Tuesday, November 27, 2012

Super Hero Tiger - Rani Comics



வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவு எனக்கு காமிக்ஸ் உலகில் மிகவும் பிடித்தமான ஹீரோ பற்றியது.அவர் தான் ராணி காமிக்ஸில் வந்த சூப்பர் ஹீரோ டைகர்.

இவர் சர்வதேச பயங்கரவாதிகள் ஒழிப்பு நிறுவனத்தின் முக்கிய உளவாளி.

அவரது சாகசங்கள் அனைத்துமே ஒரு 5 முதல் 10 பக்கங்களில் முடிந்துவிடும்.
இன்னும் சொல்ல போனால் அவரது அனைத்து சாகசங்களுமே ஜேம்ஸ் பான்ட் கதைகளின் ஆரம்ப காட்சி போலிருக்கும்.அவ்வளவு பரபரப்பாக இருக்கும்.அதே போல ஜேம்ஸ் பான்ட் போல இவரும் பல வியத்தகு சாதனங்களை உபயோகபடுத்துவார்.

அங்கு Q போல இங்கு ஹென்றி பல சாதனங்களை உருவாக்குவதில் வல்லவர் இவரும் டைகருடன் சேர்ந்து பல சாகசங்கள் புரிவார்.

இவரது முக்கியமான எதிரி பாட்சா.இவன் பலவகைகளில் டைகருக்கு தொந்தரவு கொடுப்பான்.

இங்கும் M போல ஒரு தலைமை அதிகாரி இருப்பார்.

கீழே இதுவரை ராணி காமிக்ஸில் வந்த டைகர் கதைகளின் முதல் பக்கங்களை அளித்துள்ளேன்.
















என்னிடம் இவ்வளவுதான் உள்ளன.இது தவிர வேறு கதைகள் இருப்பது தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

இக்கதைகளுடைய ஒரிஜினல் பற்றி எனக்கு தெரியவில்லை.ஆனால் இதற்கு ஓவியம் வரைந்தவர் தான் லயனில் வந்த ஜான் மாஸ்டர் கதைகளுக்கும் வரைந்தவர் என கேள்விப்பட்டுளேன்.

அதனை பற்றிய விவரங்களோ அல்லது வலை சுட்டிகளோ தெரிந்தாலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஒரு இரண்டு கதைகளின் முழு புகைப்படங்கள் கொண்டு வந்துள்ளேன்.அதனை பற்றிய பதிவுகளை எதிர்பாருங்கள்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வே.

32 comments:

  1. நன்றி கிருஷ்ணா! அப்பறம் சீக்கிரம் முழு கதையையும் எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ரமேஷ்.விரைவில் முழு கதை பதிவுகளை எதிர்பாருங்கள்.

      Delete
  2. புது கதா பாத்திரத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி. கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. ராஜ் நீங்கள் இவரை பற்றி கேள்வி பட்டது இல்லையா?
      ஆச்சர்யம் தான்.மிகவும் நன்றாக இருக்கும்.

      Delete
  3. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. முழுக்கதையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.முழு கதை பதிவுகளை சீக்கிரமே போட்ரலாம்.

      Delete
  4. அருமையான collection நண்பா. கலக்குறீங்க. தீம் மியூசிக் (டொட்ட டாய்ங்) மிஸ்ஸிங் அப்டேட் செய்யுங்க நண்பா :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.உண்மை அதனை miss செய்துவிட்டேன்.

      Delete
  5. Replies
    1. Sorry the comment was in Spam.I saw it now.Thanks For the liking.

      Delete
  6. This series of stories are my favorite too. Very fast moving short stories.

    ReplyDelete
  7. வந்தே விட்டது டைகர் குறித்த பதிவு நன்றி நண்பா! எனக்கு சிறு வயது தோழனாக அமைந்த கதை வரிசை இது. அனைத்து பக்கங்களிலும் அதிரடி சரவெடியாக செல்லும் இந்த கதை எனக்கு மிக மிக பிடித்த ஒன்று

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை நண்பரே.

      Delete
  8. நண்பா அடுத்த ஆர்வ பதிவு எப்போ???

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் விரைவில் போட்ரலாம்.

      Delete
  9. ஏக் தா டைகர்! :) அட்டைகள் அருமை!

    ReplyDelete
  10. ஒரு சில அட்டை படத்தையே பார்த்ததாக ஞாபகம். பெரும்பாலானவைகளை கண்முன்னே தற்பொழுது காட்டிவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நண்பரே.இன்னும் சில முழு கதைகளே உங்களுக்காக வருகிறது.

      Delete
  11. டொட்ட டாய்ங்க் :D இன்றும் டைகர் என்றாலே நினைவுக்கு வரும் சொற்தொடர் :P

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை அவ்வார்த்தைகளை நான் அப்திவில் உபயோகபடுத்த விட்டு விட்டேன்.

      Delete
  12. பழய ஞாபகங்களை அசை போட வைத்துவிட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்களை நமது வலை பூ பக்கம் பார்த்து நண்பரே.
      உங்களது நினைவுகளை எனது பதிவு தூண்டியது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete
  13. பழய ஞாபகங்களை அசை போட வைத்துவிட்டீர்கள் நன் ஐரோப் பாவில் வசித்து வருகிறேன் எப்படி இப் புத்தகங்களை வாசிப்பது தயவு செய்து யாராவது எனக்கு உதவிசெய்து தாருங்கள்

    Email contact ( balakumar257@gmail.com )

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது இக்கதைகள் வருவதில்லை நண்பரே.
      ஆனால் நமது லயன் குழுமத்தினர் புது பொலிவுடன் வருகிறார்கள்
      அவர்களை தொடர்பு கொள்வது பற்றி உங்களுக்கு நான் மினஞ்சல் அனுப்புகிறேன்.
      முயற்சி செய்யுங்கள்.

      Delete
  14. நன்றிகள் நண்பா. ராணி காமிக்ஸ் 1993 ம் ஆண்டுக்கு முன்னய புத்தகங்கள் SCAN ING copy or பிரதிகள் எனக்கு தரமுடியுமா????

    Email -- balakumar257@gmail.com

    ReplyDelete
    Replies
    1. ஸ்கேன் கள் இல்லை நண்பா.
      நண்பர் சைமன் அவர்கள் ஒருசில புத்தகங்களை அவரது வலை பூவில் அளித்துள்ளார்.
      http://johny-johnsimon.blogspot.in/

      Delete
  15. Thanks for the post about Tiger, my personal favourite. Would you know the english version of Tiger ? I have been researching for sometime now and havent found the source for these stories. Appreciate the help.

    ReplyDelete
    Replies
    1. i have also searched for it but in vain.sorry i could not help you in this.

      Delete
  16. Indha puthagangal villaiku kidaikuma?

    ReplyDelete
  17. நான் தற்செயலாக இந்த பக்கத்திற்கு வந்தேன்.. எனது சிறு வயது ஹீரோ இந்த டைகர் மற்றும் ஹென்றி. A very good nostalgia... மனமார்ந்த நன்றிகள்

    -கோகுல்

    ReplyDelete