Saturday, August 25, 2012

Director Myskin's Mayavi..


வணக்கம் நண்பர்களே,

நான் இன்டர்நெட்டில் உலாவிய போது என் கண்ணில் சிக்கியது.
இதனை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த குறும் பதிவு.
இந்த புகைப்படம் யாரை போல் உள்ளது என்பதை நான் கூற தேவையில்லை.
மிஸ்கின் மீண்டும் ஒருமுறை தான் வேதாளரின் ரசிகர் என்பதை நிருபித்துள்ளார்.
மிஸ்கின் அனைத்து பேட்டிகளிலும் கவனமாக எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து பாருங்கள் என்று கூறுகிறார்.
படம் வெற்றி பெற்றால் நமது காமிக்ஸும் வெற்றி பெற்றதாகவே கூறலாம்.




புகைப்படம் விகடன் சினிமாவில் இருந்து எடுத்தது.
அவர்களுக்கு நன்றி.

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.


13 comments:

  1. வாக்கர் ஜீவா! ;)

    ReplyDelete
  2. முகமுடி வீரர் மாயாவி போல் உள்ளது..படம் நன்றாக வந்து இருக்கும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  3. கலக்குவார் இந்த முகமூடி பார்த்துகிட்டே இருங்க! ஐந்தாவது பாகம் வரை செல்ல போகுது நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் நண்பரே.

      Delete
  4. இதுவரை நான் அறியாத தகவல். 14 வரிகளில் இருந்தாலும், ஆர்வத்தை ஏற்படுத்தும் பதிவு. நன்றி கிருஷ்ணா.

    நடிகர் சூர்யா என்று நினைக்கின்றேன், சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோ கேரக்டரில் நடிக்க ஆசைப்படுவதாக வெகு நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில் அவரின் ஆசையை சொல்லியிருந்தார். அந்த காலகட்டத்தில் அவருடைய ஆசை நிறைவேற வாய்ப்புகளே கிடையாது என்று நினைத்திருந்தேன். பின் சூர்யாவின் ”மாயாவி” பட விளம்பரங்களை பார்த்த போது, அவருடைய கெட்டப் மந்திரவாதி மாண்ட்ரேக்கின் முக அமைப்பினை நினைவுறுத்துவதாத இருந்தது. ஆனால் அந்த படத்தின் கதைக்கும், மாயாவிக்கும், மாண்ட்ரேக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பேட்டி வெளிவந்தது, ஹ்ரிதிக் ரோஷனின் ”க்ரிஷ்” படம் வருவதற்கு முன்போ அல்லது அந்த சமயத்திலோ.

    இதற்கு பிறகு க்ரிஷ் (2006) படத்தைப் பற்றிய விவரங்களை பத்திரிகையில் படித்த போதும் அந்த படம் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் என் மனதில் ஏற்படுத்தவில்லை. பின் ஒரு சமயம், க்ரிஷ் படத்தை கேபிள் ஒலிபரப்பில் பார்க்க நேர்ந்த போது, அந்த படத்தின் கதை அமைப்பு, என்னை ஆச்சரியப்பட வைத்தது.

    க்ரிஷ் படத்தை பார்த்ததும், இந்தியாவில் சூப்பர் ஹீரோ கதைகளை உருவாக்க முடியாது என்ற எனது கருத்து உடைந்து விட்டது. சூப்பர் ஹீரோ கதைகளை இந்தியாவில் உருவாக்க வேண்டும் எனில், மேலை நாடுகளைப் போல் அல்லாமல் சிறிது வித்தியாசமாக இந்தியாவுக்கு ஏற்றபடி மாற்றி சிந்தித்தால், அது சாத்தியப்படும் என்று என் கருத்து மாற்றம் கொண்டது.

    பேட்மேனின் முகமூடியில் தலைப்பாகத்தை நீக்கிவிட்டால் அதுவே, மிஷ்கினின் முகமூடி.

    எதிர்பார்ப்பு இல்லாமல் படத்தை பாருங்கள் என்று மிஷ்கின் கூறுவதன் அர்த்தம், வேறு சூப்பர் ஹீரோ கதைகளுடன் இந்த கதையை ஒப்பிட வேண்டாம் என்ற அர்த்தத்தில் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

    படத்தின் தலைப்பிலும், உடை, மோதிரம் போன்ற சில விஷயங்களிலும், சரக், சரக் என்று வந்து மாயமாகும் வேகத்திலும், இன்னும் சில வேதாளரின் செயல் திறன்களைப் போல மட்டுமே, நமது வேதாளருக்கும், மிஷ்கினின் முகமூடிக்கும் ஒற்றுமை இருக்கும் என்று நினைக்கிறேன்.

    இத்துடன் என் எண்ண ஓட்டத்தை நிறுத்திக் கொள்கிறேன், இல்லையென்றால், பதிவைவிட பெரிய பின்னூட்டம் இட்ட கொடும் பாவத்திற்கு மிண்டும் ஒரு முறை ஆளாகிவிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. க்ரிஷ் படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கான கதை இருக்கும்.
      அதனால் படம் வெற்றி அடைந்தது.
      மற்றும் கிராபிக்ஸ் உம் நன்றாக இருக்கும்.
      இந்த இரண்டு விசயத்திலும் தோற்றதால் தான் ஷாரூகால் Ra-one இல் ஜெயிக்க முடியவில்லை.

      மிஸ்கின் தனது ஒரு பேட்டியில் நமது சூப்பர் ஹீரோ மதுரை,சென்னை அளவு எதிர் பாருங்கள் என்று கூறுகிறார்.
      உண்மையான வார்த்தைகள்.பார்க்கலாம்.
      எப்பொழுதும் ஹீரோ விற்கு பின்னால் பல உயரமான கட்டிடங்கள் காண்பிப்பார்கள் ஹாலிவூடில்.
      நமது ஒர்ருக்கு ஏற்றார் போல நமது ஹீரோவிற்கு பின்னால் பல வேப்பமரங்களை கான்பிகிராராம்.
      அது தான் நம் ஊரில் அதிகம் இருக்கிறது.

      Delete
  5. காமிக்ஸ் உலகம் வளமான பாதைக்குத் திரும்ப இந்தத் திரைப்படம் ஏதாவது ஒரு வகையிலாவது உதவி செய்யுமானால், நம்மைப்போன்ற காமிக்ஸ் பிரியர்கள் இயக்குனர் மிஷ்கினுக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்களாவோம்.
    மக்களிடம் காமிக்ஸ் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் 'முகமூடி'யை எதிர்நோக்கி நானும்...

    ReplyDelete
  6. // படம் வெற்றி பெற்றால் நமது காமிக்ஸும் வெற்றி பெற்றதாகவே கூறலாம். //

    உண்மை உண்மை நண்பரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete
  7. எப்படியாவது 31-8-2012 அன்னைக்கு காலைக்காட்ச்சி படம் பார்த்துட்டு வந்து உடனே பதிவு போட்டுடுங்க நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. மன்னித்துக்கொகுங்கள் நண்பரே.அன்று அலுவலக பணி இருப்பதால் முடியாது.
      குறைந்தது ஒரு வாரம் என்னால் பார்க்க இயலாது.
      விதி பயன் என்ன செய்வது.

      Delete