வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் நாம் பல இந்திய மொழிகளில் (ஆங்கிலம் இந்திய மொழி அல்ல) வந்த இந்திய தயாரிப்பான டைமண்ட் காமிக்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.
என்னிடம் இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் தாராபுரத்தில் இருக்கும் ஒரு லென்டிங் லைப்ரரியில் இருந்து வாங்கியவை.
நான் படித்தது முழுவதும் ஆங்கில பள்ளி கூடங்களில் தான்.ஆகையால் கண்டிப்பாக ஆங்கில காமிக்ஸ்கள் வாங்கி படித்து வீட்டில் உள்ளவர்களை சந்தோசபடுத்த வாங்கி பின்பு மிகவும் பிடித்து போன காமிக்ஸ்களில் ஒன்றாகியது.அனைத்தும் மிகவும் எளிய ஆங்கிலத்தில் இருக்கும்.புரிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும்.
பலதரப்பட்ட நாயகர்களை அவர்கள் உருவாகினார்கள்
முதலில் மற்றவர்கள் போல வெளிநாட்டு தயாரிப்புகளான
ஜேம்ஸ் பான்ட்
பேண்டம்
மாண்ட்ரேக்
ஆகியோர்களை முறைப்படி லைசென்ஸ் வாங்கி வெளியிட்டனர்.
பின்பு இங்கேயே பல கதாபத்திரங்களை உருவாகினார்கள்.
அவர்கள்
Faulad Singh - இவர் ஒரு விண்வெளி சாகச வீரர்,இவருடன் ஒரு குள்ளன் வேறு இருப்பான்.இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் சாகசங்களே கதைகள்.எனக்கு இவருடைய கதை அவ்வளவாக பிடிக்காது.
அக்னிபுத்ரா - அபே - இவர்கள் இருவரில் அக்னிபுத்ரர் வெளி கிரகத்தில் இருந்து வந்தவர்.அபே இங்கு இருப்பவர்.இருவரும் சேர்ந்து தீமையை எதிர்த்து போராடுவார்கள்.இவர்களுடைய கதைகளை ராணி காமிக்ஸ் நிறுவத்தினர் கூட கடைசி காலகட்டங்களில் வெளியிட்டனர்.
டைனமைட் - இவர் ஒரு ஆக்சன் ஹீரோ.
மகாபலி சாகா - இவர் டார்சான் மற்றும் நம்ம மன்னர் பீமா போல.காட்டில் வாழ்கிறார்.அங்கு வரும் கொள்ளையர்கள் மற்றும் அங்கு இருக்கும் சில கெட்ட காட்டுவாசிகளை எதிர்த்து போராடுவார்.
Tauji & சாச்சா படீஜா - இவர்கள் இருவருமே தாத்தாக்கள்.இவர்களுடை பெரும்பாலான கதைகள் பில்லி சூனியம் மற்றும் ஆவிகளை எதிர்த்து இருக்கும்
லம்பு - மோட்டு - இந்த சகோதரர்கள் நமது இரட்டை வேட்டையர்கள் போல.எனக்கு இவர்களுடைய கதைகள் மிகவும் பிடிக்கும்.
இவை தவிர பிரபல pran's என அழைக்கப்படும் பிரான் குமார் ஷர்மா அவர்களால் உருவாக்கப்பட்ட காமிக்ஸ் தயாரிப்புகளை வெளியிட்டார்கள்.
அவரை பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.
மற்றும் டைமண்ட் காமிக்ஸ் பற்றிய தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
அவைகள் அனைத்துமே நகைச்சுவை நிறைந்தவைகளாக இருக்கும்.
பில்லூ - இவர் ஒரு வாலிபர்.இவர் மேலை நாடுகளில் பிரபலமான ஆர்ச்சியை போல இருப்பார்.பெண்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.
ராமன் - இவர் ஒரு திருமணமானவர்.ஒரு கணவன் மனைவி இடையில் நடக்கும் நிகழ்சிகளை நகைச்சுவையோடு கூறியிருப்பார்.
சாச்சா சௌதரி - இவர் மிகவும் பிரபலமானவர்.இவரது மூளை கணினியை விட வேகமாக இயங்கக்கூடியது எனபது பழமொழி.இவருடன் வெளிகிரகத்தை சேர்ந்த சாபு என்னும் கடோதகஜன் ஒருவனும் இருப்பான்.இவர்களுடைய முதல் எதிரி ராக்கா எனப்படும் ஒரு கொள்ளைக்காரன் தான்,
.
தாபு - இவரும் ஒரு வாலிபர்தான்.
பிங்கி - இவள் நம்ம சமத்து சாறு போல.குறும்புத்தனம் நிறைந்தவள்
ஸ்ரீமதி - திருமணமான ஒரு மேல் வர்கத்து பெண்மணி.அவர் செய்யும் பகடுகளை நகைசுவையோடு கூறியிருப்பார்.
இக்கதைகளை நீங்களும் படித்திருந்தால் உங்களுக்கு பிடித்த கதாபத்திரம் எது என பினனுட்டம் மூலம் கூறுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .
கிருஷ்ணா வ வெ.
டையமண்டில் ஓரிரு ஜேம்ஸ் பாண்ட் கதைகள் படித்திருக்கிறேன்! படங்களுக்கு அவர்களே வண்ணம் தீட்டியிருப்பார்கள்!
ReplyDeleteநான் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் மட்டும் படித்து இல்லை.
Deleteநான் படித்தவரை ஓரளவு நன்றாக இருக்கும்.
இந்த புத்தகங்களை இதுவரை படித்ததில்லை. இப்போது படிக்க ஆர்வம் மேலிடுகிறது. வலைத்தள பின்புல படங்கள் மிக அருமை!
ReplyDeleteவரவிற்கு நன்றி நண்பரே.
Deleteஇப்பொழுதும் இக்கதைகள் வருகின்றன.
வாய்புகிடைதால் படித்துபாருங்கள்.
நான் இதுவரை படித்ததில்லை.
ReplyDeleteஇப்படியொரு காமிக்ஸ் வருவது குறித்து கேள்விப்பட்டதுமில்லை. என்றாவது என் கைகளில் கிடைத்திடும்போது நன்றியுடன் உங்களை நினைத்துக்கொள்கிறேன்.
இப்பொழுதும் இக்கதைகள் வருகின்றன.
Deleteவாய்புகிடைதால் படித்துபாருங்கள்.
நல்ல collection நண்பா. (எல்லா ஹீரோக்களும் இருக்கிறார்கள் வேதாளர் எங்கே? ...).
ReplyDeleteமாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் நான் ராணியில் படித்தால் இதில் வாங்க எனக்கு தோனவில்லை நண்பா.
Deleteஒரு காமிக்ஸும் கேள்விப்பட்டதில்லை நண்பா..நமக்கு எங்காவது ஆன்லைனில் ஓசியில் கிடைத்தால் தான் அறிமுகம். இல்லாவிடின் இல்லை.. :)
ReplyDeleteநண்பா.இது வலைதளங்களில் கிடைக்காது.
Deleteஎங்காவது கிடைத்தால் படித்து பாருங்கள்.
ஒரு காமிக்ஸ விட மாட்டீங்க போல இருக்கு. வாங்கினது பெரிசு இல்ல இவ்வளவு காலம் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்களே. கிரேட்
ReplyDeleteநம்ம தான் காமிக்ஸ்னு எது கிடைத்தாலும் வாங்கிய காலம் ஆயிற்றே இத விட்ருவோமா.
Deleteஎனக்கு டைமண்டில் பிடித்த கதை சாச்சா சவுதரி தான்....கம்ப்யூட்டர் மூளை மாமா வாச்சே.
ReplyDeleteபிற்காலத்தில், சபு போன்ற நபர்கள் ஒரு சாத்தியமில்லாத விஷயம் என்று விலகியது தனி கதை :D
அது சரி தான் கோவத்தினால் மாறும் ஹல்க் சாத்தியப்பட்டு பிடிக்கும்,ஆனால் வெளி கிரஹத்தில் இருந்து வந்துள்ள சாபு பிடிக்காது :P
Deleteகருத்திடும் போதே இப்படி எதிர்மறை கருத்து வர வாய்ப்புள்ளது என்று நினைத்தேன். :D
Deleteஹல்க் போன்ற கதைகளில், பாண்டசி என்ற கதைகளன்களையும் தாண்டி மனநிலை எண்ண போராட்டம் போன்ற புதிய களன்களை நுழைக்க சாத்தியமானது, பல காலங்களாக அதில் வேலை செய்த ஆசிரியர் கூட்டணிகளின் தயவால். வெகுஜன ரசிகர்களை அவை கவர்ந்ததற்கும் அதே காரணம்.
இதே நிலைமை சபுவுக்கு வராததே, அதன் பிரபலம் மங்கி போனதற்கு காரணம். ஆரம்பம் தொட்டு ஒரே கர்த்தா, அவர் மனதில் தோன்றிய ஒரு பரிணாமத்தில் மட்டுமே சபுவை கொண்டு சென்றார். ஒரு வயதிற்கு பின்பு அந்த கதைகலனுடன் ஒற்றி பயணிக்க முடியவில்லை
அதே போல ஹல்க் கதைகளில் பல மொக்கைளும் உண்டு. எனவே ஹல்க் எனக்கு பிடிக்கும் என்பதை விட என்னை பொறுத்த வரை சிறந்த ஹல்க் கதைகள் பிடிக்கும் என்பதே உண்மை.
எப்படியோ ஒரு நீண்ட விளக்கம் சொல்ல வச்சாச்சு.
Deleteஉங்களுடய கருத்து உண்மை தான் நண்பரே.
நண்பா நமக்கு இந்த ஆங்கிலம் காமிக்ஸ் கதைலாம் புரியாது தமிழ் தான் நான் படிச்சது முகமுடி மாயாவி கதை தான்
ReplyDeleteவாங்க நண்பரே.எனது வலைபூவிற்கு வந்ததற்கு நன்றி.
Deleteதொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ஏற்கனவே உங்களிடம் உள்ள தமிழ் காமிக்ஸை போட்டு எங்களை பெருமூச்சு விட வைத்தீர்கள் .... இப்ப ஆங்கிலமா?..... நடக்கட்டும்.......... நடக்கட்டும்.........
ReplyDeleteநண்பரே உங்களது பொகிஷதின் முன் இது சும்மா.
Deleteவெற்றிகரமாக காமிக்ஸ் நண்பர்களின் சந்திப்பை முடித்ததற்கு எனது வாழ்த்துக்கள்.