Tuesday, March 26, 2013

தமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.

வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை.
நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ஒரு சமயத்தில் என்னக்கு பல புத்தகங்களை அறிமுகபடுத்தியது ரங்கா புக் ஸ்டாலை சேர்ந்த ரங்கநாதன் அண்ணா தான்.

முதலில் ராஜேஷ் குமார், சுபா நாவல்கள் பின்னர் சாண்டில்யன் கல்கி கதைகள் என என்னை பல திசைகளில் பயணிக்கக்க வைத்தது அவர் தான். இச்சமயத்தில் அவருக்கு எனது நன்றிகளை கூறிக் கொள்கிறேன்.

எனக்கு நாவல்களில் பிடித்தது துப்பறியும் மற்றும் ராணுவ நாவல்கள் தான்.அதில் எனக்கு முதலில் அறிமுகம் ஆனது ராஜேஷ் குமார் நாவல்கள் தான்.

அடுத்து அப்படியே மற்றவர்களது நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது சுபா நாவல்கள் தான்.

அனைத்து ஆசிரியர்களுமே தங்களுக்கு என பிரத்யேகமாக ஒரு ஹீரோ ஹீரோயின் வைத்துக்கொள்கின்றனர். 

அது போல அனைத்து ஆசிரியர்களுமே தனக்கு என ஒரு புத்தகம் வைத்திருப்பார்கள். அதில் அவரது கதைகள் மட்டுமே வரும். அவ்வகையில்

ராஜேஷ் குமார் : க்ரைம் நாவல்கள்.
சுபா : சூப்பர் நாவல்கள்
பட்டுக்கோட்டை பிரபாகர் : எ நாவல் டைம்.
தேவிபாலா : டெவில்
புஷ்பா தங்கதுரை : உதாப்பூ
ராஜேந்திரகுமார் : கோஸ்ட்

அது தவிர பல பொதுவான நாவல்களும் உள்ளன.

பெரும்பாலான ராஜேஸ்குமார் கதைகளில் வருபவர் க்ரைம் பிரான்சை சேர்ந்த விவேக் தான். அவருடன் வருபவர் கோகுல்நாத் என்ற இன்ஸ்பெக்டர். பின்னர் மற்ற ஆசிரியர்கள் உருவாகியதை பார்த்து ரூபலா என்ற பெண் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பின்னர் அவரது உதவியாளராக விஷ்ணு என்ற கதாபாத்திரத்தையும் உருவாக்கினார்.

ஆக இந்த 4 கதாபாத்திரங்கள் தான் பெரும்பாலும் வருவார்கள்.
நான் கடைக்கு சென்று க்ரைம் நாவலில் விவேக் இருக்கிறாரா என்று பார்த்தே வாங்குவேன்.

ராஜேஷ் குமார் கோவை மாநகரத்தை சேர்ந்தவர் என்பதால் பெரும்பாலும் அவர் கதை நிகழும் களம் கோவையாகவே இருக்கும்.


பழைய க்ரைம் நாவல்களில் சில


மொத்த க்ரைம் நாவல்கள்

ஒருமுறை ராஜேஷ்குமார் அவர்கள் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி துப்பறிவது போல பல சிறுகதைகள் சேர்ந்த புத்தகம் ஒன்றை கொடுத்தார்.

முதலில் மிகவும் பிடித்திருந்த இவரது நாவல்கள் பின்னைய காலங்களில் வந்த கதைகளால் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினி துப்பறியும் நாவல்கள்
 அடுத்து சுபா, சுரேஷ் மற்றும் பால கிருஷ்ணன் என இருவர் சேர்ந்து எழுதும் கதைகள். அவர்களது ஆரம்பகால சூப்பர் நாவல்களின்  அட்டைபடங்களுக்கு புகைப்படம் எடுத்தவர் நமது கேமராமேன் / டைரெக்டர் கே.வி.ஆனந்த் அவர்கள் எனபது கொசுறு செய்தி.

ஒரு சில புகைப்படங்கள் கீழே.
 
சில பழைய சூப்பர் நாவல்கள்

இவரது பெரும்பாலான கதைகளில் நாயகன் நாயகியாக வருவது நரேன்(நரேந்திரன்) & வைஜ் (வைஜெயிந்தி) தான் இருவரும் Eagle's  என்ற தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அதன் நிறுவனர் ஒரு முன்னாள் மேஜர்.  பின்னர் மற்றும் ஒரு ஜோடியை உருவாக்கினார் அவர்கள் தான் ஜான் சுந்தர் மற்றும் அனிதா. இவர்களுடன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவார் அவர் பெயர் பால்ராஜ்.

சுபா அவர்கள் உருவாகிய மற்றொரு வித்தியாசமான ஜோடி தான் செல்வா மற்றும் முருகேசன். செல்வா ஒரு முன்னாள் ராணுவ வீரர் முருகேசன் சென்னை சேரியை சேர்ந்தவர். கதைகளில் பெரும்பாலும் செல்வா எதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வார் பின்னர் முருகேசன் அவரை காப்பாற்றுவார். கதைகள் அனைத்தும் காமெடி நிறைந்தவை. அதில் வரும் சென்னை தமிழ் சொற்களும் நன்றாக இருக்கும்.


 மொத்த சுபா நாவல்கள்

பட்டுக்கோட்டை பிராபகர் உருவாக்கியவர்கள் தான் பரத் மற்றும் சுசீலா.
இவர்களது துப்பறியும் நிறுவனத்தின் பெயர் நினைவில் இல்லை. இவர்கதைகளில் பிரபாலமானது ஒவ்வொரு கதைகளிலும் சுசீலா போட்டுகொண்டு வரும் டி ஷர்டுகள் தான், அதில் இருக்கும் வித்தியாசமான ஆங்கில வாசகங்கள் தான்.

அவர் எழுதிய பிருந்தாவனமும் நொந்த குமாரனும் என்ற நகைச்சுவை கதை எனக்கு மிகவும் பிடிக்கும்.



சுபா மற்றும் PKP இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினார்கள். அதில் நரேன் - வைஜ் & பரத் - சுசீலா நான்கு பேருமே வருவார்கள்.

உங்கள் ஜூனியரில் வந்தது எனநினைக்கிறேன், கதையின் பெயர் கூட தங்க தாமரை என்று நினைக்கிறன். எப்படி மிஸ் செய்தேன் என தெரியவில்லை.

தேவிபாலா அவர்கள் எழுதும் துப்பறியும் கதைகளில் வருபவர்கள் தான் பிரசன்னா மற்றும் லதா. அவர் எழுதிய குடும்ப கதைகள் எதுவும் படித்தது இல்லை.



ராஜேந்திரகுமார் கதைகளில் வருபவர்கள் தான் ராஜாவும் ஜென்னியும்.


ஆர்னிகா நாசர் அவர்கள் நாவல்கள் பெரும்பாலும் அமாநிசியங்கள் நிறைந்தாக இருக்கும். அவர் கதைகளில் வருபவர்கள் டியாரவும் தேஜச்வினியும்.



இவ்வாறு துப்பறியும் கதைகளுக்கெல்லாம் மூலமாக நான் நினைப்பது சுஜாதா அவர்களின் கணேஷ் வசந்தும் தமிழ்வாணன் அவர்களின் சங்கர்லாலும் தான் எனபது எனது கருத்து.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

23 comments:

  1. அருமையான பதிவு.. அட்டகாசமான collection... வருவோம் ஒரு நாள் எல்லாத்தையும் தூக்க :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க பெரியார் ஆவலுடன் காத்துக்கொண்டுஇருக்கிறேன் .

      Delete
  2. கிட்டத்தட்ட ஒரு ரவுண்டு அப் அடித்து விட்டீர்கள். இந்த மாதிரி நாவல்கள் படித்தது பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறைகளில் தான். கவலை இல்லாத அந்த கால கட்டத்தை திரும்ப பார்ப்பது மாதிரி இருந்தது.

    ராஜேஷ் குமார் எழுதும் க்ரைம் நாவல் காசு கொடுத்து வாங்கி படித்திருக்கிறேன். ஒரு காலத்துக்குமேல் சொன்ன கதையையே ஒரு சில திருத்தகளுடன் மீண்டும் எழுதுகிறாரோ என்றோ நினைக்க வைத்து விட்டார்.

    மற்றவர்கள் கதைகள் எல்லாம் நூலகத்தில் படித்தவைதான்.



    ஒரு காலகட்டத்திற்கு பிறகு (திருப்பங்களை நாமே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு வளர்ந்த பின் ) இந்த நாவல்களை படிப்பதில்லை.



    எல்லா க்ரைம் நாவலாசிரியர்களையும் கவர் பண்ணி இருக்கிறீர்கள். பிருந்தாவனமும் நொந்த குமாரனும் படிக்க ஆசை. லிங்க் இருக்கிறதா ?


    ReplyDelete
    Replies
    1. //ஒரு காலகட்டத்திற்கு பிறகு (திருப்பங்களை நாமே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு வளர்ந்த பின் ) இந்த நாவல்களை படிப்பதில்லை//

      உண்மை க்ரைம் நாவல்கள் அந்த நிலைமைக்கு வந்து விட்டன.

      //பிருந்தாவனமும் நொந்த குமாரனும் படிக்க ஆசை. லிங்க் இருக்கிறதா //

      லிங்கெல்லாம் இல்லை அடுத்தமுறை ஊருக்கு போகும் பொழுது எடுத்துக்கொண்டு வருகிறேன். படித்துவிட்டு கொடுங்கள்.

      Delete
  3. சூப்பரான பதிவு ஜி! கிரைம் நாவலுக்கு சந்தாதாரராக ஒரு காலத்தில் இருந்தேன்! பார்த்தால் வாங்கி விடுவதும் பழைய கடைகளில் அலசுவதுமாக ஜாலியாகவே போகிறது! சுபா எழுத்துக்கள் மிக அருமை! பட்டுக்கோட்டை பட்டையைக் கிளப்புவார்! தனித்தனித் தமிழ் மணக்கும் அவர்களது நடையில்! உல்லாச ஊஞ்சல் வருவதில்லையோ இப்போது? இந்திரா சௌந்தரராஜன், பாலகுமாரன் அய்யா புத்தகங்களைப் போடவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. //உல்லாச ஊஞ்சல் வருவதில்லையோ இப்போது//

      தெரியவில்லை நண்பரே.இப்பொழுது அந்த அளவு பரிச்சியம் இல்லை.

      //இந்திரா சௌந்தரராஜன், பாலகுமாரன் அய்யா புத்தகங்களைப் போடவில்லையே?//

      அடுத்த பதிவு இந்திரா சௌந்தரராஜன் தான் , பாலகுமாரன் நான் படித்ததில்லை.

      Delete
  4. பாஸ் எனக்கும் ராஜேஷ் குமார் நாவல் ரொம்ப பிடிக்கும் கொஞ்சம் தர்றது படிச்சுட்டு தருவோம்ல

    ReplyDelete
  5. முன்பெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்கள் விரும்பி படிப்பேன். ஒரு கால கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது அதன் பின் கிடைத்தாலும் படிப்பதில்லை.

    இத்த அட்டைப்படங்களை பார்த்து அன்று பயந்து போனதை நினைத்தால் இன்று சிர்ப்புத்தான் வருகிறது . நல்ல நினைவூட்டும் பதிவு

    ReplyDelete
    Replies
    1. //முன்பெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்கள் விரும்பி படிப்பேன். ஒரு கால கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது//

      அனைவரின் கருத்துமே ஒரே மாதிரி உள்ளது.

      Delete
  6. மிக நல்ல பதிவு ! crime நாவலை அதன் அட்டைபடதிற்க்காகவே வாங்குவேன் ! ராஜேஷ் குமார் நாவல்கள் ஆரமபத்தில் சுவாரசியம் நிறைந்ததாக இருந்தது!
    இப்பொழுது விஞ்ஞான கதைகளை எழுதி சொதப்பி விடுகிறார் ! விவேக்கும் அவ்வளவாக வருவதில்லை . ஆர்னிகா நாசர் திகில் கதைகள் வித்யாசமாய் இருக்கும்
    அவரது கதாநாயகன் "டியாரா ராஜ்குமார்" கிட்டத்தட்ட மர்மமனிதன் மார்டின் கதாபாத்திரத்தை நினைவூட்டுவார் ! . ஆனால் சுஜாதாவின் கணேஷும் தமிழ் வாணனின் சங்கர்லாலும் அசைக்க முடியாதவர்கள் என்பது என் நம்பிக்கை !

    ReplyDelete
    Replies
    1. //இப்பொழுது விஞ்ஞான கதைகளை எழுதி சொதப்பி விடுகிறார்//

      அப்படியா.புதிய புத்தகங்கள் வாங்கி படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.

      //ஆர்னிகா நாசர் திகில் கதைகள் வித்யாசமாய் இருக்கும்//

      உண்மை நண்பரே. சற்றே அமானுஷ்யமும் விஞ்ஞானமும் கலந்து இருக்கும்.


      //ஆனால் சுஜாதாவின் கணேஷும் தமிழ் வாணனின் சங்கர்லாலும் அசைக்க முடியாதவர்கள் என்பது என் நம்பிக்கை !//

      அப்படியே வழிமொழிகிறேன்.

      Delete
  7. பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. நானும் ஒரு காலத்தில் இதைப் பற்றி பதிவிட்டுள்ளேன். நேரமிருக்கும்போது அந்தப் பக்கம் வரவும்.

    எங்கள் வீட்டில் எல்லாம் தூக்கி எங்கேயோ போட்டு விட்டார்கள். கொஞ்ச நாள் அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் அது கொஞ்சம் வந்து விட்டது.

    http://www.sivigai.blogspot.in/2009/12/blog-post_04.html

    http://www.sivigai.blogspot.in/2010/08/blog-post.html

    http://www.sivigai.blogspot.in/2009/12/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.
      தங்களது வலைப்பூ படித்தேன் நன்றாக இருந்தது.
      சில புகைப்படங்கள் சேர்த்து எழுதி இருந்தீர்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்.

      உங்கள் வலைப்பூவை தொடருகிறேன்.

      Delete
  8. தேவிபாலா அவர்கள் எழுதும் துப்பறியும் கதைகளில் வருபவர்கள் தான் பிரசன்னா மற்றும் லதா. அவர் எழுதிய குடும்ப கதைகள் எதுவும் படித்தது இல்லை.

    "மடிசார் மாமி ."
    விகடனில் தொடர் கதையாக வந்தது. ஓவியங்களின் நடுவே மடிசார்மாமி கேரக்டருக்கு நடிகை ஸ்ரீவித்யா போட்டோ போஸ் கொடுத்திருப்பார். அந்த நாட்களில் இது (ஓவியம்+போட்டோ மிக வித்தியாசமாக உள்ளதாக பேசப்பட்டது) டி.வி சீரியலாக வந்ததா என்று எனக்கு தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கேள்வி பட்டது போல இருக்கிறது ஆனால் படித்ததில்லை.
      சிறுவயதில் துப்பறியும் ஆக்சன் கதைகளையே தேடி படித்தேன் அதனால் விட்டுபோய் இருக்கும்.

      Delete
  9. ayya ithuvarai naan oru novel um padivillai ethavathu லிங்க் இருக்கிறதா

    ReplyDelete
    Replies
    1. லிங்க் எதுவும் இருபது பற்றி தகவல் இல்லை நண்பரே.

      Delete
  10. பிரமாதமான பதிவு பாஸ்
    நானும் உங்களை போல பழைய cirime novel, super novel , a novel time வாசகன்
    உங்களிடும் உள்ள super novel (அறை எண் 777) மட்டும் கொடுக்கறீங்களா
    படித்துவிட்டு தந்து விடுகிறேன்
    ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் பாஸ்

    --- விஜய் கணேஷ்

    ReplyDelete
  11. சிரஞ்சீவி -சவம் செய்த சாகசம், பயங்கரப்பேயன் , மேதாவி- மரண மங்கை P.T.சாமி - ரத்தப்பூக்கள் , பேசும் பிணம் இதெல்லாம் படித்தது இல்லையா தம்பிகளா?

    ReplyDelete
  12. //பட்டுக்கோட்டை பிராபகர் உருவாக்கியவர்கள் தான் பரத் மற்றும் சுசீலா.
    இவர்களது துப்பறியும் நிறுவனத்தின் பெயர் நினைவில் இல்லை. // Moonlight Detective Agency

    ReplyDelete
  13. உங்களிடம் சுபாவின் கத்தியுண்டு ரத்தமுடு என்றே கதை(நரேன்-செல்வா இணைந்து தோன்றிய) இருகிறதா நண்பரே

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete