வணக்கம் நண்பர்களே,
சற்றே நீண்ட இடைவெளிக்கு பிறகு டிராகன் நகரத்தின் இரண்டாம் பாகம்.
நண்பர்களை காத்திருக்க வைத்ததற்கு மன்னியுங்கள்.
அனைவருக்கும் அட்வான்ஸ் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மற்றும் NBS வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நண்பர்கள் அனைவரும் இந்த பொங்கல் விடுமுறையை கொண்டாட NBS உள்ளது.அதன் பின்பு மேலும் நேரம் இருந்தால் இந்த பதிவையும் படியுங்கள்.
முதல் பாகம் படிக்காத நண்பர்கள் இங்கு கிளிக் செய்து படிக்கவும்.
இந்த பாகம் முழுவதுமே ஆக்சன் தான்.முடிந்த அளவு விவரிக்க முயற்சிக்கிறேன்.
நண்பர் ஒருவர் மூலம் எனக்கு ஸ்கேன்கள் கிடைத்தன ஆனால் புத்தகம் நடுப்பகுதி மட்டும் சற்றே தெளிவாக இல்லை நண்பர்கள் அதனை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
நேரே கதையை விட்ட இடத்திற்கு சென்று விடுவோம்.
டெக்ஸ் தூள் கிளப்புகிறார் :
இதற்கிடையில் டெபுடி பிப் டெக்ஸ் குழுமத்தினரை வந்து அவர்களது அறையில் சந்திக்கிறார். சீனர்கள் அவர்களை தாக்கியது ஏன் என கேட்கிறார். அதற்கு டெக்ஸ் அந்த கேள்விக்கு தனக்கு விடை தெரியவில்லை என்றும் மானுவலை தான் சந்தேகிப்பதாகவும் கூறுகிறார். அதற்கு பிப், இருக்க முடியாது என்றும் இங்கு வாழும் சீனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் வந்திருந்த சீனர்கள் கால்வெஸ்டன் தீவில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறுகிறார். பின் கிளம்பும் முன் டெக்ஸிடம் அவர்கள் வந்த காரணத்தை கேட்கிறார். அதற்கு டெக்ஸ் அதனை தான் இப்பொழுது கூறமுடியாது என கூறுகிறார்.
பிப் சென்றதும் டெக்ஸ் மானுவலை சென்று பார்த்துவிட்டு வருவதாக கூறி கிளம்புகிறார். சிறுது நேரத்தில் பாரடைஸ் சென்று பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மானுவல் வண்டியில் வந்து இறங்குவதை பார்கிறார். பின் அந்த வண்டியோட்டியை முகமூடி அணிந்து மடக்கி விவரம் கேட்கிறார். அவனிடம் இருந்து மானுவல் கால்வெஸ்டன் தீவில் இருக்கும் துறைமுகம் வரை சென்று வந்ததை தெரிந்து கொள்கிறார். பின் அவன் சென்றதும் தான் யார் என காட்டிக்கொள்ளாமல் மானுவலை கூவி அழைத்து துப்பாகியால் அவனது ஜன்னல் கண்ணாடியை உடைத்து எச்சரிக்கை செய்துவிட்டு கிளம்புகிறார்.
மறுநாள் லாங்க்ஹார்ன் மதுபானக்கடையில் டாமிடம் தொழில் முறை சூதாடிகளின் பட்டியல் கேட்கிறார். அதற்கு டாம் அங்கிருந்த நில்ஸனை
காட்டுகிறார். நில்ஸனை சந்திக்கும் டெக்ஸ் அவனை தனது திட்டத்தில் சேர ஆர்வம் இருக்கிறதா என கேட்கிறார்.
பாரடைஸ் விஜயம் :
அவனை தனக்கு மேனேஜர் தேவை என்றும் அதற்கு அவனுக்கு சம்மதமா என்றும் கேட்கிறார். அவனிடம் தனது திட்டத்தை பற்றி விவரிக்கிறார். தான் FP (Friends Protection) ஒன்றை தொடங்கப்போவதாகவும் அதற்கு தொழில் முறை சூதாதாடிகள் அனைவரிடமும் அவர்கள் லாபத்தில் இருந்து 10% வசூலிக்கபோவதாகவும் கூறுகிறார். அதற்கு அவன் சிலர் மானுவலின் ஆட்கள் என எச்சரிக்கை செய்கிறான். அதற்கு அதனை தான் தன வழியில் பார்த்துக்கொள்வதாகவும் அவன் பணம் வசூல் செய்யும் வேலை மட்டும் செய்தால் போதும் என கூறி அவனை சம்மதிக்க வைக்கிறார். பிறகு அவன் சூதாடிகள் பட்டியல் தயார் செய்தவுடன் வசூலை ஆரம்பிக்க கிளம்புகிறார்கள்.
இதற்கிடையில் மானுவல் டெக்ஸ்சை தீர்த்துக்கட்ட ஸ்டாண்டிங் என்பவனை அதிக பணம் கொடுத்து சம்மதிக்க வைக்க நெட் என்பவனை அனுப்புகிறான்.
இதற்கிடையில் நண்பர்கள் எட் என்பவனிடம் இருந்து தங்களது வசூலை தொடங்குகிறார்கள். முதலில் தர மறுக்கும் அவன் டெக்ஸ் துப்பாக்கியை தூக்கிய பின் தருகிறான். அடுத்து பாரடைஸில் இருக்கும் டாம் ஹூவரை சந்திக்க கிளம்புகிறார்கள்.
நண்பர்கள் பாரடைசில் நுழைகிறார்கள். அதனை கண்ட மானுவல் பார்மனிடம் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தயங்காமல் டெக்ஸ்சை சுட்டுவிட சொன்னான். பரிசாக 2000 டாலர்கள் தருவதாக கூறுகிறான். உள்ளே நுழையும் நண்பர்கள் டாமை சந்தித்து விவரம் கூறி பணம் கேட்கிறார்கள். தர மறுக்கும் அவனை டெக்ஸ் அடித்து துவைக்கிறார். உடனே சுட எத்தனித்த பார்மேனை கிட் தோளில் சுட்டு வீழ்த்துகிறார். டாமிற்கு உதவ வந்த மற்றவர்களை கார்சன் பார்த்துக்கொள்கிறார்.
குருதிக்கொரு விலை :
இதற்கிடையில் டெக்ஸ் டாமை மேசை மீது தூக்கி எறிந்தார். இறுதியில் அவன் பணம் கொடுத்தான். அடுத்து டெக்ஸ் மேசை கீழே ஒளிந்து இருந்த மானுவலை அழைத்தார். வெளியே வரும் அவன் டெக்ஸ் தனது வாடிக்கயாளர்களை இழிவாக நடத்தியதாக கூறுகிறான். மற்றும் டெக்ஸ் பிளாக்மெயில் செய்து பணத்தை சுரண்டுவதாக குற்றம் சுமத்தினான். அதற்கு டெக்ஸ் அவன் தான் நகரை சுரண்டி கொழுத்து போய் இருபதாகவும் மற்றும் இது பிளாக்மெயில் அல்ல அவர்களே கொடுக்கும் நன்கொடை என்றும் பின்னாளில் அது நல்ல காரியதிக்கு பயன்படும் என்றும் கூறுகிறார்.
தன்னை கொல்ல வந்த ஜிம் ஆட்களுக்கும் சீனர்களுக்கும் மலர்வளையம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறுகிறார். அவனை ஒழிந்து போகச்சொல்லி எச்சரிக்கிறார். அடுத்து அங்கிருந்து கிளம்பி மற்றவர்களிடம் வசூலிக்க சென்றனர். அதன் பின் வேறு ஏதும் பிரச்சனை இல்லாமல் வசூலிப்பு நடந்தது.
இதற்கிடையில் நெட் ஸ்டாண்டிங்கை சந்தித்து ஆசைவார்த்தை கூறி டெக்ஸ்சை ஒழிக்க சம்மதிக்க வைக்கிறான். ஸ்டாண்டிங் கில்லரை அழிக்க கிளம்புகிறான் இரண்டு மணி நேரம் கழித்து நண்பர்கள் லாங்ஹார்னில் கூடி புது சங்கத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு டெபுடி பிப் வந்து அவர்களிடம் விவரம் கேட்கிறார். அதற்கு டெக்ஸ் சாமர்த்தியமாக தாங்கள் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக யாரும் குற்றம் சுமத்தினார்களா என கேட்கிறார். மற்றும் பணம் நற்பணிக்கு தான் என்றும் அவர் தான் பொருளாளர் என்றும் கூறுகிறார். அதனை மறுத்த பிப் மற்றொருமுறை யாரையும் மிரட்டினால் கைது செய்வதாக எச்சரித்துவிட்டு செல்கிறார்.
அடுத்து பார்மேன் டாமிடம் இருந்து ஒரு சீனப்பெண் கடிதம் ஒன்று கொடுக்க வந்ததை அறிந்து கொள்கிறார். இதற்கிடையில் வெளியே ஸ்டாண்டிங் நோட்டம் விடுவதை டைகர் கவனித்து விடுகிறார். அப்பொழுது டெக்ஸ் வெளியே வர கோச்சுவண்டியின் மறைவில் இருந்து ஸ்டான்டிங் சுட டைகர் கொடுத்த எச்சரிக்கையால் டெக்ஸ் கீழே விழுந்து தப்பித்து விடுகிறார். கீழே விழும் டெக்ஸ் அவன் கால்களையும் கையில் இருக்கும் துப்பாக்கியையும் வீழ்த்திவிடுகிறார். பின்னர் அவனிடம் விசாரிக்கிறார் ஆனால் அவன் எந்த தகவலையும் தர மறுக்கிறான். அதற்கு டெக்ஸ் மானுவலிடம் சொல்லச்சொல்லி ஒரு தகவல் தருகிறார். அவன் அடுத்த 24 மணிநேரத்தில் அந்த நகரை விட்டு செல்ல வேண்டும் என்பதே அந்த தகவல்.
அப்பொழுது செரிப் அங்கு வருகிறார். அவரிடம் பேச டெக்ஸ் திரும்பிய பொழுது கூட்டத்தில் இருந்த அந்த சீனப்பெண் லின் - சி விஷம் தோய்ந்த கத்தியை வைத்து டெக்ஸ் சை குத்த போகிறாள். ஆனால் நில்சன் சூதாரித்துக்கொண்டு அதனை தட்டிவிட கத்தி பறந்து செரிப்பின் தோளில் இறங்குகிறது. அந்த இடத்திலேயே அவர் உயிரை விடுகிறார். அடுத்து டெக்ஸ் அந்த பெண்ணிடம் விசாரிக்கிறார். அதற்கு அவள் தனது சகோதரனை கொன்றதற்கு பழிவாங்க வந்தாக கூறுகிறாள்.
அவளை ஹோட்டல் அறைக்கு கொண்டு வந்து மேலும் விசாரிகிறார்கள்.
அங்கு அவளது சகோதரன் பற்றி விசாரிக்கிறார் அதற்கு அவள் தனது சகோதரன் நேற்றிரவு அவரால் கொல்லபட்டான் என கூறுகிறாள். தன்னை கொல்ல வந்த கூட்டத்தில் ஒருவன் என கூறுகிறார். அதனை அந்த பெண் மறுக்கிறாள். அவளை நம்ப வைக்க அவர் தான் யார் என கூறுகிறார். தனது ரேஞ்சர் அடையாள நட்சத்திரத்தை காண்பிக்கிறார். அதனை கண்ட நில்சன் அதிர்ச்சியாகி முதல் முறை தனக்கு தெரியாமலே சட்டத்தின் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறுகிறான். (இதனை நண்பர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)
அதனை பார்த்த லின் சி வாங்கை பற்றிய விவரங்களை கூறுகிறாள். அதற்கு டெக்ஸ் தான் மானுவல் மற்றும் வாங் இருவரையும் அழிக்க போவதாக கூறுகிறார். மற்றும் இன்னும் 24 மணி நேரத்தில் நகரிலுள்ள அனைத்து சூதாடிகள் மற்றும் கயவர்கள் அனைவரையும் காலி செய்ய சொல்லி அனைத்து அரங்கங்கள் முன்னிலும் போஸ்டர்கள் வைக்க போவதாக கூறுகிறார். அதற்கு லின் சி தன்னை அங்கு அனுப்ப வேண்டாம் என கூறுகிறாள். அதற்கு டெக்ஸ் அதுவரை அவள் இங்கேயே இருக்கலாம் என கூறுகிறார்.
