வணக்கம் நண்பர்களே,
இந்த பதிவில் நாம் பார்க்க போவது 1986 இல் வந்த மலர்மணி காமிக்ஸின் காலகண்டன் கொலைவழக்கு பற்றியதே.
இதனை வெளியிட்டோர் மதுரையில் இருந்த கலைபொன்னி பதிப்பகத்தார்.ஆசிரியர் கே.பாண்டிமணி.
இதற்கு கதை மற்றும் சித்திரங்கள் ஸ்ரீகாந்த்.
கலை பொன்னி பதிப்பகத்தார் பல பெயர்களில் காமிக்ஸ் வெளியிட்டனர்.அவை மலர் காமிக்ஸ்,கலைபொன்னி காமிக்ஸ்,பொன்னி காமிக்ஸ்,மலர் மணி காமிக்ஸ் இப்படி பல.
அதனை பற்றிய தொகுப்பை பற்றி பார்க்க எனது முந்தய பதிவை பார்காதவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.
அவர்கள் மாயாஜால கதை கூட வெளியிட்டுள்ளார்கள் அதனை பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
மற்றும் இவர்கள் பற்றி நண்பர் சிவ் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளதை அறிந்தேன் அதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
லயன் குழுமத்தினரின் படைப்புகள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும் இவர்களது சில படைப்புகளும் நன்றாக இருக்கும்.குறிப்பாக ஸ்ரீகாந்த் அவர்கள் சித்திரங்கள் வரைந்த கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் குறிப்பாக இந்த கதை.
நண்பர்களே இந்த கதையை படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் அதனை பொறுத்து மேலும் அவர்களது படைப்புகளில் எனக்கு பிடித்தவைகளை நான் பதிவு செய்யலாமா வேண்டாமா என நான் முடிவு செய்துகொள்வேன்.
ஆகையால் கண்டிப்பாக நண்பர்கள் அனைவரும் தங்களது கருத்தை கூறுங்கள்.
கதை ;
நமது ஹீரோ கோபி என்கிற கோபாலகிருஷ்ணன்.
அவர் முதலில் பத்திரிகை நிருபராக இருந்து பின்னர் துப்பறிவாளராக மாறியவர்.ஒரு நாள் அவர் பொழுது போகாமல் பழைய பத்திரிகை தொகுப்புகளை படித்துக்கொண்டு இருந்தார்.அதில் 5 வருடங்களுக்கு முன்பு நடந்த பிரபல கோடீஸ்வரர் காலகண்டன் கொலைவழக்கை பற்றி படித்தார்.
அதில் காலகண்டன் அவரது டிரைவர் கோவிந்தனால் கத்தியால் குத்தப்பட்டார் என்றும் குத்தப்பட்ட கத்தியில் கோவிந்தனின் கைரேகை இருந்ததையும் இன்னும் கொலையாளி கிடைக்கவில்லை என்றும் படித்தார்.மற்றும் அவரது தம்பி மேகநாதன் விரைவில் வழக்கை முடிக்க செய்துள்ளார் என்றும் அறிந்தார்.காலகண்டன் தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க கூறியுள்ளார்.ஆகையால் அவரது உடல் இப்பொழுது மருத்துவ கல்லூரியில் உள்ளதை அறிந்து கொண்டார்.
அவருக்கு அந்த வழக்கின் மீது ஆர்வம் வந்து அந்த கொலையாளியை பிடிக்க முடிவு செய்தார்.பின்னர் அதுபற்றி டி ஐ ஜி ராஜேந்தரிடம் கூறுகிறார்.அவரும் அந்த வழக்கை பற்றிய விவரங்கள் கொடுத்து அவரை அந்த வழக்கை பற்றி ஆராய சொல்கிறார்.அவரிடம் இந்த வழக்கு பணக்காரர்கள் சம்பத்தப்பட்டது என எச்சரிக்கை செய்கிறார்.
முதலில் கோபி டிரைவர் கோவிந்தன் வீட்டிற்க்கு சென்று அவரது மனைவி பார்வதியை சந்திக்கிறார்.அவர் மிகவும் வறுமையில் இருப்பதை காண்கிறார்.அவர் தனது கணவர் மது அருந்தினாலும் சிறு எறும்புக்கு கூட தீங்கு செய்ய மாட்டார் என்றும் அவர் இந்த கொலை செய்திருக்க மாட்டார் என்றும் கூறுகிறார்.பின் அங்கு இருந்து கிளம்பும் போது அந்த டிரைவர் வளர்த்த நாய் ஜானை வாசலில் பார்த்தார்.

அன்று மாலை மேகநாதன் வளர்ந்த ஊட்டிக்கு அவர் பற்றி விவரம் சேகரிக்க சென்றார்.அங்கு அவரது நண்பர் கபூரை உதவிக்கு அழைத்தார்.இருவரும் மேகநாதனை பற்றி அனைத்து விவரங்களும் சேகரித்தனர்.அதில் இருந்து மேகநாதன் ஒரு சாதுவானவர் எந்த வம்பிற்கும் போகமாட்டார்.அவரது மனைவி சங்கரி ஒரு அடங்காபிடாரி மற்றும் அவள் தான் இங்கு இருக்கும் எஸ்டேடை நிர்வாகம் செய்துவருகிறாள் என்று அறிந்து கொள்கின்றனர்.
இவர்கள் மேகநாதன் பற்றி விசாரிப்பதையும் அவர்கள் அவளை சந்திக்க வந்துகொண்டு இருப்பதையும் சங்கரியிடம் கூறுகிறான் அவளது அடியாள் கொந்தளிக்கும் சங்கரி அவர்கள் இருவரையும் வழியிலேயே தீர்த்துக்கட்ட சொல்கிறாள்.அடி ஆட்களும் காரில் வந்து கொண்டு இருந்த இருவரையும் ஆயுதங்களுடன் சென்று மடக்குகின்றனர்.ஆனால் கோபியும் கபூரும் அவர்கள் அனைவரையும் அடித்து விரட்டிவிட்டு சங்கரியை சென்று சந்திகின்றனர்.
அவர்களிடம் அவள் அது முடிந்தகதை நீங்கள் போகலாம் என விரட்டிவிடுகிறாள்.கிளம்பும் போது கபூர் ஏன் சங்கரி பொட்டு வைத்துகொள்ளவில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகிறார்.அதற்கு கோபி அது ஏதாவது பேஷனாக இருக்கும் என்று கூறுகிறார்.
அடுத்து கோபி கபூரிடம் விடை பெற்றுக்கொண்டு ஊர் திரும்புகிறார்.கபூரும் தான் மேலும் ஏதாவது விவரம் அறிந்தால் தெரியபடுவதாக கூறுகிறார்.ஊர் திரும்பிய கோபி ராஜேந்தரை சந்தித்து நடந்ததை கூறினார்.அந்த வழக்கை மறுவிசாரணைக்கு கொண்டுவரவேண்டும் என கோபி கூறுகிறார்.அதற்கு ராஜேந்தர் அரசு வழக்கறிஞர் சிவகுமாரை சந்திக்க சொல்கிறார்.கோபி சென்று அவரை சந்தித்து விவரங்களை கூறுகிறார்.சிவகுமாரும் சம்பதமானவர்களுக்கு சம்மன் அனுப்புவதாக கூறுகிறார்..
அன்று இரவு கோபி யாருக்கும் தெரியாமல் மேகநாதன் வீட்டிற்க்கு சென்று ஒரு கதவின் பின்னால் மைக்ரோ போன் ஒன்றை பொருத்துகிறார்.பின் அவர் வெளியேவரும்போது டிரைவர் கோவிந்தனின் நாய் ஜானி அந்த வீட்டிற்க்குள் ஓடுவதை பார்த்தார்.அதனை பின்தொடர்ந்த கோபி அந்த நாய் அந்த வீட்டின் பின்புறம் சென்று ஒரு இடத்தை தோண்ட முயற்சி செய்ததையும் பின் முடியாமல் அங்கே படுத்துவிட்டதையும் காண்கிறார்.பின் அடுத்தநாள் இரவில் நம்பிகையான இருவருடன் அந்த வீட்டிக்கு வந்து அந்த இடத்தை தோண்டினார்.அங்கு ஒரு எலும்புக்கூடு கிடைத்தது.
அதனை ஆராய்ச்சிகூடத்திர்க்கு அனுப்பினார்.அதனை ஆராய்ந்த நிபுணர் ஜேம்ஸ் அது டிரைவர் கோவிந்தனின் உருவ அமைப்போடு ஒத்துப்போவதாக கூறினார்.
அடுத்தநாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு வழக்கறிஞர் சிவகுமார் காலகண்டன் மற்றும் டிரைவர் கோவிந்தனை கொலை செய்ததாக மேகநாதன் மேல் குற்றம் சுமத்தினார்.அதனை அவர் மறுத்தார்.எதிர் தரப்பு வக்கீல் ராஜசேகரன் ஆதாரம் கேட்டார்.அதற்கு சிவகுமார் ஒரு டேப் ரெகார்டரை போடுவதற்கு அனுமதி கேட்டார்.நீதிபதி அனுமதி வழங்கியதும் டேப் ஓடத்துவங்கியது அது கோபி மேகநாதன் வீட்டில் கோபி பொருத்திய மைக்கில் இருந்து பதிவு செய்யப்பட்டது.அதில் மேகநாதன் ஒரு அடி ஆளிடம் பேசுவது பதிவு செய்யபட்டிருந்தது.
மேகநாதன் : ஏண்டா அந்த பயலை தீர்த்துக்கட்ட சொன்னால் அவன் உயிரோடு தான் இருக்கிறான் நேற்று சங்கரியை வேறு சென்று மிரட்டிஉள்ளான் போதாகுறைக்கு கோர்ட் சம்மன் வேறு வந்துள்ளது
அடியாள் : கவலை படாதீர்கள் எஜமான் அவனை தீர்த்துவிடுகிறேன்.
என்று பதிவாகிருந்தது.அதனை கேட்ட மேகநாதன் முகத்தில் கோவம் தெரிந்தது.பின்னர் ராஜசேகரன் காதில் ஏதோ கூறினார்.பின்னர் கோர்ட் மதிய உணவுவேளைக்காக கலைந்தது.மீண்டும் கூடியபோது ராஜசேகரன் அந்த டேப்பில் பதிவாகிருந்தது பல வருடங்களுக்கு முன்னால் மேகநாதன் செய்த நாடக ஒத்திகை என்றும் காலகண்டன் மற்றும் மேகநாதன் இருவரும் நாடக நடிகர்கள் என்றும் கூறினார்.இதனால் வழக்கு ஒத்திவைக்கபட்டது.
அன்று இரவு கபூர் மிக முக்கிய தகவலுடன் கோபியை சந்தித்தார்.அது மேகநாதன் ஒரு நடிகர் மட்டும் அல்ல ஒரு கார் பந்தய ஓட்டுனரும் கூட.ஒரு முறை ஒரு கார் விபத்தில் அவரது இடுப்பு எலும்பு சேதம் ஆனதால் தகிடு வைத்துள்ளதாகவும் ஒரு 10 நிமிடத்திற்கு மேல் அவரால் ஒரு இடத்தில நிற்க முடியாது என்று கூறினார்.அதனை கேட்ட கோபி அதிர்ச்சி அடைந்தார் கோர்டில் மேகநாதன் பலமணிநேரம் ஒரே இடத்தில எப்படி நின்றார் என யோசித்தார்.உடனே நண்பர்கள் இருவரும் மருத்துவ கல்லூரியில் இருக்கும் காலகண்டனின் எலும்புக்கூடை பார்க்க சென்றனர்.
