வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் எனக்கு பிடித்த மற்றொரு காமிக்ஸ் ஹீரோ பற்றி கூறி உள்ளேன்
அவர் தான் ராணி காமிக்ஸில் வந்த முகமூடி வீரர் பில்லி.
அவர் கதாபாத்திரம் எனக்கு சற்றே சோரோவை(Zorro) நினைவு படுத்தும்.
இவர் கதைகளுடைய சித்திரம் அருமையாக இருக்கும்.
அதுவும் அவர் பில்லியாக மாறி குதிரையில் பள்ளத்தாக்கில் இருந்து தாண்டும் இடம் மிக அருமையாக இருக்கும்.அப்பொழுது அவர் பேசும் வசனம் நினைவில் இல்லை.பற பற என முடியும் என நினைவு.
அவரது குதிரையும் கருமை நிறமாக கம்பீரமாக இருக்கும்.சற்றே ஹீரோவை நினைவு படுத்தும்.
பில்லி பற்றிய அறிமுகம்:
ஓர் இரவு புத்தகத்தில் வந்த பில்லி கதை கழுகுக் கோட்டை.
எனக்கு அவர்கதைகளிலேயே மிகவும் பிடித்தது முரட்டுக்காளை தான்.
கதையில் வரும் காளை பார்க்க அழகாக மிகவும் கம்பீரமாக இருக்கும்.
இது போல குரும்பதிவுகள் இட எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
கதையை முழுவதும் சொல்லும் நீள பதிவுகள் சற்றே போர் அடிக்கும் என நினைக்கிறேன்.
இது தவிர வேறு பில்லி கதைகள் வந்திருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.