இதற்கிடையே நெட் மானுவலிடம் டெக்ஸ் 24 மணி நேரத்தில் நகரை விட்டு அவனை வெளியேற சொன்னதை கூறுகிறான். அதற்கு அவன் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அரசாங்க ஏஜெண்டுகளை வரவழைத்து டெக்ஸ் குழுமத்தை கைதுசெய்ய வைக்க போவதாக கூறுகிறான். பின் டெபுடி பிப்பை சந்தித்து நடவடிக்கை எடுக்க சொல்கிறான். அதற்கு பிப் தான் இன்னும் ஷெரிப் ஆகவில்லை என்றும் மற்றும் டெக்ஸ் ஏதாவது காரியத்தில் இறங்கும் போது தான் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறுகிறான். அதனை கேட்ட மானுவல் கோவத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறான்.
மரணக் கேடு :
அங்கிருந்து வெளியேறும் மானுவல் வழியில் டெக்ஸ் குழுவை சந்திக்கிறான். டெக்ஸ் "எங்கே நாளைக்கு டிக்கெட் ரிசர்வ் செய்ய போகிறாயா" என கேட்கிறார். அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. அதற்கு அவன் மூஞ்சியில் ஒரு குத்து விட்டார் டெக்ஸ். பின் இங்கே உன்னால் கோட்டம் அடிக்க முடியாது நாளைக்கு ஊரை விட்டு ஓடிவிடு மேலும் ப்ளாக் டிராகனிடம் போய் உதவி கேட்க நினைக்காதே பலிக்காது என கூறுகிறார். அவருக்கு ப்ளாக் டிராகன் பற்றி எப்படி தெரிந்தது என அதிர்ச்சி அடைந்தான் மானுவல். அவனை மீண்டும் எச்சரித்துவிட்டு கிளம்புகிறார்.
வழியில் அவர்களை பிப் அவனது அலுவலகத்தில் இருந்து அழைக்கிறான்.
அவர்களிடம் தான் ஒரு பழைய தினசரியில் இருந்து டெக்ஸ் ஒரு ரேஞ்சர் என்பதை தெரிந்து கொண்டதை கூறுகிறான். அதற்கு டெக்ஸ் தாங்கள் வந்த காரணத்தை கூறுகிறார். அதற்கு பிப் தன்னால் ஏதாவது உதவ வேண்டுமா என கேட்கிறான். அதற்கு டெக்ஸ் மானுவல் ஏதாவது தந்தி அனுப்ப முயற்சி செய்தால் அதனை முடக்கி போட சொல்கிறார். பின் அவர்கள் அச்சு ஆபிசுக்கு சென்றார்கள். பிப் தந்தி அலுவலகம் நோக்கி சென்றான்.
ஒரு மணிநேரம் கழித்து அனைத்து சுவர்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அதில் திருடர்கள்,போக்கிரிகள்,சமூக விரோதிகள் அனைவரும் அந்த நகரை விட்டு ஓடிவிட வேண்டும், மீறினால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என இருந்தது.
அரைமணி நேரத்திற்கு பின் டெக்ஸ் லின் சி இடம் விவரம் சேகரித்துக் கொண்டு இருந்தார். வாங் மற்றும் ஒரு ஐந்து பேர் மட்டும்தான் தெரியும் என கூறுகிறாள். அன்றிரவு டெக்ஸ் வாங் கூட்டத்தினரை தாக்க முடிவு செய்கிறார். அவர்களுடன் நில்சனும் சேர்ந்து கொள்கிறான். டெக்ஸ் கிட்டை டைகரிடம் அனுப்பி அன்றிரவு நகரின் எல்லையில் அவ்விருவரையும் சந்திக்க சொல்கிறார்.
அதற்கிடையில் ரெட் அந்த போஸ்டரை மானுவலிடம் கொண்டு வந்து காண்பிக்கிறான். அதனை படித்த மானுவல் நெட்டிடம் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாரடைஸ் வரும் படி சொல்லி அனுப்புகிறான். பின் ரெட்டிடம் வாங்கிடம் கொடுக்க சொல்லி ஒரு தந்தி கொடுத்து அனுப்புகிறான்.
