வணக்கம் நண்பர்களே,
பொதுவாக நான் தமிழ் அல்லாது ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி மற்றும் நம்ம கருந்தேள் பரிந்துரைக்கும் கொரிய படங்கள் பார்ப்பேன். (கண்டிப்பாக சப் டைட்டில் கொண்டு தான்).
எனக்கு மலையாளத்தில் பிடித்த ஹீரோ ப்ருத்விராஜ். அவர் கனா கண்டேன் திரைபடத்தில் நடித்த வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தை பார்த்தத்தில் இருந்து பிடிக்கும். உண்மையில் அக்கதையின் ஆண்ட்டி ஹீரோ அவர் தான் நம்ம ஸ்ரீகாந்த் கெஸ்ட் ரோல் பண்ணிருப்பார் :D.
மலையாளத்தில் வரும் த்ரில்லர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அந்த காலத்தில் வந்த சிபிஐ டைரிக்குறிப்பு, உண்மை முதல் போன வருடம் வந்த மசாலா 20 20 வரை நன்றாக இருக்கும்.
அதிலும் இவ்வருடம் வந்த மும்பை போலீஸ் மற்றும் மெமரீஸ் திரைப்படங்கள் மலையாள படங்களின் அடுத்த பரிமாணம் என்று கூறலாம்.
அதிலும் மும்பை போலீஸ் படத்தில் இமேஜ் பார்க்காமல் நடித்த ப்ரித்விராஜை கண்டிப்பாக பாராட்டவேண்டும். நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்பதை படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.
இப்பதிவில் சமீபத்தில் நான் பார்த்த மெமரீஸ் திரைபடத்தை பற்றிய எனது கருத்தே.
படம் ஆரம்பிக்கும் பொழுது பாண்ட் படங்களில் வருவது போல ஆங்கில பாடல் ஒன்று பாட அதிரடி படை ஒன்று தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் நபரை சண்டையிட்டு காப்பாற்றுகிறது. அதில் ஒரு அதிகாரி சாம் அலெக்ஸ் நம்ம ப்ரித்விராஜ். பிடித்து வைத்திருந்த நபரை காப்பாற்றி அழைத்து போகும்பொழுது ஒரு தீவிரவாதி மட்டும் இறக்காமல் அவரை அடையாளம் பார்த்துவிடுகிறான்.
இது நடந்து சில மாதங்களுக்கு பிறகு, கொச்சியில் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி தனது மனைவியுடன் அங்காடியில் பொருட்கள் வாங்கிகொண்டு வரும் பொழுது கார் பார்கிங்கில் வைத்து கடத்தபடுகிறார்.பின் 3 நாட்கள் கழித்து ஒரு சாலையோரத்தில் உயரமான மரத்தில் தொங்கவிட்டு கிடைக்கபடுகிறார். அவரது மார்பில் வேற்றைய மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.
அக்கொலையை விசாரிக்கும் S P வினோத் கிருஷ்ணா அக்கொலைக்கு காரணம் கொலையானவரின் மனைவியின் இளவயது காதலன் தான் என்று அவனை கைது செய்து முடித்துவிடுகிறார்.
இது நடந்து 5 மாதங்கள் கழித்து மற்றொரு அதிகாரி தனது மனைவி குடும்பத்துடன் காரில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வருகிறார். மனைவி உள்ளே செல்ல மகனை சிறுநீர் கழிக்க அழைத்து செல்கிறார். சிறிது நேரம் கழித்து வெளியே வரும் மனைவி தனது கணவன் கடத்தப்பட்டு இருப்பதை அறிகிறார்.
மேலும் 3 நாட்கள் கழித்து ஒரு ஓடையின் பாலத்தில் கைகள் பாலத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கபடுகிறார். இப்பொழுது போலீஸ் மீது பத்திரிகைகளால் குற்றம் கூறப்படுகிறது. மேலிடத்தில் இருந்து யாராவது திறமையான அதிகாரியிடம் கேஸை ஒப்படைக்க கூறப்படுகிறது.
இப்பொழுது நாம் மீண்டும் சாம் அலெக்சை பார்க்கிறோம்.முகமெல்லாம் தாடியுடன் மிகுந்த குடிபோதையுடன் இருக்கிறார். பிளாஷ்பாக்கில் நாம் முதல் காட்சில் பார்த்த தப்பித்த தீவிரவாதியினால் அவருடைய மனைவியும் மகளும் அவரது கண்முன்னால் கொலைசெய்யபட்டதை அறிகிறோம்.