இதற்கிடையில் மேகநாதனை சந்தித்த சந்தித்த சங்கரி மருத்துவ கல்லூரியில் இருக்கும் காலகண்டனின் எலும்புகூடை கொண்டுவர சொல்லி மேகநாதனிடம் கூறுகிறாள்.மேகநாதனும் ஆட்களை அனுப்புகிறார்.
கோபியும் கபூரும் கல்லூரியை அடைந்து உள்ளே சென்று எலும்புக்கூடை ஆராய்கின்றனர்.அதன் இடுப்பில் ஒரு தகிடு இருப்பதாய் கண்டுபிடிக்கின்றனர்.கபூர் தன்னிடம் இருந்த கேமராவில் பல கோணங்களில் அதனை படம் பிடிக்கிறார்.பின்னர் வெளியில் வரும்போது மேகநாதனின் ஆட்களிடம் மோதி அவர்களை அடித்து போலீசிடம் ஒப்படைத்துவிட்டு செல்கின்றனர்.
அடுத்தநாள் கோர்டில் சிவகுமார் மேகநாதனையும் டிரைவர் கோவிந்தனையும் கொலை செய்தது இங்கு இருக்கும் காலகண்டன் அவர்கள் தான் என குற்றம் சுமத்துகிறார்.கோர்டில் இருந்த அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி ஆகின்றனர்.பின்னர் சிவகுமார் கபூர் எடுத்த வந்த புகைப்படங்களை காண்பித்து விளக்குகிறார்.மற்றும் காலகண்டன் பெயருக்கு தான் கோடீஸ்வராக இருந்தாலும் அவர்க்கு பல கடன்கள் இருந்ததாகவும் அதனில் இருந்து வெளிவர இந்த நாடகம் என்றும் கூறினார்.மற்றும் இதற்கு மேகநாதனின் மனைவி சங்கரியும் உடந்தை என்றும் கூறுகிறார்.அனைத்தையும் கேட்ட நீதிபதி காலகண்டன் மற்றும் சங்கரிக்கு தண்டனை வழங்கினார்.அதனை கேட்ட நண்பர்கள் இருவரும் யாரும் அறியாமல் அங்கிருந்து வெளியேறினர்.ஆனால் அதனை கண்ட டி ஐ ஜி ராஜேந்தர் வெளியில் வந்து இருவரையும் பாராட்டினார்.
அடுத்தநாள் கோர்டில் சிவகுமார் மேகநாதனையும் டிரைவர் கோவிந்தனையும் கொலை செய்தது இங்கு இருக்கும் காலகண்டன் அவர்கள் தான் என குற்றம் சுமத்துகிறார்.கோர்டில் இருந்த அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி ஆகின்றனர்.பின்னர் சிவகுமார் கபூர் எடுத்த வந்த புகைப்படங்களை காண்பித்து விளக்குகிறார்.மற்றும் காலகண்டன் பெயருக்கு தான் கோடீஸ்வராக இருந்தாலும் அவர்க்கு பல கடன்கள் இருந்ததாகவும் அதனில் இருந்து வெளிவர இந்த நாடகம் என்றும் கூறினார்.மற்றும் இதற்கு மேகநாதனின் மனைவி சங்கரியும் உடந்தை என்றும் கூறுகிறார்.அனைத்தையும் கேட்ட நீதிபதி காலகண்டன் மற்றும் சங்கரிக்கு தண்டனை வழங்கினார்.அதனை கேட்ட நண்பர்கள் இருவரும் யாரும் அறியாமல் அங்கிருந்து வெளியேறினர்.ஆனால் அதனை கண்ட டி ஐ ஜி ராஜேந்தர் வெளியில் வந்து இருவரையும் பாராட்டினார்.
அத்துடன் கதை முடிந்தது.
இக்கதையை நண்பர்கள் படித்திருந்தாலும் அதனை பற்றியும் கூறுங்கள்
அவ்வளவுதான் நண்பர்களே.முன்பே கூறியது போல உங்கள் கருத்தை கூறுங்கள்.மற்றும் பதிவின் நீளம் குறித்தும் கூறுங்கள்.
மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.