரை கூப்பிடுகிறார்கள். அவரது மருமகன் நம்ம ராம்கி. அவர்களது குடும்ப நண்பர் ஜெயப்ரகாஷ் Asst கமிஷ்னர்.

ராம்கிக்கு தனது மாமா நாசரின் இடத்திற்கு வர ஆசை. நமக்கும் பார்த்தவுடன் இவர் தான் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இதன் திறப்புவிழாவிற்கு வரும்பொழுது நண்பர்கள் இருவரும் தப்பி செல்லும் காதல் ஜோடியை தடுத்து பெண்ணை காப்பாற்றுகிறார்கள்.

திறப்புவிழாவில் கார்த்தியின் பேச்சு நாசருக்கு பிடித்துவிடுகிறது. அவருக்கு தனது இரண்டாவது பெண்ணை கொடுக்கும் அளவிற்கு நாசர் முடிவுசெய்கிறார். இது ராம்கிக்கு பிடிக்கவில்லை.

திறப்புவிழா முடிந்து நண்பர்கள் இருவரும் சென்னை திரும்பும்வழியில் பிரியாணி சாப்பிட ஒருகடையில் நிறுத்துகிறார்கள்.அங்கு வரும் Mandy Takharஐ பார்கிறார்கள்.




அவள் இவர்களை தனது ஹோட்டலிற்கு கூப்பிட்டு வந்து தண்ணி கொடுத்து ஒரு ஆட்டம் போட்டு காண்பிக்கிறார். அப்பொழுது அங்கு நாசர் வருகிறார். அத்துடன் நண்பர்கள் மப்பில் மயக்கம் அடைகிறார்கள்.



காலையில் எழுந்ததும் தான் நாசர் காணாமல் போக இவர்களை போலீஸ் தேடுவது தெரிகிறது. இதற்கிடையில் நாசரை ஒரு குற்றவிசாரணைக்கு கைது செய்ய வரும் சிபிஐ அதிகாரியாக சம்பத்.

இப்படியாக ஜெயப்ரகாஷ் போலீஸ் கூட்டம் ஒருப்பக்கமும் சம்பத் மூலம் அவரது நண்பர் பிரேம் போலீஸ் கூட்டம் ஒரு பக்கமும் அவர்களை துரத்துகிறது.

கடைசியில் எப்படி தப்பித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் எனபது மீதிக்கதை.

எனக்கு பிடித்தது :


ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தின் வெற்றி அதன் இறுதிக்காட்சி திருப்புமுனையில் தான் இருக்கிறது, அந்த வகையில் இப்படம் வெகுவாக ஸ்கோர் செய்கிறது. அவ்வகையான காட்சி வைப்பதில் வெங்கட் திறமைசாலிதான்.

ஒரு ப்ளே பாய் கதையாக இருந்தாலும்  Mandy Takhar வரும் காட்சி தவிர வேறு காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.

கண்டிப்பாக வெங்கட்டின் திரைக்கதை. எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் கொண்டு செல்கிறார்.

நகைச்சுவை காட்சிகள் பரவாயில்லை, ஓரளவு சிரிப்பை வரவழைக்கின்றன.

உமா ரியாஸின் சிறு கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறது. அவருக்கு பல சண்டை காட்சிகள், பாவம் நம்ம சாம் ஆண்டெர்சனுக்கு தான் சண்டை காட்சி இல்லை.

வெங்கட்டின் மற்றொரு பிளஸ் அவரது சென்னை 28 டீமை நன்றாக பயன்படுத்துவது. இதிலும் தலை பெயரை சரியான இடத்தில் அவர்களை வைத்து பயன்படுத்தி இருப்பார்.

இறுதியில் பெயர்போடும் சமயத்திலும் நம்மை உட்கார வைக்கும் வெங்கட்டின் கட் சாட்டுகள் அருமை.

பிடிக்காதது :


யுவனின் இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.அதுவும் 100வது படம்.Better Luck Next  Time யுவன்.

இறுதிக்காட்சியில் வரும் நீண்ட சண்டை காட்சிகள், கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

அதிகமான லாஜிக் மீறல்கள்,24 மணிநேரமும் ரெகார்ட் செய்யும் CCTV யில் பிரேம் delete செய்த பதிவுகளை தேடாதது.பல நாள் பிரேதமாக இருந்த நாசரை இறுதியில் தான் இறந்ததாக போலீஸ் நம்புவது.

