வணக்கம் நண்பர்களே,
நான் கூறியது போல இந்த பதிவு என்னிடம் இருக்கும் சிக் பில் காமிக்ஸ் Collections பற்றியதே.
என்னிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டை படங்கள் உங்களுக்காக.
இதில் என்னிடம் இருக்கும் அட்டை இல்லாத இரு புத்தகங்களின் பெயர் தெரியவில்லை.
அதில் வைகிங் பற்றிய ஒரு புத்தகம் மற்றும் ஒரு ரோபோ கிட் ஜூனியர் பற்றி ஒரு புத்தகம்.அதன் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.
அவை இரண்டும் எனக்கு மகவும் பிடித்தது.
மற்றொரு புத்தகம் விசித்திர ஹீரோ அதில் கிட்டிற்கு மண்டையில் அடி பட்டு அவர் ஒரு சூப்பர் ஹீரோ ஆகும் கதை.ரொம்ப சூப்பரா இருக்கும்.
விண்ணில் ஒரு எலி அதுவும் அருமையான கதை.
அனைத்துமே காமெடி நிறைந்தவை.
உங்களுக்கு பிடித்த கதைகள் பற்றி நீங்களும் கூறுங்கள் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