வணக்கம் நண்பர்களே,
சமீபத்தில் நான் Flipkart பார்த்துக்கொண்டு இருந்த போது அதில் வெளியாகி உள்ள Sherlock தொலைக்காட்சி தொடரின் DVD பற்றி பார்த்தேன்.அத்தொடர் பற்றி நான் ஏற்கனவே எங்கோ கேள்வி பட்டு இருந்தேன். நன்றாக இருக்கும் என படித்ததாக நினைவு.
மீண்டும் அதனை பற்றி wiki இல் பார்த்தேன்.
அத்தொடர் இதுவரை இரண்டு season BBC Entertainment இல் ஒளிபரப்பாகியது தெரிந்தது.ஒவ்வொரு season இற்கும் மூன்று அத்தியாயங்கள் வந்துள்ளன.
மற்றும் அத்தொடரின் முதல் அத்தியாயம் பல அவர்டுகளும் வாங்கியுள்ளது.
எனக்கு அதன் மேல் ஆர்வம் வந்தது.பின் torrentil அவை அனைத்தையும் டவுன்லோட் செய்தேன்.அதில் முதல் அத்தியாயம் மட்டும் பார்த்தேன்.அதனை பற்றியதுதான் இந்த பதிவு.
ஷெர்லோக் ஹோல்மேஸ் ஆக Benedict Cumberbatch மற்றும் வாட்சனாக Martin Freeman உம நடித்துள்ளனர்.நல்ல தேர்வு.இருவரும் பாத்திரத்திற்கு நன்கு பொருந்துகின்றனர்.
இனி கதை,
வாட்சன் முன்னால் இராணுவ டாக்டர்.காயத்தினால் ஓய்வு பெற்று உள்ளார்.பணபற்றாகுறைஇனால் யாருடனாவது சேர்ந்து வசிக்க முயற்சி செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் 3 சம்பவங்களை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொன்றிலும் ஒரு நபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதை பார்க்கிறோம்.
போலீஸ் ஆபிசர் lestrange பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.சம்பவங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருக்கும் என்றும் அதனை போலிஸ் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருபதாக கூறுகிறார்.
அடுத்து வாட்சன் ஒரு பூங்காவில் நடந்து செல்கிறார்.அப்பொழுது அவரது பழைய நண்பரே காண்கிறார்.அவர் மூலம் மற்றொருவரும் வீட்டை பகிர்ந்துகொள்ள ஆள் தேடுகிறார் என அறிந்து அவரை காண நண்பருடன் செல்கிறார்.
அவர் தான் நமது கதாநாயகன் ஷெர்லோக்.
ஒரு லாபில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்.அங்கு வாட்சன் தனது நண்பருடன் நுழைந்ததை பார்த்தவுடன்,
அவர் வீட்டை பகிர்ந்துகொள்ள வந்ததில் இருந்து அவர் இராணுவத்தில் இருந்தது அவரது சகொதடுடன் போக மறுத்தது அவர் சகோதரர் அவரது மனைவியை பிரிந்து வாழ்வது அவர் ஒரு குடிகாரர் என அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்.பின் அவர் எப்படி கண்டுபிடித்தார் என விலகுகிறார்.இது நாம் ஷெர்லோக் ஹோல்மேஸ் திரைபடத்தில் பார்த்தது போல இருக்கும்.
பின் இருவரும் 221B baaker வீதியில் இருக்கும் வீடிற்கு வருகிறார்கள்.அங்கு MRS .ஹட்சன் அறிமுகம்.
அங்கு அவரை காண இன்ஸ்பெக்டர் lestrange வருகிறார்.அவர் வந்ததை கண்டு நான்காவதாக ஒரு தற்கொலை நடந்து இருப்பதை அறிகிறார்.
அந்த இடத்திற்கு சென்று பிணத்தை ஆராய்கிறார்.அதன் மூலம் அவர் கொண்டு வந்த பெட்டி காணாத்தை கண்டுபிடிக்கிறார்.தரையில் நகம் கொண்டு இறந்த பெண் RACHE என எழுதி உள்ளதை பார்க்கிறார்.சில ஆராய்ச்சிக்கு பிறகு அது அவரது பிறக்காத பெண் RACHEL என அறிகிறார். சில தடயங்களின் மூலம் இதுவரை நடந்தது அனைத்தும் ஒரு தொடர் கொலை என கூறுகிறார்.
பின் அவரது தொலை பேசி தொலைந்து போயுள்ளதை கண்டுபிடிக்கிறார்.அதன் மூலம் கொலையாளியின் இருப்பிடத்தை அறிய முயல்கிறார்.ஆச்சர்யம் அவன் அவரது வீட்டில் உள்ளதாக காண்பிக்கிறது.ஒரு டாக்சி டிரைவர்
அவர் வீட்டிற்குள் அந்த கைபெசியுடன் வருவதை காண்கிறோம்.
பின் இறுதில் ஒரு வார்த்தைஜால கிளைமாக்ஸ்.என்னால் அணைத்து வசனங்களையும் கூற முடியவில்லை அந்நாள் நண்பர்கள் பார்த்தால் நன்றாக இருக்கும்.
இனி கருத்து,
படம் நன்றாகவே உள்ளது.அதுவும் வசனங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
ஆனால் ஹீரோ மிக வேகமாக பேசுகிறார்.subtitle இருந்தும் தொடர்வது கஷ்டமாகவே உள்ளது.அது ஒரு குறை தான்.
இறுதில் அவரது பரம எதிரியான ஜான் மோரியாரிட்டி பற்றி வருகிறது.
இக்கதை ஒரு ஆரம்பம் தான்.எப்படி ஷெர்லோக் கும் வாட்சனும் எப்படி நல்ல பார்ட்னர் களாக மாறுகிறார்கள் என்பதை அழகாக கூறி உள்ளார்கள். கண்டிப்பாக அனைத்து ஷெர்லோக் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.
பார்த்துவிட்டோ அல்லது பார்திருந்தாலோ உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
இத்தொடரின் மூன்றாவது பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது.
இதனை பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட லிங்க் பாருங்கள்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.