கார்த்தி கொஞ்சம் டான்ஸ் ஆட கற்றுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த கார்த்திக்கு கிடைத்த சிறு வெற்றி.

கார்த்தி எல்லா படங்களிலும் ஒரே மாதிரி வருவது சற்றே போர் அடிக்கிறது.கொஞ்சம் எதாவது வித்தியாசமாக முயர்சி செய்யலாம்.

இரண்டு படங்களுமே வெவ்வேறு வகையை சேர்ந்தது, இரண்டுமே நன்றாக இருக்கிறது. நண்பர்கள் தையிரியமாக சென்று பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Monday, March 11, 2013

JACK THE GIANT SLAYER - Movie Review




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பலகாலங்களாக பழைய தேவதைகதைகளை திரைப்படம் ஆக்குவதில் முனைப்பாக இருக்கிறது ஹாலிவுட். அதில் பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன.

சமீபகாலமாக மீண்டும் பழைய தேவதைகதைகளை தொழில் நுட்ப உதவியுடன் சிறிது கதையிலும் கவனம் செலுத்தி எடுத்து வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டுதான் சமீபத்தில் வந்த Hansel & Grantel மற்றும் கடந்த வாரம் வெளியாகி உள்ள Jack The Giant Slayer திரைப்படங்கள்.

இரண்டு படங்களுமே தொழில் நுட்பத்தின் அபரீத வளர்ச்சியால் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கதையிலும் சற்று கவனம் செலுத்தி உள்ளார்கள்.

 நான் பார்த்த Jack The Giant Slayer படத்தை பற்றிய எனது கருத்து மற்றும் கதையே இந்த பதிவு.

கதை :



நமக்கு (எனக்கு) ஓரளவே தெரிந்த கதை.

ஜாக் என்ற விவசாய சிறுவனுக்கு அவன் தந்தையும் மற்றும் இசபெல் என்ற இளவரசிக்கு அவள் தாயும் அக்கதையை கூறுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் அந்த நாட்டை எரிக் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது சில சாமியார்கள் ஒரு சில பீன் விதைகளை கண்டுபிடித்தார்கள். அது ஒரு விஷேசமானது. அதனை விதைத்தால் பெரிய கொடி வளரும்.

அதன் மூலம் சாமியார்கள் உயிருடன் சொர்கத்தை அடைய நினைத்தார்கள். ஆகையால் அந்த விதைகளில் ஒன்றை பூமியில் விதைத்து அதன் மூலம் வளர்ந்த கொடியில் ஏறி சுவர்க்கம் நோக்கி சென்றார்கள்.

வழியில் ஒரு இடத்தில் ஒரு நிலப்பரப்பை காண்கிறார்கள். அதுதான் சுவர்க்கம் என தப்பாக நினைக்கும் அவர்கள் அங்கு இறங்குகிறார்கள்.
ஆனால் அங்கு வாழும் ராட்சதர்களிடம் மாட்டி உயிர் விடுகிறார்கள். அவர்கள் வந்த கொடியை கண்டுபிடிக்கும் ராட்சதர்கள் அதன் மூலம் பூமிக்கு வந்து அட்டூழியம் புரிகிறார்கள்.

அவர்களை மன்னர் எரிக் ஒரு கிரீடம் செய்து கட்டுப்படுத்துகிறார்.
அதன் மூலம் அவர்களை அவர்களது இடத்திற்கு அனுப்பிவிட்டு அந்த கொடியை வெட்டி விடுகிறார். அதன் மூலம் நாட்டில் அமைதி திரும்புகிறது.

மேலே போன ராட்சதர்கள் தகுந்த நேரத்திற்காக காத்திருகின்றனர். மன்னர் எரிக் இறந்த பின் அந்த பீன்களும் கிரீடமும் அவருடன் சேர்த்து புதைக்க படுகிறது. இப்படியாக கதை முடிகிறது. இதனை பலர் கற்பனை என்றும் சிலர் உண்மை என்றும் நினைக்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு பிறகு இருவரும் வளர்ந்துவிடுகிறார்கள்.



ஜாக்



இசபெல்

வழக்கம் போல அந்த நாட்டு மன்னர் தனது மகளை வில்லனுக்கு கட்டி கொடுத்து அந்த நாட்டு மன்னர் ஆக்க நினைக்கிறார்.



வில்லன் மற்றும் அவன் கூட்டாளி

ஆனால் வில்லனோ இறந்த மன்னர் எரிக்கின் சமாதியில் இருந்து அந்த பீன்களையும் கிரீடத்தையும் ஒரு திட்டத்தோடு திருடி வைத்திருகிறான்.

இதனை அறிந்த சாமியார்கள் ஒரு சாமியார் மூலம் அதனை திருடி வர அனுப்புகின்றனர். அவர் அந்த பீன்களை மட்டும் திருடுகிறார். அனால் தப்பி செல்வதற்கு முன் மாட்டிக்கொண்டு விடுகிறார்.

எதிர்பாரதவிதமாக அந்த பீன்கள் நம்ம ஹீரோவிடம் வந்து சேர. அதனை கொண்டு வீட்டிற்கு வருகிறான். அங்கு அவன் வைத்திருக்கும் பீன்களில் ஒன்று தவறி கீழே விழுகிறது. கல்யாணம் பிடிக்காமல் தப்பி செல்லும் இளவரசி நேரே நம்ம ஹீரோ வீட்டிற்கு வருகிறாள்

மழை பெய்கிறது. அதன் மூலம் கீழே விழுந்த பீனில் இருந்து பெரிய கொடி வளர்கிறது. அது அந்த வீட்டை அப்படியே தூக்கிக்கொண்டு வானை நோக்கி வளர்கிறது.



வீட்டை அப்படியே தூக்கி செல்லும் காட்சி.
மேலே செல்லும் இளவரசி அங்கு வாழும் ராட்சர்களிடம் மாட்டிக்கொள்கிறாள்.  அவளை காப்பாற்ற நமது ஹீரோவும் சில வீரர்கள் குழுவும் செல்கிறது. கூடவே வில்லனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து கொள்கிறார்கள்.

தளபதி மற்றும் அவர் உதவியாளர்.

வழியிலேயே வில்லன் வீரர்களில் பெரும்பாலோனோரை கொன்று விடுகிறான். மேலே செல்லும் மீதம்  இருந்த ஜாக், தளபதி மற்றும் அவர் உதவியாளர் மற்றும் வில்லன் அவனது கூட்டாளி
பிரிந்து சென்று தேடுகிறார்கள்.

அதில் தளபதி ராட்சர்களிடம் சிக்கி கொள்கிறார்.


தளபதியின் உதவியாளர் ஒரு ராட்சதனிடம் மாட்டி உயிர்விடுகிறார்.




தளபதி மாட்டிகொள்கிறார்.



சமைப்பதர்க்கு தயாராக..


சமையல்காரன்.

வில்லன் தனது கிரீடத்தின் உதவியுடன் அந்த கூட்டத்தின் தலைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் மூலம் பூமி நோக்கி படையெடுக்க முயற்சி செய்கிறான். அவனை எப்படி ஹீரோவும் தளபதியும் சேர்ந்து அந்த கிரீடத்தின் துணை கொண்டு அவர்களை மீண்டும் அடக்குகிறார் என்பதே கதை.


ராட்சதர்களின் இரட்டை தலை தலைவன்



கிரீடத்தின் துணை கொண்டு மன்னனான வில்லன்

பூமியை நோக்கி படை எடுக்க தயாராக இருக்கும் கூட்டம்.




இறுதி சண்ண்டைக்கு தயாராக.



ராட்சதர்களின் தலைவன் வீழ்த்தப்படுகிறான்.

மிகவும் சாதாரணமான கதை தான் ஆனால் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு ஈர்க்கும் விதத்தில் எடுத்துள்ளனர்.

படத்தின் பெரும் பலமே இறுதிக்காட்சி சண்டை தான். இளவரசியை காப்பாற்றி கீழே கொண்டு வந்ததும் அடடே இப்படி கதை சப்பென்று முடிந்து விட்டதே என நினைத்தேன் ஆனால்  ராட்சர்கள் மீண்டும் கீழே வந்து ஒரு பெரும் யுத்தம் நடக்கும் அது நன்றாக இருக்கும்.

படத்தில் எனக்கு சற்று பிடிக்காதது படத்தின் ஹீரோதான் முன்வழுக்கை தலையுடன் சற்று வயதானவராக தெரிகிறார் மற்றும் ஒரு ஹீரோவிறகான தேஜஸ் அவரிடம் இல்லை. அதற்கு படை தளபதியாக வருவபர் நன்றாக உள்ளார்.

மொத்தத்தில் படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.