Tuesday, October 2, 2012

காமிக்ஸ் புதையல் XVII - Rani Comics Collection - Part 2


வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது 
பகுதியை பார்க்க போகிறீர்கள்.

முதல் பாதியில் பெரும்பாலும் ஜேம்ஸ் பான்டையே  நம்பி உள்ளார்கள்.

இடையில் நமது ஜார்ஜ் ஜானியாக பத்தாவது இரவில் வெளிவந்துள்ளார்.

மேலும் தில்லானின் வேட்டை நாய்,ராயனின் கொலைகார 
கேப்டன்,பக் ஜோன்சின் துப்பாக்கி மங்கை,லேடி ஜேம்ஸ் பாண்ட் 
தோன்றும் நிழல் மனிதன்,தியோவின் சூப்பர் கார்,மன்னர் 
பீமாவின் மண்டை ஓட்டு மர்மம் ஆகிய கதைகள் வந்துள்ளன.

இரண்டாவது பாதியில் அதாவது 200 புத்தகங்களை தாண்டிய பிறகு மாடஸ்டி,ரிப் கிர்பி,மாயாவி,ப்ளாஷ் கார்டன்,மாண்ட்ரேக் ஆகியோரை அறிமுகபடுத்தி உள்ளனர் 

இவர்கள் அந்தகால கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.

இடைஇடையில் வந்த வெஸ்டேர்ன் காமிக்ஸ் கதைகள் அனைத்துமே நன்றாக இருக்கும்.(கில்லாடிக்கு கில்லாடி,கொலைகார நகரம்)













எனக்கு நினைவில் இருக்கும் சில கதைகளை பற்றி இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தில்லானின் வேட்டை நாய் ஒரு வித்தியாசமான கதை.
தில்லானின் நண்பன் விளம்பரத்தை பார்த்து ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைகளுக்கு வாழ்கை தருவதாக கடிதம் அனுப்ப அதனை நம்பி அந்த குண்டு அம்மையார் தனது குழந்தைகள் மற்றும் அவரது நாய் சகிதம் அந்த ஊருக்கு வருகிறார்.

அந்த அம்மையாரை நேரில் பார்த்ததும் அந்த ஆள் ஜகா வாங்குகிறார்.
தனது பெயரையே மாற்றி சொல்கிறார்.வேறு வலி இல்லாமல் அவர்கள் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு வீட்டில் தங்குகிறார்கள்

இதற்கிடையில் சில கொள்ளைகாரர்கள் அந்த வீட்டில் தங்கி அவர்களை ப்ளாக்மெயில் செய்வார்கள்.

இதில் இருந்து அவர்களை எப்படி தில்லான் காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.இறுதியில் அந்த அம்மையார் தனது கணவருடன் சேர்ந்துவிடுவார்.

லேடி ஜேம்ஸ் பாண்ட் தோன்றும் நிழல் மனிதன் ஒரு சிலை கடத்தல் கும்பலை பற்றிய கதை.

நம்ம சார்லி சுனிலாக அறிமுகம் ஆனா நான் யார்.

ஒரு முரட்டுக்காளை கடதுபவர்களிடம் இருந்து பில்லி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முரட்டுக்காளை கதையில் பார்க்கலாம்.

தியோவின் சூப்பர் காரின் அறிமுக கதை.

மாடஸ்டியின் மர்ம கோட்டை நமது முத்துவில் வந்துள்ள மரண கோட்டை தான் என நினைக்கிறன்.

டிஸ்கோவின் அழகி வேட்டை மற்றும் பணப்பெட்டி மறைந்த மாயம் இரண்டும் நல்ல கதைகள்.அழகி வேட்டை தான் ஒற்றை கண்ணாடி யாக மாலைமதி யில் வந்துள்ளது.

மன்னர் பீமாவின் மண்டை ஓட்டு  மர்மம் ஒரு மந்திரவாதியின் காலத்தில்  பயணம் செய்ய கூடிய மண்டை ஓட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை பீமா எப்படி முறி அடிக்கிறார் என்பதே.

மண்டை ஓட்டு மாளிகைக்கு திருட வரும் கொள்ளையர்களை எப்படி மாயாவி முறியடித்தார் என்பதை கதை.


கொள்ளையர்கள் நிறைந்த முதலை தீவை எப்படி மாயாவி நிர்மூலமாகுகிறார் என்பதை முதலை தீவு கதையில் பார்க்கலாம்

ஒரு மாய முரசின் மூலம் அனைவரையும் மயக்கி ஆட்டுவிக்கும் ஒரு மோச காரனை முறியடிக்கும் கதை மாய முரசு.அக்கதை மாயாவி ஆடும் நடனம் தான் ஹைலைட்.

ஒரு மயக்கும் மோகினியின் அக்ரமத்தை எப்படி மாண்ட்ரேக்கும் லோதரும் சேர்ந்து  முறியடிக்கிறார்கள் என்பதே மயக்கும் மோகினியின் கதை.

நடுகடலில் ஒரு அயோகியனிடம் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் டயானாவை மாயாவி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே அதிரடி பெண்ணின் கதை.

அநியாயம் புரியும் ஒரு காட்டுவாசி இனத்தினரை எப்படி மாயாவி வழிக்கு கொண்டு வருகிறார் என்பதே சிலந்திவலை.

நண்பர்களே இந்த புத்தகங்களை  பற்றிய உங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .
கிருஷ்ணா வ வெ .

46 comments:

  1. இங்கே இருக்கும் புத்தகங்களில் 90 வீதம் நான் கண்ணால் கண்டதே இல்லை. நாங்கள் மாயாவி உச்சத்தில் இருக்கும் போது காமிக்ஸ் படித்த கும்பலாக்கும்.

    அட்டைப் படங்களைப் பார்க்கும் போது மிகைப்படுத்தாமல் அழகாக அந்தக்காலத்திலேய செய்திருக்கின்றார்கள் என்பது வியப்பழிக்கின்றது. அதிலும் குறிப்பாக 'சதிகாரச் சாமியார்' அட்டைப் படம் அப்படியே தூக்கிச் சாப்பிடுகின்றது.

    hollywood.mayuonline.com

    ReplyDelete
  2. கலெக்ஷன் அதிரடி தொடரட்டும்.... ராணி காமிக்ஸ் லயன் முத்து என்று எதுவுமே உங்கள் சேகரிப்பில் குறைவு இல்லை போல :P

    ReplyDelete
    Replies
    1. குறைவும் இல்லை நிறைவும் இல்லை நண்பரே.
      அதுதான் நம்ம குறையை போக்க டைஜெஸ்ட் வருகிறதே.

      Delete
  3. பாதி இரவில் ஒரு பறக்கும் தட்டில் பல கில்மா காட்சிகள் வந்ததாய் நினைவு! ;)

    ReplyDelete
    Replies
    1. எந்த ஜேம்ஸ் கதையில் தான் இல்லை.
      அந்த விதத்தில் நாம் ராணி குழுமத்தினருக்கு கடமை பட்டிருக்கிறோம்.
      நம்ம லயன் குழுமத்தினரை போல கத்திரி போடுவதில்லை.

      Delete
    2. நல்ல நினைவாற்றல் கலக்குங்கள் :))
      .

      Delete
    3. இருந்தாலும் அழகியைதேடிக்கி ஈடு இணை வருமா ;-)
      .

      Delete
    4. True.But Someone has darked the Important spots with a pen in my book.

      Delete
  4. வழக்கம் போல் அருமையான "COLLECTION" + பதிவு நண்பா. சிலந்தி வலை, மாணவியைக் காணோம், முதலைத்தீவு, நள்ளிரவு 12 மணி, கொலைகார சாமியார், போன்றவற்றின் அட்டைப்படங்கள் என்றென்றும் பிடித்தவை ...

    மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி நண்பா.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை நண்பா.பொதுவாகவே ராணியின் அட்டை படங்கள் பல பல வென நன்றாகவே இருக்கும்.

      Delete

  5. "மர்ம தீ" நல்ல சஸ்பென்ஸ் கதை, நான் படித்து உள்ளேன் நண்பரே..பண்ணையில் யார் தீ வைத்தார்கள் என்பதை பற்றி துப்பறியும் கதை...யூகிக்க முடியாத முடிவு...
    மற்ற கதைகள் சிலவற்றை படித்து உள்ளேன்...ஞாபகம் வர வில்லை.. :(
    நல்ல தொகுப்பு...

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராஜ்.

      Delete
  6. அருமையான தொகுப்பு நண்பரே,இதற்க்கு பின்னர்தான் ராணி வலுவிழுக்கதுவங்கியது..................

    ReplyDelete
  7. என்ன சார் நடக்குது இங்கே ஒருபக்க ஒரு பக்கம் சௌந்தர் அண்ணாச்சி மொத்த பார்வதி சித்திரக்கதைகள் பற்றி போட்டு தாக்கியுள்ளார்

    நீங்கள் ராணியின் இரண்டாவது செஞ்சுரி போட்டு தாக்கி உள்ளீர்கள்
    தொடருங்கள் உங்கள் தாக்குதல்களை ;-)
    .

    ReplyDelete
  8. aaga enadu palaya ninivugalai kilarivittu vittergal.intha veliyeetu samayangalilthan nanum,enadu pen nanbiyum aaluku pathi kasu potu ranicomics bookai kovai il vangi kondu irunthom.ippothu anaithu bookum missing. ( antha nanbiyum )

    ReplyDelete
  9. அடடே!!! இரும்புக்கை மாயவியை இத்தனை நால் கவனிக்கம போய்ட்டோமே,,

    இனி தொடர்ந்து வருவோம்ல,,

    எங்கப்பா அந்த பிந்தொடர்வோர் பட்டி..?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்தொடர்வதற்கும் நன்றி நண்பரே.
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

      Delete
  10. நல்ல கலெக்ஸ்சன்!
    கால யந்திரத்தில் நினைவுகளைப் பின்னோக்கி செலுத்திடும் பிரபலமான அட்டைப்படங்கள்.
    இப்பதிவுகளை ராணி காமிக்ஸின் படைப்பாளிகள் பார்த்தால் பரவசமடையக்கூடும்!

    ReplyDelete
  11. Hi, where can i get these books????

    ReplyDelete
  12. plz give the book as pdf

    because we love so much these rani comic books......please friend

    ReplyDelete
  13. can anyone please give these books in pdf format. or tell me is these books still available in any stores?

    ReplyDelete
    Replies
    1. Please visit our friends blog.
      He is doing a wonderful job.

      http://johny-johnsimon.blogspot.in/

      Delete
  14. you know guys, the logo of 'rani comics' designed by me father.. he is 91 years old now :)

    ReplyDelete
    Replies
    1. I was really happy to know about this from his comment in my Blog.--Thanks Viji paul

      Delete
  15. Hi all
    i understand that Kannadi Viswanathan had translated many of the Rani- Ponni comics from Tamil to Malayalam- and they were really popular in Kerala. Being a Keralite, I woudl like to relive the old nostalgia. I am also on work on an article about why chitrakatha sahitham demised in Kerala and other parts of South India- while it still is alive and bustling in Tamil Nadu. can anybody give me details about Kanandi Viwanathan- or if possible scan a few copies of the malayalam version covers. I would like to get information in particular about CID Moosa..

    ReplyDelete
    Replies
    1. Oopss...my name is Narayan Radhakrishnan- and my email ID is advnarayan at gmail dot com

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  16. I really happy to see these books. I too read these books in my childhood. Also I often discuss about Mayavi "Disum" "Doomil". Thank you for sharing it. Most of the books I have read.

    ReplyDelete
  17. nice to see the collections back... read almost everything of them...

    ReplyDelete
  18. i am interested in buying rani comics and other comics too, if there is anyone who is interested to sell these comics, pls do contact me, varunprasath@gmail.com, BEST PRICE ASSURED.

    ReplyDelete
  19. where can i download them?

    ReplyDelete
  20. hai கிருஷ்ணா வ வெ i am kriesh form EU. i want to talk to u about books details. can u give your TP NO

    ReplyDelete
  21. hai கிருஷ்ணா வ வெ i am kriesh form EU. i want to talk to u about books & i wan to by . can u give your TP NO My Email id ( kkrieshna@yahoo.com)

    ReplyDelete
  22. i need all these books. where can i get?

    ReplyDelete
  23. Hi, A great collection you have. I also grew up reading these books. Such great memories. I have been trying to see if I can buy these books anywhere. Do you know any place that sells this used books?

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete