வணக்கம் நண்பர்களே,
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு.
நான் முந்தய பதிவில் கூறியது போல இப்பதிவில் என்னிடம் இருக்கும் மாடஸ்டி புத்தகங்களின் தொகுப்பையே அளித்துள்ளேன்.
அதனுடன் எனக்கு மிகவும் பிடித்த ஷெர்லோக் ஹோல்மேஸ்
புத்தகங்களையும் அளித்துள்ளேன்.
மாடஸ்டி புத்தகங்களில் மிகவும் முக்கியமான முதல் மூன்று புத்தகங்கள் என்னிடம் உள்ளன.அதற்க்கு மற்றும் ஒரு சிறப்பு அது லயன் காமிக்ஸில் வந்த முதல் புத்தகம் என்பதும் தான்.
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என்னிடம் லயன் காமிக்ஸின் முதல் இதழான கத்தி முனையில் மாடஸ்டி மற்றும் முத்து காமிக்ஸின் இரும்புக்கை மாயாவி மற்றும் ராணி காமிக்ஸின் அழகியை தேடி ஆகிய மூன்று புத்தகங்களும் உள்ளன.அவைகளை பற்றிய தனி பதிவுகள் மற்றொரு சமயத்தில்.
மாடஸ்டி பற்றிய அறிமுகம் எதுவும் தேவையில்லை.
எனக்கு வில்லிக்கும் மாடஸ்டி க்கும் இடையில் இருக்கும் காதல் மிகவும் பிடிக்கும்.அது மிக சிறப்பாக காமிக்கப்பட்டிருக்கும் பல தருணங்களில்.
எனக்கு மிகவும் பிடித்தது மாடஸ்டி இன் முதல் மூன்று கதைகள் தான்.மற்றவையும் நன்றாகவே இருக்கும் ஆனால் அவைகள் தான் எனது favourite.
எவ்வளவோ ஷெர்லோக் ஹோல்மேஸ் பற்றிய காமிக்ஸ் புத்தகங்கள் வந்துள்ளன.ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மினி லயனில் வந்த புத்தகங்களே.அதில் அவரை காமித்திருகிற விதம் மிகவும் நன்றாக இருக்கும்.
அதுவும் அவர் போடும் ஒவ்வொரு வேஷங்களும் அப்பப்பபா அட அட அடா.
எனக்கு அவைகளின் ஆதி மூலம் பற்றி தெரியவில்லை.
மற்றும் எத்தனை புத்தகங்கள் வந்தன என்றும் தெரியவில்லை.
நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னுட்டம் மூலம் கூறுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே.
இன்னும் ஒரு காமிக்ஸ் பதிவுக்கான புகைப்படங்கள் உள்ளன.
அப்பொழுது மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.
கிருஷ்ணா வ வே.