வணக்கம் நண்பர்களே,
சமீபத்தில் நான் Flipkart பார்த்துக்கொண்டு இருந்த போது அதில் வெளியாகி உள்ள Sherlock தொலைக்காட்சி தொடரின் DVD பற்றி பார்த்தேன்.அத்தொடர் பற்றி நான் ஏற்கனவே எங்கோ கேள்வி பட்டு இருந்தேன். நன்றாக இருக்கும் என படித்ததாக நினைவு.
மீண்டும் அதனை பற்றி wiki இல் பார்த்தேன்.
அத்தொடர் இதுவரை இரண்டு season BBC Entertainment இல் ஒளிபரப்பாகியது தெரிந்தது.ஒவ்வொரு season இற்கும் மூன்று அத்தியாயங்கள் வந்துள்ளன.
மற்றும் அத்தொடரின் முதல் அத்தியாயம் பல அவர்டுகளும் வாங்கியுள்ளது.
எனக்கு அதன் மேல் ஆர்வம் வந்தது.பின் torrentil அவை அனைத்தையும் டவுன்லோட் செய்தேன்.அதில் முதல் அத்தியாயம் மட்டும் பார்த்தேன்.அதனை பற்றியதுதான் இந்த பதிவு.
முதல் அத்தியாயம் - A Study in Pink
ஷெர்லோக் ஹோல்மேஸ் ஆக Benedict Cumberbatch மற்றும் வாட்சனாக Martin Freeman உம நடித்துள்ளனர்.நல்ல தேர்வு.இருவரும் பாத்திரத்திற்கு நன்கு பொருந்துகின்றனர்.
இனி கதை,
வாட்சன் முன்னால் இராணுவ டாக்டர்.காயத்தினால் ஓய்வு பெற்று உள்ளார்.பணபற்றாகுறைஇனால் யாருடனாவது சேர்ந்து வசிக்க முயற்சி செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் 3 சம்பவங்களை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொன்றிலும் ஒரு நபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதை பார்க்கிறோம்.
போலீஸ் ஆபிசர் lestrange பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.சம்பவங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருக்கும் என்றும் அதனை போலிஸ் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருபதாக கூறுகிறார்.
அடுத்து வாட்சன் ஒரு பூங்காவில் நடந்து செல்கிறார்.அப்பொழுது அவரது பழைய நண்பரே காண்கிறார்.அவர் மூலம் மற்றொருவரும் வீட்டை பகிர்ந்துகொள்ள ஆள் தேடுகிறார் என அறிந்து அவரை காண நண்பருடன் செல்கிறார்.
அவர் தான் நமது கதாநாயகன் ஷெர்லோக்.
ஒரு லாபில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்.அங்கு வாட்சன் தனது நண்பருடன் நுழைந்ததை பார்த்தவுடன்,
அவர் வீட்டை பகிர்ந்துகொள்ள வந்ததில் இருந்து அவர் இராணுவத்தில் இருந்தது அவரது சகொதடுடன் போக மறுத்தது அவர் சகோதரர் அவரது மனைவியை பிரிந்து வாழ்வது அவர் ஒரு குடிகாரர் என அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்.பின் அவர் எப்படி கண்டுபிடித்தார் என விலகுகிறார்.இது நாம் ஷெர்லோக் ஹோல்மேஸ் திரைபடத்தில் பார்த்தது போல இருக்கும்.
பின் இருவரும் 221B baaker வீதியில் இருக்கும் வீடிற்கு வருகிறார்கள்.அங்கு MRS .ஹட்சன் அறிமுகம்.
அங்கு அவரை காண இன்ஸ்பெக்டர் lestrange வருகிறார்.அவர் வந்ததை கண்டு நான்காவதாக ஒரு தற்கொலை நடந்து இருப்பதை அறிகிறார்.
அந்த இடத்திற்கு சென்று பிணத்தை ஆராய்கிறார்.அதன் மூலம் அவர் கொண்டு வந்த பெட்டி காணாத்தை கண்டுபிடிக்கிறார்.தரையில் நகம் கொண்டு இறந்த பெண் RACHE என எழுதி உள்ளதை பார்க்கிறார்.சில ஆராய்ச்சிக்கு பிறகு அது அவரது பிறக்காத பெண் RACHEL என அறிகிறார். சில தடயங்களின் மூலம் இதுவரை நடந்தது அனைத்தும் ஒரு தொடர் கொலை என கூறுகிறார்.
