Tuesday, April 16, 2013

புஷ்பா தங்கதுரை & ராஜேந்திரகுமார் நாவல்கள்

வணக்கம் நண்பர்களே,

எனது நாவல்கள் தொகுப்பின் வரிசையில் இந்த பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்களின் ஒரு சில அட்டை படங்கள் உங்கள் பார்வைக்கு.

புஷ்பா தங்கதுரை யின் கதைகள் பெரும்பாலும் ஊதாப்பு என்ற புத்தகத்திலேயே வந்துள்ளன. அவரது கதைகளில் பெரும்பாலும் சிங் என்ற இன்ஸ்பெக்டர் வருவார், மற்றும் கட்டாயம் ஒரு கிளுகிளுப்பு காட்சி இருக்கும்.

கதைகளில் வரும் பெயர்களும் பழங்கால பெயர்களாக இருக்கும்.

அவர் க்ரைம் தவிர பிற வகைகளிலும் கதைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக சிறுவர்கள் துப்பறியும் கதைகள் லிட்டில் புஷ்பா என்ற புத்தகத்தில் வந்துள்ளன. மொத்தமாக எவ்வளவு வந்துள்ளன என்று தெரியவில்லை ஆனால் வந்த முதல் புத்தகத்தின் அட்டைபடம் கீழே.

அது தவிர ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் இறை சார்ந்த கதைகளும் எழுதிஉள்ளார். அதில் மிகவும் புகழ் வாய்ந்த கதை திருவரங்கன் உலா. நான் படித்ததில்லை ஆனால் கதையில் ஒரு திருமால் சிலை பல ஊர்கள் பயணம் செய்யும்.

சிறுவர்களுக்கான கதை 

ராணி முத்துவில் வந்த கதைகள்

அவரது புகைப்படம்

ஊதாப்பூ 


ஊதாப்பூ 


மொத்த புத்தகங்கள் 

பிற புத்தகங்களில் வந்த கதைகள் 
ராணி முத்துவில் எனக்கு தெரிந்து எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ஆனால் அவர்கள் பெரிய சாண்டில்யன் கதைகளை எடிட் செய்து வெளியிட்டது பெரிய கொடுமையாக இருக்கும். கதையே புரியாது.

ராணி முத்துவில் வந்த சில அறிய கதைகள் 


அதே போல ஆவி அமானுஷ்யம் சார்ந்த கதைகள் எழுதுவதில் வல்லவர் ராஜேந்திரகுமார். அவரது துப்பறியும் கதைகளில் பெரும்பாலும் ராஜா ஜென்னி என்ற ஜோடி இருக்கும். அவர்களே துப்பு துலக்குவார்கள்.

எனது முன்னைய பதிவில் கூறி இருந்தது போல அவரது கதைகள் கோஸ்ட் என்ற புத்தகத்தில் தொடர்ந்து வந்தன.






ராணி முத்துவில் வந்த கதைகள் 
பாக்கெட் நாவலில் வந்த சில அறிய கதைகள்.



அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ .

31 comments:

  1. புஷ்பா தங்கதுரை படித்திருக்கிறேன் ஆனால் சிங்கை நினைவு இல்லை. ராஜேந்திர குமார் நாவல்களில் வரும் ராஜா ஜென்னி ஜோடி , பரத் சுசீலா மாதிரி துப்பரியதானே செய்வார்கள். அனுமாஸ்யம் குறித்த ராஜேந்திர குமார் நாவல்களை படித்ததில்லை. ஙெ :D

    அவ்வளவையும் கடைக்குப் போடாமல் வைத்திருக்கிறீர்களே பெரிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஊதாபூவில் படித்த பெரும்பாலான கதைகளில் சிங் இருந்தார்.
      ஆமாங்க பரத் சுசீலா மாதிரி எல்லாமே செய்வாங்க.

      கடைக்கு போட்ட பெரிசா ஒன்னும் தேறாதுன்னு தான் போடல.

      Delete
    2. epa iruka intha books ellam

      Delete
  2. தினகரன்April 16, 2013 at 7:01 PM

    பழைய பொஸ்தக கட ஏதும் நடத்திறீங்களா கிருஷ்ணா ?:-)எம்புட்டு புக் ?? ? !

    ReplyDelete
    Replies
    1. ஏதோ தீனா நீங்க மட்டுமாவது நம்புறீங்களே என்கிட்ட நிறைய புக் இருக்குனு.

