Thursday, August 16, 2012

காமிக்ஸ் புதையல் XII

வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.
என்னிடம் இருக்கும் மீதமுள்ள லயன் மற்றும் முத்து காமிக்ஸ்களின் அட்டை படங்கள்.


இதில் இரத்தப்படலம் பெரிய புத்தகங்கள்,ஜேம்ஸ் பான்ட் 007 காமிக்ஸ்கள் மற்றும் பல புத்தகங்கள் உள்ளன. 


இதில் ஹாலிவூடில் ஜாலி அருமையான நகைச்சுவை கதை.
ஒரு வீரனின் கதை சிறப்பான ராணுவ கதை.
புயல் படலம் மற்றும் ரவுடி ராஜ்ஜியம் இரண்டும் ரெக்ஸ் கதை.
ரோஜரின் நடக்கும் சிலை மர்மம்.
Wild West  மின்னல் ஜெர்ரி.
CID சார்லசின் ஒரு விபரீத விதவை.

அனைத்துமே நல்ல கதைகள்.
முதல் மோதலாக பெரிய சைசில்(நாடோடி ரெமி தவிர்த்து)  இரத்தப்படலம் வந்த பொது மிகவும் சந்தோசமாக இருந்தது.
ஹாலிவூடில் ஜாலி அந்த செவிந்திய தலைவர் படம் எடுக்கும் விதம் படிக்கும் போது சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.இறுதில் அவர் எடுத்த சோகபடம்  பெரிய சிரிப்பு படமாக ஹிட் அடித்துவிடும்.

ஜேம்ஸ் பான்ட் பறக்கும் பாவை படலம் தவிர மற்றகதைகள் அனைத்தும் ஏற்கனவே ராணி காமிக்ஸில் வந்ததாக நினைவு.(நன்றி-விஸ்வா.)
 காசினோ ராயல் திரைப்படத்தின் காமிக்ஸ் வடிவம் சூதாடும் சுறாவளி.












அவ்வளவுதான் நண்பர்களே.

மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

21 comments:

  1. நல்ல கலெக்ஷன்! அட, டபுள் த்ரில் ஸ்பெஷலுக்கு முன்பே ஒரு த்ரில் ஸ்பெஷலா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே முன்பே இரண்டு வந்துள்ளது என நினைக்கிறன்.
      என்னிடம் ஒன்று தான் உள்ளது.

      Delete
  2. "சூதாடும் சுறாவளி" படித்து உள்ளேன் நண்பா, அதை கசினோ ராயல் படமாக பார்த்த போது நன்றாக இருந்தது..
    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே.அந்த படம் பார்த்தபின் எங்கள் நண்பர்கள் குழு அதே போல விளையாடினோம்.
      பல நாட்கள் எங்கள் பொழுது போனது.

      Delete
  3. Replies
    1. பார்த்துவிட்டேன் நண்பரே.நல்ல பதிவு.

      Delete
  4. நீங்கள் இரத்தப்படலம் அட்டைகளை உங்களின் அடுத்த காமிக்ஸ் புதையல் பதிவில் இட்டு இருக்கலாம். அப்போதுதான் காமிக்ஸ் புதையல் XIIIஇல் XIIIஎன்று ரைமிங் ஆக இருந்து இருக்கும்.

    Jokes Apart, நல்ல கலெக்ஷன்.

    By The Way, //ஜேம்ஸ் பான்ட் பறக்கும் பாவை படலம் ஏற்கனவே ராணி காமிக்ஸில் வந்ததாக நினைவு.//

    இந்த ஒரு கதையை தவிர இந்த போட்டோவில் இருக்கும் மற்ற அனைத்து ஜேம்ஸ் பான்ட் கதைகளும் ராணி காமிக்ஸில் வந்து இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. திருத்தியதற்கு நன்றி நண்பரே..
      சற்று மாறிவிட்டது.
      பதிவிலும் திருத்திவிடுகிறேன்.

      Delete
  5. Nice collection நண்பரே :))
    .

    ReplyDelete
  6. By comparing with your comics collection posts, I can estimate, how much I have lost. Nice post. Thank you & keep it up.

    ReplyDelete
  7. மன்னித்து கொள்ளுங்கள் நண்பரே உங்கள் பதிவிலும் ,சௌந்தர் பதிவிலும் பெரிய பதிலை போட வேண்டும் என யோசித்து கொண்டிருந்தேன் ,மனதில் ஒன்றும் ஓடவில்லை அதற்காக காத்திருந்தேன் ,கண்டிப்பாக உங்கள் இருவரது ப்ளோக்கும் தினம்தோறும் என்னால் கிளிக்கிட பட்டு கொண்டுதானிருக்கிறது ,நாள் தவறாமல் நெடிய பதிலுடன் உங்களை பிடிக்கிறேன் ..............தொடர்ந்தேன்,தொடர்கிறேன் தொடர்வேன் என்றென்றும் ......

    ReplyDelete
    Replies
    1. எனது வேண்டுகொளுகிணங்கி பின்னுட்டம் இட்டதற்கு நன்றி நண்பரே.

      Delete
    2. //பெரிய பதிலை போட வேண்டும் என யோசித்து கொண்டிருந்தேன் ,மனதில் ஒன்றும் ஓடவில்லை அதற்காக காத்திருந்தேன்// ஆளையே காணோமே எங்க இரும்புகைக்கு ஓவரா மின்சாரம் supply பண்ணிட்டீங்களோன்னு நினைச்சுட்டேன் :)

      Delete
  8. ஊரிலிருந்து திரும்பியவுடன் இடும் பின்னோட்டம் நண்பா. தமாதமாகிவிட்டது சாரி.

    வழக்கம் போல் அருமையான collection . காணாமல் போன joker புத்தகம் என்னிடம் மிஸ்ஸிங்.

    ஒரு வீரனின் கதை, நடக்கும் சிலை மர்மம் கிளாசிக் ஸ்டோரீஸ் நண்பா .

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பா.ஒரு மாந்த்ரீகனின் கதையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

      Delete
    2. //மாந்த்ரீகனின் கதை//
      உண்மைதான். எப்படி அதைக் குறிப்பிட மறந்தேன். மறக்க முடியாத கதை & சித்திர விருந்து.

      Delete
  9. என்னிடம் இல்லாத பல புத்கத்தின் புதையல் உங்களிடம் உள்ளது ..... கொடுத்து வைத்த ஆளய்யா நீங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னுடதிர்க்கும் பாராட்டிற்கும் நன்றி ஸ்டாலின்.
      உங்களுடைய பொக்கிஷத்தை compare பண்ணும் போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை.

      Delete
  10. irumbukai mayavi in other planet people attacking Earth comic from Muthu comics, a4 in size , some Diwali release it was in 1980s, forgot the name , do u have that

    ReplyDelete