லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Showing posts with label Kumki. Show all posts
Showing posts with label Kumki. Show all posts

Saturday, December 15, 2012

கும்கி - ஒரு பச்சை பசேல் யானை.




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரைப்பட விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்.

இன்று மதியம் கும்கி திரைப்படம் பார்த்தேன்.பில்லா 2 அப்புறம் ஒரு திரைப்படம் முதல் நாள் பார்ப்பது இதுதான்.

படம் நன்றாகவே இருந்தது கடைசி 5 நிமிடம் தவிர.

ஒரு பிரபு சாலமன் கதை (கும்கி கதை அல்ல):

3 நிமிட குறும்படம்:

ஒரு விடலை பையன் காலையில் விழித்தெழுந்து தினசரியை பார்கிறான்.அன்று Feb 14 சந்தோசத்துடன் எழுந்து குளித்து ஒரு மோதிர பரிசுடன் கிளம்புகிறான்.

கட்:

அதே நேரம் அதே போல ஒரு விடலை பெண் எழுந்து அதே சந்தோசத்துடன் ஒரு பூ பரிசுடன் கிளம்புகிறாள்.

இருவரும் குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்து கொண்டு கிளம்புகிறார்கள்.

ஒரு காபி விடுதியில் சந்தோசத்துடன் கையில் பூவுடன் உள்ளே நுழைகிறாள் அந்த பெண் உள்ளே எதையோ பார்த்து அதிர்ச்சி அடைந்து பூவை கீழே தவறவிடுகிறாள்.

அவள் பார்த்த இடத்தில் அந்த பையன் வேறு ஒரு பையனின் கையில் மோதிரம் மாட்டிகொண்டு இருக்கிறான்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கீழே விழுந்த பூவை எடுக்க குனியும் பொழுது வேறு ஒரு ஆண் உதவ குனிய இருவர் தலையும் முட்டிக்கொள்ள காதல் வருகிறது.அத்துடன் அந்த திரைப்படம் முடிகிறது.

இது நாளைய இயக்குநருக்காக எடுத்த ஒரு படம் இதற்கு நடுவர்கள் பிரபு சாலமன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா.இந்த படத்திற்கு பிரபு சாலமன் கொடுத்த கமெண்ட்.

"என்ன சொல்லவரீங்க எனக்கு ஒன்னும் புரியல.ரெண்டு பேர் sms அனுப்பிவிட்டு வராங்க இங்க அந்த பையன பார்கிறார்கள் அப்புறம் இன்னொருத்தன பார்த்ததும் காதல்.இப்படி பார்த்ததும் காதல் வருமா/இன்னும் கொஞ்சம் எலபோரடே பண்ணனும்."

இந்த கமெண்ட் நோட் பண்ணிக்குங்க நண்பர்களே.

இனி கும்கி கதை.

ஆதிகாடு 200 வருட பாரம்பரியம் மிக்கது.விவசாயம் பார்கிறார்கள்.
அவர்களுக்கு கொம்பன் எனப்படும் ஒரு ஒத்தை யானையால் தொல்லை.சாதாரண தொல்லை இல்லை அதனால் 3 பெண்கள் இறந்துள்ளனர்.
மேலும் அதன் பிடியில் இருந்து அந்த கிராமத்தின் தலைவர் மாத்தையன்  பெண் அல்லி மயிரிழையில் உயிர் தப்பி உள்ளால்.

இதற்கு அரசாங்க அதிகாரிகள் அவர்களை அந்த காட்டை காலிசெய்து வேறு இடம் செல்ல சொல்கிறார்கள்.இதற்கு மறுக்கும் அவர்கள் உங்கள் உதவி தேவை இல்லை எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்கிறோம்  என சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

இந்த நிலையில் அவர்கள் ஒரு கும்கி யானையை துணைக்கு வைத்துகொண்டு இந்த வருடம் அறுவடை செய்ய முடிவு செய்கிறார்கள்.அதற்காக ஊர்மக்கள் அனைவரும் தங்களது நகைகள் மற்றும் சேகரிப்பை கொடுத்து ஒரு யானை தரகர் மூலம் கும்கி யானை கேட்கிறார்கள்.

