வணக்கம் நண்பர்களே,
மீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
இப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.
இப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.
இப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.
பூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.
இவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.
இக்கதையில் காசுகொடுத்து பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம் சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.
வாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.
எனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி பிடிக்கும்
அதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.
இவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.
மனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் அவனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.
அங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.
பூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.
அவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.
கதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.
அவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.
வேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை பிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.
அவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.
இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.
அடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்
அவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெரியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.
எப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.
பொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.
இதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .
கிருஷ்ணா வ வெ.
வந்தோம்ல பஸ்ட்
ReplyDeleteநன்றி லக்கி
Deleteரொம்ப நன்றி! நமது தமிழ் காமிக்ஸ்களை விட பூந்தளிர் பார்க்கும் போது தான் சிறுவயதுக்கே மீண்டும் சென்ற மாதிரி உள்ளது.
ReplyDeleteமுற்றிலும் உண்மை தமிழ், கதாபாத்திரங்கள் அவ்விதம் அமைக்கபட்டிருப்பது தான் காரணம் என்று நினைக்கிறன்.
Deleteகாமிக்ஸ்களில் வரும் கதாபாத்திரங்கள் நாம் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்.
ஆனால் பூந்தளிர் கதாபத்திரங்களை நம்முடன் தொடர்ப்பு செய்து பார்க்க முடியும்.
பரமு தான் எனக்கு மிகவும் பிடித்த இன்றும் நினைத்தால் மகிழ்விக்கும் பாத்திரம். பரமு மாட்டுவண்டியில் குழந்தைகளை பள்ளிகூடத்திற்கு ஏற்றி போவது போல் ஒரு கதை எப்போதும் நினைவில் இருக்கிறது. அந்த கதை இருந்தால் போடுங்கள்.
ReplyDeleteகண்டிப்பாக என்னிடம் இருந்தால் போடுகிறேன்.
Deleteதூள் . . உங்களிடம் இல்லாத புத்தகமே இல்லை போல . . ;-)
ReplyDeleteஇருக்குற புத்தகங்களை பகிர்கிறேன் அவ்வளவு தான் தீனா :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநீங்களே கிண்டல் செய்வதை குறிப்பு (:P) மூலம் ஒத்துக்கொண்டதால் நான் அதற்கு மேலும் எதுவும் கூறவில்லை நண்பரே.
Deleteகாமிக்ஸ் கிட்டங்கி கிருஷ்ணா கலக்குங்க தொடர்ந்து :)
ReplyDeleteஎன்ன தான் மாற்றினாலும் என்னிடம் உங்கள் அளவிற்கு இல்லை என்பதை கூறிவிட்டீர்கள்.
Deleteஅது முற்றிலும் உண்மை நண்பரே. நான் எல்லாம் உங்களிடம் நெருங்கவே முடியாது.
(பார்க்க பதிவு எண் 100 அவ்வளவு பெரிய புக்....)
நன்றி நண்பரே! இதை cbr பார்மேட்டில் தரமுடியுமா?
ReplyDeleteகண்டிப்பா அப்லோட் செய்துவிட்டு தருகிறேன்.
Deleteபூந்தளிரில் மொத்த கதாபாத்திரங்களையும் வைத்து ஒரு கலக்கல் சாட் ஐட்டம் கதை பரவாயில்லை. பரமு கதை எதார்த்தமான நகைச்சுவை. ஏகப்பட்ட பூந்தளிர் வைத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறதே?
ReplyDeleteஇல்லை ராஜ் ஒரு 20 அல்லது 25 இருக்கும்.அவ்வளவுதான்.
Deleteஒவ்வொரு பக்கமும் வரலாறு, தமிழகக் காமிக்ஸ் கலாச்சார வரலாறு! தயவு செய்து அத்தனைப் பக்கங்களையும் அந்தக்கால விளம்பரங்களுடன் ஸ்கானி பாதுகாத்து பகிர்ந்தளித்து விருந்து படைத்து மகிழ்விக்க வேண்டுகிறோம் தலைவரே! எனது ரிக்வெஸ்ட் மனித பலூன் ஹி ஹி ஹி முருங்கை மரத்தை விட்டு இறங்க மாட்டேன்! ஹீ ஹீ ஹீ
ReplyDelete//எனது ரிக்வெஸ்ட் மனித பலூன் //
Deleteகண்டிப்பாக ஜி அம்மா இங்க வந்திருக்காங்க அதுனால என்னால போக முடியவில்லை.
அடுத்த முறை கண்டிப்பாக உண்டு.
பழைய கால நினைவுகள்... பூந்தளிர் போன்ற குழந்தைகள் புத்தகங்களை நேரில் பார்த்த அக்கால குழந்தைகள் வரம் வாங்கியவர்கள்... இப்போது Chota Bheem போன்றவைகள் தான் தரமாம்.... தேவுடா :(
ReplyDeleteமுற்றிலும் உண்மை ரபிக் பதிவிற்காக எடுத்து படிக்கும் பொழுது பூந்தளிர் மட்டும் எனக்கு ஒரு தனிவித சந்தோசத்தை தருகிறது.
Deleteவாவ் மிக அருமை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே :))
.
நெடுநாட்களுக்கு பிறகு வருகிறீர்கள் சிபி சார் நலமா?
Deleteபிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்ததா?
கதை சொல்லும் விதத்திலும், வார்த்தைகளை நகர்த்திச் செல்லும் அழகிலும் ரொம்பவே தேறிவிட்டீர்கள் கிருஷ்ணா!
