Thursday, July 12, 2012

காமிக்ஸ் புதையல் X - ஒரு காமிக்ஸ் கதம்பம்வணக்கம் நண்பர்களே,

இதுவே எனது கடைசி பதிவு.
இப்பதிவில் என்னிடம் இருக்கும் இதர காமிக்ஸ்கள் தொகுப்பை அளித்துள்ளேன்.
அதாவது லயன் குழுமத்தின் மற்றும் ராணி காமிக்ஸ் அல்லாத பிற காமிக்ஸ்.

அவற்றில் கலைபொன்னியில் இருந்து வந்த மலர்மணி,பொன்னி மற்றும் கலைபொன்னி காமிக்ஸ்.ஒரே ஒரு மாலைமதி காமிக்ஸ்.
வாசு காமிக்ஸ்,லீலா காமிக்ஸ் மற்றும் சில உள்ளன.
மற்றும் முல்லை தங்கராசன் அவர்களால் வெளியிடப்பட்ட 3 மாயாவி காமிக்ஸும் உண்டு.

இவை அனைத்துமே காமிக்ஸ் உலகத்திற்கு தன்னால் ஆனா உதவி புரிந்து இருக்கிறது.
இவைகளில் மலர் மணி சற்றே தரமானதாக இருக்கும்.
பொன்னி காமிக்ஸில் ஸ்ரீகாந்த் ஓவியம் வரைந்த காமிக்ஸ்கள் எனக்கு பிடிக்கும்.
எடுத்துக்காட்டாக எனது முதல் பதிவில் கூறியிருக்கும் பிரைட்டன் தீவில் சிலந்தி.  கதையை  கூறலாம்.

இக்காமிச்களில் ஏகப்பட்ட வகையான மாயாவியை பார்க்கலாம்.
மின்னல் மாயாவி,மறையும் மாயாவி,இரும்புக்கை மாயா மாயவன் மற்றும் இரும்புக்கை மாயாவி.

ஆனால் இவை எதுவுமே நமது முத்துவின் மாயாவிக்கு ஈடாகாது.

இப்பதிவின் ஆரம்பத்தில் நான் கூறியது போல இதுவே எனது கடைசி காமிக்ஸ் பதிவு.
காரணம் இதுக்கு மேல பதிவிட என்னிடம் மற்ற காமிக்ஸின் புகைப்படங்கள் இல்லை.
அடுத்த பதிவுகள் இனிமேல் நான் ஊருக்கு சென்று வந்த பிறகு தான்.
அதை தான் நான் அப்படி கூறி இருந்தேன்.

இனிமேல் கொஞ்ச நாளைக்கு நம்ம சௌந்தர்,கார்த்திக்,ஸ்டாலின்,பாலாஜி இவர்களது பதிவுகளை பார்த்து பொழுதை ஊட்ட வேண்டியதுதான்.
அதுவும் நம்ம சௌந்தர் பெரிய trailer வேறு காட்டியுள்ளார்.

இத்துடன் ஒரு சிறு விடுமுறை மீண்டும் சிறுது காலத்திற்கு பிறகு சிந்திப்போம் நண்பர்களே.

கிருஷ்ணா வ வெ .

21 comments:

 1. //இதுவே எனது கடைசி காமிக்ஸ் பதிவு...
  அடுத்த பதிவுகள் ஊருக்கு சென்று வந்த பிறகு//

  நல்லவேளை முழுதாய் மூட்டை கட்டி விட்டீர்களோ என நினைத்தேன்! ;)

  //பிறகு சிந்திப்போம் //
  எடி எஃபெக்ட்? :D

  ReplyDelete
  Replies
  1. //இதுவே எனது கடைசி காமிக்ஸ் பதிவு.//
   சும்மா ஒரு விளம்பரம்............

   //எடி எஃபெக்ட்//
   உண்மை உண்மை :)))))))))

   Delete
  2. இதில் இரும்புக்கை மாயாமாயவன் ,மின்னல் மாயாவி ,அற்புதமான கதைகள்,ஏனோ திடீரென நின்று விட்டன,எதிர்பார்ப்பை எகிர வைத்து விட்டு .அடிமைத்தீவில் மாயாவி படித்ததாக நினைவில் இல்லை,நேரம் கிடைத்தால் அதை பற்றி ,ஏன் இந்த மூன்று சிறந்த கதைகளையும் பதிவிடுங்களேன் ,பொன்னி போன்ற காமிக்ஸ் இன்னும் சேர்க்கும் நீங்கள் சிறந்த காமிக்ஸ் பக்தர்தான் ...................பிற பதிப்பகத்தாரின் கதைகளையும் சிறிது விளக்கமாக கூறுங்களேன் .

   Delete
  3. வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.

   //ஏன் இந்த மூன்று சிறந்த கதைகளையும் பதிவிடுங்களேன்//
   //பிற பதிப்பகத்தாரின் கதைகளையும் சிறிது விளக்கமாக கூறுங்களேன்//

   கண்டிப்பாக நண்பரே.
   ஊருக்கு சென்று வந்ததும் எதிர்பாருங்கள்.

   //பொன்னி போன்ற காமிக்ஸ் இன்னும் சேர்க்கும் நீங்கள் சிறந்த காமிக்ஸ் பக்தர்தான்//

   காமிக்ஸ் என எது கிடைத்தாலும் சேகரித்த காலம் அது நண்பரே.

   Delete
 2. super collection. Many persons may hold all the Lion-Muthu issues. But there are chances for ignoring comics like this. So please keep safe all this books

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே

   //So please keep safe all this books//

   I am trying hard friend.i am not sure how am i going to do.
   When i go home this time i have buy some plastic covers and has to cover each books.hope this will help.

   Delete
 3. Nice Collection Friend.

  Template Modification is very nice and beautiful . வலைப்பூவைத் திறந்தவுடன் டெக்ஸ் மிரட்டுகிறார் நண்பா. ரொம்ப புடிச்சிருக்கு.

  சீக்கிரமே சொந்த ஊர் சென்று வந்து அடுத்த பதிவை இட வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.

   கண்டிப்பாக நண்பரே.

   எனக்கும் இந்த டிசைன் பிடித்திருந்தது நண்பரே.

   Delete
 4. உங்கள் பதிவிற்கு டெக்ஸ் சுற்றி நின்று பாதுகாப்பளிப்பது போல் உள்ளது.

  ReplyDelete
 5. Border Lines of the template is also very nice. Please take care on Home Button Bar.

  ReplyDelete
  Replies
  1. what is your suggestion for the home button.
   can u help me in this.

   Delete
 6. மிக அருமையான தொகுப்பு
  நமது நண்பர் சிவ் சொல்லியது போல லயன் முத்து குழும இதழ்களை தவிர்த்து மற்றவற்றை சேகரிக்க ஏனோ மனம் வரவில்லை ;-)
  .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.
   காமிக்ஸ் என எது கிடைத்தாலும் சேகரித்த காலம் அது நண்பரே.

   Delete
 7. ஆம் நண்பரே,நண்பர் சௌந்தர் கூறியது போல டெக்ஸ் சுற்றி வளைத்து பாத்து காப்பது போலவே உள்ளது ,கோவிலை சுற்றி தங்கி நிற்கும் பூத கணங்களை போல .

  இந்த டிசைன் மிக மிக அற்புதம் .பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்பது போல உள்ளது .கண்ணை உறுத்தாத பேக்கிரௌன்ட்,பளிச்சென டெக்ஸ் ன்

  வண்ண தோற்றம் ,ஜோர் ..................பலே பலே

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.அதற்காக தான் borderkaaka மஞ்சளையும் நீலத்தையும் கலராக உபயோகித்துள்ளேன்.

   Delete
 8. //இதுவே எனது கடைசி பதிவு.//

  அப்படியெல்லாம் உடனே நாங்க விட்டுருவமா என்ன ?

  ReplyDelete
  Replies
  1. உங்களை பிரிய எனக்கும் மனம் இல்லை நண்பரே.மீண்டும் வந்து விட்டேன்.

   Delete
 9. வணக்கம்,
  பாரதி காமிக்ஸ் போன்ற பெயர் தெரியாத காமிக்ஸ் குறித்த படத்தை வெளியிட்டமைக்கு நன்றி!
  தலைநகரா கொலை நகரா ? எந்த காமிக்ஸில் வந்தது? லோகோ தெளிவாக இல்லை. இயந்திர மனிதன் காமிக்ஸின் லோகோவும் தெளிவாக இல்லை. இவை இரண்டும் எந்த காமிக்ஸில் வந்தவை. என்னும் தகவலை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete
 10. VVK ji..
  Blog அ continue பண்ணுங்க..We all r waiting eagarly..

  ReplyDelete