வணக்கம் நண்பர்களே,
மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ டைகர் கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.
டைகரை பற்றி நாம் முன்னைய பதிவுகளில் பார்த்துவிட்டோம் ஆகையால் கதைக்கு செல்வோம்.
இந்திய அணு விஞ்ஞானி D G நாயுடு சென்ற விமானம் கடத்தப்படுகிறது.
அவரை காப்பாற்ற பயங்கரவாத ஒழிப்பு நிறுவனத்தால் டைகர் மற்றும் ஹென்றி அனுப்பப்படுகின்றனர் அவர்கள் அவரை எப்படி காப்பாற்றுகின்றனர் என்பதே கதை.
இக்கதையின் loopholes:
1.கடத்தப்பட்ட விமானம் என்ன ஆனது?
2.இவர் துப்பாக்கியில் இருந்து வரும் புகை இவரை மட்டும் ஏன் ஒன்றும் செய்யவில்லை?
3.அறை முழுவதும் சாதனங்கள் இருந்தும் கூரை கீழே இறங்கும் பொழுது என்ன ஆனது.
இப்படி எல்லாம் குறைகளை கண்டுபிடிக்காமல் கதையை மட்டும் ரசிக்கும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் இரண்டு கதைகள் கைவசம் உள்ளன.அவைகளை விரைவில் பதிவிடுகிறேன்.
டி.ஜி.நாயுடு - நமது G.D.Naidu அவர்களை உல்டா செய்திருக்கிறார்கள்!!! :) தோற்றமும் கிட்டத்தட்ட பொருந்துகிறது!!! :)
http://en.wikipedia.org/wiki/Gopalswamy_Doraiswamy_Naidu
தகவலுக்கு நன்றி கார்த்திக்.
அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ .
நண்பர் கிருஷ்ணா அவர்களே,
ReplyDeleteமேலே உள்ள படங்களைத் தவிர்த்து, மீதம் உள்ளதை ஒரு SMSஆக எல்லோருக்கும் அனுப்பிவிடலாம் போலிருக்கிறதே!!! :-D
இப்படியே போனால், உங்களது அடுத்த பதிவு கீழ்கண்டவாறு இருக்கக் கூடுமோ!
'அமெரிக்க விஞ்ஞானி கடத்தல் - super hero tiger action '
வணக்கம் நண்பர்களே,
அமெரிக்க விஞ்ஞானி - கடத்தப்படுகிறார்,
டைகரால் - மீட்கப் படுகிறார்.
அவ்வளவுதான் நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்.
'சித்திரம் பேசிடுமே' எனச் சொல்லி எஸ் ஆகி விடுவார் என நினைக்கிறேன்! ;)
Deleteவாங்க விஜய்,ரொம்ப நாள் கழித்து வந்து இப்படி காலை வார வேண்டுமா?
Deleteஎங்க இந்த கதைக்கு இதுக்கு மேலயும் எப்படி நீட்றதுனே தெரியிலங்க.
விடுங்க விரைவில் எனது 50வது பதிவு தயாராயிட்டு இருக்கு அப்போ உங்க குறைய தீத்தரலாம்.
முழுகதைக்கும் புகைப்படம் போட்டாச்சு.அதுவும் சின்ன கதை.
உங்களுக்கு இது வேண்டாம்ன சொல்லிருங்க பாஸ்.
கார்த்திக் உண்மை தானே சித்திரங்கள் பேசுதுள்ள?
Deleteஅதுவும் இல்லாம உங்க பொன்னான நேரத்தை வீணடிக்காம இருக்கும் ல?
டி.ஜி.நாயுடு - நமது G.D.Naidu அவர்களை உல்டா செய்திருக்கிறார்கள்!!! :) தோற்றமும் கிட்டத்தட்ட பொருந்துகிறது!!! :)
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Gopalswamy_Doraiswamy_Naidu
நன்றி கார்த்திக் இதையும் பதிவுல சேர்த்து விடுகிறேன்.
Deleteஇந்த கதை இந்தியர்களால் உருவாக்கப் பட்டதா ? அல்லது ஒரு பிரபலமான விஞ்ஞானி என்ற முறையில் உல்டா பண்ணி இருக்கிறார்களா தெரிவில்லை.
ReplyDeleteஇது அமெரிக்க தயாரிப்பாக இருப்பதற்கான வாய்புகள் அதிகம்
Deleteஇதன் ஓவியங்கள் நமது ஜான் மாஸ்டர் ஓவியத்தை சார்ந்தே இருக்கும்.
இக்கதையின் loopholes:
ReplyDelete1.கடத்தப்பட்ட விமானம் என்ன ஆனது?
>>>பனி கடலுக்குள் ஜல சமாதி ஆனது.
2.இவர் துப்பாக்கியில் இருந்து வரும் புகை இவரை மட்டும் ஏன் ஒன்றும் செய்யவில்லை?
>>> இவருக்குன்னு தனி மாத்திரை போட்டுக்கிட்டு இருக்கார். அதனால் அவர ஒன்னும் செய்ய முடியாது.
3.அறை முழுவதும் சாதனங்கள் இருந்தும் கூரை கீழே இறங்கும் பொழுது என்ன ஆனது.
>>> அறை கீழே இறங்குற அளவுக்கு யோசிக்க தெரிந்த வில்லனுக்கு அந்த நேரம் பொருட்கள் எல்லாம் கீழே பொய் விடுறமாதிரி செய்ய தெரியாதா?
யாருகிட்ட வந்து என்ன லூப் ஹோலுன்னு சொல்லுறீங்க ?
:-)
பலே :-)
Deleteஅற்புதமான கதை வரிசை! நன்றாக பதிவிட்டு இருக்கிறீர்கள்!தொடர்ந்து எல்லா பூனை குட்டிகளையும் வரிசையாக இறக்கி விடுங்கள்! என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்னும் இரண்டு குட்டிகளே (பூனை) உள்ளன.
Deleteமுழு நீள கதையை எதிர்பார்த்து வந்த உங்களின் ரசிகனுக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் முழுக்கதையையும் சித்திர வடிவில் வெளியிட்டு நிவர்த்தி செய்துவிட்டீர்கள். நன்றி.
ReplyDeleteஉங்களின் முழுநீளக் கதை சொல்லலை எதிர்பார்த்திருக்கிறேன் :-)
வரப்போகும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
உங்களது எதிர்பார்ப்பை 50வது பதிவின் மூலம் நிவர்த்தி செய்துவிடலாம்.
Delete