Wednesday, December 26, 2012

சுரங்க வெடி and வைரக் கொள்ளை - A Super Hero Tiger Action


வணக்கம் நண்பர்களே,

மீண்டும் டைகரின் இரண்டு கதைகளோடு இந்த பதிவு.
இத்துடன் டைகர் கதைகள் நிறைவு பெருகின்றன.

டிராகன் நகரம் தயாராக சற்று நேரம் எடுக்கின்றது ஆகையால் இந்த குறும் பதிவு நண்பர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

முதல் கதை சுரங்க வெடி. ஒரு அணையின் அருகே உள்ள கைவிடப்பட்ட சுரங்கத்தில் பயங்கரவாதிகள், பாக்ஸ் என்பவனின் தலைமையில் வெடிகுண்டு வைத்து சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை அழித்துவிடுவோம் என பயமுறுத்துகின்றனர் 

இதனை முறியடிக்க டைகர் மற்றும் ஹென்றி அனுப்பப்படுகின்றனர்.அவர்கள்  அணைக்கு வெடி வைத்து அந்த சுரங்கத்தை தண்ணீரில் மூழ்கடித்து கிராமங்களை காப்பாற்றுகின்றனர்.






இரண்டாவது கதை வைரக் கொள்ளை. ஹிட்லர் என்ற பயங்கரவாதி மிக பெரிய காந்தம் பொருத்தப்பட்ட இயந்திரம் மூலம் வைரங்கள் வைத்திருக்கும் இரும்பு பெட்டியை கொள்ளையடிகிறான். பின் ஒரு அருவியின் பின்னால் இருக்கும் மறைவிடத்தில் சென்று ஒளிந்து கொள்கிறான்

அவனது இருப்பிடத்தை கண்டு பிடித்து அவனை சட்டத்தின் பிடியில் கொண்டு வருகிறார் டைகர்.









அடுத்து பூந்தளிரில் வந்த சிறு கதைகளின் புகைப்படங்கள் வெளியிடலாம் என்று இருக்கிறேன்.அதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

சாப்ளின் மாமா,கபீஷ்,காளி,அணு கழகம் போன்ற பல கதைகள் அத்தொடர் பதிவுகளில் இடம் பெரும்.இது குழந்தைகளுக்காகவும் உதவும் என நினைக்கிறன்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

35 comments:

  1. வழக்கம் போல் அருமையான பதிவு :-)

    நண்பா இந்தக் கதைகள் வெளிவந்த "Cover" pages இணைத்தால் நன்றாக இருக்குமே (இரண்டாவது கதையாக வந்திருந்தாலும் கூட நண்பர்களுக்கு தேடி எடுக்க எளிதாக இருக்குமல்லவா).

    பூந்தளிர் - கொடுத்தால் வேண்டாமென்றா சொல்லப் போகிறோம். பதிவுகளை போட்டு தாக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. //இந்தக் கதைகள் வெளிவந்த "Cover" pages இணைத்தால் நன்றாக இருக்குமே//

      சாரி நண்பா. அதனை செய்திருக்கலாம் மிஸ் ஆகிவிட்டது.

      Delete
  2. டைகர், துப்பாக்கியோடு போஸ் கொடுக்கும் அந்த லோகோ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! :)

    இப்படி பதிவுக்கு பொருத்தமாத்தான் கருத்து சொல்வோம்! :) :) :)

    ReplyDelete
    Replies
    1. TM 1? - நீங்களும் திண்டுக்கல் தனபாலன் மாதிரி ஆரம்பித்து விட்டீர்களா? :D

      Delete
    2. TM 1 ? அப்படினா என்னங்க?

      Delete
    3. தமிழ் மணத்தில் முதல் ஒட்டு! :)

      Delete
    4. @Raj Muthu Kumar S:
      நண்பருக்கு ஏதோ நம்மாலான உதவி! :)

      Delete
  3. வழக்கம் போல் அருமையான பதிவு :-)

    ReplyDelete
  4. சூப்பர் பதிவு நண்பரே...இந்த பாணி நன்றாக உள்ளது..
    பூந்தளிர் சிறு கதைகளையும் அறிமுக படுத்துங்கள், படிக்க ரசிகர்கள் நங்கள் இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவரும் ஆதரவு தருவதால் விரைவில் பூந்தளிர் பதிவுகள் வரும்.

      Delete
  5. சீக்கிரமாய் மற்றொரு பதிவு. கலக்குறீங்க கிருஷ்ணா.

