Friday, November 23, 2012

காமிக்ஸ் புதையல் XIX - Rani Comics Collection - Part 3

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் அடுத்த வரிசையை வழங்கி உள்ளேன்.

இந்த தொகுப்புகளில் பெரும்பாலும் மாயாவி கதைகளே வந்துள்ளன 
ஒரு சில மாண்ட்ரேக்,ப்ளாஷ் கார்டன்,கார்த்,மாடஸ்டி கதைகளும் வந்துள்ளன.

எனக்கு இந்த தொகுப்புகளில் உள்ள அனைத்து மாயாவி கதைகளும் பிடிக்கும்.மாயாவிகதைகளிலேயே சிறந்த கதைகள் இந்த கால கட்டத்தில் தான் ராணி காமிக்ஸ்களில் வந்தது என்பேன்.


கடத்தப்பட்ட நடிகை : முத்திரை மோதிரத்தின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு நடிகையை மாயாவி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பாக கூறி இருக்கும் கதை.

பழி வாங்கும் கொரில்லா : எனக்கு பிடித்தமான கதைகளில் ஒன்று.குட்டியாக இருக்கும் ஜம்போ கொரில்லாவை ஒரு காடுவாசியினால் வெறிபிடித்த கொரில்லாவாக மாற்றப்பட்டு மீண்டும் மாயாவியின் அன்புக்கு கட்டுப்பட்டு சாந்தமாகும் கதை.இக்கதை பற்றிய சௌந்தரது  பதிவு.

மரண அறை :  மாண்ட்ரேக் கெட்டவனான தனது அண்ணனிடம்
இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை. இதுவும் மிக விறுவிறுப்பான கதை.

அறை எண் 7 : ஹோட்டல் க்கு வருபவர்களை அறை எண் 7இல் தங்கவைத்து பின் ஆற்றில் தள்ளிக் கொன்று அவர்களது உடமையை கொள்ளை அடிக்கு  கூட்டத்தை மாயாவி எப்படி பிடிக்கிறார் என்பதே கதை.
அதனை பற்றிய சௌந்தரது பதிவு.

குதிரை வேட்டை : ஹீரோ மேல் ஆசைப்பட்டு ஒரு மன்னன் பிடித்துக் கொண்டு செல்ல அதனை மாயாவி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.

கடல் அரக்கன் : செயற்கையான ஒரு கடல் அரக்கன் செய்து ஏமாற்றும் ஒரு கூட்டத்தினரை முறி அடிப்பார் ப்ளாஷ் கார்டன்.

வெள்ளை இளவரசி : இதனை பற்றிய ஒரு அருமையான பதிவை நண்பர் சௌந்தர் அளித்துள்ளார்.

அபாய குரல் : ஒரு பிலிம் சுருளில் வரும் அபயகுரலை நம்பி அவரை காப்பாற்ற பொய் ஏமாந்து பின் அங்கு இருந்து தப்பி வரும் ப்ளாஷ் கார்டன் கதை.

சதிகாரர் நகரம் : கோடை மலராக அதிக பக்கங்களுடன் வந்த கதை.கொள்ளைகாரர்கள் நிறைந்த ஒரு நகரத்தில் மாட்டிகொள்ளும் ஒரு
தம்பதிகளை மாயாவி காப்பாற்றும் கதை.

கடத்தப்பட்ட இளவரசி : தங்க கடற்கரை எப்படி மாயாவிக்கு கிடைத்தது எனபது பற்றிய கதை.ஒரு மன்னனின் மகளை மாயாவி காப்பாற்றியதற்கு பரிசாக கிடைத்தது.

விசித்திரக் குள்ளர்கள் : சிறிய உருவமுள்ள மனிதர்களின் இளவரசியை ஒரு மன்னன் கடத்திப்போக அவளை மாயாவி எப்படி அவர்களின் இளவரசனோடு சேர்ந்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.

அதிரடிச் சிறுவன் : இப்புத்தகம் பற்றிய ஒரு அருமையான சௌந்தரது  பதிவு.

நள்ளிரவுக் கொள்ளை : காட்டுக்குள் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பரிசுபெறும் காட்டுவாசி இனத்திற்கு அளிக்கும் வைர வைடூரியங்கள் நிறைந்த கோப்பையை இருவர் கடத்திச் செல்ல அதனை மாயாவி எப்படி மீட்டு வருகிறார் என்பதே கதை.

காட்டு மனிதன் : தன்னை விட பல மடங்கு பெரிய காடுமநிதர்களின் தலைவனுடன் சண்டை போட்டு அவனை வீழ்த்தி அவனது பிடியில் இருந்து அவனது கூட்டதினரை மாயாவி காப்பாற்ற அதற்கு அவர்கள் மாயாவிக்கு ஒரு மர வீடு கட்டி தருவார்கள்.

கவச மனிதர்கள் : வின் வெளியில் நடக்கும் ஒரு ஆக்சன் கதை.ப்ளாஷ் கார்டன் கவச மனிதர்களின் தலைவனோடு மோதும் கட்டம் அருமையாக இருக்கும்.

மாய வாள் : மிங் மன்னனின் மகன் ஒரு மாய வாழ் மூலம் ஆட்சியை கைப்பற்ற அதனை எப்படி ப்ளாஷ் கார்டன் முரியாடிகிறார் என்பதே கதை.

தலைவெட்டிக் கூட்டம் : ஒரு தலை வெட்டிக்கூட்டதில் ரெக்ஸ் மாட்டிக் கொள்ள அவனை மாயாவி காப்பாற்றுவதே கதை.

இப்படி இந்த கால கட்டமும் ராணி காமிக்ஸில் நன்றாக இருக்கும்.


அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.


13 comments:

 1. லின்க்குகளோடு கலக்கி விட்டீர்கள். வழக்கம் போல் பார்த்து பெருமூச்சு விட வேண்டியதுதான் :D

  ReplyDelete
  Replies
  1. கவலை படாதீர்கள் நண்பரே.மீதி புத்தகங்களுக்கும் சௌந்தரின் பதிவுகள் வரும் விரைவில்.

   நாம் அனைவரும் அவரிடம் நமது வேண்டுகோளை வைப்போம்.

   Delete
  2. // வழக்கம் போல் பார்த்து பெருமூச்சு விட வேண்டியதுதான் :D //

   அதே! அதே! அந்த புத்தகங்களை எல்லாம் இப்பவே படிக்கணும் போல இருக்கு...

   :( :( :(

   Delete
  3. வருகைக்கு நன்றி நண்பரே.

   Delete
 2. அருமை நண்பரே...இதில் உள்ள அனேக கதைகளை நான் படித்து உள்ளேன்....அட்டை படத்தை பார்த்த உடன் எனது பழைய நினைவுகள் மீண்டு வந்தன..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நினைவுகளை எனது பதிவு தூண்டியது அறிந்து மிகவும் மகிழ்கிறேன் நண்பரே.

   Delete
 3. Kollaiyar kumbal entha neramum thakkalam! Vethalarku wirelessla, mandrakekuku telepathila, spiderkku valai pesila, jamesbonduku möney penny møolam, tex ku pugai moolama, tigerku kottai ku thanthi anuppi, bat manku light pottu kati, karthku satillite moolamaga, otha kaiyan ku sorgathukku fax panni, innum ellarukkum thagaval koduthu vara solli unga booksai bathirama, jakirathaiya, gavanama parthukkonga krishna!:-) purapattu vittathu rasigar padai>nokkam>unga illathai balatha mutrugai! Latchiyam> ella comicsgalaiyum aattaiya podarathu! :-Oenru thinara neenga readya?

  ReplyDelete
  Replies
  1. அட்டகாசம் நண்பரே.அத்துடன் எனது காவல்துறை நண்பரையும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறன்.
   உங்கள் கருத்து என்ன.

   Delete
 4. வழமை போல் கண்ணைப் பறிக்கும் COLLECTION கலக்குங்கள்:D நமது வேதாளர் பதிவுலகத்திற்கு லிங்க் வழங்கியதற்கு நன்றி நண்பா :D

  ReplyDelete
 5. //நாம் அனைவரும் அவரிடம் நமது வேண்டுகோளை வைப்போம்.// வேண்டுகோளை மின்சார வாரியத்திடம் அனுப்புங்கள் நண்பர்களே (சிக்க மாட்டேன் நண்பா :P :D )

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக தை பிறந்தால் வழி பிறக்கும்.
   எங்களுக்கு சௌந்தரின் காமிக்ஸ் பதிவுகள் கிடைக்கும்.

   Delete