அந்த நிகழ்ச்சியின் சோகத்தில் இருந்து வெளிவரமுடியாமல் முழு நேர குடிகாரராக இருக்கிறார். அவரை காணும் அவரது உயர் அதிகாரி இந்த சீரியல் கொலைகள் கேஸை பார்க்க சொல்கிறார். முதலில் மறுக்கும் சாம் பின் தனது தாயின் வற்புறுத்தலினால் சம்மதிக்கிறார்.
இடையில் அவரது குடிப்பழக்கத்தால் தனது தம்பி மற்றும் சமூகத்தில் அவலநிலைக்கு ஆளாகிறார். அவரது தம்பி தனது கல்யாணத்திற்கு கூட வரவேண்டாம் என்று அவரை கூறிவிடுகிறான்.
புலனாய்வு செய்யும் சாம் கொலையானவர்களின் மார்பில் எழுதி உள்ளது அரபு என்றும் அது பைபிளின் வாசகத்தை குறிகின்றது என்றும் கண்டுபிடிக்கிறார்.
கொலையாளி பைபிள் மீது ஈடுபாடு கொண்டவன் என்றும் ஆகையால் தான் கடத்தி 3 நாட்கள் கழித்து ஜீசஸ் போலவே கைகள் கட்டப்பட்டு தொங்கவிடுகிறான் என்றும் கண்டுபிடிக்கிறார். மற்றும் ஜீசஸ் மற்றவர்கள் பாவங்களுக்கு தான் தண்டனை அனுபவித்து போல இறந்தவர்களும் அவர்களது மனைவிகள் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கிறார்.
கொலையானவர்களின் மனைவிகளை விசாரிக்கும் பொழுது பல தகவல்கள் வெளிவருகின்றன. அதனை வைத்து எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் மற்றும் தனது குடிப்பழக்கத்தில் இருந்து மீள்கிறார் என்பதே மீதிக்கதை.
படம் நன்றாக இருக்கிறது என்ன சப் டைட்டில் தான் கிடைக்கவில்லை, இருந்தும் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் இருக்க வில்லை.
அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.
அருமையான படம். எனக்கும் சப் டைட்டில் கிடைக்கவில்லை. (சரி சரி. ரெண்டு பெரும் ஒரே இடத்துலதான் டவுன்லோடு பண்ணியிருப்போம்). கடந்த வருடம் பிரித்விராஜின் மும்பை போலிஸ் மற்றும் மெமரீஸ், இரண்டுமே அட்டகாசம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி அர்விந்த்.
Delete// இரண்டுமே அட்டகாசம்//
உண்மை.
Yes, a brilliant, captivating movie. Enjoyed it thoroughly. Have you seen Grandmaster?, another nice movie, starring the great Mohan Lal
ReplyDeleteThanks for Visiting my Blog Tamilzhan.
Delete//Have you seen Grandmaster?//
Yes i have seen it.Another Nicely Executed Thriller Movie.
ஊப்ப்ஸ்! என்ன அழகாக கதை சொல்கிறீர்கள்!! நிறையவே தேறிவிட்டீர்கள் கிருஷணா!
ReplyDeleteசைக்கோ கில்லர் வரிசையில் இதுவும் வித்தியாசமானதுதான் போலிருக்கிறது!
சமீபத்தில் நான் படித்த 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' (மதன் எழுதியது) இது போன்றதே! படிக்கும்போதே அரண்டுபோய் விட்டேனாக்கும். மனிதருள் இத்தனை முகங்களா - என்பது போல 'கொலையாளிகளில் இத்தனை முகங்களா' என்று வியக்க வைத்தது. நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவில்லை எனில் ஒரு புரட்டு புரட்டிப் பாருங்களேன்? :)
பாராட்டுக்களுக்கு நன்றி விஜய்.
Delete// 'மனிதனுக்குள் ஒரு மிருகம்//
நானும் படித்திருக்கிறேன். பலவித கொலையாளிகளை பற்றி அழகாக கூறி இருப்பார்.
Congrats for crossing 50,000 hits!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
Thanks for the review. Will try to watch these movies.
ReplyDeletehai கிருஷ்ணா iam krish from EU i want to talk to u can u give your TP.NO be curse i wan to by some books from india. so i need some details
ReplyDeletehai கிருஷ்ணா வ வெ i am kriesh form EU. i want to talk to u about books & i wan to by . can u give your TP NO My Email id ( kkrieshna@yahoo.com)
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html
நன்றியுடன்
சாமானியன்