    டைகர் கதை வழக்கம்போல் பர பர. :D

    பூந்தளிரும் ரத்னபாலாவும் எனக்கு மிகவும் பிடித்த இதழ்கள். காக்கை காளி, கபீஷ் என் சிறு வயது தோழர்கள். போடுங்கள் படிக்க ஆவலாய் இருக்கிறோம்.

    டிராகன் நகரம் ரெண்டாம் பாகம் எப்போ ?

    ReplyDelete
    Replies
    1. டிராகன் நகரம் ரெண்டாம் பாகம் எப்போ ?

      கண்டிப்பா சீக்கிரம் போட்ரலாம் நண்பரே.

      Delete
  6. டைகரின் "டொட்டொட் டொட டொய்ங்" இரண்டு கதைகளிலுமே மிஸ்ஸிங் !!:( ஹென்றியின் அற்புதமான் நம்மை சிறுவயதில் ஏன் இப்போதுகூட வாயைபிளக்கவைக்கும் வினோத ஆயுதங்களே டைகர் ஹென்றி கதைகளின் highlight! இது போன்ற childish humor கதைகளில் இப்போது கூட ஒரு attraction உள்ளது. நன்றி கிருஷ்ணா

    ReplyDelete
    Replies
    1. //வாயைபிளக்கவைக்கும் வினோத ஆயுதங்களே டைகர் ஹென்றி கதைகளின் highlight!//

      முற்றிலும் உண்மை சிறுவயதில் என்னை மிக ப்ரெமிப்பில் ஆழ்த்தியது.
      அப்பொழுது எல்லாம் எனக்கு oo7 பற்றி தெரியாது.

      Delete
  7. கலக்குறிங்க கிருஷ்ணா வாழ்த்துக்கள் :):)

    ReplyDelete
  8. adakadavule naanthaan ingeyum latea?????

    ReplyDelete
    Replies
    1. வருகை தான் முக்கியம் நண்பரே வருகைக்கு நன்றி.

      Delete
    2. அவரே லேட்டுன்னா அப்புறம் என்னை என்ன சொல்றது?!!

      அளவான பதிவு!

      Delete
    3. வருகைக்கு நன்றி VIJAY.
      உங்களுடைய பிஸியான நேரத்தில் சற்று எனக்கும் ஒதுக்கி வந்து பார்த்தற்கு. :)

      Delete
  9. puthu post vantha cell vibration aguramathiri technique ethachum irukka? nanbargale? tiger kathaigal miga arumai! avai entha tigeraga irunthalum!

    ReplyDelete
  10. SIR ONE REQUEST FOR TEX WILLER STORY I THINK THAT STORY NAME WAS RATHA VERIYARKAL OR SOMETHING, IN THAT STORY TEX OPPOSITE FOR ARMY AND DESTROY THE ARMY FORTS PLEASE IF YOU HAVE THAT STORY ENTRY IN YOUR BLOG

    THANK YOU
    KANAGASUNDARAM.D

    ReplyDelete
    Replies
    1. Thanks for Visiting my Blog Friend.
      Regarding the RATHA VERIYARKAL i will try to do a post on friend.but not in immediate future.bcoz it will take lot of time and energy.Fingers Crossed.

      Delete
  11. aamaa nanbaa raththa veriyargal nanraaga irukkum! but he fight against the group of bad boys! not with ARMY! bro!

    ReplyDelete
    Replies
    1. பதிவிட முயற்சிக்கிறேன் நண்பரே.
      இன்னும் என்னால் டிராகன் நகரம் கதையையே முடிக்க முடியவில்லை.

      Delete
  12. டைகரின் கதைகளில் பெண் கதாபாத்திரமே இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை பாண்ட் கதைகளுக்கும் டைகர் கதைகளுக்கும் அது தான் வித்தியாசம்.

      Delete
  13. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  14. Friends
    Before the sun sets in this year,
    before the memories fade,
    before the networks get jammed.....
    Wish u and ur family Happy Sparkling New Year 2013 :))
    .

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete

  16. //சாப்ளின் மாமா,கபீஷ்,காளி,அணு கழகம் போன்ற பல கதைகள் அத்தொடர் பதிவுகளில் இடம் பெரும்.இது குழந்தைகளுக்காகவும் உதவும் என நினைக்கிறன்.//
    அந்த பொற்காலங்களை எட்டிப்பார்க்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்துங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.
      வெகு நாட்களுக்கு பிறகு நண்பர்கள் அனைவரும் எனது வலைபூ வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
      இன்னும் நம்ம கோவை இரும்புக்கையார் மட்டும் மிஸ்ஸிங்.

      Delete
  17. Anyone know original name of Tiger (English character name)

    ReplyDelete