பின் அவரது தொலை பேசி தொலைந்து போயுள்ளதை கண்டுபிடிக்கிறார்.அதன் மூலம் கொலையாளியின் இருப்பிடத்தை அறிய முயல்கிறார்.ஆச்சர்யம் அவன் அவரது வீட்டில் உள்ளதாக காண்பிக்கிறது.ஒரு டாக்சி டிரைவர்
அவர் வீட்டிற்குள் அந்த கைபெசியுடன் வருவதை காண்கிறோம்.
பின் இறுதில் ஒரு வார்த்தைஜால கிளைமாக்ஸ்.என்னால் அணைத்து வசனங்களையும் கூற முடியவில்லை அந்நாள் நண்பர்கள் பார்த்தால் நன்றாக இருக்கும்.
இனி கருத்து,
படம் நன்றாகவே உள்ளது.அதுவும் வசனங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
ஆனால் ஹீரோ மிக வேகமாக பேசுகிறார்.subtitle இருந்தும் தொடர்வது கஷ்டமாகவே உள்ளது.அது ஒரு குறை தான்.
இறுதில் அவரது பரம எதிரியான ஜான் மோரியாரிட்டி பற்றி வருகிறது.
இக்கதை ஒரு ஆரம்பம் தான்.எப்படி ஷெர்லோக் கும் வாட்சனும் எப்படி நல்ல பார்ட்னர் களாக மாறுகிறார்கள் என்பதை அழகாக கூறி உள்ளார்கள். கண்டிப்பாக அனைத்து ஷெர்லோக் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.
பார்த்துவிட்டோ அல்லது பார்திருந்தாலோ உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
இத்தொடரின் மூன்றாவது பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது.
இதனை பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட லிங்க் பாருங்கள்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.
பொதுவாக சீரியல்கள் பார்ப்பதில்லை! ஷெர்லாக்கை பழைய காமிக்ஸ்களில் படித்ததோடு சரி! :)
ReplyDeleteநண்பரே நான் 6 episode களையும் பார்த்துவிட்டேன்.
Deleteஇரண்டாவது தவிர அனைத்தும் நன்றாகவே உள்ளது.
Sherlock ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனபது எனது கருத்து.
This comment has been removed by the author.
ReplyDeleteSuper Post Nanbaa.
ReplyDelete//subtitle இருந்தும் தொடர்வது கஷ்டமாகவே உள்ளது.அது ஒரு குறை தான்.// Unmai Nanbaa
Pls check this link : http://thepiratebay.se/torrent/6435221
நண்பா அந்த லிங்கில் 3 எபிசொட் களே உள்ளன.
Deleteநான் மற்றொரு லிங்க் மூலமாக 6 எபிசொட் களையும் டவுன்லோட் செய்துவிட்டேன்.
3 பாகங்களையும் Download செய்ததோடு சரி. பார்க்க இன்னமும் நேரம் அமையவில்லை :(
ReplyDeleteஇரண்டாவது தவிர அனைத்தும் நன்றாகவே உள்ளது.
DeleteSherlock ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனபது எனது கருத்து.அதுவும் மூன்றாவது எபிசோடில் மோரியாரிட்டி உடன் அவர் ஆடும் ஆட்டம் அட்டகாசம்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteபார்க்க முயற்ச்சிக்கிறோம் Download Link கொடுத்தால் ;-)
.
I used
Deletehttp://kat.ph/sherlock-tv-series-season-1-amp-season-2-t6214813.html
You can also use
http://thepiratebay.se/torrent/6981942#filelistContainer
Which is of lesser size.
U can download the subtitle seperately for the one but u have that in the 2nd torrent.
Hope this helps.
வரவுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteகீழே உள்ள லிங்கில் நீங்கள் ஆன்லைனில் பார்க்கலாம்.
http://watchseries.eu/episode/sherlock_s1_e1-57599.html
டியர் கிருஷ்ணா,
ReplyDeleteஷெர்லாக் சீரியல் பற்றிய தகவலுக்கு நன்றி. இரண்டு எபிஸோடுகளை பார்த்தேன். சீரியல்கள் விறுவிறுப்பாக இருக்கிறது. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைகளிலும், ஷெர்லாக்கின் செயல்பாடுகள் விசித்திரமானவைகளாகவும், வேகம் மிகுந்ததாகவுமே சித்தரிக்கப்பட்டு இருக்கும். வேகமான செயல்பாடு என்பதை சித்தரிக்க வேகமாக வசனம் பேச வைத்து விட்டார்கள் போலும்.வேகமாக பேசுவதில் சூப்பர் ஸ்டாரை முறியடித்துவிட்டார், ஷெர்லாக்காக நடித்தவர். வசனங்கள் டெலிவரி அதிவேக சூப்பர் ஸ்பீட்.
ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கேரக்டரை உருவாக்கிய சர் ஆர்தர் கோனன் டோயலை நினைத்தால் ஆச்சரியாமாக இருக்கிறது. சில வழக்குகளுக்காக இவரை ஸ்காட்லேண்ட் யார்ட் போலீஸ் தொடர்பு கொண்டதாக படித்த ஞாபகம். இவரை, ஸைக்கிக் பவர் உடையவர் என்றும், ஆவிகளுடன் தொடர்புடையவர் என்றும், வேற்று கிரகவாசிகளால் பூமியில் விதைக்கப்பட்டவர் என்றும் பல கதைகள் உலவுகின்றது.
புரியாத புதிரான சங்கதிகளைப் பற்றிய ஒரு புத்தகத்தில், சர் ஆர்தர் கோனட் டோயல் ஒரு வேற்று கிரகவாசி என்றும், இவரை போட்டோ எடுத்த பொழுது, அந்த போட்டோவில் புதிரான சங்கதிகள் தென்பட்டதென்றும் அந்த புத்தகத்தில் படித்தேன். அந்த புத்தகம் என் லைப்ரரியில் இருக்கிறதா, இல்லை யாராவது சுட்டு விட்டார்களா என்று தெரியவில்லை.
ஆர்தர் கோனன் டோயலை நாம் எல்லோரும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைகளின் மூலமே அறிகிறோம். ஆனால் அவர் ஏராளாமாக எழுதிக் குவித்துள்ளார். ஷெர்லாக் இல்லாமல் டேல்ஸ் ஆப் மிஸ்டரி, டேல்ஸ் ஆப் ரிங் என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன. டோயல் ஒரு டாக்டர். இவரின் தலையீட்டினால் ஒரு இங்கிலாந்து வாழ் இந்தியரும், ஒரு யூதரும் போலிஸிடமிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். கோஸ்ட் க்ளப் என்னும் ஆவிகளை நம்பும் குழுவில் டோயலும் ஒரு மெம்பர்.
பதிவிற்கும் தகவலுக்கும் நன்றி கிருஷ்ணா.
நன்றி நண்பரே.
Deleteஉங்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
அப்பா! பல விசயங்களை விளக்கி உள்ளீர்கள்.
அனைத்தும் நான் அறியாதது.
எப்படி தான் அணைத்து விசயங்களையும் அறிந்துளீர்களோ?.