இதற்கிடையே சாண்டி என்ற தந்தி தொழிலாளி பிப்பிடம் மானுவல் அனுப்ப சொன்ன தந்தியை காண்பிக்கிறார்.அதனை எடுத்துக்கொண்டு டெக்ஸ் சை சந்திக்க செல்கிறார் பிப். 15 நிமிடங்களுக்கு பிறகு டெக்ஸிடம் அந்த தந்தியை காண்பிக்கிறார். டெக்ஸ் அவரிடம் தாங்கள் கால்வெஸ்டன் துறைமுகத்தில் இருக்கும் வாங்கை தாக்க போவதை கூறி அவரையும் வரமுடியுமா என கேட்கிறார். தன்னால் இந்த ஸ்டாரை அணிந்து கொண்டு வரமுடியாது என்றும் ஆனால் கால்வெஸ்டன் நகர் செரிபுகள் தனது நண்பர்கள் என்றும் அவர்களை மாலை இங்கே அழைப்பு விடுத்தால் இங்கு வந்துவிடுவார்கள் என்றும் டெக்ஸ் இஷ்டத்திற்கு விளையாடலாம் என்றும் கூறுகிறான்.
சில மணிநேரம் கழித்து கால்வெஸ்டனில் மானுவல் கொடுத்த தந்தியை வாங் படித்தான். அதில் நம் கூட்டு டெக்ஸுக்கு தெரிந்துவிட்டது உன் ஆட்களை நீ அனுப்பாவிட்டால் காரியம் கை மீறிவிடும் என்று இருந்தது. அதனை படித்த வாங் அன்றிரவு 50 ப்ளாக் டிராகன் ஆட்கள் வருவார்கள் என்ற செய்தியை மானுவலிடம் கூற சொல்கிறான்.
பாலத்தில் ஒரு போராட்டம் :
அதனை பெற்றுக்கொண்ட ரெட் டெக்ஸாஸ் நகருக்கு விரைந்து வந்தான். நகருக்குள் நுழைந்ததும் வழியில் அவன் நில்சனை பார்த்தான் முன்பு ஒருமுறை அவன் தனது உயிரை காப்பாற்றியதை நினைவு கூர்ந்த ரெட் அன்றிரவு 50 சீன ஆட்கள் டெக்ஸ் குழுமத்தை கொல்ல வருகிறார்கள் என்றும் அவர்களுடன் அவனை சுற்ற வேண்டாம் என்றும் எச்சரித்துவிட்டு செல்கிறான்.
அச்செய்தியை நில்சன் டெக்ஸிடம் கூறுகிறான். அதற்கு டெக்ஸ் இது நம் திட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாது என கூறி கிளம்புகிறார்.
பின் அனைவரும் நகரின் எல்லையில் சந்திக்கிறார்கள். பின் அனைவரும் ஒன்று சேர்ந்து பாலத்தை வந்து அடைகிறார்கள். இரண்டு மணி நேரம் கழித்து தூரத்தில் குதிரை வண்டிகள் வருவதை பார்கிறார்கள்
பாலத்தின் ஆரம்பத்தில் டெக்ஸ்,நில்சன் மற்றும் கார்சன் இருக்க. டைகரும்,கிட்டும் பாலத்தில் தொங்கியபடி சென்று வண்டிகளின் பின் இருந்து வளைக்க புறப்படுகிறார்கள். வண்டியில் வரும் சீனர்கள் இருபுறமும் தாக்கப்படுகிறார்கள். நண்பர்களின் தாக்குதலில் திக்கு முக்காடி போகிறார்கள்.
நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் நண்பர்கள் கை ஓங்கியது மீதம் இருந்த சீனர்கள் ஆற்றில் குதித்து தப்பி ஓடினார்கள்.
டிராகனின் குகையில் :
அவர்கள் தப்பி ஓடியதும் டெக்ஸ் நகருக்குள் சென்று ப்ளாக் டிராகன் கும்பல் முழுவதையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். கிளம்பி கால்வச்டன் வந்தடைகிறார்கள்.லின் சி இடம் இருந்து தெரிந்து கொண்ட லின் வு என்ற ஒருவனின் சூதாட்ட அரங்கினுள் நுழைந்து அவனை சுட்டு கொன்று விட்டு மற்றவர்களை எச்சரிக்கை செய்கிறார்கள்.
அதில் ஒருவன் தப்பி வாங் இருக்கும் இடம் நோக்கி சென்று தகவல் தர போகிறான். அவனை பின் பற்றி சென்று வாங் இருப்பிடம் தெரிந்து கொள்கிறார்கள்.அங்கு சென்று வாங் மற்றும் அவன் கூட்டாளிகள் அனைவரையும் கொன்றுவிட்டு அந்த இடம் முழுவதையும் தீக்கிரையாக்கி விடுகிறார்கள்.
தீப்பொறி:
அங்கு அனைவரையும் வீழ்த்திவிட்டு டெக்ஸாஸ் வருகிறார்கள்.அவர்கள் நகருக்குள் நுழைவதை ரெட் பார்க்கிறான்.அவன் வாங் சொன்னபடி சீனர்கள் இன்னும் வரவில்லையே என்ற குழப்பத்தில் இருக்கிறான்,அவனை சந்திக்கும் நில்சன் இனி சீனர்கள் வர மாட்டார்கள் என்றும் வாங் மற்றும் அவன் கூட்டாளிகள் அனைவரும் அழிந்துவிட்டார்கள் என்றும் கூறுகிறான்.மற்றும் உயிர் பிழைக்கும் எண்ணம் இருந்தால் அந்த ஊரைவிட்டு ஒடிவிடுமாறு அவனுக்கு புத்தி கூறுகிறான்.அதனை கேட்ட அவன் ஊரில் இருக்கும் தனது பெரியப்பாவிடம் சென்றுவிட போவதாக கூறிவிட்டு ஊரைவிட்டு சென்றுவிடுகிறான்.
மறுநாள் நெட் மானுவலிடம் ரெட் ஊரைவிட்டு சென்றுவிட்டான் என்று கூறுகிறான்.அதனை கேட்டு மானுவல் குழம்பினான்,மற்றும் வாங் பற்றி செய்தி அறிந்து வர சென்ற கில்பர்ட் என்பவனுக்காக காத்திருந்தான்.சற்று நேரத்தில் வந்த கில்பர்ட் கில்லரும் அவரது ஆட்களும் துறைமுகத்திற்கு சென்று வாங் மற்றும் அவன் ஆட்களை கொன்றுவிட்டதை கூறுகிறான். அதிலிருந்து ரெட் தனக்கு துரோகம் இளைத்தை கண்டு பிடிக்கிறான், அடுத்து அனைவரையும் பாரடைசில் கூடுமாறு கட்டளை இடுகிறான்.
இதற்கிடையில் பிப் ஹோட்டல் வந்து டெக்ஸ் மற்றும் குழுமத்தினரை சந்திக்கிறார்.அவருக்கு டைகரை அறிமுகம் செய்கிறார் டெக்ஸ்.கால்வச்டன் செரிப் அனுபிருந்த தந்தியை காண்பிக்கிறார்.அதில் "யாரோ வந்து நகரை சுத்தம் செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்,அவர்களுக்கு எங்களது நன்றிகள்" என்று இருந்தது.பின் டெக்ஸ் நடந்த அனைத்தையும் பிப்பிர்க்கு கூறுகிறார்.
அடுத்து அனைவரும் ரேஞ்சர்கள் பாட்ஜ் அணிந்து கொள்கிறார்கள. அனைவரும் கிளம்பி முதலில் உணவு அருந்திவிட்டு பின் மானுவலை சந்திக்க கிளம்புகிறார்கள். தெருவில் நடக்கும் பொழுது அனைவரும் அவர்கள் ரேஞ்சர்கள் என தெரிந்து ஆச்சர்யம் அடைகிறார்கள. உணவு விடுதிக்கு வரும் நில்சன் டெக்ஸ் இடம் உண்மையை முன்பே சொல்லிருக்கலாமே என கூறுகிறார் (இந்த இடம் சற்றே நெருடுகிறது முன்பே லின் சி இடம் விசாரணை நடக்கும் பொழுதே அவர் உண்மையை அறிந்து கொள்கிறார் பின் மீண்டும் இவ்வாறு கூறுவது தவறு - யாருக்காவது விளக்கம் தெரிந்தால் கூறுங்கள்) .மற்றும் தன்னிடம் பாட்ஜ் இல்லாததால் அவர்களுடன் கலந்து கொள்ள முடியாது என கூறுகிறார்.அதற்கு டெக்ஸ் அவரை டெபுடி செரிப் ஆக்குகிறார்.
அடுத்து அனைவரும் மானுவலை சந்திக்க செல்கிறார்கள்.அங்கு மீதம் இருந்த போக்கிரிகளுடம் சேர்ந்து மானுவல் தாக்குதல் நடத்தினான். நண்பர்கள் அந்த தாக்குதலை முறியடித்து மானுவல் மற்றும் அவன் கூட்டத்தினர் அனைவரையும் சுட்டு வீழ்த்துகின்றனர்.
இரண்டாம் பாகம் முடிந்தது.
விஜயன் அவர்கள் இந்த புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பை பற்றி அடுத்த கதையின் ஹாட்லைனில் கூறி உள்ளார்.
அவ்வளவு தான் நண்பர்களே.
அடுத்து பூந்தளிர் கதைகளோடு உங்களை சந்திக்கிறேன்.
கிருஷ்ணா வ வெ .
அழகான பதிவு நண்பா! கலக்கி எடுக்கிறீர்கள்! ராணி மறக்க வேண்டாம்! ஹி ஹி ஹி
ReplyDeleteநன்றி சைமன் ஜி.
Deleteபுத்தக கண்காட்சி பதிவுகள் அனைத்தும் அருமை ஜி.
நீங்க தான் உண்மையான கலக்கல்.
Dragon Nagaram is my favourite if you ask me to choose only one book which i can have it would be Dragon Nagaram... Super post Ji..
ReplyDeleteThanks for Comments Sriram.
Deleteடெக்ஸின் அபிமானிகளுக்கு இன்னும் ஒருவாரத்தில் 240 பக்க விருந்து படைக்கவிருப்பதாக எடிட்டர் அறிவித்துள்ள நிலையில்; ஒரு வினையூக்கி போல இந்தப் பதிவு இன்னும் ஆர்வத்தைப் பன்மடங்காக்கிடும்.
ReplyDeleteநன்றி கிருஷ்ணா!
நன்றி விஜய்.ஓரளவிற்கு நண்பர்களை திருப்தி அளித்திருந்தால் சந்தோசமே.
Deleteஅருமையான பதிவு. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி காமிக்கேயன் அவர்களே.எல்லாம் நம்ம Blade Effect.
Deleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய இனிக்கும் NBS பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!
ReplyDeleteநண்பர் சிபி அவர்களின் தயவில் இந்த புத்தகத்தை நேற்றுதான் (ஈரோடு டு சென்னை புகை வண்டியில்) படிக்க முடிந்ததது.
அருமை !!! பதிவு எழுதிய தங்களுக்கும், புத்தகம் கொடுத்து படிக்க உதவிய நண்பர் சிபி அவர்களுக்கும் நன்றி !!!
வருகைக்கு நன்றி நண்பரே.
Deleteஉண்மை.டெக்ஸ் கதைகளிலேயே ஒரு டாப் கதை இது.
சூப்பர்ரான கதை. பெயரைக் கேட்ட நியாபகம் இருந்தாலும் படித்த நியாபகம் இல்லை. பர பர என போகிறது. அக் மார்க் டெக்ஸ் வில்லர் கதை. நன்றி பதிவிட்டதற்கு.
ReplyDeleteபதிவின் நீளத்தை பொருட்படுத்தாமல் கதையை படித்ததற்கு நன்றி ராஜ்.
Deleteநண்பா முழுசா படிச்சுட்டு வந்து comment போடுறேன்.
ReplyDeleteஅப்போ இப்போ போட்ருகரதுக்கு பேர் நண்பா.
Deleteஇந்த இடம் சற்றே நெருடுகிறது முன்பே லின் சி இடம் விசாரணை நடக்கும் பொழுதே அவர் உண்மையை அறிந்து கொள்கிறார் பின் மீண்டும் இவ்வாறு கூறுவது தவறு - யாருக்காவது விளக்கம் தெரிந்தால் கூறுங்கள்
ReplyDeleteஇந்த முறை நில்சன் கேட்டது, மற்றவர்களுக்காக என்று எடுத்துக் கொள்ளலாம். சொல்லி இருந்தால், மற்றவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கும் என்பது அவனது எண்ணமாக இருக்கலாம்