இப்படி இருக்க நம்ம ஹீரோ பொம்மன்,அவனது தாய்மாமன் கொத்தள்ளி,அவனது கைத்தடி உண்டியல் மூவரும் அவனது யானை மாணிக்கத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.அந்த யானையை தனது உடன் பிறவா சகோதரனாக நினைக்கிறான் ஹீரோ.சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.flashback ல வருங்கின்ற குட்டியானை செம அழகாக இருக்கிறது.அந்த யானை ஒரு தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டாலே நடுங்குகிறது.பொம்மனின் நண்பர் அந்த யானை தரகர்.
அவர் மூலம் யானையை கோவில் திருவிழாக்கள்,திரைப்படங்கள் இப்படி விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

உண்மையான கும்கியானையின் பாகனின் பெண் விஷம் குடித்துவிட அவர்க்கு பதில் தனது நண்பருக்காக பொம்மன் மாணிக்கத்துடன் கும்கி யானை என பொய் சொல்லி ஆதிக்காட்டிர்க்கு போகிறான்.அங்கு அல்லியை கண்ட உடன் காதல் வயப்படுகிறான்.(நோட் பண்ணுங்க).முதலில் யானையை கண்டு பயப்படும் அல்லி பின் மாணிக்கத்தின் மேல் பாசம் கொள்கிறாள்(ஏன்? காரணம் பின்னர் கூறப்படும்) .இப்படியே முதல் பாதி சென்று விடுகிறது.




அடுத்து தனது காதலை அவளிடம் சொல்கிறான்.ஒரு கட்டத்தில் அவளும் சம்மதிக்க காதல் நன்றாக ஒரு பாடல் முடியும் வரை செல்கிறது.பின்னர் அந்த கிராமத்தின் தலைவரும் அந்த ஊர் மக்களும் தன மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு தனது காதலை விட்டுகொடுக்க முடிவு செய்கிறான்.அவளும் தனது தந்தை தன மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளித்து தனது காதலை தியாகம் செய்கிறாள்.

அப்புறம் ஒரு வழியா படத்தின் ஆரம்ப காட்சியில் வந்த கொம்பன் இறுதிக்காட்சியில் வர பரப்பான யானை சண்டை காட்சியுடன் படம் முடிகிறது.


இனி எனது கருத்து.



படத்தின் உண்மையான ஹீரோ கேமரா மேன் சுகுமார் தான்.அப்பா மனுஷன் புகுந்து விளையாடிருக்கார்.படத்தின் ஒவ்வொரு பிரேமும் நமது கணினி திரையில் வைக்கும் வால்பேப்பர் போல ஒரே பச்சை பசேல் அல்லது மஞ்சள் பூ காடு.இடங்கள் இப்படி அத்தனையும் அருமை.அதற்காகவே நண்பர்களை திரைஅரங்கு சென்று காணுமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்பொழுதான் அந்த அனுபவத்தை முழுமையாக அடையமுடியும்.படத்தின் இடங்களை தேர்ந்தேடுதர்க்கு கண்டிப்பாக டைரக்டருக்கு பாராட்டுக்கள்.நம்ம நாட்லயும் இப்படி அழகான இடங்கள் உள்ளன என்பதை நிருபித்துள்ளார்.



அடுத்து அந்த யானை மாணிக்கம் பார்க்க கம்பிரமாக உள்ளது.அது காலை தூக்கி காண்பிக்கும் அழகே தனி.அதனால் தான் என்னவோ ஹீரோவிற்கு வைக்கும் காட்சியை யானைக்கு வைத்துவிட்டார் டைரெக்டர்.தண்ணிர் எடுக்க செல்லும் அல்லி நீர் குடிக்கவரும் மாணிக்கத்தை கண்டு தடுமாறி ஒரு பாறை மேல் விழப்போக நம்ம யானை அவளை அழகாக காப்பாற்றுகிறது.இந்த ஒரு காட்சி போதாதாங்க.(இப்போ காரணம் புரிஞ்சுதா)



அடுத்து நம்ம தம்பி ராமையா செமைய கலக்கிருக்காருங்க அவர் வரும் காட்சிஎல்லாமே திரைஅரங்கில் அப்படி ஒரு சிரிப்பு அதுவும் அவர் mind voice ல பேசறது எல்லாமே அருமை.கடைசி வரைக்கும் போர் அடிக்காம கொண்டு சென்றதற்கு இவர் ஒரு பெரும் காரணம்.

அடுத்து நம்ம ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே நல்ல நடிச்சுருக்காங்க.கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்
ஆனா ரெண்டு பேரோட காதல் காட்சில ஒரு அழுத்தமே இல்லை.அவளுக்கு அவன் மேல் காதல் வர ஒரு நல்ல காரணமே கூறவில்லை.பெரும்பாலும் அவன் அவளை நினைத்து மருகிகொண்டிருக்க அவள் எப்பொழுது யானையுடனேயே இருப்பாள்.அப்புறம் அவன் சொன்னதும் எப்படி சம்மதித்தாள் எனபது தெரியவில்லை.

இந்த லட்சணத்துல இந்த டைரெக்டர் மேலே எப்படி கருத்து சொல்லிருக்கார் பாருங்க.



படத்தின் பாடல்கள் நன்றாக உள்ளன.சற்றே மைனாவை நினைவு படுத்தினாலும் நன்றாகவே உள்ளன.முக்கியமாக பாடல்கள் எடுக்கப்பட்ட இடங்களும் விதமும் நன்றாக இருக்கும்.ஒரு அருவி ஆரம்பிக்கிற இடத்த காமிசிருப்பாரு பாருங்க சூப்பர்.பாடல்கள் பற்றி நமது ராஜ்குமார் நல்ல பதிவு ஒன்று இட்டுள்ளார் அதனை படிக்க.



நடித்துள்ள அனைத்து துணை நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நம்ம ஜூனியர் பாலையா அவர்களுக்கு சாட்டை படத்திற்கு பின் மீண்டும் ஒரு வாய்ப்பு.படத்துல காட்டிலாகா அதிகாரியாக வருபவரை தேவை இல்லாமல் ஒரு வில்லன் பில்டப் வேற.

யானைகள் பற்றி பல துணுக்கள் அளித்துள்ளனர்.யானை வைத்திருக்க தனி லைசென்ஸ் தேவை,நமக்கு ஜலோதொசம் போல அதற்கு குடலோசம்,கும்கி யானைக்கு தைரியம் தர பார்கே பார்கே என கத்த வேண்டும்,யானைக்கு மதம் பிடிக்க ஆரம்பிக்கும் பொது இருக்கும் அறிகுறிகள் இப்படி பல.

படத்தின் இறுதிக்காட்சி மட்டும் எனக்கு பிடிக்கவில்லை.

இதனை பற்றிய நமது நண்பர் கார்த்திக் அவர்களின் கருத்தை நான் இங்கு மீள் பதிவு செய்கிறேன்.

//இந்தப் படத்தின் க்ளைமேக்ஸை பலவிதமாக எடுத்திருக்க முடியும். ஆனால் எளிதில் யூகிக்க முடியாத ஒரு க்ளைமேக்ஸை தேர்ந்தெடுத்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.//

ஆனால் இந்த ஒரு இடத்தில் அவருடன் நான் வேறு படுகிறேன்.

அவ்வளவு தான் நண்பர்களே.எனது குரும்பதிவுகளையே படித்து வந்த நண்பர்களுக்கு இது சற்றே திருப்தி அளித்திருக்கும் என நினைக்கிறேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.