Friday, February 8, 2013

விஸ்வரூபம் - கமல் என்னும் புத்திசாலியின் திரைப்படம்.



வணக்கம் நண்பர்களே,

நேற்றய தினம் பல இடையூறுகளை கடந்து வந்துள்ள கமலின் விஸ்வரூபத்தை கண்டேன். அதனை பற்றியே எனது கருத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் விஸ்வரூபம் கமல் என்னும் புத்திசாலி தமிழனின் திரைப்படம்.

தமிழ் திரைப்படங்களுக்கு புதுமைகளை முதன் முதலில் கொண்டுவருவதில்  கமல் தான் முதன்மையானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த விதத்தில் இந்த திரைப்படத்திலும் பல புதுமைகளை கொண்டு வந்துள்ளார். அதற்காக நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.

ஏற்கனவே கமலின் திரைகதை திறமைகளை நாம் விருமாண்டி போன்ற படங்களில் பார்த்துள்ளோம். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு முழு திரைப்படம் எடுத்து அதனை எடிட்டிங் மூலம் இரண்டு பாகங்களாக ஆக்கி இருக்கும் அவரது புத்திசாலித்தனம் மெச்சத்தகுந்ததே.

ஆனாலும் பல விசயங்களை இன்னும் முழுமையாக விளக்க வில்லை எனபது
சற்றே ஏமாற்றம் தான். இரண்டு பாகங்களையும் சேர்த்து பார்க்கும் பொழுது இன்னும் முழுமையாக இருக்கும் எனபது எனது கருத்து.மேலும் அந்த இரண்டாம் பாகத்தை வெகு சீக்கிரமே கொண்டு வருவது அவருக்கும்  நமக்கும்  நல்லது.

கதை நாம் பல ஆங்கில மற்றும் தமிழ் திரைப்படங்களில் பார்த்ததே. ஒரு ராணுவ வீரர் எதிரிகளின் இருப்பிடத்தில் மாறுவேடத்தில் சென்று அவர்களை முறியடிப்பதே. அதனை எடுத்த விதத்தில் தான் வித்தியாசம் காட்டிஉள்ளார் கமல்.

விஸ்வநாதன் ஒரு நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர். அவரது மனைவி நிரூபமா ஒரு விஞ்ஞானி. அவரை விட வயதில் மூத்த கமலை ஒரு சுயநலத்திற்காக கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.



இப்பொழுது அவரது நிறுவனத்தின் தலைவரை கல்யாணம் செய்துகொள்வதற்காக கமலை விவாகரத்து செய்ய முயற்சிக்கிறார். அதற்காக  ஒரு தனியார் துப்பறிவாளர் மூலம் அவரிடம் ஏதாவது தப்பிருக்கிறதா என கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்

நிரூபமாவும் அவளது காதலனும்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன.அதில் முக்கியமான ஒன்று அவர் ஒரு முஸ்லிம் எனபது.

அதன் பின் கதை ஆப்கானிஸ்தான் மற்றும் நியூ யார்க் என மாறி மாறி செல்கிறது

எப்படி கமல் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக பயிற்சி எடுக்கிறார். அவருக்கும் தீவிரவாதிகளின் தலைவர் ஓமருக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது. கமல் எப்படி ஒசாமா பின் லேடனை பிடிக்க உதவுகிறார்.

ஒமர்.


மற்றும் நிகழ காலத்தில் நியூ யார்க்கில் ஒமரின் நியுக்ளியர் குண்டு வைக்கும் முயற்சியை எப்படி முறியடிக்கிறார் என்றும் நாம் பார்க்கிறோம்

படத்தின் முதல் firstlook இல் நாம் பார்க்கும் புறாவை கூட ஒரு காரணமாக த்தான் காட்டி உள்ளார். அந்த அளவிற்கு சின்ன சின்ன விசயங்களில் கூட கவனம் செலுத்தி உள்ளார்.

படத்தின் தரத்தில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருபதற்கு நான் முக்கிய காரணமாக நினைப்பது படத்தின் லொகேசன்கள் தான். படத்தில் ஆப்கானிஸ்தானை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

படத்தின் சண்டைகாட்சிகளையும் நன்றாக அமைத்துள்ளார்கள். காமரா வொர்க்கும் மிகவும் நன்றாக இருக்கிறது. இசை சற்றே ஏமாற்றம் அளிக்கிறது. அதுவும் முக்கியமாக பின்னணி இசை. ஒரே tune பலமுறை பின்னில் வருகிறது.

