வணக்கம் நண்பர்களே,
பூந்தளிர் கதைகளின் தொகுப்பில் எனது இரண்டாவது பதிவு.
முதல் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்.
இன்றைய தினம் புத்தக தினம். நாம் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தவேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக பூந்தளிர் இருக்கும்.
பூந்தளிர் பெரும்பாலும் ஆனந்த் பை அவர்களின் கதைகளையே கொண்டிருக்கும். மேலும் சில வாண்டுமாமா அவர்களின் தொடர்கதைகளும் இருக்கும்.
தேவியின் அருள் :
முதல் கதை தேவியின் அருள். சந்திராபூர் என்ற நாட்டில் சயான்பூர் என்ற சோம்பேறிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. மன்னர் அந்த சோம்பேறிகளை சுறுசுறுப்பு ஆக்குவபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்.
உடனே லக்ஷ்மன் என்ற நிதி அதிகாரி அந்த சவாலை ஏற்று எவ்வாறு அவர்களை சுறுசுறுப்பு ஆக்குகிறார் என்பதே கதை.
கபீஷ் :
இரண்டாவது கதை கபீஷினுடயது. தோப்பையா ஒரு தம்பதியினருடன் மான் பிந்துவை பிடிக்க வருகிறான். ஆனால் கபீஷ் அதனை எச்சரிக்க, அது தப்பி விடுகிறது.
அதே போல அங்கு வரும் யானை கூட்டத்தையும் கபீஷ் தனது தந்திரத்தால் காப்பாற்றுகிறது.
வேட்டை கார வேம்பு :
வழக்கம் போல தனது அதிர்ஷ்டத்தால் ஒரு மிருக காட்சி சாலைக்கு மலை பாம்பு ஒன்றை பிடித்து தருகிறார்.
மந்திரியின் தந்திரம் :
மந்திரி ஒரு கொசு அடிக்கும் குரங்கு மூலம் ராஜாவை மயக்க வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வழக்கம் போல அது அவர் தலையிலேயே வந்து விடிகிறது.
இப்பதிவின் புகைப்படங்களை நமக்காக மேம்படுத்திக் கொடுத்ததற்கு நண்பர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.
இந்த பதிவு உங்களையும் உங்கள் வீட்டு சுட்டிகளையும் சந்தோஷப் படித்தினால் மகிழ்வேன்.
அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.
மிக அருமையான பதிவு ! பூந்தளிர் கதைகள் மீண்டும் வந்தால் அதைவிட சந்தோஷம் வேறென்ன?
ReplyDelete//பூந்தளிர் கதைகள் மீண்டும் வந்தால் அதைவிட சந்தோஷம் வேறென்ன?//
Deleteகண்டிப்பாக நாம் அனுபவித்த இன்பத்தை நமது வருங்காலமும் அனுபவிக்க ஆசை தான்.
பூந்தளிரிலிருந்து சில கதைகளின் ஸ்கேன்களை முழுமையாக வழங்கியதற்கு நன்றி நண்பா.
ReplyDeleteமுழுக்கதையுடன் கூடிய ஒரு டெக்ஸ் வில்லர் பதிவை அடுத்த பதிவாக உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஆசை தான் நண்பா நேரம் காலம் ஒத்து வருவது இல்லையே.
Deleteபூந்தளிர் அனைத்துமே குழந்தைகளுக்கான பொக்கிஷங்களே! அது உங்களிடம் இருப்பது மிகவும் மகிழ்வு. சுப்பாண்டியின் சாகசம் , காமிக்ஸின் "மதியில்லா மந்திரி" பாணியிலான மந்திரியின் தந்திரம் கதைகள் . இவற்றையெல்லாம் மறக்கவே முடியாது
ReplyDelete//இவற்றையெல்லாம் மறக்கவே முடியாது//
Deleteமுற்றிலும் உண்மை நண்பரே.
தன் குட்டி குட்டி கதைகள் மூலம், அன்று குட்டீஸாக இருந்த நம்மை குதூகலப்படுத்திய ஒன்று, உலகப் புத்தக தினத்தினமான இன்று நம்மைவிட்டுச் சென்று...
ReplyDeleteபதிவோ - நன்று! :)
ஆசிரியரின் தாக்கமா விஜய், இல்லை TR இன் பாதிப்பா
Deleteபூந்தளிர் . . பற்றிய நினைவூட்டலுக்கு நன்றி கிருஷ்ணா . . . அருமையான நாட்கள் அவை .
ReplyDeleteதங்களது நினைவுகளை எனது [பதிவு தூண்டியது எனக்கு மிக மகிழ்ச்சி தீனா.
Deleteபூந்தளிர் அருமையான பட்டாம்பூச்சி போன்று படபடக்கும் குழந்தைகளுக்கான அருமையான கதைக்களஞ்சியம் தோழரே! அட்டகாசமாக கொடுத்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ஜானி ஜீ.
Deleteஅருமைய்யா அருமை.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅருமையான பதிவு !
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஒவ்வொரு ஸ்கேனையும் பார்த்து படிக்கும் போது சிறுவயது நினைவுகள் தோன்றி மகிழ்ச்சியை கொடுக்கின்றன. விரைவில் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன். மாட்டுகார பரமு என்றொரு கதை கூட வருமே...அது இருந்தால் அடுத்த பதிவில் போடுங்கள்
ReplyDeleteவருகைக்கு நன்றி லிமட்.
Delete//மாட்டுகார பரமு//
கற்கண்டு சிறுகதைகள் என்று பார்வதி சித்திரகதைகளிலும் இக்கதை வந்தது.
விரைவில் பதிய முயற்சி செய்கிறேன்.
மிக்க நன்றி! இப்படி நீங்கள் தொடர்ந்து பூந்தளிர் இதழ்களை வழங்கிக் கொண்டே இருந்தால் நான் தொடர்ந்து உங்கள் தளத்துக்கு வந்து கொண்டே இருப்பேன்.
ReplyDeleteகண்டிப்பாக அவ்வபொழுது வெளியிடுகிறேன் நண்பரே.
Deleteஇப்படி, இதழிலிருந்து சில கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்காமல், முழு இதழையும் அப்படியே வழங்கினால் அது மிகச் சிறந்த ஆவணப்படுத்தலாக இருக்கும்! என் பணிவன்பான வேண்டுகோள் இது. நிறைவேற்றுவீர்களா?
ReplyDeleteஇன்னொரு தகவல். ஸ்கேன் செய்யும்பொழுது ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாக ஸ்கேன் செய்ய முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும். காரணம், அப்படிச் செய்தீர்களானால் அதை எளிதாகப் பி.டி.எஃப் கோப்பாக மாற்றலாம். இதைக் கூட அப்படியே பி.டி.எஃப் செய்ய முடியும்தான். ஆனால், நாளைக்கு அதை அச்செடுக்க வேண்டுமானால் ஒற்றைப் பக்க ஸ்கேன்களாக இருந்தால்தான் வசதி. மேலும், இப்படி ஒற்றைப்பக்கங்களாக ஸ்கேன் செய்வதுதான் முறையான ஆவணப்படுத்தல் முறையும் கூட.
ReplyDeleteஇருக்கும் ஓய்வு நேரங்களில் எடுப்பதால் இவ்வாறு எடுக்கிறேன் நண்பரே.
Deleteஅடுத்த முறை தனி பக்கங்களாக எடுக்க முயற்சி செய்கிறேன்.
நன்றி நண்பரே!
Deleteநமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
.
நன்றி நண்பரே!
Deleteமிகவும் நன்றி நண்பரே .. பூந்தளிர் போன்ற புத்தகங்கள் இன்றைய குழந்தைகளுக்கு இல்லை, அவர்களுக்கு படிக்கவும் நேரம் இல்லை என்பது வேதனையே ..
ReplyDeleteரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்தேன்.. மிக்க நன்றி. மேலும் பல புத்தகங்களை பதிப்பிடுங்கள்..
வருகைக்கு நன்றி சரண்.
Delete// பூந்தளிர் போன்ற புத்தகங்கள் இன்றைய குழந்தைகளுக்கு இல்லை, அவர்களுக்கு படிக்கவும் நேரம் இல்லை என்பது வேதனையே .. //
மிகவும் வருந்தத்தக்க நிலைமையே.
ஆகையால் தான் ஓரளவு நான் பதிவிட முயல்கிறேன்.
இக்கதைகளை யாவது ஒருவர் தன குழந்தைக்கு காண்பித்தால் எனக்கு வெற்றியே.
மிக்க நன்றி. குழந்தையுடன் படித்தேன் படிப்பேன்.
ReplyDelete