Sunday, January 20, 2013

KRISHNA @ Muthu Comics Stall : 343


வணக்கம் நண்பர்களே,

NBS ரிலீசுக்கு பல் வேறு காரணங்களால் போக முடியவில்லை.
இன்று தான் புத்தக கண்காட்சி  போக முடிந்தது.

சென்று பார்த்த பொழுது ஒரு இன்ப அதிர்ச்சி,அங்கு டெக்ஸ் புத்தகம் வந்திருந்தது.எப்படியோ ஒரு புத்தக வெளியிடிற்கு போயாச்சு.




புத்தகத்துடன் நான்....

ஸ்டாலிற்கு போன பொழுது அங்கு விஸ்வா அவர்களும் ஸ்ரீராம் அவர்களும் இருந்தார்கள்.அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர் ஜான் சைமன் அவர்களை அழைத்து பேசியபொழுது அவர் காலையே வந்து போனது தெரிந்தது.அவரை பார்க்க முடியவில்லை.

மற்றும் ராதா கிருஷ்ணன் அண்ணாச்சியை முதன் முதலில் சந்தித்தேன்.கூடவே வேலு அவர்களையும் சந்தித்தேன்.

நண்பர் வேலு 

அண்ணாச்சி 

ஸ்ரீராம் & வேலு 


போஸ்டர்

விஸ்வா அவர்கள் ஸ்டாலிற்கு வந்த அனைவரிடமும் புத்தகங்களை காண்பித்து நன்றாக பேசிக்கொண்டு இருந்தார்.

நான் விஸ்வா & ஸ்ரீராம் 

மியாவி பெயர் சூட்டிய கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் மாதம் ஒரு வாசகரில் இடம்பெற்றுள்ள சைமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நான் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்.



அங்கு நான் பார்த்த விகடன் பிரசுரத்தின் மணியன் அவர்களின் ஒரிஜினல் ஓவியங்களுடன் இருந்த பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் வாங்க விரும்பினேன்.பண பற்றாகுறையினால் முடியவில்லை.விரைவில் வாங்க உறுதி கொண்டுள்ளேன்.ஓவியங்கள் அவ்வளவு அருமையாக இருந்தன.

நான் செல்வதற்குள் பனிமலைக் கோட்டை புத்தகம் விற்றுவிடும் என்பதால் நண்பர் ராஜ் முத்துக்குமாரிடம் வாங்கிவரக் கூறி இருந்தேன்.

அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்து புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். 

ராஜ் & நான்

டெக்ஸ் புத்தகத்தின் டிரைலர் பதிவை நண்பர் சௌந்தர் இட்டுள்ளார் அதனை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ. 

25 comments:

  1. பேஸ்புக்கில் பார்த்த கிருஷ்ணாவிற்கும் தற்போதைய அவதாரத்திற்கும் 6 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் :P

    ReplyDelete
    Replies
    1. //பேஸ்புக்கில் பார்த்த கிருஷ்ணாவிற்கும் தற்போதைய அவதாரத்திற்கும் 6 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் :P//
      நேரில் சந்தித்திருந்தால் உண்மையிலேயே அடையாளம் தெரியாமல் தினறியிருப்பேன். :)

      Delete
    2. @Rafiq Raja & @P.Karthikeyan

      எங்க இப்படி விட்டா கண்டு பிடிகிரவங்களுக்கு ஒரு NBS பரிசுன்னு
      வேற சொல்லிருவீங்க போல...:)

      Delete
  2. சென்னை நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் டெக்ஸ் இன்றே கிடைத்துவிட்டது ! .
    மற்ற இதழ்கள் குறித்த பதிவையும் எழுதுங்கள் நண்பரே ( சமீபத்தில் சொந்த ஊருக்கு போய்வந்த அடையாளம் தெரிகிறதே)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கண்களில் இருந்து எதுவும் தப்பிவிட முடியாது நண்பரே.
      நான் ஊர் சென்று வந்தது என்னவோ உண்மைதான் ஆனால் எதுவும் எடுத்துவரவில்லை.

      தேவையானவற்றை முன்பே எடுத்து வந்துள்ளேன்.
      அது பூந்தளிர் புத்தகங்கள் தான்.இனி தொடரும் பதிவுகளில் அக்கதைகளே இடம் பெரும்.

      Delete
  3. சூப்பர் பாஸ்...நிறைய காமிக்ஸ் அள்ளிடீங்க போல, நானும் கூட சென்னை வந்து இருந்தேன், ஆனா கண்காட்சி போக முடியல..
    முத முறையா உங்க போட்டோ பார்கிறேன்... :):)

    ReplyDelete
    Replies
    1. நிறையலாம் இல்லை ராஜ் இரண்டு தான்.டெக்ஸின் புது புத்தகம் வந்துள்ளது.
      நீங்கள் சந்தா கட்டியாகிவிட்டதா?

      Delete
  4. நண்பரே நீங்களும் சென்னை என்பதை மறந்தே விட்டேன் !ரபீக் கூறுவது போல இதில் அடையாளம் தெரியவில்லை பழைய photo வை ஒப்பிடும் போது ! மாறு வேடத்தில் சென்று கை பற்றி உள்ளீர்கள் போலும் !புத்தகம் அற்புதம் !முதல் ஆளும் நீங்கள்தாம் போலும் !விஸ்வாவும் யாரென பார்க்க வேண்டும் என நினைத்தேன் !மனிதர் இப்போதுதான் தலை காட்டுகிறார் போலும் !காமிக்ஸ்டா ராஜ் குமாரா இவர் ,இவரும் வித்தியாசமாய் தெரிகிறார் ,nbs கை பற்றி வயது குறைந்து விட்டதோ எனும் படியாக இருக்கிறது !
    நன்றி !நன்றி !!நன்றி !!!
    கண்டிப்பாக அடுத்த லயனின் பிரம்மாண்ட வெளியீட்டில் சந்திப்போம் !

    ReplyDelete
    Replies
    1. அப்போ,ஸ்ரீ ராம் குதிரையில் வர வில்லையா !

      Delete
    2. நெடு நாட்களுக்கு பிறகு எனது தளத்தில் உங்கள் பின்னுட்டம்.
      வருகைக்கு நன்றி நண்பரே.
      நான் விஸ்வா அவர்களுடன் அதிகம் பேசவில்லை.
      புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.
      ராஜ் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினேன்.
      அது ஒரு இனிய சந்திப்பாக இருந்தது.
      அடுத்த சந்திப்பிலாவது ஏதும் காரணங்கள் இல்லாமல் அனைவரையும் சந்திக்க வேண்டும்.

      Delete
  5. Hi,

    Can you please let me know where I can get a copy of "Panimalai Kottai"?

    Amar

    ReplyDelete
    Replies
    1. Hi Amar,

      You can get a Copy from stall Number 340.
      I heard that only a few copies where there.
      Try your luck.

      Delete
  6. 'மாதம் ஒரு வாசகராய் 'உங்களின் சிறுவயது புகைப்படத்தை புத்தகத்தில் முதன்முதலாய் பார்த்தபின்பு, மறுபடியும் இப்போதான் உங்களை முதன்முதலாக(!) பார்க்கிறேன், கிருஷ்ணா!

    'கொழு கொழு பேபி' போட்டியில் இப்போது பங்கேற்றால் கூட உங்களுக்குத்தான் முதல் பரிசு! :-D

    அதென்ன முகத்தின் ஓரத்தில் ஏதோ வடிகிற மாதிரி... ஓ! பாலா?! :)

    ReplyDelete
    Replies
    1. ஏங்க இப்படி அடுத்து ரெண்டு காபி துளியூண்டு பால்னு கேப்பீங்க போல.:)

      Delete
  7. // கொழு கொழு பேபி' போட்டியில் இப்போது பங்கேற்றால் கூட உங்களுக்குத்தான் முதல் பரிசு! //

    Right said Mr. VIJAY...

    உங்களை இப்பொழுதுதான் முதன் முறையாக (போட்டோவில்) பார்ப்பதால் அடுத்த முறை என்ன வித்தியாசம் என்று கூறுகிறேன் :)

    ஆனால் நண்பர் ராஜ், நான் புத்தக கண்காட்சியில் பார்த்தற்கும், இங்குள்ள போட்டோவில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசப்படுகிறாரே ? எப்படி ?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்களுமா...:)

      உண்மை ராஜ் புகைப்படத்தில் இன்னும் இளமையாக தெரிகிறார்.

      Delete

  8. பனிமலைக் கோட்டை புத்தகம் இன்றும் விற்பனைக்கு உள்ளது. ஸ்டால் நம்பர் 300? அல்லது 340?

    புத்தகம் பழைய ஸ்டாக். சாதாரண அட்டை கூட 100 ரூபாய்கே விற்கப்படுகிறது

    புத்தக கண்காட்சியில் தமிழ் காமிக்ஸ்கள் அமோக விற்பனை.

    மொத்தத்தில் தமிழ் காமிக்ஸ் காட்டில் அடைமழை!!!

    பொறுத்திருந்து பார்போம் யார் இந்த தருணத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நண்பர் ராஜின் புண்ணியத்தில் கிடைத்தது.
      புத்தகம் பல தரங்களில் இருந்ததாக கேள்வி.
      நாம் சற்று பார்த்து வாங்க வேண்டும்.

      Delete
    2. நண்பரே உங்களிடம் டெக்ஸ் வில்லரின் ரத்த வெறியர்கள் புத்தகம் இருந்தால் அதனை பற்றி ஒரு பதிவிடுங்கள்

      நன்றி

      Delete
    3. @kanagasundaram

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே.

      Delete
  9. நண்பரே பனிமலைக் கோட்டை புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கூற முடியுமா

    ReplyDelete
    Replies
    1. புத்தக கண்காட்சியில் வாங்கியது தான் நண்பரே.
      வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை.

      Delete
  10. நன்றிகள் பல நண்பரே!

    ReplyDelete
  11. உங்கள் விவரங்களும் நண்பர்கள் அனைவரது விவரன்களும் லயன் காமிக்ஸ் அலுவலகத்துக்கு அனுப்பி உதவ வேணுமாய் கேட்டு கொள்கிறேன்!

    ReplyDelete