அடுத்து முக்கியமாக கூறவேண்டியது படத்தின் வில்லன் ராகுல் போஸ்.
இதுவரை நாம் தமிழ் திரைப்படங்களில் பார்க்காத ஒரு வில்லன். ப்ளாஷ் பேக் காட்சிகளில் இவர் தான் முன்னிலை படுதிக்காட்டப்பட்டுள்ளார்.

அவருடைய நடிப்பு மிகவும் நன்றாக உள்ளது. மிகவும் சத்தமாக கூட பேசமுடியாது. இருந்தாலும் அவரது முக பாவங்கள் மற்றும் கண்களிலேயே ஒரு பயத்தை தோற்றுவிக்கிறார்.

க்ளைமாக்ஸ்.


கமலை பற்றி சொல்லவே தேவை இல்லை. பல வசனங்கள் அவருக்கே உரிய நடையில் இருக்கிறது. மற்றும் முதலில் அரைமணி நேரத்தில் மனிதர் பின்னி எடுத்துருக்கிறார். அதுவும் அவர் யார் எனத்தெரியும் இடத்தில் ஹீரோயிசம் மிக அருமை.

விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்.


பூஜாகுமார் மற்றும் ஆன்ட்ரியா தனது வேலையை திறம் பட செய்துள்ளார்கள்.

கமலும் நாசரும் பிரிக்க முடியாதவர்கள்.இப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

படத்தின் மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்.

மொத்தத்தில் படத்தின் முழுமையான வெற்றி இரண்டாம் பாகம் வந்த பின்பே.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ .


22 comments:

  1. Aero 3D-ல் பார்த்தீர்களா?!

    ReplyDelete
    Replies
    1. இல்லை கார்த்திக் அந்த டெக்னாலஜி இன்னும் வரவில்லை என நினைக்கிறேன்.

      Delete
  2. Good Review, Sunday I am going to see this movie. Thanks

    ReplyDelete
  3. சுடச்சுட விமரிசனத்தை தட்டி விட்டிருக்கிறீர்கள்.கதையே சொல்லாமல் விமரிசத்தது பாரட்டுக்குரியது.

    வில்லனாக நடித்தது ராகுல் போஸ், அக்க்ஷய் கன்னா இல்லை. இரண்டாம் பாகம் தமிழ் நாட்டில் நடப்பதாக இருக்கிறதாம். :D வெளிவருவதற்குள் வெளங்கிடும். ரெண்டாம் பாகம் சீக்கிரம் வர சான்சே இல்லை.

    நடந்த களேபரத்தில் ஒரு நல்ல விஷயம், முஸ்லிம் சகோதரர்கள் நடக்கும் அரசியலை புரிந்து கொண்டது. அவர்களுக்குள் இருக்கும் ஒரு சில பேர்களை அடையாளம் கண்டுகொண்டது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்.

      //அக்க்ஷய் கன்னா இல்லை//
      சற்றே குழப்பத்துடன் தான் இருந்தேன்.பதிவுலும் திருத்திவிட்டேன்.

      //இரண்டாம் பாகம் தமிழ் நாட்டில் நடப்பதாக இருக்கிறதாம். :D வெளிவருவதற்குள் வெளங்கிடும். ரெண்டாம் பாகம் சீக்கிரம் வர சான்சே இல்லை.//

      இல்லை ராஜ் எனக்கு தெரிந்து பெரும்பாலான காட்சிகளை முன்பே அவர் படம்பிடித்துவிட்டார்
      ஒரு சில இந்தியாவில் நடக்கு காட்சிகள் மட்டும் மீதம் இருக்கும் என நினைக்கிறன்.
      மற்றும் இனி அந்த படம் வருவதற்கு பிரச்சனை இருக்காது என நினைக்கிறன்.

      Delete
    2. நன்றி கார்த்திபன்.

      Delete
  4. எனக்கும் உங்களுக்கும் ஆல்மோஸ்ட் சேம் டேஸ்ட பாஸ்...இசை என்னை பொறுத்த வரைக்கும் குறை தான்... அடுத்த பாகத்தில் நிறைய முடிச்சுகள் அவிழும்...காத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. //அடுத்த பாகத்தில் நிறைய முடிச்சுகள் அவிழும்...காத்திருப்போம்//

      ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      Delete
  5. இரவுக்கழுகாரே,
    நாளை சத்யமில் பார்க்க இருக்கிறேன். மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறேன். கிட்டத்தட்ட true lies படத்தை ஒத்து தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. // true lies படத்தை ஒத்து தான் இருக்கிறது//

      கதை களன் நாம் அதிக படங்களில் பார்த்தது தான்.
      அதில் ஒன்றும் புதுமை இல்லை.

      இருந்தும் ஒரு நல்ல அனுபவத்தை அளிக்கும்.
      பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் தெரியபடுத்துங்கள்.

      Delete
  6. @கார்த்திக் : இப்பொழுதுதான் பார்த்தேன் சத்யம் 6 Degrees திரைஅரங்கில் Aero 3D-ல் வெளியிடுகிறார்கள். அடுத்தமுறை அதில் பார்க்க உத்தேசித்துள்ளேன்.

    @Limat :நீங்க எந்த ஸ்க்ரீனில் பார்கிறீர்கள்.

    ReplyDelete
  7. சூடான பதிவு . ஒரு மொக்கை படத்தை நான் பார்பதாக இருந்தால்கூட maximum கதையை தெரிந்துகொள்ளாமல் தான் பார்ப்பேன் ஆகயினால் பதிவில் கதைவரும் இடங்களில் தாவித்தாவி படிக்கவேண்டிய நிலமை. படம் பார்த்தபின் மீண்டும் வருவோம்ல...

    ReplyDelete
    Replies
    1. பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் தெரியபடுத்துங்கள் ஸ்டாலின்.

      Delete
  8. விஸ்வரூபத்தைப் பற்றி நான் பார்க்கும் முதல் ரிவ்யூ இதுதான்.

    அழகாக சுருக்கமாக விவரித்திருக்கின்றீர்கள்.

    இரண்டாம் பாகம் இருக்கின்றது என்பது எனக்குச் செய்தி.

    உங்களின் இந்த பதிவு, இந்த திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கண்டிபாக பார்க்கலாம் பாலாஜி.
      ஆனால் பாகம் 2 வந்தால் தான் முழுமை அடையும்.
      அது வந்தற்கு பின் சேர்த்து பார்த்தல் இன்னும் சிறப்பாக இருக்கும்.

      Delete
    2. @ பாலாஜி சுந்தர்

      // தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தயுள்ளது//

      ம்... பிப்ரவரி14 க்கு திட்டம் ரெடி போலிருக்கிறது! :)

      Delete
  9. தமிழுக்கு வாய்த்த ஒரு திறமையான கலைஞனின் துணிச்சலான இந்த முயற்சிக்காகவாவது இப்படத்தை பார்க்கத்தான் வேண்டும். தியேட்டரில் கானும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

    நன்றி கிருஷ்ணா!

    (முடி வளர்ந்துருச்சா?) :)

    ReplyDelete
    Replies
    1. Aero 3D : கமல் அறிமுகபடுத்தி உள்ள சவுண்ட் தொளில்நுட்பமுறை.
      முதல் முறையாக இந்தியாவில்.

      கண்டிப்பாக பாருங்கள் விஜய்.பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

      உங்களுடைய பிப் 14 பிளான் என்ன...:)

      முடி வளர்ந்துகொண்டே இருக்கிறது.

      Delete
  10. வழக்கம் போல் அருமையான பதிவு நண்பா.

    நான் இன்னமும் முழுப்படமும் பார்க்கவில்லை.

    //படத்தின் முதல் firstlook இல் நாம் பார்க்கும் புறாவை கூட ஒரு காரணமாக த்தான் காட்டி உள்ளார். அந்த அளவிற்கு சின்ன சின்ன விசயங்களில் கூட கவனம் செலுத்தி உள்ளார்.// பார்க்கும் பொழுது உங்கள் விமர்சனம் மனதில் ஓடக்கூடும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சௌந்தர்.உங்கள் கடும் வேலைகளுக்கு நடுவே எனது பதிவையும் படித்து கருத்து கூறியதற்கு நன்றி.

      Delete