வணக்கம் நண்பர்களே,
எனது ப்ளாக்கின் மீள்வரவின் முதல் காமிக்ஸ் சார்ந்த பதிவு.
போனவருடம் ஆகஸ்ட் மாதம் பணி நிமித்தமாக இங்கிலாந்து செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது, மனதில் எழுந்த முதல் எண்ணம் அங்கு சென்று பழைய புத்தக கடைகளை கண்டு பிடித்து மாயாவி மற்றும் ப்ளீட்வே புத்தகங்கள் சில வாங்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே.
பின் இங்கிலாந்து லண்டன் மாநகரம் வந்திறங்கிய பொழுது நாம் படித்த காமிக்ஸ் ஹீரோக்கள் வாழ்ந்த ஊர் தெரிந்தது. முக்கியமாக கதைகளில் வரும் இரண்டடுக்கு பேருந்துகள் லண்டனிற்கே உரிய ஒன்று. சிவப்பு கலரில் ப்ரமிப்பாக இருந்தது.
இங்கு வந்து செட்டில் ஆகி பணி பளு சற்று குறைந்தபொழுது, கூகிளில் பழைய புத்தக கடைகள் என்று தேடிய பொழுது ஒன்றும் கிடைக்கவில்லை. பின் ப்ளீட்வே புத்தகங்கள் என்று தேடிய பொழுது ஈபே லிங்குகள் கிடைத்தன. ஒரு சில பாரகுடா (லாரன்ஸ்) கதைகள் 10 பவுன்டுகளுக்கு இருந்தது.
சற்றே விலை அதிகம் என்று தோன்றியது. அப்பொழுதுதான் லயன் வருடாந்திர புத்தகங்கள் கண்ணில் பட்டன. விலையும் பாதியாக இருந்தது.
மேலும் பலகதைகள் நிறைந்துள்ளது தெரிந்தது. சரி என ஆர்டர் செய்தேன்.
இரண்டு மூன்று நாட்களில் வந்து சேர்ந்தது. அதனை பார்த்த பொழுது தான் நமது லயன் குண்டு புத்தகங்களுக்கு அது ஒரு ஆரம்பமாக இருந்திருக்கும் என்று. புத்தகத்தை கையில் ஏந்தும் பொழுதே மனதில் ஒருவித சந்தோசமாக இருந்தது.
ஹார்ட் பவுண்ட் அட்டை, பழுப்பு நிற தரமான தாள் என அட்டகாசமாக இருந்தது. அந்த தாளில் கருப்பு வெள்ளை சித்திரங்கள் அருமையாக இருந்தது. பெரும்பாலும் சிறு சித்திரக்கதைகள், மற்றும் ஒரு சில சிறு கதைகள் என கதை கதம்பமாக இருந்தது.
ஆனால் நமது லயன் குண்டு புத்தகங்களின் சிறப்பு, அது பல முழு நீள கதைகள் நிறைந்தாக இருப்பதே. பின் நமது லயனிற்கே உரிய பாக்கெட் சைஸ். ஆனால் லயன் ஆனுவலின் A4 சைஸில் படிக்க அதுவும் ஒரு தனி அனுபவமாக இருந்தது.
ஆர்வத்தில் பார்த்த புத்தகங்கள் எல்லாம் ஆர்டர் செய்தேன். ஆறு புத்தகங்கள் வாங்கியபின் பார்த்தால் ஒரு பெட்டி நிரம்பிவிட்டது. விமானத்தில் 4 பெட்டிகள் தான் கொண்டுவர முடியும், அனுமதிக்கப்பட்ட எடை 80கிலோ தான். வரும்பொழுதே கிட்சென் சாமான்கள் சேர்த்து கஷ்டப்பட்டு தான் கொண்டு வந்தோம்
இதில் போகும்பொழுது உறவினர்களுக்கு வேறு எதாவது வாங்கி செல்லவேண்டும். எப்படி அதை செய்ய போகிறோம் எனபது தான் எனது மனைவியின் இப்பொழுதைய கேள்வி :). அதனால் இனி வேறு புத்தகங்கள் எதுவும் வாங்க முடியாது என்பதே எனது கவலை :(.
நான் வாங்கிய புத்தகங்கள் லயன் Annual 1961(அட்டை கிழிந்த நிலையில்), 1968, 1970, 1972, 1973 மற்றும் 1975. அனைத்து புத்தகங்களிலும் இருந்தது நமது இரும்பு மனிதன் ஆர்ச்சியின் கதை தான். அடுத்து துப்பறியும் ஜிப் நோலனின் இரண்டு பக்க கதைகள். பின் ஒருசில புத்தகங்களில் சிலந்தி மனிதன் ஸ்பைடர் கதைகள் இருந்தது.
ஒரு சில கதைகள் கலரில் ஆர்ட் பேப்பரில் இருந்தது.
புத்தகங்களின் அட்டை மற்றும் ஒருசில உள்ளபக்கங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக கீழே.
மேலும் சில உட்பக்கங்கள் நாளை பகல் வேலையில் அப்லோட் செய்கிறேன்.
சரி இனி குண்டு புத்தகங்கள் வேண்டாம் எதாவது சிறிய புத்தகங்கள் வாங்கலாம் என்று யோசித்தபொழுது நண்பர் மகேஷ் John Havoc புத்தகங்கள் வாங்கி வர முடியுமா என்று கேட்டார். ஆனால் நான் மேலே கூறிய எடை விஷயம் பற்றி நண்பரிடம் கூறி முயற்சி செய்கிறேன் என்று கூறினேன்.
பின்னர் சரி வாங்கி பார்க்கலாம் என்று நண்பர்குக்கு ஒரு புத்தகம் ஆர்டர் செய்தேன், புத்தகத்தை நேரில் பார்த்த பெழுது சிறிய அளவில் எடை குறைவாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது.
உடனே நண்பருக்காக மீண்டும் ஒரு புத்தகமும் எனக்கு இரண்டு புத்தங்களும் வாங்கிக்கொண்டேன். அதன் அட்டை படங்கள் உங்களுக்காக.
புத்தகங்களை படித்துவிட்டு ஒரு சில கதைகளின் பதிவுகள் இட முயற்சி செய்கிறேன்.
அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே