லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Tuesday, October 9, 2012

பவளச்சிலை மர்மம் - A Tex Willer Action Thriller



வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் நமது ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுக்களை பெற்று முதல் இடம் வந்த பவளச்சிலை மர்மம் கதையினை பார்க்கப்போகிறோம்.

இக்கதை லயனின் மூன்றாவது ஆண்டு மலராக வந்தது.

ஒரு சிறு எச்சரிக்கை இது மிகவும் ஒரு நீ ......... ளமான பதிவாக அமைந்துவிட்டது.ஆகையால் பொறுமை மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் மேலே செல்லவும்.மற்றவர்கள் எனது அடுத்தபதிவிர்க்கு மீண்டும் வாருங்கள்.

இக்கதை ஒரு Expendables திரைப்படம் போல.ஒரே சண்டை தான்.அதுவும் கதையின் பாதிபக்கதிலேயே கிளைமாக்ஸ் ஆரம்பித்துவிடுகிறது.அதற்கு பின்    ஒரு ஐம்பது பக்கங்களுக்கு ஒரே ஆக்சன் தான்.மிகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது.கண்டிப்பாக நிறைய நண்பர்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


Hotline

கதை:

எலும்புக்கூடு பள்ளத்தாக்கு.ஒரு மாலை பொழுது.மந்திரவாதி ஹடானின் இருப்பிடம் இருக்கும் மலைக்குன்று.










திடீரென அவனது பாதுகாவலர்கள் (புலிகள்) மிரளுகின்றன.உடனே அவனது மற்றொரு வளர்ப்பு பறவையான காகத்தை சென்று பார்க்க சொல்கிறான்.

ஹுவால்பை இனத்தினர் கையில் ஆயுதங்களோடு தாக்க வருகின்றனர்.
எதிர்த்த புலிகளை கொன்றுவிடுகின்றனர்.காகத்தின் மீதும் அம்பு எய்துவிடுகின்றனர்.

ஹடானையும் அடித்து வீழ்த்திவிட்டு அவனது இருப்பிடம் முழுவதையும் எதையோ தேடுகின்றனர்.திடீரென்று ஒருவன் தரையின் கீழே இருக்கும் நிலவறையை கண்டுபிடிகின்றான்.உடனே அனைவரும் கீழே சென்று காசினா எனப்படும் ஒரு பெரிய சிலையின் உள்ளே இருக்கும் சக்தி நிறைந்த சிறிய "பவளச் சிலையை" கண்டுபிடிகின்றனர்.அந்த காசினாவை அப்படியே எடுத்துக்கொண்டு, அந்த இருப்பிடத்தையும் தீயிலிட்டு விட்டு விரைந்து தப்பி செல்கின்றனர்.



அம்புக்காயம் பட்ட காகம் பறந்து சென்று நவோஜோக்களின் இருப்பிடத்தில சென்று விழுகிறது.அப்பொழுது ஒரு ஆலோசனையில் இருக்கும் நமது ஹீரோ டெக்ஸ் வில்லர் அக்காகத்தை கண்டு பக்கத்தில் சென்று ஆராய்கிறார்.அதன் மூக்கில் இருக்கும் உதய சூரியன் சின்னத்தை வைத்து அது ஹடானிர்க்கு சொந்தமானது என்றும் அதன் மேல் இருந்த அம்பை வைத்து அது ஹுவால்பை இனத்தினர் செய்த காரியம் என்றும் கண்டுபிடிக்கிறார்.



உடனே நமது நால்வர் கூட்டணி தேவையான ஆயுதங்களோடு ஹடானின் குன்றிற்கு செல்கின்றனர்.அங்கு மிகவும் மோசமான நிலைமையில் இருந்த ஹடானை காப்பாற்றி மது அளித்து சிலை திருட்டுப்போன விவரங்கள் அறிந்து கொள்கிறார்.புகை மூலம் நவோஜோக்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு நால்வரும் தப்பிசென்றவர்களை துரத்தி செல்கின்றனர்.




இதற்கிடையில் முன்னால் தப்பி செல்லும் ஷா யான் மற்றும் அவனது கூட்டத்தினர் ஒரு மலை கனவாயை கடக்கின்றனர்.இரவு நேரம் வந்துவிட்டதால் ஒரு இடத்தில பொழுதை கழித்து விட்டு காலையில் செல்லலாம் என கூறுகிறான்.

நள்ளிரவு ஆனது.ஒருவர் மாறி ஒருவர் காவல் புரிந்து வந்தனர்.அப்பொழுது மா கெளர் என்பவனின் முறை வந்தது.அவன் அவர்கள் கிராமத்து மந்திரவாதியான தல்சாரின் மருமகன் ஆவான்.காவல் புரிந்து கொண்டிருந்த மா கெளர் இன் மனது அவனை அந்த சிலையை எடுத்து பார்க்க சொல்லியது.
அவன் காசினா எனப்படும் பெரிய சிலையில் இருந்தது அந்த பளிங்கு சிலையை வெளியில் எடுத்தான் அது நிலா வெளிச்சத்தில் பளீர் என்று அதில் இருந்து ஒரு ஒளிப்பிழம்பு கிளம்பியது.

அதனை கையில் எடுத்த மா கௌர் ஷா யானின் மரணத்திற்கு பிறகு தான் ஹுவால்பைகளின் தலைவன் ஆக வேண்டும் என்று வரம் கேட்டான்.பின் அச்சிலையை மீண்டும் காசினாவில் வைத்து பாறையின் மேல் அதனை வைத்தான்.உடனே அவனது உடல் நடுங்க தொடங்கியது.அப்படியே வெட்டுண்ட மரம் போல வீழ்ந்தான்.



விழும் சத்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்து பார்த்தனர்.அதற்குள் அவன் இறந்து இருந்தான்.காசினா பாதி திறந்த நிலையில் இருந்ததை வைத்து நடந்ததை அறிந்து கொண்டனர்.இறந்த மா கௌர் உடலை பாறைகள் கொண்டு மூடி சமாதி செய்து விட்டு  அங்கிருந்து விரைந்து கிளம்பினர்

கிளம்பிய அவர்கள் சற்று தூரத்தில் இருந்த வானவில் பாலத்தை அடைந்தனர்.
அது மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அந்த கயிறு பாலத்தை ஒவ்வொருவராக கடந்து சென்றனர்.

இதற்கிடையில் பொழுது விடிந்தது நமது நான்கு நண்பர்களும் அந்த மலை குன்றை அடைந்தனர்.அங்கிருந்த சாம்பலில் இருந்து தப்பியவர்கள் அங்குதான் இரவில் தங்கி உள்ளனர்.என்பதை கண்டு கொண்டனர்.விரைந்து சென்றால் அவர்களை மாலைக்குள் பிடித்துவிடலாம் என முடிவு செய்து கிளம்பினர்.தாங்கள் பின்தொடர்வது அவர்களுக்கு தெரியாததால் அவர்கள் தடங்களை அழிக்காமல் சென்றிருந்தனர்.ஆகையால் அதனை பின்தொடர்வது சுலபமாக இருந்தது.

மறுநாள் விடியகாலை நண்பர்கள் வானவில் பாலத்தை அடைந்தனர்.பாலத்தின் நிலையை கண்டு கால்நடையாக செல்வது தான் நல்லது என முடிவு செய்கின்றனர்.அதன்படி குதிரைகளை பாலத்தின் இந்த பக்கம் விட்டுவிட்டு ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கால்நடையாக பாலத்தை கடந்தனர்.


அதே நேரத்தில் ஷா யானும் அவனது கூட்டத்தினரும் தங்களது கிராமத்தை அடைந்தனர்.அங்கிருந்த தல்சாரிடம் காசினாவை ஒப்படைத்து விட்டு மா கௌர் ரிர்க்கு ஏற்பட்ட முடிவை எடுத்துக்கூறுகிறான்.அதனை கேட்ட தல்சார் ஒரிகட்டிர்க்கு பலி கொடுத்து அதன் பாதுகாப்பை பெறவேண்டும் என கூறுகிறான்.அதன் படிஇளம்பெண்கள் அனைவரையும் வரிசைபடுத்தி நிற்க வைக்க சொல்கிறான்.மற்றும் பக்கத்தில் இருக்கும் மற்ற இனத்தவருக்கும் மாலையில் பலி கொடுக்க இருக்கு செய்தியை முரசறைந்து கூற சொல்கிறான்.உடனே ஷா யானும் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி செல்கிறான்.

பாலத்தின் மறுபக்கத்தை அடைந்த நண்பர்கள் கால்தடங்கள் வைத்து திருடர்கள் ஆப்ரே சமவெளியில் வாழும் ஹுவால்பை இனத்தவர்தான் என அறிந்து கொள்கின்றனர்.அதனை உறுதிபடுத்தும் வகையில் அருகில் பலமாக முரசு சத்தம் கேட்டது.அதில் இருந்து பலி கொடுக்க போவதை அறிந்து கொண்டு காப்பாற்றுவதற்காக விரைந்தனர்.

இதற்கிடையே கிராமத்தில் இளம்பெண்கள் வரிசையாக நிற்க வைக்கபட்டனர்.தல்சார் ஒன்பது வெள்ளை கற்களையும் ஒரு கருப்பு கல்லையும் ஒரு குடத்தில் போட்டான்.அதனை எடுத்து வந்து நின்று கொண்டிருந்த பெண்கள் ஒவ்வொருவரையும் குடத்தில் இருந்து ஒரு கல்லை எடுக்க சொன்னான்.அனைவரும் எடுத்த பின் எல்லோர் கைகளையும் விரித்து காட்டசொன்னான்.ஒரு பெண்ணின் கைகளில் கருப்பு கல் இருந்தது.அவளை பிடித்து பலிக் கம்பத்தில் கட்டசொன்னான்.

மாலை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த பெண் பலிக்கம்பத்தில் கட்டப்பட்டாள்.வில் வித்தையில் சிறந்த ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முரசுகள் ஒலிக்க  ஆரம்பித்தன தல்சார் காசினாவை கொண்டு வந்து ஒரு பாறையின் மேல்வைத்தான்.ஆகட்டும் என குரல் கொடுத்தான்.வில் வீரர்கள் அம்பு தொடுக்க தயாரானார்கள். திக் திக் திக்.



சரியான சமயத்தில் முன்னால் வந்த டைகரும் கிட் வில்லரும் ஒரு குன்றின் மேல் இருந்து நடக்கும் அக்கிரமத்தை பார்கின்றனர்.உடனே மேலே வந்துகொண்டிருந்த வில்லரையும் கார்சனையும் சீக்கிரம் வர சைகை செய்தனர்

வேளை நெருங்கியது வீரர்கள் வில்லில் அம்பை பூட்டினர்.நமது நண்பர்கள் செயலில் இறங்கினர்.கீழே உள்ளவர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.மேலே இருந்து கிட் பாதுகாப்பு கொடுக்க மற்ற மூவரும் கீழே வந்து எதிர்தவரை எல்லாம் சுட்டு வீழ்த்தினர்.டைகர் தல்சாரை சுட்டு கொன்று அந்த சிலை இருக்கும் காசினாவை எடுத்துக்கொள்கிறார்.வில்லர் அந்த பெண்ணை காப்பாற்றினார் கட்டை அவிழ்த்த உடன் அந்த பெண் மயங்கி வில்லர் மேல் விழுந்தாள்.



ஹுவால்பைகள் சுற்றி வளைத்து வீழ்த்த நினைத்தனர்.அவர்களது துரதிர்ஷ்டம் அவர்களிடம் வில்லும் அம்பும் மட்டுமே இருந்தது.ஆகையால் சுற்றி வளைத்து அம்புகளை எய்தனர்.அந்த பெண்ணை தோளில் போட்டுகொண்டு சென்ற டெக்ஸ் தோள் மீது ஒரு அம்பு பாய்ந்துவிடுகிறது.
உடனே மற்ற இருவரும் தோட்டா மழை பொழிய செய்தனர்.அப்படியே மூவரும் அந்த பெண்ணுடன் கிட் இருந்த குன்றிற்கு வருகின்றனர்






பின் அங்கிருந்து விரைந்து பாலத்தை நோக்கி செல்கின்றனர்.ஆனால் எதிரிகள் மற்றொரு குறுக்கு வழியில் இவர்களுக்கு முன் பாலத்தை அடைந்து காத்திருகின்றனர்.இதற்கிடையில் மற்றொரு இனத்தவர் அந்த சிலையை பறிக்கும் பொருட்டு பாலத்திற்கு வருகின்றனர்.





இவ்வாறாக பாலத்தின் ஒரு பக்கம் ஒரு பெரிய யுத்தமே நடக்கிறது.இறுதியில் அவர்களை காப்பாற்ற வரும் நவோஜோக்களின் உதவியுடன் இரு கூட்டதினரையும் முறியடித்து விட்டு பாலத்தையும் வெட்டிவிட்டு தப்பி செல்கின்றனர்.





நண்பர்களே நமது நண்பர் சிபி அவர்கள் நமக்காக இதன் ஒரிஜினல் காமிக்ஸின் கலர் ஸ்கேன்கள்  அனுபியுள்ளார்.அதனை மேலே சேர்த்துள்ளேன் கண்டு களியுங்கள்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ .

Tuesday, October 2, 2012

காமிக்ஸ் புதையல் XVII - Rani Comics Collection - Part 2


வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது 
பகுதியை பார்க்க போகிறீர்கள்.

முதல் பாதியில் பெரும்பாலும் ஜேம்ஸ் பான்டையே  நம்பி உள்ளார்கள்.

இடையில் நமது ஜார்ஜ் ஜானியாக பத்தாவது இரவில் வெளிவந்துள்ளார்.

மேலும் தில்லானின் வேட்டை நாய்,ராயனின் கொலைகார 
கேப்டன்,பக் ஜோன்சின் துப்பாக்கி மங்கை,லேடி ஜேம்ஸ் பாண்ட் 
தோன்றும் நிழல் மனிதன்,தியோவின் சூப்பர் கார்,மன்னர் 
பீமாவின் மண்டை ஓட்டு மர்மம் ஆகிய கதைகள் வந்துள்ளன.

இரண்டாவது பாதியில் அதாவது 200 புத்தகங்களை தாண்டிய பிறகு மாடஸ்டி,ரிப் கிர்பி,மாயாவி,ப்ளாஷ் கார்டன்,மாண்ட்ரேக் ஆகியோரை அறிமுகபடுத்தி உள்ளனர் 

இவர்கள் அந்தகால கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.

இடைஇடையில் வந்த வெஸ்டேர்ன் காமிக்ஸ் கதைகள் அனைத்துமே நன்றாக இருக்கும்.(கில்லாடிக்கு கில்லாடி,கொலைகார நகரம்)













எனக்கு நினைவில் இருக்கும் சில கதைகளை பற்றி இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தில்லானின் வேட்டை நாய் ஒரு வித்தியாசமான கதை.
தில்லானின் நண்பன் விளம்பரத்தை பார்த்து ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைகளுக்கு வாழ்கை தருவதாக கடிதம் அனுப்ப அதனை நம்பி அந்த குண்டு அம்மையார் தனது குழந்தைகள் மற்றும் அவரது நாய் சகிதம் அந்த ஊருக்கு வருகிறார்.

அந்த அம்மையாரை நேரில் பார்த்ததும் அந்த ஆள் ஜகா வாங்குகிறார்.
தனது பெயரையே மாற்றி சொல்கிறார்.வேறு வலி இல்லாமல் அவர்கள் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு வீட்டில் தங்குகிறார்கள்

இதற்கிடையில் சில கொள்ளைகாரர்கள் அந்த வீட்டில் தங்கி அவர்களை ப்ளாக்மெயில் செய்வார்கள்.

இதில் இருந்து அவர்களை எப்படி தில்லான் காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.இறுதியில் அந்த அம்மையார் தனது கணவருடன் சேர்ந்துவிடுவார்.

லேடி ஜேம்ஸ் பாண்ட் தோன்றும் நிழல் மனிதன் ஒரு சிலை கடத்தல் கும்பலை பற்றிய கதை.

நம்ம சார்லி சுனிலாக அறிமுகம் ஆனா நான் யார்.

ஒரு முரட்டுக்காளை கடதுபவர்களிடம் இருந்து பில்லி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முரட்டுக்காளை கதையில் பார்க்கலாம்.

தியோவின் சூப்பர் காரின் அறிமுக கதை.

மாடஸ்டியின் மர்ம கோட்டை நமது முத்துவில் வந்துள்ள மரண கோட்டை தான் என நினைக்கிறன்.

டிஸ்கோவின் அழகி வேட்டை மற்றும் பணப்பெட்டி மறைந்த மாயம் இரண்டும் நல்ல கதைகள்.அழகி வேட்டை தான் ஒற்றை கண்ணாடி யாக மாலைமதி யில் வந்துள்ளது.

மன்னர் பீமாவின் மண்டை ஓட்டு  மர்மம் ஒரு மந்திரவாதியின் காலத்தில்  பயணம் செய்ய கூடிய மண்டை ஓட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை பீமா எப்படி முறி அடிக்கிறார் என்பதே.

மண்டை ஓட்டு மாளிகைக்கு திருட வரும் கொள்ளையர்களை எப்படி மாயாவி முறியடித்தார் என்பதை கதை.


கொள்ளையர்கள் நிறைந்த முதலை தீவை எப்படி மாயாவி நிர்மூலமாகுகிறார் என்பதை முதலை தீவு கதையில் பார்க்கலாம்

ஒரு மாய முரசின் மூலம் அனைவரையும் மயக்கி ஆட்டுவிக்கும் ஒரு மோச காரனை முறியடிக்கும் கதை மாய முரசு.அக்கதை மாயாவி ஆடும் நடனம் தான் ஹைலைட்.

ஒரு மயக்கும் மோகினியின் அக்ரமத்தை எப்படி மாண்ட்ரேக்கும் லோதரும் சேர்ந்து  முறியடிக்கிறார்கள் என்பதே மயக்கும் மோகினியின் கதை.

நடுகடலில் ஒரு அயோகியனிடம் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் டயானாவை மாயாவி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே அதிரடி பெண்ணின் கதை.

அநியாயம் புரியும் ஒரு காட்டுவாசி இனத்தினரை எப்படி மாயாவி வழிக்கு கொண்டு வருகிறார் என்பதே சிலந்திவலை.

நண்பர்களே இந்த புத்தகங்களை  பற்றிய உங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .
கிருஷ்ணா வ வெ .

Saturday, September 29, 2012

ஓட்டு போட வாருங்கள் - Poll On Future Posts


வணக்கம் நண்பர்களே,

நமது ஆசிரியரின் வெள்ளோட்டத்தை பார்த்த பொழுது நாமும் ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாமே என தோன்றியது.அதன் வெளிபாடே இந்த பதிவு.

இனி வர இருக்கும் தனி புத்தக பதிவுகளின் ஒரு சிறு வெள்ளோட்டமே இந்த பதிவு.நண்பர்கள் தங்களது விருப்பதை பொறுத்து வரிசைபடுதுங்கள்.
நண்பர்களின் விருப்பதை பொறுத்து எனது தனிப்பதிவுகளை இடலாம் என்று இருக்கிறேன்.

முதல் கதை : லயன் மூன்றாவது ஆண்டு மலராக வந்த டெக்ஸ் வில்லரின் பவளச்சிலை மர்மம்.



இரண்டாவது கதை : ஹாலிடே ஸ்பெசலாக வந்த ஸ்பைடரின் பாட்டில் பூதம்.


மூன்றாவது கதை :- டெக்ஸ் வில்லரின் கழுகு வேட்டை.


நான்காவது கதை :- லயனின் ஐம்பதாவது இதழ் டெக்ஸ் வில்லரின் டிராகன் நகரம்


ஐந்தாவது கதை : - லயன் காமிக்ஸின் இரண்டாவது கதை மாடஸ்டி இன் இஸ்தான்புல்.


ஆறாவது கதை : - மினி லயனில் வந்த ரிப் கிர்பி இன் மாயாஜால மோசடி.



அட்டைப்படங்கள் என்னிடம் இல்லாததால் கிங் விஸ்வா அவர்களின் வலை பூவில் இருந்து எடுத்துள்ளேன்.

வாங்க வந்து உங்க ஓட்ட போடுங்க.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ .

Wednesday, September 26, 2012

Malarmani Comics - காலகண்டன் கொலைவழக்கு




வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நாம் பார்க்க போவது 1986 இல் வந்த மலர்மணி  காமிக்ஸின் காலகண்டன் கொலைவழக்கு பற்றியதே.
இதனை வெளியிட்டோர் மதுரையில் இருந்த கலைபொன்னி பதிப்பகத்தார்.ஆசிரியர் கே.பாண்டிமணி.
இதற்கு கதை மற்றும் சித்திரங்கள் ஸ்ரீகாந்த்.

கலை பொன்னி பதிப்பகத்தார் பல பெயர்களில் காமிக்ஸ் வெளியிட்டனர்.அவை மலர் காமிக்ஸ்,கலைபொன்னி காமிக்ஸ்,பொன்னி காமிக்ஸ்,மலர் மணி காமிக்ஸ் இப்படி பல.

அதனை பற்றிய தொகுப்பை பற்றி பார்க்க எனது முந்தய பதிவை பார்காதவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.
அவர்கள் மாயாஜால கதை கூட வெளியிட்டுள்ளார்கள் அதனை பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மற்றும் இவர்கள் பற்றி நண்பர் சிவ் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளதை அறிந்தேன் அதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

லயன் குழுமத்தினரின் படைப்புகள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும் இவர்களது சில படைப்புகளும் நன்றாக இருக்கும்.குறிப்பாக ஸ்ரீகாந்த் அவர்கள் சித்திரங்கள் வரைந்த கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் குறிப்பாக இந்த கதை.

நண்பர்களே இந்த கதையை படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் அதனை பொறுத்து மேலும் அவர்களது படைப்புகளில் எனக்கு பிடித்தவைகளை நான் பதிவு செய்யலாமா வேண்டாமா என நான் முடிவு செய்துகொள்வேன்.
ஆகையால் கண்டிப்பாக நண்பர்கள் அனைவரும் தங்களது கருத்தை கூறுங்கள்.

கதை ;
நமது ஹீரோ கோபி என்கிற கோபாலகிருஷ்ணன்.
அவர் முதலில் பத்திரிகை நிருபராக இருந்து பின்னர் துப்பறிவாளராக மாறியவர்.ஒரு நாள் அவர் பொழுது போகாமல் பழைய பத்திரிகை தொகுப்புகளை படித்துக்கொண்டு இருந்தார்.அதில் 5 வருடங்களுக்கு முன்பு நடந்த பிரபல கோடீஸ்வரர் காலகண்டன் கொலைவழக்கை பற்றி படித்தார்.
அதில் காலகண்டன் அவரது டிரைவர் கோவிந்தனால் கத்தியால் குத்தப்பட்டார் என்றும் குத்தப்பட்ட கத்தியில் கோவிந்தனின் கைரேகை இருந்ததையும்  இன்னும் கொலையாளி கிடைக்கவில்லை என்றும் படித்தார்.மற்றும் அவரது தம்பி மேகநாதன் விரைவில் வழக்கை முடிக்க செய்துள்ளார் என்றும் அறிந்தார்.காலகண்டன் தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க கூறியுள்ளார்.ஆகையால் அவரது உடல் இப்பொழுது மருத்துவ கல்லூரியில் உள்ளதை அறிந்து கொண்டார்.


அவருக்கு அந்த வழக்கின் மீது ஆர்வம் வந்து அந்த கொலையாளியை பிடிக்க முடிவு செய்தார்.பின்னர் அதுபற்றி  டி ஐ ஜி  ராஜேந்தரிடம் கூறுகிறார்.அவரும் அந்த வழக்கை பற்றிய விவரங்கள் கொடுத்து அவரை அந்த வழக்கை பற்றி ஆராய சொல்கிறார்.அவரிடம் இந்த வழக்கு பணக்காரர்கள் சம்பத்தப்பட்டது என எச்சரிக்கை செய்கிறார்.

முதலில் கோபி டிரைவர் கோவிந்தன் வீட்டிற்க்கு சென்று அவரது மனைவி பார்வதியை சந்திக்கிறார்.அவர் மிகவும் வறுமையில் இருப்பதை  காண்கிறார்.அவர் தனது கணவர் மது அருந்தினாலும் சிறு எறும்புக்கு கூட தீங்கு செய்ய மாட்டார் என்றும் அவர் இந்த கொலை செய்திருக்க மாட்டார் என்றும் கூறுகிறார்.பின் அங்கு இருந்து கிளம்பும் போது அந்த டிரைவர் வளர்த்த நாய் ஜானை வாசலில் பார்த்தார்.

அடுத்து அவர் கோடீஸ்வரர் மேகநாதனை சந்தித்து தான் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்யபோவதாக கூறுகிறார்.அதனை கேட்ட அவர் மிகவும் கோவமுடன் கோபியை விரட்டிவிடுகிறார்.கோபி அவர் பேசியதை தனது ரெகார்டரில் பதிவு செய்து கொள்கிறார்.பின்னர் டி ஐ ஜி ராஜேந்தரை சந்தித்து விவரம் கூறுகிறார்.பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்க்கு வந்தது இதுவரை நடந்ததையும்  இனி தான் செய்ய வேண்டியதையும் பட்டியலிட்டார்,பின்னர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டார்.ஆனால் அவருக்கு அதிர்ச்சி அவரது ப்ரேக் வேலை செய்யவில்லை மற்றும் பெட்ரோல் வாசனை வேறு வந்தது.மறுவினாடி துணிச்சலுடன் காரிலிந்து வெளியில் பாய்ந்து தப்பினார்.கார் ஒரு பாறையில் மோதி தீ பற்றி எரிந்தது.

அன்று மாலை மேகநாதன் வளர்ந்த ஊட்டிக்கு அவர் பற்றி விவரம்  சேகரிக்க சென்றார்.அங்கு அவரது நண்பர் கபூரை உதவிக்கு அழைத்தார்.இருவரும் மேகநாதனை பற்றி அனைத்து விவரங்களும் சேகரித்தனர்.அதில் இருந்து மேகநாதன் ஒரு சாதுவானவர் எந்த வம்பிற்கும் போகமாட்டார்.அவரது மனைவி சங்கரி ஒரு அடங்காபிடாரி மற்றும் அவள் தான் இங்கு இருக்கும் எஸ்டேடை நிர்வாகம் செய்துவருகிறாள் என்று அறிந்து கொள்கின்றனர்.

இவர்கள் மேகநாதன் பற்றி விசாரிப்பதையும் அவர்கள் அவளை சந்திக்க வந்துகொண்டு இருப்பதையும் சங்கரியிடம் கூறுகிறான் அவளது அடியாள் கொந்தளிக்கும் சங்கரி அவர்கள் இருவரையும் வழியிலேயே தீர்த்துக்கட்ட சொல்கிறாள்.அடி ஆட்களும் காரில் வந்து கொண்டு இருந்த இருவரையும் ஆயுதங்களுடன் சென்று மடக்குகின்றனர்.ஆனால் கோபியும் கபூரும் அவர்கள் அனைவரையும் அடித்து விரட்டிவிட்டு சங்கரியை சென்று சந்திகின்றனர்.
அவர்களிடம் அவள் அது முடிந்தகதை நீங்கள் போகலாம் என விரட்டிவிடுகிறாள்.கிளம்பும் போது கபூர் ஏன் சங்கரி பொட்டு  வைத்துகொள்ளவில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகிறார்.அதற்கு கோபி அது ஏதாவது பேஷனாக இருக்கும் என்று கூறுகிறார்.  





அடுத்து கோபி கபூரிடம் விடை பெற்றுக்கொண்டு ஊர் திரும்புகிறார்.கபூரும் தான் மேலும் ஏதாவது விவரம் அறிந்தால் தெரியபடுவதாக கூறுகிறார்.ஊர் திரும்பிய கோபி ராஜேந்தரை சந்தித்து நடந்ததை கூறினார்.அந்த வழக்கை மறுவிசாரணைக்கு கொண்டுவரவேண்டும் என கோபி கூறுகிறார்.அதற்கு ராஜேந்தர் அரசு வழக்கறிஞர்  சிவகுமாரை சந்திக்க சொல்கிறார்.கோபி சென்று அவரை சந்தித்து விவரங்களை கூறுகிறார்.சிவகுமாரும் சம்பதமானவர்களுக்கு சம்மன் அனுப்புவதாக கூறுகிறார்..

அன்று இரவு கோபி யாருக்கும் தெரியாமல் மேகநாதன் வீட்டிற்க்கு சென்று ஒரு கதவின் பின்னால் மைக்ரோ போன் ஒன்றை பொருத்துகிறார்.பின் அவர் வெளியேவரும்போது டிரைவர் கோவிந்தனின் நாய் ஜானி அந்த வீட்டிற்க்குள் ஓடுவதை பார்த்தார்.அதனை பின்தொடர்ந்த கோபி அந்த நாய் அந்த வீட்டின் பின்புறம் சென்று ஒரு இடத்தை தோண்ட முயற்சி செய்ததையும் பின் முடியாமல் அங்கே படுத்துவிட்டதையும் காண்கிறார்.பின் அடுத்தநாள் இரவில் நம்பிகையான இருவருடன் அந்த வீட்டிக்கு வந்து அந்த இடத்தை தோண்டினார்.அங்கு ஒரு எலும்புக்கூடு கிடைத்தது.
அதனை ஆராய்ச்சிகூடத்திர்க்கு அனுப்பினார்.அதனை ஆராய்ந்த நிபுணர் ஜேம்ஸ் அது டிரைவர் கோவிந்தனின் உருவ அமைப்போடு ஒத்துப்போவதாக கூறினார்.




அடுத்தநாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு வழக்கறிஞர் சிவகுமார் காலகண்டன் மற்றும் டிரைவர் கோவிந்தனை கொலை செய்ததாக மேகநாதன் மேல் குற்றம் சுமத்தினார்.அதனை அவர் மறுத்தார்.எதிர் தரப்பு வக்கீல் ராஜசேகரன் ஆதாரம் கேட்டார்.அதற்கு சிவகுமார் ஒரு டேப் ரெகார்டரை போடுவதற்கு அனுமதி கேட்டார்.நீதிபதி அனுமதி வழங்கியதும் டேப் ஓடத்துவங்கியது அது கோபி மேகநாதன் வீட்டில் கோபி பொருத்திய மைக்கில் இருந்து பதிவு செய்யப்பட்டது.அதில் மேகநாதன் ஒரு அடி ஆளிடம் பேசுவது பதிவு செய்யபட்டிருந்தது.

மேகநாதன் : ஏண்டா அந்த பயலை தீர்த்துக்கட்ட சொன்னால் அவன் உயிரோடு தான் இருக்கிறான் நேற்று சங்கரியை வேறு சென்று மிரட்டிஉள்ளான் போதாகுறைக்கு கோர்ட் சம்மன் வேறு வந்துள்ளது 

அடியாள்  : கவலை படாதீர்கள் எஜமான் அவனை தீர்த்துவிடுகிறேன்.

என்று பதிவாகிருந்தது.அதனை கேட்ட மேகநாதன் முகத்தில் கோவம் தெரிந்தது.பின்னர் ராஜசேகரன் காதில் ஏதோ கூறினார்.பின்னர் கோர்ட் மதிய உணவுவேளைக்காக கலைந்தது.மீண்டும் கூடியபோது ராஜசேகரன் அந்த டேப்பில் பதிவாகிருந்தது பல வருடங்களுக்கு முன்னால் மேகநாதன் செய்த நாடக ஒத்திகை என்றும் காலகண்டன் மற்றும் மேகநாதன் இருவரும் நாடக நடிகர்கள் என்றும் கூறினார்.இதனால் வழக்கு ஒத்திவைக்கபட்டது.



அன்று இரவு கபூர் மிக முக்கிய தகவலுடன் கோபியை சந்தித்தார்.அது மேகநாதன் ஒரு நடிகர் மட்டும் அல்ல ஒரு கார் பந்தய ஓட்டுனரும் கூட.ஒரு முறை ஒரு கார் விபத்தில் அவரது இடுப்பு எலும்பு சேதம் ஆனதால் தகிடு வைத்துள்ளதாகவும் ஒரு 10 நிமிடத்திற்கு மேல் அவரால் ஒரு இடத்தில நிற்க முடியாது என்று கூறினார்.அதனை கேட்ட கோபி அதிர்ச்சி அடைந்தார் கோர்டில் மேகநாதன் பலமணிநேரம் ஒரே இடத்தில எப்படி நின்றார் என யோசித்தார்.உடனே நண்பர்கள் இருவரும் மருத்துவ கல்லூரியில் இருக்கும் காலகண்டனின் எலும்புக்கூடை பார்க்க சென்றனர்.

இதற்கிடையில் மேகநாதனை சந்தித்த சந்தித்த சங்கரி மருத்துவ கல்லூரியில் இருக்கும் காலகண்டனின் எலும்புகூடை கொண்டுவர சொல்லி மேகநாதனிடம் கூறுகிறாள்.மேகநாதனும் ஆட்களை அனுப்புகிறார்.



கோபியும் கபூரும் கல்லூரியை அடைந்து உள்ளே சென்று எலும்புக்கூடை ஆராய்கின்றனர்.அதன் இடுப்பில் ஒரு தகிடு இருப்பதாய் கண்டுபிடிக்கின்றனர்.கபூர் தன்னிடம் இருந்த கேமராவில் பல கோணங்களில் அதனை படம் பிடிக்கிறார்.பின்னர் வெளியில் வரும்போது மேகநாதனின் ஆட்களிடம் மோதி அவர்களை அடித்து போலீசிடம் ஒப்படைத்துவிட்டு  செல்கின்றனர்.

அடுத்தநாள் கோர்டில் சிவகுமார் மேகநாதனையும் டிரைவர் கோவிந்தனையும் கொலை செய்தது இங்கு இருக்கும் காலகண்டன் அவர்கள் தான் என குற்றம் சுமத்துகிறார்.கோர்டில் இருந்த அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி ஆகின்றனர்.பின்னர் சிவகுமார் கபூர் எடுத்த வந்த புகைப்படங்களை காண்பித்து விளக்குகிறார்.மற்றும் காலகண்டன் பெயருக்கு தான் கோடீஸ்வராக இருந்தாலும் அவர்க்கு பல கடன்கள் இருந்ததாகவும் அதனில் இருந்து வெளிவர இந்த நாடகம் என்றும் கூறினார்.மற்றும் இதற்கு மேகநாதனின் மனைவி சங்கரியும் உடந்தை என்றும் கூறுகிறார்.அனைத்தையும் கேட்ட நீதிபதி காலகண்டன் மற்றும் சங்கரிக்கு தண்டனை வழங்கினார்.அதனை கேட்ட நண்பர்கள் இருவரும் யாரும் அறியாமல் அங்கிருந்து வெளியேறினர்.ஆனால் அதனை கண்ட டி ஐ ஜி  ராஜேந்தர் வெளியில் வந்து இருவரையும் பாராட்டினார்.



அத்துடன் கதை முடிந்தது. 

இந்த கதையை  நான் படித்த பொழுது ஒரு சஸ்பென்ஸ் திரைப்படம் பார்த்தது போல இருந்தது.மற்றும் இக்கதையில் வரும் பெயர்கள் மற்றும் இடங்கள் நமக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது.

இக்கதையை நண்பர்கள் படித்திருந்தாலும் அதனை பற்றியும் கூறுங்கள் 

அவ்வளவுதான் நண்பர்களே.முன்பே கூறியது போல உங்கள் கருத்தை கூறுங்கள்.மற்றும் பதிவின் நீளம் குறித்தும் கூறுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.