ReplyDeleteஉங்கள் பதிவுகளைப் படித்து முடிக்கும்போது நிறையவே வயசு குறைந்துவிட்டதைப் போல உணர்கிறேன்.
மாமா, மிட்டாயீ? :)
வருகைக்கு நன்றி விஜய்.
Delete//கதை சொல்லும் விதத்திலும், வார்த்தைகளை நகர்த்திச் செல்லும் அழகிலும் ரொம்பவே தேறிவிட்டீர்கள் கிருஷ்ணா!//
நன்றி விஜய்.உண்மையில் உங்களது மற்றும் கார்த்திக்கின் கருத்துக்கள் மற்றும் பதிவுகளை படிக்கும் பொழுது அதில் இழையோடும் நகைச்சுவை கண்டு ஆச்சர்யம் மிகுந்த ஏக்கம் கொண்டுள்ளேன்.
ஹ்ம்ம் அதெல்லாம் ய்ர்கயிலேயே வர வேண்டும் போல.
ஏய்! இது நான் வாங்கிப் படித்த இதழ்களில் ஒன்று. இதைவும், இதற்கு முன்னும் பின்னும் சில இதழ்களையும் நான் வெளியான புதிதிலேயே சுடச்சுட வாங்கிப் படித்திருக்கிறேன். இந்தப் படங்களைப் பார்த்தவுடனே எனக்கு அது நினைவுக்கு வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் படங்கள் அப்படியே என் நெஞ்சில் இருப்பது எனக்கே பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது! பலே பாலுவின் பறக்கும் டிராயர் போல இந்த இதழ் என்னை அந்தக் காலக்கட்டத்துக்கே அழைத்துச் சென்று விட்டது! என் உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை! மிக்க நன்றி என மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
ReplyDeleteஎன்னுடைய பதிவின் முழு சந்தோசமும் எனக்கு உங்கள் பதிவு கொடுத்தது.
Deleteமிகவும் நன்றி.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இந்த பதிவை படித்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டேன், அந்த பரமு பாத்திரம், காண்டாமிருக படம் எல்லாம் என் நினைவின் அடுக்குகளில் தூங்கி இருந்தவைகளை எழுப்பி விட்டன,
ReplyDeleteஇந்த பூந்தளிரை என் கைகளில் ஏந்தி இருக்கிறேன், எத்தனையோ தடவை படித்து இருக்கிறேன், வாங்க காசில்லாமல் இரவல் வாங்கி படித்தது தான், இப்போது காசிருந்தும் பூந்தளிர் மாதிரி ஒரு நூல் இல்லை அதை விட குறைவான தரத்துடன் கூட ஒரு குழந்தைகள் நூலும் இல்லயே!, அமர் சித்திர கதைகள் ஆங்கிலத்தில் வருகின்றன, அதை தமிழில் பூந்தளிர் போல மொழி பெயர்க்கும் ஒரு பதிப்பகம் கூடவா இல்லை தமிழ் நாட்டில்?
மேலும் வாண்டுமாமா அவர்கள் எழுதிய "பார்வதி சித்திர கதைகள்" மூலமாக வெளி வந்த ஓநாய் கோட்டை, கனவா நிஜமா?, பலே பாலு, போன்ற நூல்கள் இருந்தால் வெளி இடவும்.
என் சிறு வயது நினைவுகளை கிளறி மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதற்க்கு மிக்க நன்றி நன்றி,
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிகவும் நன்றிகள் தமிழ்.
Deleteபார்வதி சித்திரக்கதைகள் பற்றிய நண்பர் சௌந்தரின் பதிவுகள் கீழே.
http://tamilcomics-soundarss.blogspot.com/2012/10/vandumama-parvathi-chithira-kadhai.html
http://tamilcomics-soundarss.blogspot.in/2012/08/classics-of-parvathi-chithirak-kadhai.html
http://tamilcomics-soundarss.blogspot.in/2012/09/vandumama-kanava-nijama.html
பூந்தளிரின் தரத்தில் இப்பொழுது ஒரு சிறுவர் இதழும் இல்லை எனபது மிகவும் ஏமாற்றம் தான்.
ஆனால் இப்பொழுதும் தமிழில் லயன் காமிக்ஸ் மூலம் பலதரப்பட்ட இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அதன் எடிட்டர் விஜயன் அவர்களின் வலைபூ.
http://lion-muthucomics.blogspot.in/
Thanks for sharing the links, :)
Deleteஅன்புள்ள நண்பருக்கு! வணக்கம்! இந்த தளத்தில் வெளியிட்டுள்ள சார்லி மாமா படக்கதையை நான் வெளியிடும் “சின்னப்பூக்கள்” என்ற சிறுவர் மின்னிதழில் வெளியிட்டுக்கொள்கிறேன்! பூந்தளிர் சிறுவயதில் நான் வாசித்து மகிழ்ந்த இதழ். அதன் சிலபக்கங்களை இங்கே வாசிக்கையில் அந்த காலம் கண்முன்னே வந்தது. அந்த காலம் போலவே சிறுவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவே சின்னப்பூக்கள் மின்னிதழ் லாப நோக்கின்றி என் சொந்த முயற்சியில் நடத்தி வருகிறேன். உங்கள் தளத்து பதிவுகளை அந்த இதழில் வெளியிட்டுக்கொள்ள உங்களின் அனுமதியை வேண்டுகிறேன்! நன்றி! தொடர்புக்கு 9444091441 எஸ்.சுரேஷ்பாபு.
ReplyDelete