வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் எனக்கு பிடித்த மற்றொரு காமிக்ஸ் ஹீரோ பற்றி கூறி உள்ளேன்
அவர் தான் ராணி காமிக்ஸில் வந்த முகமூடி வீரர் பில்லி.
அவர் கதாபாத்திரம் எனக்கு சற்றே சோரோவை(Zorro) நினைவு படுத்தும்.
இவர் கதைகளுடைய சித்திரம் அருமையாக இருக்கும்.
அதுவும் அவர் பில்லியாக மாறி குதிரையில் பள்ளத்தாக்கில் இருந்து தாண்டும் இடம் மிக அருமையாக இருக்கும்.அப்பொழுது அவர் பேசும் வசனம் நினைவில் இல்லை.பற பற என முடியும் என நினைவு.
அவரது குதிரையும் கருமை நிறமாக கம்பீரமாக இருக்கும்.சற்றே ஹீரோவை நினைவு படுத்தும்.
பில்லி பற்றிய அறிமுகம்:
ஓர் இரவு புத்தகத்தில் வந்த பில்லி கதை கழுகுக் கோட்டை.
எனக்கு அவர்கதைகளிலேயே மிகவும் பிடித்தது முரட்டுக்காளை தான்.
கதையில் வரும் காளை பார்க்க அழகாக மிகவும் கம்பீரமாக இருக்கும்.
இது போல குரும்பதிவுகள் இட எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
கதையை முழுவதும் சொல்லும் நீள பதிவுகள் சற்றே போர் அடிக்கும் என நினைக்கிறேன்.
இது தவிர வேறு பில்லி கதைகள் வந்திருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.
Hi Krishna, ராணி காமிக்ஸ் பொருத்தவரை என்னுடைய விருப்பங்களும் உங்களுடையதும் ஒன்றாகவே உள்ளதை மீண்டும் பார்க்கிறேன். ராணி காமிக்ஸின் கெளவ்பாய் கதைகள் என்ற உடன் என் ஞாபகம் வருவது பில்லி தான். தில்ஷான் (தில்லான்??) என்று ஒரு ஹீரோ வருவாரே..
ReplyDeleteபி-கு - பதிவுகளை இன்னும் கொஞ்சம் விபரமாக வழங்கினால் நன்றாய் இருக்கும்.
வருகைக்கு நன்றி சிவ்.
Deleteஉண்மை தில்லான் என ஒருவர் உள்ளார்.
அவரது கதைகள் பெரும்பாலும் ஆக்சன் குறைவாக இருக்கும்.
எனக்கும் அவரது கதைகள் அவ்வளவு இஷ்டம் கிடையாது.
அவர் தவிர பக் ஜோன்ஸ்,கிட் கார்சன் மற்றும் பல கௌபாய் கதைகள் உள்ளன.
// பதிவுகளை இன்னும் கொஞ்சம் விபரமாக வழங்கினால் நன்றாய் இருக்கும்.//
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே.
போன வாரம் ஊருக்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள்.கையில் புத்தகம் இல்லாததால் விரிவாக இட முடியவில்லை.
வரும் நாட்களில் தனி புத்தக பதிவுகள் இடும் சமயம் சற்று விரிவாக இடுகிறேன்.
ப்திவு அருமை.
ReplyDeleteமுழு புத்தகமும் SCAN செய்து விட்டீர்களா? இருந்தால் பகிர்ந்து கொள்ள முடியுமா? நன்றி
என்னிடம் ஸ்கேனர் இல்லை தலைவரே.ஆகையால் அனைத்தும் கேமராவில் எடுத்த புகைப்படங்களே.
Deleteஅளவில் சிறிதாக இருந்ததால் டைகர் கதைகளின் புகைப்படங்கள் எடுத்து வந்துள்ளேன்.
இன்னும் 3 கதைகள் உள்ளன விரைவில் இடுகிறேன்.
ஓர் இரவு அட்டை கலக்கல்!!! :)
ReplyDelete//அனைத்தும் கேமராவில் எடுத்த புகைப்படங்களே//
nice...!!!
Thanks Karthik.
Deleteபதிவு சுருக்கமாக முடிந்து விட்ட பீலிங். முக மூடி வீரர் பில்லி - அறிமுகப் படலம் என்று தலைபிட்டு இருக்கலாம்.
ReplyDelete//கதையை முழுவதும் சொல்லும் நீள பதிவுகள் சற்றே போர் அடிக்கும் என நினைக்கிறேன்.//
நிச்சயமாக எங்களுக்கு இல்லை. :-) உங்களுடைய பதிவுகளின் தனித் தன்மையே அதுதான்.
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ராஜ்.
Deleteசுருக்கமாக அறிமுகம் செய்து உள்ளீர்கள், ஆனாலும் நிறைவாக உள்ளது. இப்படியே தொடரலாம். பில்லி அவர்களின் கதைகளில் முரட்டு காளை மட்டும் படித்து உள்ளேன். வேறு கதைகள் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ReplyDeleteஊக்குவிப்புக்கு நன்றி ராஜ்.அவர் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது முரட்டுக்காளை தான்.
Delete
ReplyDeleteஅனைத்தும் கேமராவில் எடுத்த புகைப்படங்களா? மிக தெளிவாக உள்ளன.
ஸ்கானர் இருந்தால்!!!!!!!!! கேட்கவே வேண்டாம் போலிருக்கிறதே.
வருகைக்கு நன்றி நண்பரே.அனைத்தும் சோனி SLR கேமராவில் எடுத்த புகைப்படங்கள்.
Deleteஇளம் பிராயத்தில் என்னை கவர்ந்த ஹீரோக்களுள் முகமூடி வீரன் பில்லி ஒரு துரவ நட்சத்திரம் என்று சொல்லலாம். இன்றும் மங்காமல் மனவானில் ஒரு மூலையில் மின்னிக்கொண்டிருக்கிறார். அவருடைய கருப்பு குதிரையும் முகமூடியும் ஒரு குகைக்குள் எப்போதும் மறைவாக வைக்கப்பட்டு இருக்கும்.அந்த குகை ஒரு பெரிய பள்ளத்தாக்கை தாண்டி இருக்கும். "கமான் புயாலாய் பற " என்ற ஒரு டயலாக்குடன் குதிரை ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரத்தை தாண்டுவது அவற்றின் TRADEMARK SHOT. கதையின் தொடக்கத்தில் ஒரு சாதாரண பண்ணை வேலையாள் போன்று introduction உடன் வரும் ஜிம்மி ??( பெயர் ஞாபகம் இல்லை ) வழக்கம் போல ரௌடிகளின் கொட்டத்தை அடக்க சூப்பர் ஹீரோ பில்லியாக மாறி பின்னிஎடுப்பதாக கதையின் போக்கு இருக்கும்.
ReplyDeleteஅவரின் ஓர் இரவு ஒரு சூப்பர் டூப்பர் அக்சன் கதை. ஒரு பள்ளியை அதன் குழந்தைகள் ஆசிரியை என அனைவரையும் hostage ஆக எடுத்த ரௌடிகள் கை ஓங்கியிருக்க அந்த இளம் ஆசிரியையின் உதவியுடன் பில்லி அனைவரையும் காப்பாற்றுகிறார்.
இன்னொரு கதையில் தங்க வேட்டையாளர்களை சுற்றி வரும்.தரையில் போடப்பட்டுள்ள மர பலகையின் சிறு துவாரத்தில் ஒரு coin ய் போட்டு அடியில் தண்ணீர் இருப்பதாய் கண்டுபிடிப்பார் அல்லவா ???
ஹம்ம்ம் refreshing golden old memories! நன்றி கிருஷ்ணா!
உங்களுடைய நினைவுகளை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.
Deleteநண்பா எனக்கு இப் புத்தகங்களை முழுமையாக வாசிக்க உதவி செய்ய முடியுமா? ஏனென்றால் நான் ஒரு ராணி காமிக்ஸ் பிரியன் . நான் பல வருடங்களாக ஐரோப்பாவில் வசிப்பதால் இப் புத்தகங்களை பார்க்க கூட முடியவில்லை .
ReplyDeleteமுயற்சி செய்கிறேன் நண்பரே.
Deleteஎன்னிடம் ஸ்கேனர் இல்லை மற்றும் முழு புத்தகத்தையும் படம்பிக்க நேரமும் இல்லை.
புத்தகங்கள் அனைத்தும் எனது சொந்த ஊரில் உள்ளது.
இருந்து வரும் நாட்களில் முயற்சி செய்கிறேன்.
இடைப்பட்ட வேலையில் நண்பர் ஜானி ராணி காமிக்ஸின் வெளியீடு எண் : 4 முழு ஸ்கேன் அவரது தளத்தில் கொடுத்துள்ளார்.படித்து மகிழுங்கள்.
http://johny-johnsimon.blogspot.in/2012/12/04.html
மேலும் http://lion-muthucomics.blogspot.in தளத்தை பாருங்கள்.
இப்பொழுது லயன் குழுமத்தினர் உலகத்தரத்தில் காமிக்ஸ் வெளியிடுகின்றனர்
வெளிநாட்டு சந்தாக்களும் எற்றுகொகின்றனர்.
நீங்கள் இந்த தொலைபேசி என்னை - 04562272649 தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளுங்கள்.
அல்லது lioncomics@yahoo.com கு மினஞ்சல் அனுப்புங்கள்.
சாரி பாஸ் சில முக்கியமான வேலைகளால் இங்கே வருவது தாமதப்பட்டு விட்டது.
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த "பில்லியின்" பதிவிற்கு நன்றி. அருமை.
வருகைக்கு நன்றி சௌந்தர்.
Deleteநல்லது நண்பா தங்கள் முழுப் பதிவை எதிர் பார்க்கி றேன்
ReplyDeleteமீண்டும் நன்றிகள் http://johny-johnsimon.blogspot (link) இக்கு