Monday, March 11, 2013

JACK THE GIANT SLAYER - Movie Review




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பலகாலங்களாக பழைய தேவதைகதைகளை திரைப்படம் ஆக்குவதில் முனைப்பாக இருக்கிறது ஹாலிவுட். அதில் பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன.

சமீபகாலமாக மீண்டும் பழைய தேவதைகதைகளை தொழில் நுட்ப உதவியுடன் சிறிது கதையிலும் கவனம் செலுத்தி எடுத்து வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டுதான் சமீபத்தில் வந்த Hansel & Grantel மற்றும் கடந்த வாரம் வெளியாகி உள்ள Jack The Giant Slayer திரைப்படங்கள்.

இரண்டு படங்களுமே தொழில் நுட்பத்தின் அபரீத வளர்ச்சியால் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கதையிலும் சற்று கவனம் செலுத்தி உள்ளார்கள்.

 நான் பார்த்த Jack The Giant Slayer படத்தை பற்றிய எனது கருத்து மற்றும் கதையே இந்த பதிவு.

கதை :



நமக்கு (எனக்கு) ஓரளவே தெரிந்த கதை.

ஜாக் என்ற விவசாய சிறுவனுக்கு அவன் தந்தையும் மற்றும் இசபெல் என்ற இளவரசிக்கு அவள் தாயும் அக்கதையை கூறுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் அந்த நாட்டை எரிக் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது சில சாமியார்கள் ஒரு சில பீன் விதைகளை கண்டுபிடித்தார்கள். அது ஒரு விஷேசமானது. அதனை விதைத்தால் பெரிய கொடி வளரும்.

அதன் மூலம் சாமியார்கள் உயிருடன் சொர்கத்தை அடைய நினைத்தார்கள். ஆகையால் அந்த விதைகளில் ஒன்றை பூமியில் விதைத்து அதன் மூலம் வளர்ந்த கொடியில் ஏறி சுவர்க்கம் நோக்கி சென்றார்கள்.

வழியில் ஒரு இடத்தில் ஒரு நிலப்பரப்பை காண்கிறார்கள். அதுதான் சுவர்க்கம் என தப்பாக நினைக்கும் அவர்கள் அங்கு இறங்குகிறார்கள்.
ஆனால் அங்கு வாழும் ராட்சதர்களிடம் மாட்டி உயிர் விடுகிறார்கள். அவர்கள் வந்த கொடியை கண்டுபிடிக்கும் ராட்சதர்கள் அதன் மூலம் பூமிக்கு வந்து அட்டூழியம் புரிகிறார்கள்.

அவர்களை மன்னர் எரிக் ஒரு கிரீடம் செய்து கட்டுப்படுத்துகிறார்.
அதன் மூலம் அவர்களை அவர்களது இடத்திற்கு அனுப்பிவிட்டு அந்த கொடியை வெட்டி விடுகிறார். அதன் மூலம் நாட்டில் அமைதி திரும்புகிறது.

மேலே போன ராட்சதர்கள் தகுந்த நேரத்திற்காக காத்திருகின்றனர். மன்னர் எரிக் இறந்த பின் அந்த பீன்களும் கிரீடமும் அவருடன் சேர்த்து புதைக்க படுகிறது. இப்படியாக கதை முடிகிறது. இதனை பலர் கற்பனை என்றும் சிலர் உண்மை என்றும் நினைக்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு பிறகு இருவரும் வளர்ந்துவிடுகிறார்கள்.



ஜாக்



இசபெல்

வழக்கம் போல அந்த நாட்டு மன்னர் தனது மகளை வில்லனுக்கு கட்டி கொடுத்து அந்த நாட்டு மன்னர் ஆக்க நினைக்கிறார்.



வில்லன் மற்றும் அவன் கூட்டாளி

ஆனால் வில்லனோ இறந்த மன்னர் எரிக்கின் சமாதியில் இருந்து அந்த பீன்களையும் கிரீடத்தையும் ஒரு திட்டத்தோடு திருடி வைத்திருகிறான்.

இதனை அறிந்த சாமியார்கள் ஒரு சாமியார் மூலம் அதனை திருடி வர அனுப்புகின்றனர். அவர் அந்த பீன்களை மட்டும் திருடுகிறார். அனால் தப்பி செல்வதற்கு முன் மாட்டிக்கொண்டு விடுகிறார்.

எதிர்பாரதவிதமாக அந்த பீன்கள் நம்ம ஹீரோவிடம் வந்து சேர. அதனை கொண்டு வீட்டிற்கு வருகிறான். அங்கு அவன் வைத்திருக்கும் பீன்களில் ஒன்று தவறி கீழே விழுகிறது. கல்யாணம் பிடிக்காமல் தப்பி செல்லும் இளவரசி நேரே நம்ம ஹீரோ வீட்டிற்கு வருகிறாள்

மழை பெய்கிறது. அதன் மூலம் கீழே விழுந்த பீனில் இருந்து பெரிய கொடி வளர்கிறது. அது அந்த வீட்டை அப்படியே தூக்கிக்கொண்டு வானை நோக்கி வளர்கிறது.



வீட்டை அப்படியே தூக்கி செல்லும் காட்சி.
மேலே செல்லும் இளவரசி அங்கு வாழும் ராட்சர்களிடம் மாட்டிக்கொள்கிறாள்.  அவளை காப்பாற்ற நமது ஹீரோவும் சில வீரர்கள் குழுவும் செல்கிறது. கூடவே வில்லனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து கொள்கிறார்கள்.

தளபதி மற்றும் அவர் உதவியாளர்.

வழியிலேயே வில்லன் வீரர்களில் பெரும்பாலோனோரை கொன்று விடுகிறான். மேலே செல்லும் மீதம்  இருந்த ஜாக், தளபதி மற்றும் அவர் உதவியாளர் மற்றும் வில்லன் அவனது கூட்டாளி
பிரிந்து சென்று தேடுகிறார்கள்.

அதில் தளபதி ராட்சர்களிடம் சிக்கி கொள்கிறார்.


தளபதியின் உதவியாளர் ஒரு ராட்சதனிடம் மாட்டி உயிர்விடுகிறார்.




தளபதி மாட்டிகொள்கிறார்.



சமைப்பதர்க்கு தயாராக..


சமையல்காரன்.

வில்லன் தனது கிரீடத்தின் உதவியுடன் அந்த கூட்டத்தின் தலைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் மூலம் பூமி நோக்கி படையெடுக்க முயற்சி செய்கிறான். அவனை எப்படி ஹீரோவும் தளபதியும் சேர்ந்து அந்த கிரீடத்தின் துணை கொண்டு அவர்களை மீண்டும் அடக்குகிறார் என்பதே கதை.


ராட்சதர்களின் இரட்டை தலை தலைவன்



கிரீடத்தின் துணை கொண்டு மன்னனான வில்லன்

பூமியை நோக்கி படை எடுக்க தயாராக இருக்கும் கூட்டம்.




இறுதி சண்ண்டைக்கு தயாராக.



ராட்சதர்களின் தலைவன் வீழ்த்தப்படுகிறான்.

மிகவும் சாதாரணமான கதை தான் ஆனால் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு ஈர்க்கும் விதத்தில் எடுத்துள்ளனர்.

படத்தின் பெரும் பலமே இறுதிக்காட்சி சண்டை தான். இளவரசியை காப்பாற்றி கீழே கொண்டு வந்ததும் அடடே இப்படி கதை சப்பென்று முடிந்து விட்டதே என நினைத்தேன் ஆனால்  ராட்சர்கள் மீண்டும் கீழே வந்து ஒரு பெரும் யுத்தம் நடக்கும் அது நன்றாக இருக்கும்.

படத்தில் எனக்கு சற்று பிடிக்காதது படத்தின் ஹீரோதான் முன்வழுக்கை தலையுடன் சற்று வயதானவராக தெரிகிறார் மற்றும் ஒரு ஹீரோவிறகான தேஜஸ் அவரிடம் இல்லை. அதற்கு படை தளபதியாக வருவபர் நன்றாக உள்ளார்.

மொத்தத்தில் படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

18 comments:

  1. ஜி, புது டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு.
    படத்தோட கதையை ரொம்ப சுவாரிசியமா சொல்லி இருக்கீங்க, நல்லா இருந்திச்சு. எனக்கு படம் பார்த்த திருப்தி கிடைச்சது.
    அப்புறம் ஒரு சின்ன விஷயம், பதிவிற்கான Label குடுக்கும் போது அதில் "சினிமா" & "திரைவிமர்சனம்" என்ற வார்த்தைகளை சேர்த்து விடுங்க. உங்க சினிமா பதிவு சரியா "திரைமணம்" பகுதியில போய் சேர்ந்துரும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்.
      கண்டிப்பா செஞ்சறேன் ஜி.
      கண்டிப்பா பாருங்க.
      மற்றும் இடது புறம் நமது காமிக்ஸ் வாங்கும் ebay லிங்க் உள்ளது முயற்சி செய்து பாருங்கள்.

      Delete
  2. பாஸ் படம் பார்க்காமலே படம் பார்த்த மாதிரி ஆயிருச்சு ஆமா நன் சரியாய் தான் சொல்லி இருக்கேன

    ReplyDelete
  3. attakaasamaana pugaipadangaludanaana pathivu! super! parkka vendumenra avalai thoondi vidugirathu thangalathu pathivu kazhugare!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி.கண்டிப்பாக ஜூனியருடன் சென்று பாருங்கள்.

      Delete
  4. விமர்சனத்தினை படித்தால் உடனே பார்க்கத்தூண்டுகிறது.நாளை குடும்பத்துடன் ஒரு பிக்னிக் போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஆனால் ஈரோட்டில் இந்த படம் ஒடும் தியேட்டர்தான் சரியில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைத்தால் 3d ல பாருங்க ஸ்டாலின்.

      Delete
    2. //வாய்ப்பு கிடைத்தால் 3d ல பாருங்க ஸ்டாலின்.//

      வாய்ப்பு கிடைத்தா cd ல பார்த்தராதிங்க ஸ்டாலின், தியேட்டர் போயி 3 D ல பாருங்க :)

      Delete
    3. இப்பொழுது வரும் 3D படம் என்ன அவ்வளவு நன்றாகவா உள்ளது ? சிகப்பு , நீலம் என இருவண்ண கண்ணாடிகளின் கொடுமை தாங்கவில்லை : )

      Delete
    4. @Blueberry : நண்பரே இப்பொழுதெல்லாம் DVD தான் உள்ளது CD யின் காலம் எல்லாம் பொய் விட்டது.அடுத்து Blu - Ray வேறு பிரபலாமாகி வருகிறது.

      @ஸ்டாலின் : எதற்காக 3D சொன்னேன் என்றால் இப்படம் 3D படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.
      மற்றைய படங்கள் 2D யில் எடுக்கப்பட்டு பின் 3D யாக மாற்றபடுகிறது.

      Delete
  5. முன்பெல்லாம் உங்கள் காமிக்ஸ் புதையல்களை படம்பிடித்து கொட்டுவீர்களே இப்பொழுது எங்கே காணேம் ? யாராவது கண்வைத்துவிட்டார்களா :-)

    ReplyDelete
    Replies
    1. சரக்கு இருக்கிற வரைக்கும் தானே ஜி எழுத முடியும்.
      அது தான்.

      Delete
  6. போகலாமா வேணாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் விமர்சனம் போக தூண்டுகிறது. முழு கதையும் தெரிந்தால் போல் இருக்கிறது. ஆனால் பார்க்குபோது தான் அதன் பிரம்மாண்டம் புரியும். நிறைய புகைப் படங்களுடன் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    டெம்ப்ளட் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக 3d யில் பாருங்க ராஜ்.
      அதுவும் இறுதிக்காட்சி நன்றாக இருக்கிறது.

      டெம்ப்ளேட் உங்களுடையதை பார்த்து நான் பயன்படுத்தியது தான்.

      Delete
  7. கொஞ்ச நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஒரு தியேட்டரில் ஏகப்பட்ட பில்ட்அப் கொடுத்து என் மனைவியை 'அம்புலி' என்ற 3d படத்திற்கு அழைத்துப்போனேன் (3dல் பார்ப்பது என் மனைவிக்கு முதல் முறை என்பதால்), அவர்கள் கொடுத்த கண்ணாடியில் ஒரு பக்கம் எதுவுமே தெரியாமல், தலைவலி எடுத்தபின்பு கண்ணாடியைக் கழட்டிவிட்டு திரையைப் பார்த்து அது கொசகொசவென்று தெரிய, கடைசியில் குரங்குவேடமிட்டு குதித்து குதித்து ஓடியவன்தான் 'அம்புலி' என்று சொல்லவே, படம் முடியும் முன்னரே வெளியே ஓடிவந்த அந்த அனுபவம்...

    3D படம்னாலே அலர்ஜியாகிடுச்சு! :)

    ReplyDelete
  8. @ஈரோடு விஜய் : எனக்கும் அம்புலியில் அதே அனுபவம். காசு கொடுத்து தலைவலி வாங்கினேன். ஆனால் இது தரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. நான் கல்யாணத்திற்கு பின் பார்த்த முதல் படம் அம்புலி தான்.
    ஆனால் நான் பார்த்தது சத்யம் தியேட்டரில்.
    ஆகையால் தரமானதாக இருந்தது.

    நீங்கள் பார்த்த தியேட்டரில் தரமான கண்ணாடி கொடுத்திருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  10. ஒரு பெரிய போராட்டத்துடன் இன்னைக்கு குடும்பத்துடன் பார்த்தாச்சு. தியேட்டரில் மொத்தமே 9 பேர்தான் ( எனது குடும்பமே இதில் 4) படம் சில இடங்களில் வராமல் போனபோது ஒரு முறை பால்கனியில் இருந்து ஸ்பைடர் போல தாவி ஆப்பரேட்டர் அறைக்கே சென்று அவரை அரைதூக்கத்தில் எழுப்பி சரிசெய்யச்சொன்னேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் :) அந்த பாடாவதி தியேட்டரில் பார்த்ததற்கு புளூபெரி செய்யவேண்டாம் என சொன்னதை செய்திருக்கலாம் :)

    நல்ல க்ராபிக்ஸ். விரைவில் இரண்டாம் பாகத்தினை எதிபார்க்கலாம்

    ReplyDelete