வணக்கம் நண்பர்களே,
வேறு வழியே இல்லாமல் முகமூடி திரைப்படம் நானும் பார்த்துவிட்டேன்.
இருந்தாலும் மிகவும் நான் எதிர்பார்த்த படம் அதுவும் ஒரு காமிக்ஸ் ரசிகர் எடுத்த படம் இவ்வளவு மொக்கையாக ஆனது வருத்தமே.
கதை.
ஆரம்பம் ஒரு படு மொக்கை.
ஒரு வீட்டில் கொள்ளை நடக்கிறது.வில்லன் எலும்புக்கூடு முகமூடி அணிந்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டியை ஓடி வந்து சுத்தியில் அடித்து கொள்கிறார்.
ஒரு பாட்டியை எதுக்குப இப்படி கொல்லனும் விட்டுருந்தா அடுத்தநாள் அதுவே செத்து போயிருக்கும்.
அப்படி ஒரு பயங்கர வில்லனாம்.
இவரை பிடிக்க சிறப்பு அதிகாரி நாசர் வருகிறார்.(பாவம்)
ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஹீரோ ஜீவா.அன்பான அம்மா,எப்பொழுதும் திட்டும் அப்பா,
வீட்டின் மாடியில் அவரது தாத்தா வழக்கம் போல அவருக்கு வழிகாட்டி.
மற்றும் ஒரு தாத்தா மாடியில் இருக்கிறார் அவர் துணிகள் மூலம் பொம்மைகள் செய்பவர்.
இப்பொழுதே தெரிந்து கொள்ளலாம் இவர் தான் நம்ம முகமூடிக்கு உடை தெய்த்து தரபோகிறார்.
நமது ஹீரோ ஒரு குங்க்பூ பிரியராம்.
அவரது ஆசிரியர் செல்வா.அவர் எல்லாரிடமும் காசு வாங்காமல் குங்க்பூ சொல்லி தருவாராம்.
அதுனால அவர் பரம ஏழையாம்.ஒரு பாடாவதி வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியலேன்னு வீடு ஓனர் வேற மிரடுராரம்.
அப்பா இப்பவே முடியல பேசாம அப்பொழுதே எழுந்து வந்திருக்க வேண்டும் விதி என்ன செய்வது 500 செலவு செய்தாகிவிட்டது முழுவதும் பார்த்துவிட்டு தான் வந்தேன்.
நம்ம ஏழை ஆசிரியருக்கு ஆள்
தெரடுகிறாராம் எப்படி ஒரு மீன் மார்கெட் பொய் அங்க மீன் விகிரவங்க கூட சண்ட போட்டு அவங்கள 1000 கொடுத்து கத்துக்க சொல்கிறார்.
அப்ப நம்ம ஹீரோயின் intro வேற.
வழக்கம் போல நம்ம ஹீரோ விற்கு ஹீரோயின் மேல காதல் வர.
அவரை கவுக்க முகமூடி அணிந்து சென்று இதய பலூன் விடுகிறாராம்.
இதனை பார்த்த உடனே நம்ம ஹீரோயின் காதல் வய படுகிறார்.
இடை பட்ட சமயத்தில் நம்ம ஹீரோ வில்லன் களின் மற்றொரு கொள்ளையின் நடுவில் மாட்டிக்கொண்டு வில்லன்களில் ஒருவரை போலீசிடம் மாட்டிவிடுகிறார்.
ஆகையால் நம்ம வில்லன் நம்ம ஹீரோவை ஒரு கொலை கேசில் மாட்டிவிட்டு ஒரு குற்றவாளி ஆக்குகிறான்.
இதில் இருந்து நம்ம ஹீரோ தப்பித்து வில்லனை கொன்று நம்ம ஹீரோயின் காதலை எப்படி அடைகிறார் என்பதே மீதிகதை.
இடையில் ஒரு பிளாஷ் பாக் வேற நம்ம செல்வாவும் வில்லன் நரேனும் ஒரே ஆசிரியரிடம் குங்க்பூ கற்றுக்கொண்டார்கலாம்.
இறுதிகாட்சியில் நம்ம ஹீரோ சாய்க்கும் வில்லன்கள் எண்ணிகையை விட அவரது ஷெர்லோக் தாத்தா அடித்துபோடும் ஆட்கள் அதிகம்.(என்ன கொடுமை சார் இது)
பாடல்கள் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை.
நம்ம மிஸ்கினிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் எதிர்பார்கவில்லை.
எனது எண்ணங்கள்:
ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு அழுத்தமான வில்லன் வேண்டும்.
ஆனால் இங்கு சாதாரண நகை கொள்ளையடிக்கும் வில்லன்.
அதுவும் அவரால் வயதானவர்கள் மட்டுமே கொல்லபடுகிறார்கள்.
இது ஒரு மிக பெரிய மைனஸ்.
காதல் காட்சிகள் எதுவுமே அழுத்தமாக இல்லை.
அவருக்கு ஏன் முகமூடி மேல் காதல் வருகிறது என்பதற்கு ஒரு அழுத்தமான காரணம் இல்லை.
இறுதியில் நம்ம ஹீரோ முகமூடி அணிவதற்கு நல்ல காரணம் இல்லை.
சும்மா ஹீரோயினிடம் முகம் காட்டக்கூடாது என்றால் அவரை வெளிபடுதிக்கொள்ளாமலே வேறு ஏதாவது செய்திருக்கலாம்.
சண்டை காட்சிகள் சில நன்றாக இருந்தாலும் அவை வீணாக்க பட்டிருகின்றன.
நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:
ஹீரோ தனது குங்க்பூ திறமையை வெளிபடுத்த ஒரு நல்ல அறிமுக காட்சி வைத்திருக்கலாம்.
ஒரு மொக்கையான மீன் மார்கெட் சண்டைக்கு பதில்,அவரது நல்ல மனதை காண்பிக்க எதாவது ஒரு கடத்தல் அல்லது ஒரு விபத்து அதில் இருந்து அவர் காப்பாற்றுகிறார்.
(க்ரிஷ் படத்தில் வரும் சர்கஸ் தீ விபத்து போல)
அடுத்து நம்ம வில்லன் சாதாரண நகை கொள்ளையனாக இல்லாமல் வேறு பெரிதாக ஏதாவது வைத்திருக்கலாம்.
பல தொடர்பே இல்லாத பல குற்றங்களை இறுதில் ஒன்றாக்கி ஒரு suspense வைத்து வேறு ஏதாவது பெரிய காரணம் சொல்லி இருக்கலாம்.
ஹீரோ ஹீரோயின் காதலை இன்னும் சற்று நல்ல காட்சி அமைப்புடன் கூறி இருக்கலாம்.
பார்க்கலாம் இந்த மாற்றங்களை தனது இரண்டாம் பாகத்தில் கொண்டு வருவாரா என்று.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.






















