Friday, October 18, 2013

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection - Part 4


வணக்கம் நண்பர்களே,

நெடுநாட்களாக எனது டிராப்டில் இருந்த பதிவிற்கு உயிர் கொடுத்துள்ளேன்.

முன்பு  போல அதிக பதிவுகள் இட முடிவதில்லை.

காரணங்கள் பல...பணி இடத்தில் மாற்றம்,திருமண வாழ்வின் மாற்றம், மற்றும் காமிக்ஸ் பதிவுகள் இட சற்றே சோம்பேறித்தனம்..என பல.

நண்பர்கள் மற்றும் ஆசிரியரின் பதிவுகளுக்கு ஒரு பதில் இடுவதே கடினமாக உள்ளது.

ஆகையால் இந்த சிறிய பதிவு, காமிக்ஸ் புதையல் வரிசையில் 20 ஆவது பதிவு.

நெடுங்காலமாக ருபாய் இரண்டாக இருந்த ராணி காமிக்ஸ் சிறிது காலம் 2.50 ஆகவும் பிறகு 3 ரூபாயாக வும் மாறியது.

வழக்கம் போல மாயாவியை பெரிதும் சார்ந்திருந்தது. சில மறுபதிப்புகள் கூட வந்தன - ரத்தக்காட்டேரி.

இக்கால கட்டத்தின் முடிவில் பல இந்திய தயாரிப்புகளும் வந்தன.

கதைகள் அவ்வளவாக நினைவில் இல்லை.

இரும்புக்கை மனிதன் - முதன் முதலில் 2.50 ஆக வந்த புத்தகம்.

கொலைகாரன் பேட்டை : ஒரு மொட்டை வில்லனின் கூட்டம் இருக்கும் கோட்டைக்கு சென்று துவம்சம் செய்வார் மாயாவி.

தீயில் எறியும் பெண் : சற்றே வித்தியாசமான கதை. ஒரு பழமையான கூட்டம் மாயவிக்கே தெரியாமல் இருக்கும்.அதன் தலைவர் ஒரு அரசி என நினைக்கிறேன் 

மர்ம கடிதம் : பெங்காலியா முதல்வரிர் க்கு வரும் மிரட்டல் சம்பந்தப்பட்ட கதை என நினைவு.

மர்ம கும்பல் : ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை மாயாவி அழிப்பார்.






ஒரு போலி குரங்கின் கொட்டத்தை அடக்குவார் மாயாவி இன் கொலைகார குரங்கு.

எனக்கு கரும்புலியின் கதைகள் பிடிக்கும்.

நான் சிறு வயதில் ஒரு ஆங்கில நாடகம் பார்த்த நினைவு ஒரு மனிதன் கரும்புலியாக மாறும் சக்தி படைத்தவனாக இருப்பான் .

எதில் பார்த்தேன் என்று தெரியவில்லை.


புலி பெண் மறுபதிப்பு , தில்லானின் நாயை தேடி.

தொர்கலின் வீரச்சிறுவன்.

இந்திய தயாரிப்பு ஜடாயுவின் கழுகு மனிதன் .


இந்திய தயாரிப்பு ரீட்டா வின் வெடி குண்டு கும்பல்.

முதல் முறையாக மாயாவியால் பழக்க முடியாத கருஞ்சிறுத்தை கதை.ரத்தம் குடிக்கும் சிறுத்தை.

இதுவரை கதை என்னவென்றே புரியாத ரகசிய சாவி.



ஒரு குழந்தை வாரிசை அதனை கொல்ல வருபவர்களுடம் இருந்து காப்பாற்றுவார் மாயாவி. - யார் அந்த சிறுவன்.

கோவிலை கொள்ளை அடிபவர்களை துவம்சம் செய்யும் கரும்புலி.




comanche யின் கில்லாடி வீரன்.



ரத்தக் காட்டேரி எனக்கு மிகவும் பிடித்த கதை கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்.

ஆனால் மாயாவியின் போலிக்கடிதம்,ரவுடி ராஜா ஆகிய கதைகள் மாயாவியின் சித்திரத்துக்காகவே பிடிக்காது.

மாயாவி என்றாலே கம்பீரத்துடன் தோன்றுவது தான் பிடிக்கும்.

தங்கள் நினைவில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

ராணி காமிக்ஸ் பற்றிய எனது முந்தய பதிவுகளை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.


18 comments:

  1. அருமையான விருந்தை படைத்தது உள்ளீர்கள். ராணி காமிக்ஸ் தான் என்னுடைய ஆதர்ச காமிக்ஸ்.
    முகமுடியின் அனேக கதைகளை நான் வாசித்து உள்ளேன்.
    தொடர்ந்து எழுத முடியாவிட்டாலும் இது போன்று நேரம் கிடைக்கும் போது பதிவு போடுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ் தொடர்ந்து எழுத முயல்கிறேன்

      Delete
  2. // பணி இடத்தில் மாற்றம் //
    ஐ.டி துறையிலிருப்பவர்களுக்கு அவ்வப்போது நடந்தேறிடும் சம்பவம்தானே!! வாழ்த்துக்கள் கிருஷ்ணா! :)

    // திருமண வாழ்வின் மாற்றம் //
    சிரிச்ச முகத்தோடு, வாட்டசாட்டமாய் இருக்கும் வாலிபர்களுக்கு அவ்வப்போது நடந்தேறிம் சம்பவம்தானே!! வாழ்த்துக்கள் கிருஷ்ணா! ;)

    // காமிக்ஸ் பதிவுகள் இட சற்றே சோம்பேறித்தனம் //
    மேற்கண்ட இரண்டினாலும் ஏக பிஸியாய் இருக்கும் ஒருவருக்கு இதுவும் சகஜம்தானே!! பரவாயில்லை கிருஷ்ணா! :)

    பதிவைப் பற்றி என்னத்தைச் சொல்ல; படிக்க ஆரம்பிப்பதற்குள் "அவ்வளவுதான் நண்பர்களே" வந்துவிடுகிறது. ஹம்... :)

    ReplyDelete
    Replies
    1. //பதிவைப் பற்றி என்னத்தைச் சொல்ல; படிக்க ஆரம்பிப்பதற்குள் "அவ்வளவுதான் நண்பர்களே" வந்துவிடுகிறது. ஹம்... :)//


      அதற்கு காரணம் //கதைகள் அவ்வளவாக நினைவில் இல்லை.//

      அதற்கு தான் //தங்கள் நினைவில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.//
      நீங்களும் இந்த பதிவிற்கு பங்களிப்பு அளிக்கலாமே என்று தான்....:)

      இதற்கு தான் நமது கோவை இரும்புக்கையார் வேண்டும் என்று இந்நேரம் அனைத்து புத்தகத்தை பற்றியும் ஒரு குறிப்பு அளித்திருப்பார்.

      Delete
    2. அடுத்த முறை கண்டிப்பாக பெரிய பதிவு தான்.(எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் சரி)

      Delete
  3. புதையல் இன்னும் முடியலையா ? தோண்ட தோண்ட வந்துக் கிட்டே இருக்கு. :D அடிக்கடி பதிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. //நெடுநாட்களாக எனது டிராப்டில் இருந்த பதிவிற்கு உயிர் கொடுத்துள்ளேன்.//

      முன்பே இருந்த படங்கள் தான் ராஜ் இன்று தான் பதிவிட்டேன்.

      Delete
  4. THANKS A LOT...IT REMINDED ME OF MY GOLDEN AGE...SWEET MEMORIES HAVE GREAT POWER TO HEAL...IN THAT SENSE, YOU ARE DOING A GREAT SERVICE TO SOME SOULS...

    ReplyDelete
  5. நல்ல பதிவு நண்பா!

    ReplyDelete
  6. hi I want all these comics.I read all in my childhood.Can i get these books?

    ReplyDelete
  7. Mr.V.V.K I searched these books in books stores in erode and coimbatore. But i could not get

    ReplyDelete
  8. Incredible review, I'm certain you're getting an extraordinary reaction. 123 adventure movies

    ReplyDelete