நண்பர்களே,
இதோ என்னிடம் இருக்கும் பாக்கெட் அளவு புத்தகங்களின் தொகுப்பு.
இவை தவிர அட்டை இல்லாத புத்தகங்கள் அதிகம் உள்ளன.
கொள்ளைகார மாயாவி
தவளை எதிரி,
சைத்தான் விஞ்ஞானி,
மீண்டும் spider
நீதிக் காவலன் spider
மிஸ்டர் ஜெட்
ஜானி இன் லண்டன்
இப்படி பல கதைகள் உள்ளன.
விரைவில் அந்த புத்தகங்களின் சில மாதிரி பக்கங்களை பதிவிடுகிறேன்.
என்னிடம் இருக்கும் இந்த கதைகள் அனைத்துமே நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கும் முன் வந்தவை.
அதனால் அனைத்தும் பழைய புத்தக கடைகளில் வாங்கியவை.
என்னிடம் காமிக்ஸ் classics அனைத்தும் உள்ளன.
எனக்கு காமிக்ஸ் பற்றிய பதிவுகள் இடும் போதெல்லாம் பழைய புத்தக கடைக்கு சென்று புத்தகங்கள் வாங்கி படித்த சந்தோஷ காலங்கள் நினைவிற்கு வருகிறது.
எனது புத்தகம் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது சிறுவர் மலர் மூலமாக தான்.
ஒரு சமயம் நான் ஒரு கிராமத்திற்கு சென்ற போது அங்கு சிறுவர் மலர் வராது.
அதனால் ஒரு வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வேண்டும் என்று அழுது அடம் பிடிக்க அங்கு இருந்த முத்து என்கிற அண்ணா மூலமாக எனக்கு அறிமுகம் ஆனதுதான்
லயன் காமிக்ஸ்.
முத்து அண்ணா இப்போது கலெக்டராக இருக்கிறார் என்று நினைகிறேன்.
அவருக்கு என்னது நன்றிகள்.
பின் ஒரு நிலையில்லாத புத்தியில் அனைத்தையும் விற்று பின் அறிவு வந்து மீண்டும் வாங்கி சேர்த்த துன்பமும் நினைவிற்கு வருகிறது.
இனி அடுத்த பதிவாக ரிப் கிர்பி கதைகளின் தொகுப்பை வெளியிடலாம் என்று இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை பின்னுட்டம் மூலம் கூறுங்கள் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.