Tuesday, February 12, 2013

பூந்தளிர் கதைகள் : 1


வணக்கம் நண்பர்களே,

நான் முன் பதிவுகளில் கூறியது போல எனக்கு பிடித்த பூந்தளிர் கதைகளை உங்களுடன் அவ்வபொழுது பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

இது ஒரு சோதனை முயற்சியே.

என்னுடைய ஆசை நான் பகிர்ந்துகொள்ளும் இக்கதைகளை உங்கள் வீட்டு சிறார்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே.

ஒரு வழியாக ஒரு all in one HP பிரிண்டர் வாங்கிவிட்டேன்.அதில் மூலம் வரும் முதல் பதிவு.

படங்களை சற்றே மேம்படுத்தி உள்ளேன்.புத்தகத்தின் காகிதங்கள் சற்றே பழுப்படைந்து உள்ளதால் படங்களும் இப்படி உள்ளன.

இதனை மேலும் மேம்படுத்த நண்பர்கள் ஆலோசனை வழங்கினால் செயல்படுத்த முயற்சி செய்கிறேன்.

பூந்தளிரின் ஆசிரியராக நமது வாண்டுமாமா இருந்த சமயத்தில் வந்த ஒரு இதழ்.

படக்கதைகள்,சிறுகதைகள்,வேடிக்கை விநோதங்கள் மற்றும் ஒரு சில தொடர்கதைகள் என முற்றிலும் ஒரு கதம்பமாக இந்த இதழை வழங்கி உள்ளார்.

முதல் கதை "உலகின் மகத்தான காட்சி" நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு கதை.

தான் ஆசையாய் வளர்க்கும் எருமை மாடு பூவை வயதானதால் காட்டிற்குள் துரத்தபோகும் தந்தையிடம் இருந்து காப்பாற்ற போராடும் சிறுவன் டுடுவின் கதை.

டுடுவும் அவனது நண்பன் லாசியும் சேர்ந்து அதற்கு நடனம் கற்று தருகின்றனர்.

பின் ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து "உலகின் மகத்தான காட்சி" யை காண்பிக்க போவதாக கூறுகின்றனர்.

மக்கள் வந்ததும் வாத்தியங்கள் முழங்கி பூவை ஆட சொல்கின்றனர்.ஆனால் அது ஆட மறுக்கின்றது.  பின்னர் அனைவரும் பொறுமை இழந்து கிளம்பும் பொழுது அது ஆட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அதனை கண்டு குர்பச்சன்சிங் என்பவர் பூவின் வாழ்நாள் முழுவதும் அதன் உணவிற்கான தொகையை தான் ஏற்று கொள்வதாக கூறுகிறார்.













அடுத்த படக்கதை நமது சுட்டிக் குரங்கு கபீஷுனுடயது.வேட்டைக்காரன் தோப்பையாவிடம் மாட்டிக்கொண்ட கிளிகளை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை படித்து பாருங்கள்.







அடுத்தது வழக்கம் போல தனது உணவிற்காக போராடும் சமந்தகனை ஏமாற்றும் காக்கை காளியின் கதை.

நான் சிறுவனாக இருந்த பொழுது ஒருமுறை எனக்கு மிகவும் காய்ச்சல் அதனால் எனக்கு மிகவும் (கள்ள) பசி எடுத்தது. எனது தாயார் சமைத்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் நான் பார்வதி சித்திர கதைகளில் வந்த காளியின் கலாட்டா புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒவ்வொரு கதையிலும் சமந்தகனின் உணவை காளி காபாற்றிகொண்டிருக்க, அவனது பசி எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். அந்நிகழ்ச்சி நான் எப்பொழுது காளியின் கதை படிக்கும் பொழுதும் எனக்கு நினைவிற்கு வரும்.




பசுவை பற்றிய ஒரு முழு ஆவண படக்கதை.





அடுத்து நமது முட்டாள் சுப்பாண்டியின் கதை.சுப்பாண்டி வெந்நீர் போடும் அழகை பாருங்கள்.




இனி வரும் பூந்தளிர் கதைகள் பதிவுகளில் சார்லி மாமா,துப்பறியும் ரஞ்சன்,மதியூகி மந்திரி இப்படி இன்னும் பலருடைய கதைகளை காண்போம்.