      Delete
  3. புத்தகப்புதையல்...

    தயவுசெய்து ... இந்த புத்தகம் (புஷ்பா தங்கதுரை & ராஜேந்திர குமார்) எல்லாத்தையும் scan செய்து mediafire-ல் upload செய்ய வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்கிறேன் நண்பரே..:)

      Delete
  4. தல ஒவ்வொரு அட்டைப்படமும் படு கில்மாவா இருக்கும்மா...... ம்ம்ம்ம்ம் கொடுத்து வச்ச ஆளுப்பா.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்டாலின் ..:)

      நண்பர்களுக்காகத்தான் அட்டைப்படங்களை பகிர்ந்துள்ளேன்.

      Delete
    2. @ ஸ்டாலின்

      இங்கேயும் அட்டையைப் பற்றிதான் பேச வேண்டுமா? :)

      Delete
  5. லிட்டில் புஷ்பா பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பதால் ஆரம்ப கால இதழ்களுடன் நிறுத்திவிட்டார்கள். இதே சமயத்தில் தான் ராஜேந்திரகுமார் ஆரம்பித்த சிறுவருக்கான மாத நாவலும் விளம்பரப்படுத்தப்பட்டு வராமலேயே (?!?!?!?!?!) போய் விட்டது.

    இவ்வளவு ஏன்? சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி வாண்டுமாமா அவர்கள் எழுதிய சிறுவர் மாத நாவலே வெற்றி வாய்ப்பை இழந்த ஒரு வரிசைதானே?

    தேவை இல்லாத தகவல்: லிட்டில் புஷ்பாவின் அட்டைப்படங்கள் பிரபல ஆங்கில இளைஞர் நாவல்களின் லோக்கல் டச் தான்.

    //ராணி முத்துவில் எனக்கு தெரிந்து எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ஆனால் அவர்கள் பெரிய சாண்டில்யன் கதைகளை எடிட் செய்து வெளியிட்டது பெரிய கொடுமையாக இருக்கும். கதையே புரியாது//

    இது சற்று வியப்பை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் ராணி முத்துவின் ஸ்பெஷலே பெரிய பெரிய கதைகளை பாமரர்களும் படிக்கும் வகையில் குறைந்த விலையில் வெளியிடுவதுதான். ஆரம்ப காலத்தில் பின் அட்டைகளில் அடுத்த இதழுக்கான விளம்பரங்கள் "பதிப்பக வெளியீடாக ஐந்து ரூபாய்க்கு வந்த இந்த புத்தகம் ராணி முத்துவின் வாசகர்களுக்காக ஒரு ருபாய் விலைக்கே வருகிறது" என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

    சில கதைகளை நூற்றி அறுபது பக்கம் எல்லாம் வெளியிட்டு இருக்கிறார்கள் (அதே ரெகுலர் விலையில்).

    கட்டுப்படுத்த முடியாத போது எழுத்துருக்களை சுருக்கியும் வெளியிட்டு இருக்கிறார்களே ஒழிய கதையை எடிட் செய்ததாக எனக்கு தெரிந்த அளவுக்கு நினைவில்லை. ஏதாவது கதையை குறிப்பிட்டு சொன்னால் சரிபார்த்துக்கொள்வேன்.

    தேவை இல்லாத பின் குறிப்பு: ராணி முத்து இதழ்களை ஒருபோதும் (அவை வெளிவந்த போது) படித்தவன் அல்ல. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு புராஜெக்ட் விஷயமாக ஒரு குறிப்பிட்ட சீசனில் வந்த ராணி முத்து இதழ்களை தேடிப்பிடித்து வாங்கியபோது அடடே என்று ஆச்சரியப்பட்டு முதல் இதழ் முதல் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் இந்த தகவல்களை அளிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. லிட்டில் புஷ்பா பற்றிய தகவலுக்கு நன்றி விஸ்வா.

      //இது சற்று வியப்பை ஏற்படுத்துகிறது//
      நான் படித்த சாண்டில்யன் கதையில் பெரும்பான்மை கத்திரி போடா பட்டு இருந்தது.
      கதையும் புரியாமல் இருந்தது. எனக்கு தெரியவில்லை என்னுடைய அனுபவம் தான் அப்படியா என்று..

      //ஏதாவது கதையை குறிப்பிட்டு சொன்னால் சரிபார்த்துக்கொள்வேன். //
      அட்டை இல்லாத புத்தகம் என்பதால் நினைவில்லை அடுத்த முறை ஊருக்கு போகும் பொழுது பார்த்து சொல்கிறேன்.

      Delete
  6. இந்த புத்தகமெல்லாம் பழைய புத்தக கடையில் முன்னர் தேடி தேடி வாங்கியிருக்கிறேன்.

    நீங்களும் அது போல வாங்கினாப்போல இருக்கு.

    புஷ்பா தங்கதுரை கதையெல்லாம் படிச்சா செக்ஸ் கதை படிக்கிறான்னு சொல்லுவாங்க :-))

    ஊதாப்பு ,குங்கும சிமிழ் போன்றவற்றில் வரும், மேலும் நிறைய தொடராகவும் எழுதி இருக்கார்.

    ராணிமுத்துவில் சோழ தீபம்னு கோவி.மணிசேகரன் பெயரில் கதை இருக்கே, ஆனால் சோழ தீபம்னு மு.மேத்தா ஒரு சரித்திர கதை எழுதி தொடரா கல்கில வந்துச்சுனு நினைக்கிறேன்.

    இங்கே போட்டிருக்கும் கோஸ்ட் நாவல் முதல் எல்லாவற்றிலும் கொஞ்சமாவது படித்திருக்கிறேன்.

    அப்போ சுஜாதவிற்கு என சுஜாதா என்ற மாத நாவல் கூட வந்திச்சு.

    இடி,மின்னல்,இந்து மதி ,ராஜேந்திரகுமாரா, இத்தனை நாளா குரும்பூர் குப்புசாமினு நினைச்சேன், நண்பனின் காதலியை ,மஜாக் செய்து கொன்றுவிடுவான் பின்னர்(ஆவி வந்து பழி வாங்கும் என நினைக்கிறேன்(ஒரு போலீஸ் ஆபிசர் பல்லால் கடிச்சத எல்லாம் ஆராய்வார்)

    ReplyDelete
    Replies
    1. // சுஜாதவிற்கு என சுஜாதா //

      இதனை பற்றி கீழே நண்பர் விஸ்வா கூறியது சரி.
      என்ன்டியாமும் சுஜாதா மற்றும் சதா புத்தகங்கள் இருக்கின்றன.
      அதில் ராஜேஷ்குமார்,PKP என பலருடைய கதைகள் உள்ளன.

      தங்களுடைய ஒரு சில சந்தகங்கள் தீர்ந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி நண்பரே.

      Delete
    2. உங்க அளவுக்கு தீவிரமா வாசிச்சதில்லை, இப்போ எல்லாம் லேசா தான் நினைவில் இருக்கு, இப்ப இணையத்தில் மீண்டும் காணும் போது பழைய நினைவுகள் தூண்டப்படுது.

      பூந்தளிப்பற்றிலாம் பதிவுப்போட்டிருக்கிங்க, அப்போ அதெல்லாம் படிச்சிருக்கேன்,ரத்னபாலா என்ற புத்தகம் போலவெ வரும்.ரத்னபாலாவில் நடுவில் 16 பக்கத்துக்கு காமிக்ஸ் உண்டு.

      நன்றி!

      Delete
    3. சமீபத்தில் எடுத்து பார்த்ததால் தான் கூற முடிந்தது இல்லை என்றால் எனக்கும் அதே நிலை தான்.
      ஒரு சில ரத்தினபாலா புத்தகங்களும் உள்ளன.
      அதனையும் பதிவிட முயற்சி செய்கிறேன் நண்பரே.

      Delete
  7. மு.மேத்தா எழுதியது சோழ நிலா, சோழ தீபத்துடன் குழப்பிக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சோழநிலா விகடனில் வெளிவந்தது

      Delete
  8. வவ்வால் சார்,

    //அப்போ சுஜாதவிற்கு என சுஜாதா என்ற மாத நாவல் கூட வந்திச்சு.//

    மன்னிக்கவும். சுஜாதா மற்றும் சத்யா மாத நாவல்கள் சிந்தாதிரிபேட்டையில் இருந்து வெளிவந்தன. அவற்றின் முதல் இதழில் இருந்து தொண்ணூறுகளின் ஆரம்பகால இதழ்கள் வரை நான் வைத்திருக்கிறேன். கண்டிப்பாக இவை சுஜாதாவுக்காக ஆரம்பிக்கப்பட்டவை அல்ல.

    தேவை இல்லாத பின்குறிப்பு: பூந்தளிர் இதழ் இரண்டாவது முறை ஆரம்பிக்கப்பட்டது இந்த சுஜாதா சத்யா மாத இதழின் ஆசிரியரால் தான். பார்வதி சித்திரக் கதையுமே கூட.

    ReplyDelete
    Replies
    1. அறிய பல தகவல்களுக்கு நன்றி நண்பரே.

      Delete
    2. விஸ்வா,

      நல்ல தகவல்கள்,நன்றி!

      உங்கக்கிட்டே ஏகப்பட்ட கலெக்‌ஷன்ஸ் இருக்கும் போல :-))

      சுஜாதா இதழ் ,சுஜாதா ரசிகர்களை டார்கெட்டா வைத்து வந்திருக்கும்னு ஒரு கணிப்பு அவ்வளவு தான்.

      பூந்தளிர் ,பை பப்ளிகேஷனில் இருந்து ,கைமாறியும் வெளியாச்சா? புதிய தகவல்.பார்வதி சித்திரைக்கதைகள்(அமர் சித்திரக்கதா போல) ,பீமன், இது போல புராண காமிக்ஸ் போட்டது தானே?

      வகை தொகை இல்லாமல் படிச்சது பேரெல்லாம் சரியா நினைவில் இல்லை.

      Delete
    3. //பார்வதி சித்திரைக்கதைகள்(அமர் சித்திரக்கதா போல) ,பீமன், இது போல புராண காமிக்ஸ் போட்டது தானே?//

      அவை இரண்டும் வேறு வேறு.
      பார்வதி சித்திர கதைகள் பற்றிய எனது பதிவு கீழே.

      http://www.kittz.info/2012/09/xiv-parvathi-chithira-kathai-vandumama.html

      Delete
    4. ENAKKU SUJATHA NOVELS KIDAIKUMA

      Delete
  9. நண்பரே ..நீங்கள் இங்கே குறிப்பிட்ட புத்தங்கங்கள் பல நான் படித்தும் ,வைத்தும் இருந்தேன் .ஆனால் இப்பொழுது நாவல் படிக்க அதிகம் ஆர்வம் இல்லை .எனவே போனமாதம் தான் ஒரு 300 நாவலை இலவசமாக நண்பருக்கு கொடுத்தேன் .சில அறிய பழைய நாவல்களை மட்டும் வைத்து கொண்டு .
    ஆனால் உங்கள் நாவல் பதிவுகள் அனைத்தும் பார்க்கும் போது அதை நினைத்தால் வருத்தம் வருகிறது . :)

    ReplyDelete
  10. உங்களின் புத்தக சேமிப்பைப் பார்க்கும்போது, என்னால் படித்துவிட்டு பாதுகாக்காமல் விடப்பட்ட நூற்றுக்கணக்கான ராஜேஷ் குமார், சுபா, பிகேபி புத்தகங்கள் ஞாபகம் வந்து என் மடமையை ஏளனம் செய்கின்றன!

    ஒவ்வொரு பதிவின் முடிவிலும் "அவ்வளவுதான் நண்பர்களே" என்று போடுகிறீர்கள்; ஆனால் வந்துகொண்டே...ஏ.. இருக்கிறதே!!!! :)

    ReplyDelete
  11. அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும்,

    இனிய மே தின நல்வாழ்த்துக்கள் !!!!!

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
  12. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/Bladepedia-In-Valaicharam-03.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  13. Please upload Idhuvum oru viduthalai dan. I am a great fan of Rajendra Kumar.

    ReplyDelete
  14. நவரத்தினம் இதழில் ராஜேந்திரன் குமார் எழுதிய மெகா சைஸ் அடல்ட்ஸ் ஒன்லி நாவல் ஞாபகம் வருகிறது
    பேர் தெரியவில்லை
    பழைய ஞாபகங்களை கிளறி விட்டீர்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  15. இந்த நாவல்களை உங்களிடம் இன்னமும் இருந்தால் அதை நீங்கள் விற்க விரும்பினால், தயவுசெய்து என்னுடைய கமெண்ட்டிற்கு ரிப்ளை செய்யுங்கள். நான் இவற்றை பெற்றிக்கொள்கிறேன் எனக்கு இதை போன்ற பழைய நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete