வணக்கம் நண்பர்களே,
1. Spider vs The Crook from Outer Space (விண்வெளி பிசாசு)
இதுபோல பல பக்கங்கள் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளன.
தப்பி செல்லும் கர்கோ தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூதத்தின் உதவியுடன் ஒரு ராஜாவின் செல்வத்தை கொள்ளையடிக்க பார்கிறான் ஆனால் அவனை ஸ்பைடர் முறியடிக்கிறான்.
அடுத்து பூதத்தின் உதவியுடன் கர்கோ பெரிய உருவத்தையும் நெருப்பு கக்கும்
சக்தியையும் பெற்றுக்கொண்டு பூதத்தை தன உதவிக்கு வரகூடாது என்று கூறிவிட்டு தனித்து கொள்ளை அடிக்க செல்கிறான்.
ஆனால் அங்கு ஸ்பைடர் மற்றும் அவன் சகாக்களால் முறியடிக்கபடுகிறான்.
தனது பாதத்தை முத்தமிட்டால் தவிர தன்னால் அவனை ஸ்பைடரிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்று பூதம் சொல்ல கர்கோ கஷ்டப்பட்டு பூதத்தின் பாதத்தை முத்தமிடுகிறான் பின்னர் பூதம் அவனை காப்பாற்றுகிறது.
தனது இருப்பிடம் வந்ததும் மற்ற கூட்டாளிகளால் கேலிக்கு உள்ளாகிறான் கர்கோ. அதனால் அனைவரும் தூங்கியபின் பூதத்தை கொல்ல பார்க்கிறான்.
இதனை ஞான திருஷ்டியின்மூலம் அறியும் ஸ்பைடர் டெலிபதி மூலம் பூதத்தை எச்சரிக்கை செய்து அதனை காப்பாற்றுகிறான்.
தன்னை கொல்ல பார்த்த கர்கோவை போலீசிடம் மாட்டிவிட்டு யாரிடமும் தோற்காத ஸ்பைடரை ஒரு வாழைபழ தோல் வழுக்கி விழ வைத்து மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். (தலைக்கு வந்த சோதனை)
பின்னர் தனது கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுகிறான். அதனை கேளிவிப்பட்டு மருத்துவமனையில் இருந்து வரும் ஸ்பைடரை தன்னுடன் சேர்ந்துகொள்ள சொல்கிறான் அதற்கு மறுக்கும் ஸ்பைடரை பாவ தேசத்தில் விட்டு விடுகிறான்.
அங்கு இருக்கும் லானா என்ற ராணியால் தான் யார் என்பதை மறந்து அங்கு இருக்கிறான். ஒரு நாள் தொலைகாட்சியில் தனது சகாக்கள் பூதத்திடம் மாட்டிகொண்டு இருப்பதை பார்க்கும் ஸ்பைடர் தன் நினைவுகளை மீட்டு எடுத்து அங்கிருந்து தப்பி சென்று பூதத்தை முறியடித்து மீண்டும் அதனை பாட்டிலில் அடைக்கிறான்.
அலுவலக பணி காரணமாக முன்பு போல இணையத்தில் அதிக நேரம் செலவு செய்ய முடிவதில்லை.
கிடைத்த நேரத்தில் மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.
இப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்த லயனின் 83வது இதழாக வந்த பாட்டில் பூதத்தை பற்றி பார்க்க போகிறோம்.
சிறுவயதில் டெக்ஸ் அடுத்து எனக்கு மிகவும் பிடித்தது ஸ்பைடர் தான்.
ஸ்பைடர் கதைகளில் மிகவும் பிடித்தது.
1. பழிவாங்கும் பொம்மை
2. பாட்டில் பூதம்
3. சைத்தான் விஞ்ஞானி
4. நீதிக்காவலன் ஸ்பைடர்
5. சதுரங்க வெறியன்
6. தவளை எதிரி
பின் மற்றவை.
ஸ்பைடரிடம் இருக்கும் வலைதுப்பாக்கியும் வாயுதுப்பாக்கியும் இல்லை என்று பல நாள் ஏங்கியது உண்டு.
சமீபத்தில் நண்பர் ரமேஷ் ஆங்கிலத்தில் வந்த லயன் ஆங்கில வார இதழ்கள் தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கொடுத்திருந்தார்.
அதனை தரவிறக்கம் செய்து பார்த்த பொழுது அதில் பல ஸ்பைடர் கதைகள் இருந்தன அவைகள்
2. Spider vs The Crime Genie (பாட்டில் பூதம்)
3 Spider vs Spider Boy (யார் அந்த மினி ஸ்பைடர்)
4. Spider vs Andriod Emperor (கொலை படை)
5. Spider vs Exterminator (நீதிக்காவலன் ஸ்பைடர்)
6. Spider vs Sinister seven
7. Spider vs snake
கடைசி இரண்டும் இன்னும் வரவில்லை.
அதனை பார்க்கும் பொழுது நான் தெரிந்து கொண்டது ஸ்பைடர் கதைகள் அனைத்துமே நாம் லயனில் பார்த்ததை விட காதில் பூ சுற்றுதல் மிக அதிகம் என்பதே.
விஜயன் அவர்கள் மிக கவனமாக கதையை சிதைக்கா வண்ணம் எடிட்டிங் செய்துள்ளார்.
நான் ஆங்கிலத்தில் தொடர்களாக வந்ததை ஒரு கதை புத்தகமாக தொகுத்துக்கொண்டு இருக்கிறேன்.
ஸ்பைடர் தவிர அதில் ஆர்ச்சியும் அதிகமாக இருக்கிறது.
இனி இப்பதிவின் புத்தகத்தின் கதைக்கு செல்லலாம்.
இக்கதை ஸ்பைடர் திருந்தி நீதிக்காவலனாக இருக்கும் பொழுது நிகழ்கிறது.
கதை :
ஒரு நாள் ஸ்பைடர் ஒரு கெட்ட கனவு காண்கிறான்.அதனை கண்டு ஏதோ கெட்டது சம்பவிக்க போகிறது என அறிந்து கொள்கிறான்.
அதே சமயம் சிறைசாலையில் இருக்கும் கர்கோ யென்னும் திருடன் கையில் ஒரு பாட்டில் கிடைகிறது.
அதினுள் ஒரு பூதம் இருக்கிறது.அதனை அவன் விடிவிக்க அந்த பூதம் அவன் எது சொன்னாலும் செய்யும் அவன் அடிமை என்று சொல்கிறது.
அதன் உதவியுடன் அவன் தப்பி செல்கிறான்.
செல்லும் வழியில் ஸ்பைடர் வழிமறித்து பூதத்துடன் சண்டை போடுகிறான்.
ஆனால் அவனை சமாளித்து பூதம் கர்கோவுடன் தப்பி செல்கிறது.
தமிழிற்கும் ஆங்கிலத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பாருங்கள்
தப்பி செல்லும் கர்கோ தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூதத்தின் உதவியுடன் ஒரு ராஜாவின் செல்வத்தை கொள்ளையடிக்க பார்கிறான் ஆனால் அவனை ஸ்பைடர் முறியடிக்கிறான்.
அடுத்து பூதத்தின் உதவியுடன் கர்கோ பெரிய உருவத்தையும் நெருப்பு கக்கும்
சக்தியையும் பெற்றுக்கொண்டு பூதத்தை தன உதவிக்கு வரகூடாது என்று கூறிவிட்டு தனித்து கொள்ளை அடிக்க செல்கிறான்.
ஆனால் அங்கு ஸ்பைடர் மற்றும் அவன் சகாக்களால் முறியடிக்கபடுகிறான்.
தனது பாதத்தை முத்தமிட்டால் தவிர தன்னால் அவனை ஸ்பைடரிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்று பூதம் சொல்ல கர்கோ கஷ்டப்பட்டு பூதத்தின் பாதத்தை முத்தமிடுகிறான் பின்னர் பூதம் அவனை காப்பாற்றுகிறது.
தனது இருப்பிடம் வந்ததும் மற்ற கூட்டாளிகளால் கேலிக்கு உள்ளாகிறான் கர்கோ. அதனால் அனைவரும் தூங்கியபின் பூதத்தை கொல்ல பார்க்கிறான்.
இதனை ஞான திருஷ்டியின்மூலம் அறியும் ஸ்பைடர் டெலிபதி மூலம் பூதத்தை எச்சரிக்கை செய்து அதனை காப்பாற்றுகிறான்.
தன்னை கொல்ல பார்த்த கர்கோவை போலீசிடம் மாட்டிவிட்டு யாரிடமும் தோற்காத ஸ்பைடரை ஒரு வாழைபழ தோல் வழுக்கி விழ வைத்து மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். (தலைக்கு வந்த சோதனை)
பின்னர் தனது கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுகிறான். அதனை கேளிவிப்பட்டு மருத்துவமனையில் இருந்து வரும் ஸ்பைடரை தன்னுடன் சேர்ந்துகொள்ள சொல்கிறான் அதற்கு மறுக்கும் ஸ்பைடரை பாவ தேசத்தில் விட்டு விடுகிறான்.
அங்கு இருக்கும் லானா என்ற ராணியால் தான் யார் என்பதை மறந்து அங்கு இருக்கிறான். ஒரு நாள் தொலைகாட்சியில் தனது சகாக்கள் பூதத்திடம் மாட்டிகொண்டு இருப்பதை பார்க்கும் ஸ்பைடர் தன் நினைவுகளை மீட்டு எடுத்து அங்கிருந்து தப்பி சென்று பூதத்தை முறியடித்து மீண்டும் அதனை பாட்டிலில் அடைக்கிறான்.
விரைவில் தமிழ் ஸ்கேன் பக்கங்களை அப்லோட் செய்கிறேன்.
உங்கள் கருத்துக்ககளையும் நினைவலைகளையும் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.
இக்கதையின் ஆங்கில தொகுப்பை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வா வெ.
welcome back
ReplyDeleteநன்றி கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ).
Deletesuper ji! welcome!
ReplyDeleteநன்றி John Simon C.
Deleteம்ம் இப்படி எல்லாம் இக்கதையை படித்தால்தான் உண்டு போல . . மீள்வரவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅந்த மட்டிலும் நண்பர்களை திருப்தி படுத்தத்தான்.
Delete// ஸ்பைடரிடம் இருக்கும் வலைத் துப்பாக்கியும், வாயுத் துப்பாக்கியும் இல்லை என்று ஏங்கியது உண்டு //
ReplyDeleteஇப்பக் கேட்டுப்பாருங்களேன்? சும்மாதானே வச்சிருப்பார்; கேட்டதும் கொடுத்திடப் போறார்! இல்லேன்னாலும், ஒரு அம்பதோ, நூறோ உள்ளங்கையில் வச்சு அழுத்தினா அவரோட ஜெட் அமைப்பையும் சேர்த்தே கொடுத்திட வாய்ப்புகள் அதிகம்! ;)
அப்படியே, அவரோட ஹெலிகாரை என்ன ரேட்டுக்குத் தருவார்னு எனக்காகக் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்? :)
அவரிடம் கேட்டதற்கு ஈரோடு விஜய் என்பவரிடம் ஏற்கனவே கொடுத்து விட்டதாக கூறினார். ஏன் பாஸ் நீங்க வாங்கிட்டு உசுபேத்திவிடறீங்க
DeleteEnakum migavum piditha spider kadhai...
ReplyDeleteஎனக்கும் தான் பரணி
Deleteஆங்கில சுட்டிக்கு நன்றி பாஸ்.. ஆனா எனக்கு ஏனோ காமிக்ஸ் கதைகளை தமிழில் படித்தா தான் படித்த மாதரி இருக்கும். ஸ்பைடர் கதாபாத்திரம் எனக்கு அவ்வளவு பரிச்சியம் இல்ல. விரைவில் தமிழ் பக்கங்களை அப்லோட் செய்யுங்கள்.
ReplyDeleteஇறுதி பத்து பக்கங்கள் தமிழில் தான் இருக்கும் ராஜ்.
Deleteதமிழ் பக்கங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
Deleteசூப்பர் கிருஷ்ணா. என் முதல் ஹீரோ ஸ்பைடர்தான். ஸ்பைடரின் வலையில் சிறு வயதில் சிக்குண்டு கிடந்த நாட்களை எண்ணி பார்கிறேன். இதில் பாட்டில் பூதம் மற்று நீதிக் காவலன் ஸ்பைடர் புத்தகங்கள் படிக்கவில்லை. எத்தனுக்கு எத்தன் , -பழி வாங்கும் குமிழிகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்தவை. ஒரு தீபாவளி மலர் என்று நினைக்கிறன் 20 ரூபா புத்தகம், ஸ்பைடர் முனட்டையை அலங்கரிப்பார், என்ன தலைப்பு என்று நினைவில்லை. நானும் என் நண்பனும் (டாக்டராக லண்டனில் இருக்கிறான் இப்போது) ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு வாங்கியது நினைவுக்கு வருகிறது.
ReplyDelete//இதில் பாட்டில் பூதம் மற்று நீதிக் காவலன் ஸ்பைடர் புத்தகங்கள் படிக்கவில்லை//
Deleteஅடுத்து நீதிக்காவலன் ஸ்பைடர் தான் ஆங்கிலத்தில் பகிரப்போகிறேன்.
//20 ரூபா புத்தகம்,//
லயன் செஞ்சுரி ஸ்பெசல் தான் என்று நினைக்கிறன்.
அது தான் 20ரூ வந்தது
என்னிடம் காணாமல் போன புத்தகத்தில் இதுவும் உள்ளடக்கம். நண்பர் புனித சாத்தான் புண்ணியத்தில் இப்பொழுது படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது . நீங்க கொடுத்து வச்ச ஆளு தலைவா ( ஆனாலும் அந்த காது நீண்ட ஆளை அன்று முதல் இன்றுவரை எனக்கு ஏனோ பிடிக்க வில்லை)
ReplyDeleteஎன்னங்க கடைசில பிடிக்காதுன்னு ஒரு திருப்பம் கொடுத்துட்டீங்க
Deleteமுழுமையாக எல்லாப் பக்கங்களும் இருந்திருந்தால் அருமை
ReplyDeleteHarrah's Casino in Phoenix - Mapyro
ReplyDeleteThe closest casino 거제 출장샵 to Phoenix? · Harrah's Phoenix has 포천 출장마사지 the closest 시흥 출장샵 casino to Phoenix. 하남 출장안마 · The Harrah's Phoenix is located 김천 출장마사지 in Arizona. · Location
Optical readability, biocompatibility, and cost-effective method of production are expected to drive product demand in the medical trade. In addition, they offer low-cost labor, which additional reduces the general manufacturing value for producers. However, this shift has resulted in high precision machining the overcapacity of various plastic merchandise, affecting their prices. Compared with injection velocity and jet temperature, the effects of the soften temperature, holding stress and holding time on the replication fee of micro-structured polymer are extra important. The soften temperature and holding stress have important influences on the surface roughness of micro-formed polymer. The minimal surface roughness Ra at the groove backside of micro-structured polymer is 0.805 µm.
ReplyDelete