இப்பதிவை பற்றிய உங்கள் கருத்தை பின்னுட்டத்தின் மூலம் கூறுங்கள் நண்பர்களே.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வே வெ .

32 comments:


  1. முன்பு குழந்தைகளுக்காக எவ்வளவு தரமான தமிழ் புத்தகங்கள் வந்துள்ளன என்பதற்கான சான்று இந்தப் பதிவு! Tinkle தமிழிலும் வந்தால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை கார்த்திக்.சிறுவயதில் என் மனதை கொள்ளை கொண்டவை பூந்தளிர் இதழ்கள்.

      Delete
  2. பூந்தளிர் - எனக்கு மிகவும் பிடித்த சிறுவர் இதழ. அப்போதெல்லாம் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. உங்கள் மூலமா ஞாபகபடுத்திக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  3. Very Nice Initiative, many thanks for the effort. This reminded my school days with poondalir, gokulam, ambulimama, rani, muthu and lion comics. They really helped a lot in my ethical and intellectual growth.
    -Jerald Rajan

    ReplyDelete
    Replies
    1. Hi Jerald,Thanks For visiting my Blog and i am very happy that my post rekindles your childhood.And For your kind information our beloved muthu and lion comics are coming even now.

      Have a look in to the Link : http://http://lion-muthucomics.blogspot.in

      //They really helped a lot in my ethical and intellectual growth.//

      Many of us might have experienced in the same way.

      Delete
  4. சுப்பாண்டியும் தந்திரக்கார மந்திரியும் எனது all டைம் favourite ! tinkle 413 ஆம் இதழில் கூட
    கதை எழுதும் படி என்னை தூண்டியவை . உண்மையில் பூந்தளிர் காலம் என்பது
    பொற்காலம் ! எண்ணற்ற கதைகளை பேப்பர் கடையில் போட்டதை நினைத்து இன்றும்
    வருந்துகிறேன் ! உங்களின் இந்த பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது !

    ReplyDelete
  5. அருமை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டீர்கள். நான் காசு கொடுத்து வாங்கும் பருவத்தில் பூந்தளிர் நின்று விட்டது பெரிய சோகம். அடுத்த பூந்தளிர் பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
  6. ராணி காமிக்ஸ் மற்றும் லயன் மூலம் எனது காமிக்ஸ் வாசிப்பை தொடங்கிய எனக்கு, ஒரு புதிய உலகத்தை அறிமுகபடுத்தியது பூந்தளிர் தான். பிற்காலங்களில் தான் இது Tinkle ஐ மையமாக கொண்டு வெளிவந்த இதழ் என்று தெரிந்து கொண்டேன். இருந்தாலும், என் பால்ய கால நினைவுகளில் இன்றும் ஐக்கியமான ஒரு சிறுவர் இதழ்.

    கார்த்தி, தற்போது தான் டிங்கிள் ஹிந்தியில் வெளியாக தொடங்கி இருக்கிறது, தமிழிலும் விரைவில் வெளிவரும் என்று நம்பலாம்.

    ReplyDelete
  7. பூந்தளிரும் ரத்னபாலாவும் மிக சிறு வயது நண்பர்கள். என் பெரியம்மா வீட்டில் ரத்னபாலா வாங்குவார்கள். அவர்கள் வீட்டிற்கு போனதும் முதலில் ரத்னபாலாவை வைத்துக் கொண்டு உட்க்கார்ந்து விடுவேன்.

    ஒரு தடவை நாங்கள் வருவதற்கு முன்புதான் பக்கத்திலுள்ள மளிகை கடைக்கு போட்டுவிட, நான் அடம் பிடித்து அழுத அழுகையில், என் பெரியப்பா போய் அந்த கடையில் ரெண்டு புக் மட்டும் வாங்கி கொண்டு வந்து என் அழுகையை அடக்கினார். இப்போ நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

    காக்கை காளி. கபீஷும் ரத்னபாலாவில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள். நிறைய போடுங்க.



    டெம்ப்ளட் மாற்றிய ரெண்டாவது பிரபல பதிவர். நீங்களும் கார்த்திக்கும் சொல்லி வைத்து மாத்தீட்டீங்களா என்ன ? :D

    ReplyDelete
  8. அருமை... பகிர்ந்த கொண்டதற்கு நன்றி! Did you try Picasa Photoviewer to edit the scans?

    ReplyDelete
  9. @Ultimator : வருகைக்கு நன்றி நண்பரே.

    @Lucky : எனக்கும் அப்படியே.தான். என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் பழைய புத்தக கடையில் வாங்கியவையே.

    @Rafiq : அதன் மூலம் பற்றியெல்லாம் எனக்கு தெரியவில்லை. இப்பொழுதுதான் தெரிந்தது.
    எனக்கும் Tinkle விரைவில் தமிழில் வர ஆசை.

    @Raj : உங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.எல்லாம் உங்களுடைய பிளாக்கர் designer பார்த்து தான் இன்று நானும் மாற்றினேன்.

    @Periyar : கண்டிப்பாக இப்பதிவுகள் தொடரும்.

    ReplyDelete
  10. 'சுரங்கவெடி', 'இந்திய விஞ்ஞானி கடத்தல் - A super hero tiger action' - இப்படியெல்லாம் நீங்கள் இட்ட பதிவைவிட இந்தமாதிரி குழந்தைக் கதைகள் உங்கள் உருவத்திற்கும், மனதிற்கும் ரொம்பவே பொருந்திப்போவதாக எனக்குத் தோன்றுகிறது! :)

    எல்லாக்குழந்தைகளையும் போலவே எனக்கும் பூந்தளிர் என்றால் உயிர்! (இப்போது கிடைத்தாலும் விரும்பிப் படிக்கத் தயார்!)

    என் குழந்தையிடம் கதை சொல்ல இந்தப் பதிவு நிச்சயம் உதவிடும்!

    நன்றி கிருஷ்ணா!

    ReplyDelete
  11. இப்படியெல்லாம் இதழ்கள் வந்ததே தெரியாது.. நான் வாங்கிப் படிக்கும்போது இலங்கையில் அம்புலி மாமா இருந்தது.. பின் கோகுலம், அதன் பின் சுட்டி விகடன்.. அவ்வளவு தான். கொஞ்ச காலத்தின் பின் நிறுத்திவிட்டேன். மூன்று கதைகளும் பிரமாதம்! அருமையான தெளிவான ஸ்கான். மிக்க நன்றி! தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் நண்பா. :-)

    ReplyDelete
  12. பூந்தளிரில் வரும் அனைத்து சித்தரக்கதைகளுமே நன்றாக இருக்கும் . பழய நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பிவிட்டீர்கள்.
    //படங்களை சற்றே மேம்படுத்தி உள்ளேன்.புத்தகத்தின் காகிதங்கள் சற்றே பழுப்படைந்து உள்ளதால் படங்களும் இப்படி உள்ளன.//

    நகல் எடுத்தப்பின் அதனை microsoft office picter manager - இல் auto currect செய்து பாருங்கள். அல்லது நகல் எடுக்கும்போதே செட்டிங்கில் சரிசெய்தால் பழுப்பு குறையும்

    ReplyDelete
  13. அற்புதமான அரிய பொக்கிஷம் நண்பரே! பாதுகாத்தமைக்கு நன்றிகள்! பகிர்ந்தமைக்கு மிகமிகமிக நன்றி! தொடருங்கள் ப்ளீஸ்!

    ReplyDelete
  14. @Vijay : விஜய் ஏன் இப்படி கிண்டல் பண்ணுகிறீர்கள்.
    //என் குழந்தையிடம் கதை சொல்ல இந்தப் பதிவு நிச்சயம் உதவிடும்!//
    அப்படி செய்தீர்கள் என்றால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

    @ஹாலிவுட்ரசிகன் : அப்படி என்றால் நீங்கள் பலவற்றை மிஸ் செய்துள்ளீர்கள் நண்பரே
    உங்களுக்கு ;லயன் மற்றும் முத்து காமிக்ஸ் கூட அறிமுகம் ஆகாதது ஆச்சர்யமே.
    //வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் எக்கச்சக்க லயன், முத்து காமிக்ஸ்களின் முன்னைய வெளியீடுகள் இருப்பதைக் காணமுடிந்தது. தேவைப்படும் நண்பர்கள் முந்திக்கொள்ளுங்கள்!//
    முடிந்தால் இங்கு முயற்சி செய்து பாருங்கள்.

    @Erode M.STALIN : microsoft office picter manager - இதில் AutoCorrect செய்த புகைப்படங்கள் தான் மேலுள்ளவை நண்பரே.
    மேலும் பல மென்பொருட்களை முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.தகவலுக்கு நன்றி.

    @John Simon C : கண்டிப்பாக தொடரும் ஜி.

    ReplyDelete
  15. வாவ் சூப்பர் நண்பரே இளவயது நினைவுகளை மீட்டெடுட்தமைக்கு மிக்க நன்றி நண்பரே :))
    .

    ReplyDelete
  16. // ஒரு வழியாக ஒரு all in one HP பிரிண்டர் வாங்கிவிட்டேன்.அதில் மூலம் வரும் முதல் பதிவு. //

    கேமராவை வைத்து மெகா பதிவுகளை இட்டு கலக்கிய உங்களிடம் பிரிண்டர் என்ன பாடு படப் போகிறதோ ஹ்ம்ம்ம்ம் ;-)

    Jusk kidding

    All the best buddy :))
    .

    ReplyDelete
  17. Superஜி.. முதலில் எனக்கு அறிமுகமான சிறுவர் இதழ் பூந்தளிர் தான் அதை திரும்ப பார்த்தாதில் ரொம்ப மகிழ்ச்சி...நிறைய பூந்தளி இதழ்கள் தொலைந்து விட்டன..மீண்டும் பார்த்ததில் மிகவும் நன்றாக உள்ளது...

    ReplyDelete
  18. அருமையான முயற்சி நண்பரே! தமிழ்ச் சித்திரக்கதைகள் பற்றிய வலைப்பூக்கள் இணையத்தில் எத்தனையோ உள்ளன. ஆனால், ஒருவர் கூடத் தங்களிடம் இருக்கும் பூந்தளிர், வாண்டுமாமா கதைகளில் ஒன்றைக் கூட இதுவரை முழுமையாக வெளியிட்டதில்லை, எனக்குத் தெரிந்த வரை. இப்படி வெளியிடுவது சட்டமீறல் என்பது உண்மைதான். ஆனால், இந்தக் கதைகளை வேறு எப்படி வெளியில் கொண்டு வர முடியும்? இதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் வேண்டுமானால் வாண்டுமாமா அவர்களை நேரில் சந்தித்து, 'பூந்தளி'ரின் கௌரவ ஆசிரியர் என்ற முறையில் அவரிடம் அனுமதிக் கடிதம் பெற்று இதைச் சட்டப்பூர்வமாகவே தொடர்ந்து செய்யலாமே! நீங்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்! அவருடைய முகவரி தருகிறேன். பழைய பூந்தளிர் இதழ் ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. //சட்டமீறல் என்பது உண்மைதான்//

      ஆகையால் தான் ஒரு சில கதைகளின் ஸ்கேன் கள் மட்டும் வெளியிடுகிறேன்.

      Delete
    2. I agree with இ.பு.ஞானப்பிரகாசன். The success of your blog might motivate a publisher to re-publish the book again.

      Delete
    3. வருகைக்கு நன்றி சரண்.

      யாரவது முயற்சி செய்து மீண்டும் இவ்விதழ் தமிழில் வந்தால் மிகவும் மகிழ்ச்சியே.

      Delete
    4. வாண்டுமாமா அவர்களிடம் ஒப்புதல் பெறுவதன் மூலம் நீங்களே அதைச் செய்ய முடியும். செய்ய வேண்டும்!

      Delete
  19. i am lookig for Moondru Mandiravathigal by Vandumama, if any one have that book please contact me in the below mentioned e mail address

    baskarvenkatraman92@gmail.com

    ReplyDelete
  20. Replies
    1. Prem these books are not coming these days. i bought this book during the golden period of tamil comics

      Delete
    2. Ayyo en happiness ku alave illai.Thank you so much for bringing back my good old memories.Pazhaya book shop la indha books kidaikuma..please yaara vadhu sollunga

      Delete
  21. உங்களுக்கு எனது நன்றிகள் ஐயா

    ReplyDelete