வணக்கம் நண்பர்களே,
எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம்.
என்னுடைய பள்ளிகாலத்தில் எனக்கு இரு நண்பர்கள் இருந்தார்கள். நல்ல தம்பி மற்றும் விவேக். இருவரும் தினமும் தொலைகாட்சியில் வரும் ரகசியம் என்ற தொலைக்காட்சி தொடர் பற்றி அதிகமாக விவாதம் செய்வார்கள். எனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாததால் எனக்கு அதனை பற்றி தெரியாது. ஆனால் அவர்கள் கூறியதில் இருந்தே அத்தொடர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது.
அத்தொடர் முடிந்ததும் அடுத்து மர்ம தேசத்தில் வந்த தொடர் தான் விடாது கருப்பு. கருப்பு வெள்ளை மற்றும் கலரில் என பயணிக்கும் தொடர். பார்க்கும் அனைவரையும் ஈர்த்த தொடர்.அமானுஷ்யம்,சஸ்பென்ஸ் தொடர்களுக்கேலாம் ஒரு டிரெண்ட் செட்டெராக இருந்தது. அதனை நாகா நன்றாக இயக்கி இருப்பார்.
அத்தொடர் மூலம் தான் இந்திரா சௌந்தர்ராஜன் அறிமுகம் ஆனார். எனக்கு பொதுவாகவே சித்தர்கள் மற்றும் மித்தாலஜி பிடிக்கும். ஆகையால் இவரது கதைகள் மிகவும் பிடித்து போனது.
அவரது உச்சகாலத்தில் மாதம் பல நாவல்கள் அவரது கதைகளை தாங்கி வந்தன. க்ரைம் ஸ்டோரி,டுடே க்ரைம்,பாக்கெட் நாவல் என்று பல புத்தகங்கள் வந்தன.
க்ரைம் ஸ்டோரி மற்றும் டுடே க்ரைம் இரண்டிலும் முன்பு தொடராக வந்த கதைகளை பாகங்களாக வெளியிட்டனர்.
பாக்கெட் நாவல் புத்தகத்தில் அவரது பல புதிய கதைகள் வந்தன. அவரது கதையில் வரும் பொதிகை மலைக்கு போக பல நாள் ஆசைபட்டுளேன்.
அது போல அவரது கதையில் வரும் சித்தர்களை காண விரும்பினேன்.
அவரது அஷ்டமா சக்தி பற்றிய கதை தொடர் நன்றாக இருக்கும். ஒவ்வொரு சக்திக்கும் ஒரு கதை என்று கொடுத்திருப்பார்.
அது போல கன்னிகள் ஏழுபேர் என்ற கதை தொடரில் சப்த கன்னிகள் பற்றி கூறி இருப்பார்.
பாக்கெட் நாவலில் வந்த விக்ரமா விக்ரமா என்ற கதை தொடரில் விக்கிரமாதித்தனின் கதையா வித்தியாசமாக கொடுத்திருப்பார். கதையின் முடிவு மட்டும் மொக்கையாக இருக்கும். அனைத்தும் கனவு என்று முடித்திருப்பார்.
தொலைகாட்சியில் வந்து வெற்றி பெற்ற ருத்ரவீணை தொடரை நாவல் வடிவில் கொண்டு வந்தார். நாவலின் முடிவை மட்டும் தொலைகாட்சின் முடிவில் இருந்து வேறு படுத்தி காட்டி இருப்பார்.
அதே போல சிவமயம் தொடரும் நன்றாக இருக்கும்.
அவரது பல கதைகள் தொலைகாட்சியில் வெற்றி பெற்றுள்ளன. ரகசியம், விடாது கருப்பு, சொர்ண ரேகை, எதுவும் நடக்கும், ருத்திர வீணை, சிவமயம், கோட்டையபுறத்து வீடு ஆகியவை சில.
ஒவ்வொரு கதையிலும் அந்த அத்தியாயம் ஆரபிக்கும் முன் ஒரு சிறு குறிப்பு இருக்கும் அது மிக நன்றாக இருக்கும்.
கருப்பை பற்றிய குறிப்பு, ஒரு ராகத்தை பற்றிய குறிப்பு அல்லது அஷ்டமா சக்தியை பற்றியது. இப்படி எதாவது ஒரு குறிப்பு இருக்கும்.
தொடர்ந்து வரும் பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திர குமார் அவர்களின் கதை தொகுப்பை பார்க்கலாம்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.
//.....தொடர்ந்து வரும் பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திர குமார் அவர்களின் கதை தொகுப்பை பார்க்கலாம்... //
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :) முடிந்தால் முழுப்புதகங்களையும் scan செய்து mediafire-ல் upload செய்யவும்
Advance நன்றிகள்!
//முடிந்தால் முழுப்புதகங்களையும் scan செய்து mediafire-ல் upload செய்யவும் //
Deleteமுயற்சி செய்கிறேன் பெரியார்.
இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் அஷ்டமா சித்து வரிசை கதைகளே என்னை அதிகம் கவர்ந்தது! அவரது ஐந்து வழி மூன்று வாசல் சிறந்த ஒரு சரித்திர புதினம் . விக்ரமா விக்ரமா கதைகளை சேகரித்து முடிவு பிடிக்காததால் கடைக்கு கொடுத்து விட்டேன் ! ஒரு
ReplyDeleteகட்டத்தில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி சலிப்பை உண்டாகிவிட்டார் (கிட்ட தட்ட எல்லா கதைகளையும் படித்து விட்டேன் ). இருந்தாலும் அவரது கதைகளில் உள்ள ஆன்மீக அமானுஷ்யம் சுவாரஸ்யமானவை !
//அஷ்டமா சித்து வரிசை கதைகளே என்னை அதிகம் கவர்ந்தது!//
Deleteஎனக்கு ருத்ரவீணை மற்றும் சப்தகன்னிகள் கதையும் கூட பிடித்து இருந்தது.
//முடிவு பிடிக்காததால்//
அதே கருத்து தான்.முடிவு இவ்வளவு மொக்கையாக இருந்து இருக்க வேண்டாம்.
பாஸ் உங்க புத்தக குடோன் முகவரி தரமுடியுமா? அப்படியே சம்மர் சுற்றுலா போகிற தேதியையும் சொல்லவும்:)
ReplyDeleteகுடோன் லாம் இல்லை ஸ்டாலின் ஏதோ என்னிடம் இருக்கும் சிறு தொகுப்பை பகிர்ந்து கொள்கிறேன்.
Delete// ரகசியம் //
ReplyDeleteசிதம்பர ரகசியம் என்று நினைக்கிறேன். ஆனந்த விகடனில் தொடர் கதையாக வந்தது. அதற்காகவே விகடன் வாங்கினேன்.
தமிழ் தேனீ புண்ணியத்தில் சில புத்தகங்களை தரவிறக்கினேன். படிக்கதான் நேரம் இல்லை. உங்களைப் போல் டேப்லேட் ஒன்று வாங்க வேண்டும். பயணத்தில் படிக்க அதுதான் வசதியாக இருக்கும்.
சித்தர்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.
தொடர்கதைகளாக வந்தது தெரியாது ராஜ்.
Deleteஎனக்கு அறிமுகம் ஆனதே க்ரைம் ஸ்டோரியில் தான்.
பழநி பழைய புத்தக கடை ஒன்று விடாமல் நம்பர் கொடுத்திருக்கிறீர்கள் போல . . . கலக்குங்க
ReplyDeleteஇப்புத்தகம் எல்லாம் புன்பு வெளிவந்த பொழுது வாங்கியது தான் தீனா.
Deleteஇப்பொழுதெல்லாம் பழைய புத்தக கடையில் பள்ளி கல்லூரி புத்தகங்கள் தான் கிடைகிறது.
பரவாயில்லை. அந்த காலத்தில் வாங்கியதை பத்திரமாக வைத்துள்ளீர்கள். விட்டு விடு கருப்பா நாவலை மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாள், சென்னை புத்தக கண் காட்சியில் 100 ரூபாய் கொடுத்து வாங்கினேன்.
ReplyDeleteஎனக்கு, விட்டு விடு கருப்பாவை விட, விடாது கருப்பு நாடகம்தான் பிடித்திருந்தது.
உண்மை விடாது கருப்பு நாடகத்தில் நாகாவின் மேற்பார்வையும் இருந்தால் மேலும் சிறப்பாக இருந்தது.
Deleteபழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள் கிருஷ்ணா. நன்றி.
ReplyDeleteடி.வி பார்க்க வாய்ப்பில்லா அந்த நாட்களின் இனிமை பிராட்பேண்ட் இன்டர்நெட் வசதி உள்ள இந்த நாட்களில் மிஸ்ஸிங்.
எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் துளசிதளம் நாவலை தமிழில் படித்துள்ளீர்களா?
(மொழிபெயர்ப்பு சுசீலா கனகதுர்கா)
அமானுஷ்யமான விஷயங்களை சுவாரஸ்யமாக எழுதி இருப்பார்.
கஙகை புத்தக நிலையம்ல் வாங்கினேன்.
(வானதி பதிப்பகமும் இதுவும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.)
how to down load the Indrasoundrajan kathaigal here namely Sapptha kannikaikal
ReplyDeleteThank
Vijayasalem
மிக அருமையான நாவல், துளசி தளம்.....
ReplyDeleteமிக அருமையான நாவல், துளசி தளம்.....
ReplyDelete