12 வருடங்களுக்கு முன்பு, மறுஜென்மத்தைப் பற்றிய தேடலில் ஆவிகளைப் பற்றிய விஷயக் குறிப்புகளை படிக்க நேர்ந்தது. அதே சமயத்தில், மிஸ்டரிகளைப் பற்றிய ஒரு புத்தகத்திலும் சர் டோயலைப் பற்றிய குறிப்பையும் பார்க்க நேர்ந்தது. சர் டோயல் மீண்டும் பிறந்திருக்கலாம் என்றும் ஒரு க்ளூ கிடைத்தது. அப்போது சர் ஆர்தர் கோனன் டொயல் மீண்டும் பிறந்திருக்கிறாறா என்று தேடினேன்(சர்ச் எஞ்ஜினில்தான்!). இப்படிப்பட்ட ஜீனியசான ஒரு ஆள், இன்றைய விஞ்ஞான உலகில் பிறந்திருந்தால், வெளியுலகத்திற்கு கட்டாயம் தெரியவந்திருக்கும், அது போல் சர் டோயலின் புத்திசாலித்தனத்துடன் ஒப்பிடக் கூடிய அளவில் நமது காலகட்டத்தில் யார் இருக்கிறார்கள் என்று தேடினேன். இந்த தேடலின் தகவல்கள் இப்போதும் என் பழைய பேக்கப் டிஸ்குகளில் இருக்கின்றது. சர் என்பது ஒரு உயரிய பட்டம், இங்கிலாந்து அரச பரம்பரையினால் க்னைட் செய்யப்படுபவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சர் பட்டத்தை தங்கள் பெயர்களோடு சேர்த்துக் கொள்ளலாம். (செவாலியே சிவாஜி கணேசன் என்பதைப் போல்)
Deleteஎப்போதும் என்னை ஆச்சரியப் படுத்திக் கொண்டிருக்கும் விஷயம், சர் ஆர்தர் கோனன் டோயல், ஷெர்லாக் கதைகளை எப்படி சிந்தித்து எழுதி இருப்பார் என்பது. சர் டோயல், 50 கதைகளுக்கும் மேல் ஷெர்லாக்கை மையமாக வைத்து எழுதியுள்ளார். ஷெர்லாக் கதைகளின் பிரமிக்க வைக்கும் தன்மையினால், அந்த கதைகளைவிட அதை எழுதிய எழுத்தாளர் எவ்வளவு அறிவாளியாக இருப்பார் என்று சர் டோயலைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக எடுத்த முயற்சி, என்னை இன்னும் அதிக ஆச்சரியத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. சர் ஆர்தர் கோனன் டோயல் பிறந்தது 1859, மறைந்தது 1930, 71வது வயதில்.
ஷெர்லெக் அல்லாத மற்ற கதைகளை கொஞ்சம் படித்த போது, சர் டோயலின் அறிவுத்திறன், மிக மிக அளவிட முடியாதும், நமது கற்பனைக்கு எட்டாததும் என்பதை உணர்ந்தேன்.
ஷெர்லாக் எவ்வளவு பிரபலம் என்பதைச் சொல்வதற்காக இரண்டு விஷயங்கள் சொல்கிறேன். 1. கூகுள் தேடலில் வெறுமனே “221 B” என்று உள்ளீடு செய்து பாருங்கள், 2. உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் மேப் இருந்தால் அதில் 221b, பேக்கர் ஸ்ட்ரீட் என்ற விலாசத்தை தேடிப் பாருங்கள், ஆச்சரியப் படுவீர்கள்.
ஷெர்லாக் ஒரு கற்பனையாக புனையப்பட்ட கதாபாத்திரம். 221B, பேக்கர் ஸ்ட்ரீட் என்னும் நிஜமான விலாசத்தில் ஷெர்லாக்கின் ம்யூசியம் இயங்கி வருகிறது. சூப்பர் ஹீரோ கேரக்டர்களை அதன் கதாசிரியர்களே சாகடித்தார்கள். அந்த கதாசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாக, ஷெர்லாக் கேரக்டரை சர் டாயல், புரபசர் மோரியார்டியுடன் சாகடித்தார், ஷெர்லாக்கின் சாகடிப்பினால் வெகுண்டெழுந்த மக்களின் கோரிக்கையினால், மீண்டும் ஷெர்லாக்கை மையமாக வைத்து கதைகளை எழுதினார்.
இங்கிலாந்தில் இரண்டு விலாசங்கள் பேமஸ். 1. No.221B, பேக்கர் ஸ்ட்ரீட், 2. No.10, டௌனின் ஸ்ட்ரீட்.
உங்களது பதிவின் மூலம் எனது எண்ணங்களை தூண்டி, அதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை அளித்ததற்கு மிகவும் நன்றி.
Deleteஉங்களுடைய எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.
DeleteAnother side to look out for is kind of|the type of} bonuses and promotions on provide for brand spanking new|for brand new} users. The finest casinos will entice new 온라인카지노 gamers with beneficiant presents, and likewise reward loyal gamers with common promotions. When it involves fiat currencies, processing transactions often takes between 2-4 business days on common. With crypto and eWallets, this is measured in hours, which leads us to the second point - transaction and knowledge security.
ReplyDelete